விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 785: வரிசை 785:


* இக்கோரிக்கை தெளிவற்றதும், தமிழ் இலக்கண, தமிழ் மொழித்தனித்துவம் அற்று இருப்பதால் இதனை மறு ஆய்வு செய்யத் தேவை இல்லை. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 18:16, 3 நவம்பர் 2018 (UTC)
* இக்கோரிக்கை தெளிவற்றதும், தமிழ் இலக்கண, தமிழ் மொழித்தனித்துவம் அற்று இருப்பதால் இதனை மறு ஆய்வு செய்யத் தேவை இல்லை. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 18:16, 3 நவம்பர் 2018 (UTC)

* தமிழில் மெய் எழுத்துக்களில் சொற்கள் ஆரம்பிக்காது எனவே கட்டுரைகளோ வழிமாற்றுப்பக்கங்களோ மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கவேண்டாம். தேவையானவர்கள் ஆங்கிலத்தில் தேடி தமிழைத் தெரிவுசெய்து படிக்கலாம். அல்லத்து பிளக்செயின் என்னும் வழிமாற்றுப் பக்கத்தை உருவாக்கியும் விடலாம். இலக்கணப்பிழையான வழிமாற்றங்கள் தேவையற்றது அது கலைக்கழஞ்சியத்தின் தரத்தைக் குறைத்துவிடும்.

02:42, 4 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPP
WP:VPPOL
தமிழ் விக்கிப்பீடியாவில் கொள்கைகள், வழிகாட்டல்கள் தொடர்பான உரையாடல்கள் இங்கு நடைபெறும். மேலும் பார்க்க: பகுப்பு:விக்கிப்பீடியா கொள்கை முன்மொழிவுகள்
« பழைய உரையாடல்கள்


அனைத்துலக அளவீடுகளை குறிக்க ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமா?

பாருங்கள். சீனாவில் கூட தூரத்தை சர்வதேச அலகிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.

பல கட்டுரைகளில் சர்வதேச அலகுகளுக்கான குறியீடுகள் தமிழில் மாற்றப்பட்டு உள்ளன. உதாரணமாக கேண்டெலா என்ற கட்டுரையில் சர்வதேச அலகுகளென சில தமிழ்ச் சொற்கள் அல்லது குறியீடுகள் உள்ளன. இவை பொருத்தமற்றவை எனவே எண்ணுகின்றேன். ஏனெனில் சர்வதேச அலகுகள் என்பன அனைத்துப் பிரதேசத்திலும் ஒன்றாகவே இருக்க வேண்டும். இது பற்றிய பிரதான கட்டுரையிலும், மறை வெப்பம் போன்ற கட்டுரைகளிலும் இத்தவறுகள் உள்ளன. உதாரணமாக கேண்டலா கட்டுரையில் Cd எனக் குறிப்பிடாமல் கேண்டா என உள்ளது. சர்வதேச விதி முறைகளை மாற்றியமைக்க எமக்கு அதிகாரமில்லை. இங்கு ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றேன் என எண்ண வேண்டாம். ஆங்கில மொழி கூட உயிரினங்களின் சர்வதேசப் பெயர்களை இலத்தீனிலேயே வைத்துள்ளது. எனவே நாமும் சர்வதேச விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்க முடியாதோருக்காக தமிழில் அக்குறியீடுகளுக்கான பேச்சுப் பிரயோகத்தை இணைத்து விடலாம். இக்கட்டுரைகளில் சர்வதேசக் குறிச்சொல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளவை ஆங்கில உச்சரிப்பின் தமிழ் வடிவமாகவே உள்ளது. எனவே இவற்றை சர்வதேச விதிக்கமைய மாற்றுவதில் தவறேதுமில்லை என்றே எண்ணுகின்றேன். எனவே இது பற்றி ஒரு தீர்க்கமான முடிவொன்றை எட்ட வேண்டியது மிகவும் அவசியம்.

அடுத்த விடயம் கூகில் தமிழாக்கக் கட்டுரைகள் பற்றியது. இவற்றில் சில பின்னாளில் திருத்தப்பட்டவற்றைத் தவிர ஏனையவை வாசிக்க முடியாத படி உள்ளன. எனவே சூரியக் குடும்பம் போன்ற திருத்தப்பட்ட கட்டுரைகளைத் தவிர ஏனையவற்றின் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கி புதிதாகத் தொடங்குவது நன்றாயிருக்கும் என எண்ணுகின்றேன்.--G.Kiruthikan (பேச்சு) 04:05, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தமிழில் நீண்ட காலமாக சர்வதேச அலகுகளுக்கான குறியீடுகள் தமிழில் உள்ளன. எ.கா: ft = அடி, cm = செமீ. ஆங்கிலத்தில் இருப்பது மிகவும் அவசியம் என்றால், ஆங்கிலத்தை அடைப்புக்குறியினுள் இடலாம். வீதியில் செல்வோருக்கு குறித்த அறிவிப்புப் பலகைகள் சர்வதேச அலகுகளுக்கான குறியீடுகளுடன் இருப்பது தேவைதான். அங்கு பல மொழிபேசுவோரும் பயணிப்பர். ஆனால் அவ்வுதாரணம் இங்கு ஏற்புடையதல்ல. மேலும், உருசிய, எபிரேய மொழிகளில் கேண்டெலா என்ற கட்டுரை அவர்களின் மொழியிலேயே குறியீடுகளைக் கொண்டள்ளது. கூகிள் தமிழாக்கக் கட்டுரைகள் நீக்கத்தேவையில்லை. அவற்றை அப்படியே வைத்து திருத்தலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:09, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]
இலங்கைப் பாடநூல்களில் இப்போது km என்றா எழுதுகிறார்கள் கிருத்திகன்?--Kanags \உரையாடுக 05:19, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஆமாம்!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:09, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]

அனைவரும் அறிந்திராத அனைத்துலக முறை அலகுகள் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் தரப்பட வேண்டும். மீட்டர் போன்ற அனைவரும் அறிந்த அலகுகள் தமிழிலேயே தரப்படலாம் என எண்ணுகிறேன். ஆங்கிலப் பெயரைத் தமிழில் மாற்றுவோர் அருள்கூர்ந்து அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தைத் தரவும். கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் பயனர்கள் தத்தெடுத்துத் தங்கள் பயனர் வெளியில் வைத்திருந்து முழுவதும் திருத்திப் பின்னர் மூலக்கட்டுரையை நீக்கிவிட்டுத் தங்கள் பெயரில் பதிவேற்றும் நடைமுறை முன்னர் இருந்தது. தங்கள் பெயர் தேவையில்லை என்று நினைப்போர் அப்படியே இணைத்து விடலாம்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 10:24, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]

அப்படியென்றால் அடைப்புக்குள் ஆங்கிலப் பெயரை இட்டு விடுவோம். இலங்கையில் எவ்வாறென்று உறுதியாகக் கூற இயலாது. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு விதமாக உள்ளன. எனவே இரண்டு வகையான குறியீட்டையும் இடுவதே நல்ல முடிவென நினைக்கின்றேன்.--G.Kiruthikan (பேச்சு) 12:13, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் ஆமாம் அண்ணா அதுவே நல்லது!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:22, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]

எனக்குத் தெரிந்தவரை தமிழ் பாடப்புத்தகங்களில் அலகுகளைத் தமிழில்தான் போடுகிறார்கள். அலகுகளை ஆங்கிலத்திலேயே போடவேண்டும் என்று கேள்விப்பட்டதில்லை. நானும் தமிழிலேயே படித்தேன் பாடப்புத்தகங்களில் கிமீ/மணி, ஓம் (ohm), கி/சமீ3, நியூட்டன்/சமீ2 என்று தமிழில்தான் இருக்கும். நாங்கள் எழுதும்போதும் அவ்வாறுதான் எழுதுவது வழக்கம். தமிழ் விக்கியிலும் அலகுகளைத் தமிழிலேயே கொடுப்பதுதான் சரி. வேண்டுமானால் விளக்கத்துக்காக அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தையும் கொடுக்கலாம்.--−முன்நிற்கும் கருத்து Mayooranathan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
கேண்டெலா போன்ற அரிதாகப் புழங்கும் சொற்களுக்கு ஆங்கில எழுத்துக்களை அடைப்புக்குள் போடலாம். ஆனால், கிமீ, மணி, மீ போன்ற அடிக்கடி புழங்கும் சொற்களுக்குத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 20:02, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]
இலங்கை பாடநூல்களில் தமிழில் எழுதுவது பொதுவான நடைமுறயாக உள்ளது. தன்வெப்பக் கொள்ளளவு முதலான சில சிக்கலானவற்றை J Kg-1 K-1 என ஆங்கிலக் குறியீடுகளால் வசதிக்காக குறிப்பிடுவதுண்டு. ஆயினும் தமிழில் எழுதுவதே சிறப்பு. நாங்கள் சிறு வகுப்பில் படிக்கும் போது நூல்களில் சென்ரி மீற்றர் என்பதற்குப் பதிலாக சதம மீற்றர் எனக் கூறப்படும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:48, 28 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சாதாரண தரத்தின் பின்னர் பெறுபேற்றுக்காகக் காத்திருக்கின்றேன். நான் சாதாரண தரத்தை ஆங்கில மொழியிலேயே கற்றேன். எனினும் தற்போது உயர்தர வகுப்புகளில் தற்போது படித்த மட்டும் எந்த ஒரு தமிழ்க் குறியீடும் கற்பிக்கப்படவில்லை. எனினும் தமிழ் மொழி மூல சாதாரண தர விஞ்ஞானப் புத்தகத்தில் இவ்வாறான முறையே உள்ளது:-

தரம் 10 விஞ்ஞானப் புத்தகத்தில் ஒரு பக்கம்

--G.Kiruthikan (பேச்சு) 03:51, 29 சனவரி 2014 (UTC)[பதிலளி]

அனைத்துலக முறை அலகுகளை உரோமன் எழுத்திலே கொடுக்கவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. உரோமன் எழுத்துமுறையைக் கொள்ளாதவர்கள் தங்கள் மொழி எழுத்துகளில் தரலாம். செல்சியசு என்பதையும் செண்டிகிரேடு என்பதையும் °C என்றுதான் குறிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துபவர்கள் உண்டு. °செ என்று எழுதுவதில் பிழை இல்லை. உருசிய மொழியைப் பாருங்கள். அவர்கள் சிரிலிக்கு எழுத்தில் எழுதும் வழக்கம் கொண்டிருக்கின்றார்கள். சீனர்களும் கிலோமீட்டர் என்பதை 千米 (சியான் மீ; 千 = சியான் என்றால் ஆயிரம், 米 என்றால் மீ (மீட்டர் என்னும் அளவு)). என்று குறிக்கின்றார்கள். சாலைகளில் எழுதுவதைக் கொண்டு ஒரு முடிவுக்கு வர இயலாது. கிலோமீட்டர் என்பதற்கு ஈடான சீனமொழி விக்கிப்பக்கத்தைப் பாருங்கள். --செல்வா (பேச்சு) 02:48, 26 பெப்ரவரி 2014 (UTC)

கட்டுரை இல்லாத பேச்சுப்பக்கங்களை நீக்கலாமா?

பேச்சு:அப்பளம் தயாரிப்பு போன்ற கட்டுரை இல்லாத பேச்சுப்பக்கங்களை (முதன்மைப்பெயர் வெளியில் மட்டும்) தானியங்கி கொண்டு நீக்கலாமா? இதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா? இதுகுறித்து முன்னரே ஒருவர் கேட்டது நினைவில் இருக்கின்றது. அதுகுறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 02:53, 25 பெப்ரவரி 2014 (UTC)

அப்பளம் தயாரிப்பு பேச்சுப் பக்கத்தை நீக்கலாம். அது தேவையற்றது. ஏனையவற்றை தானியங்கி கொண்டு நீக்காமல் ஒவ்வொன்றையும் தனித்தனியே பார்த்து நீக்குவதே நல்லது. இவ்வாறான பக்கங்களின் பட்டியல் எடுக்க முடியுமா?--Kanags \உரையாடுக 06:57, 25 பெப்ரவரி 2014 (UTC)
AWB கொண்டு செய்யலாம். ஒவ்வொன்றாகப்பார்த்து தான் நீக்குகின்றேன். இன்றிரவுக்குள் பட்டியலைத்தயாரித்து விடுகின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:51, 25 பெப்ரவரி 2014 (UTC)
நீங்களே பார்த்து நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 11:19, 25 பெப்ரவரி 2014 (UTC)
சில பக்கங்கள் நகர்த்தப்பட்ட பிறகு முக்கியமான உரையாடல்கள் முந்தைய பேச்சுப் பக்கங்களில் அப்படியே விடுவதுண்டு. எனவே, ஒவ்வொரு பக்கமாக பார்த்து நீக்குவதே சரி. உங்கள் துப்புரவுப் பணிக்கு மிக்க நன்றி.--இரவி (பேச்சு) 11:53, 25 பெப்ரவரி 2014 (UTC)
இரவி, அத்தகைய பக்கங்களைக்குறித்துதான் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவை நேராக அனுக இயலாவண்ணம் மறைந்திருக்கின்றன (not accessible directly). அத்தகைய பக்கங்களினால் வரும் பயன் என்ன? மேலும் எதை வைத்து பேச்சுப்பக்க குறிப்பின் முக்கியத்துவத்தைக்கணிப்பது? எதிர்காலத்தில் உருவாக்க வாய்ப்புள்ள பக்கங்களுக்கான குறிப்புகளை (எ.கா: பேச்சு:தமிழ்நாடு வரலாறு) நீக்கத்தேவையில்லை, ஆயினும் நடைக்கயேட்டில் காணக்கிடைக்கும் பயனர் வழிகாட்டல்கள் (எ.கா: பேச்சு:குறுந்தொகை 8), பயனர்கள் தவறான இடத்தில் விடுத்த வேண்டுகோள்கள் (எ.கா பேச்சு:Star fish), (ஒரே ஒரு பயனரால் மட்டும்) பக்கத்தை நீக்க விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் போன்றவற்றை நீக்க பரிந்துரைக்கின்றேன். மேலும் தலைப்பு அல்லது கட்டுரையில் அடக்கம் குறித்த உரையாடல்கள் (எ.கா: பேச்சு:ம‌ஞ்ச‌ள் காமாலை, பேச்சு:Portal:வேதியியல், பேச்சு:தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்) முதலியவற்றை அவற்றுக்கான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்த பரிந்துரைக்கின்றேன். இது குறித்து பிற பயனர்களின் கருத்துகளை அறிய ஆவல். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:28, 25 பெப்ரவரி 2014 (UTC)
இவ்வகை சிக்கல்கள் உள்ள பக்கங்களின் முழுப்பட்டியல்
  1. பேச்சு:GNU FDL
  2. பேச்சு:PADAPPAI
  3. பேச்சு:Portal:வேதியியல்
  4. பேச்சு:அதிகாரம்
  5. பேச்சு:அப்படியே ஷாக் ஆகிட்டேன்
  6. பேச்சு:அலி
  7. பேச்சு:ஆ.ஜான்சன் கென்னடி
  8. பேச்சு:ஆங்கிலத் தமிழியல்
  9. பேச்சு:ஆசுமியம்
  10. பேச்சு:ஆபிரகாமியம்
  11. பேச்சு:ஆரம் (சந்தன மர இலை)
  12. பேச்சு:இசையும் தமிழும்
  13. பேச்சு:இந்திய ஆறுகள்
  14. பேச்சு:இந்திய தேர்தல் முறையைப் பற்றிக் கூறப்படும் குறைகள்
  15. பேச்சு:இந்திய விடுதலை
  16. பேச்சு:இந்தியாவின் முக்கிய தினங்கள்
  17. பேச்சு:கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் போட்டி
  18. பேச்சு:கழகக் காலம்
  19. பேச்சு:குமரிக்கண்டத்தின் ஆதாரங்கள்
  20. பேச்சு:கூகுள்-மொழிப்பெயர்ப்பு மென்கலக்கருவி
  21. பேச்சு:சிங்களவர் சாதிப்பிரிவுகளின் பட்டியல்
  22. பேச்சு:சீன இலக்கணம்
  23. பேச்சு:செம்மிசை கிதார்
  24. பேச்சு:செல்வா/தமிழில் பிற ஒலியன்கள்
  25. பேச்சு:சைவ சமயம் மீதான விமர்சனங்கள்
  26. பேச்சு:சோதனைப் பதிப்பு
  27. பேச்சு:தஞ்சாவூர்த் தமிழ்
  28. பேச்சு:தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்
  29. பேச்சு:தமிழக சமயம்
  30. பேச்சு:தமிழிசை/கட்டுரை1
  31. பேச்சு:தமிழியக்கம் இணையத்தளம்
  32. பேச்சு:தமிழ் உரைநடை
  33. பேச்சு:தமிழ் தளையறு மென்கலன்கள்
  34. பேச்சு:தமிழ்க் குடும்பம்
  35. பேச்சு:தமிழ்நாடு வரலாறு
  36. பேச்சு:தமிழ்நாட்டு அறிவியல் திட்டங்கள்
  37. பேச்சு:தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவிக்காலங்களும் முக்கிய நிகழ்வுகளும்
  38. பேச்சு:தமிழ்ப் பதிப்பகத்துறை
  39. பேச்சு:தலித் இலக்கியம்
  40. பேச்சு:திட்டம்
  41. பேச்சு:திருவரங்கன்
  42. பேச்சு:தேவியர் இல்லம் திருப்பூர்
  43. பேச்சு:நபர்வரி
  44. பேச்சு:நாவலன் தீவு
  45. பேச்சு:நிழலி செட்டிபாளையம்
  46. பேச்சு:பாரதா வடிவமொழி
  47. பேச்சு:பிஷ்
  48. பேச்சு:புத்தூர் ஜெயராமன்
  49. பேச்சு:பெ'ன்சில் அசிட்டேட்
  50. பேச்சு:பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
  51. பேச்சு:பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்
  52. பேச்சு:போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், ஆவடி
  53. பேச்சு:மாட்டுவண்டி
  54. பேச்சு:மின்கடத்து திறன்
  55. பேச்சு:ம‌ஞ்ச‌ள் காமாலை
  56. பேச்சு:ரத்தப்புடையன்
  57. பேச்சு:லினக்சு கரு
  58. பேச்சு:வராகநதி ஆறு
  59. பேச்சு:விக்கிப்பீடியா/கூகிள் கட்டுரை

இதனை சரிபார்த்து நீக்கவோ அல்லது நகர்த்தவோ வேண்டுகின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:39, 25 பெப்ரவரி 2014 (UTC)

இம் மாதிரி பல பக்கங்களைப் பாதிக்கும் முடிவுகளை தன்னிச்சியாக, வேகமாக எடுக்க முடியாது. குறிப்பு இடப்பட்டு சில மணித்துளிகளிலேயே பல பத்துப் பக்கங்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன. இது தொடர்பாக கொள்கை/வழிகாட்டலில் மாற்றம் கொண்டுவருவது என்றால் அதை முன்மொழிந்து, கால அவகாசம் தந்து செய்து இருக்க வேண்டும். இவ்வாறு எனதோ, பிற பயனர்களினதோ குறிப்புக்களை நீக்கியது முறையன்று. --Natkeeran (பேச்சு) 17:11, 25 பெப்ரவரி 2014 (UTC)
கட்டுரை இல்லாத பேச்சுப் பக்கங்கள் குறித்து எனது கருத்துக்கள்:
  • அவற்றில் ஆவணகப்படுத்த வேண்டிய தகவல்கள் இருந்தால், ஒரு வார்ப்புருவை இடவும். நீக்க வேண்டாம்.
  • அவற்றில் பிற பேச்சுப் பக்கங்களுடன் இணைக்கக் கூடிய தகவல்கள் இருந்தால், அங்கு இணைத்துவிட்டு நீக்கவும்.
  • அவற்றில் குறிப்புக்கள் இருந்தால் - இது குறித்து விக்கி விதி என்னவென்று தெரியவில்லை. நாம் ஒரு கொள்கை அல்லது வழிகாட்டல் உருவாக்க வேண்டும்.
  • கருத்துப் பெறுமதி அற்ற, ஆவணகப்படுத்த தேவையற்ற பக்கங்களை நீக்கலாம்!--Natkeeran (பேச்சு) 17:32, 25 பெப்ரவரி 2014 (UTC)
நற்கீரன், குறிப்பு இட்ட பிறகு நான் நீக்கிய பக்கங்கள் எல்லம் பெரும்பாலும், "இப்பக்கத்தை நீக்குக" அல்லது "________-காக இப்பக்கத்தை நீக்குக", "இதற்கு உடன்படுகின்றேன்" போன்றவையோ, அல்லது நீக்கப்பட்ட கட்டுரையினைக்குறித்த (நான்கு வரிக்கு மிகா) நீக்குவதற்கான காரணத்தை குறிக்கும் விமர்சனமாகவோ இருந்தவைதான். அக்கட்டுரையினைக்குறித்த மூன்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துரையாடி இருப்பின் அப்பக்கங்களை நான் நீக்கவில்லை. புற இணையதளங்களுக்கான இணைப்புகள் மட்டும் பட்டியலிடப்பட்ட பக்கங்களையும் நீக்கினேன். 100க்கும் மோற்பட்ட பக்கங்களை நீக்க வேண்டியிருந்ததாலும், நீங்களே பார்த்து நீக்கி விடுங்கள் என மற்றொரு பயனர் அளித்த அனுமதியின் பேரிலும், அடிப்படை நல்லென்னத்தினாலுமே அவற்றை நீக்கினேன். தவறாக எதையேனும் நீக்கியிருப்பின் அல்லது நீக்கியதே தவறு என்று நினைத்தாலோ மன்னிக்கவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:51, 25 பெப்ரவரி 2014 (UTC)


விளக்கத்துக்கு நன்றி. நீங்கள் நீக்கியவற்றில் பெரும்பாலனவை பொருத்தாமனைவயே. அதனாலேயே மீட்டெடுத்துப் பார்த்துவிட்டு, பின்னர் நீக்கிவிடுகிறேன். முன்னர் எழுதப்படக் கூடிய கட்டுரைகள் பற்றிய தகவல்களை பேச்சுப் பக்கத்தில் குறிக்கும் வழக்கம் இருந்தது (நான் மட்டும்தானா!). அல்லது கட்டுரைப் பக்கத்தில் இருக்கும் உள்ளடக்கம் சரிவர எழுதப்பட்டு இருக்காவிடின் பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்தும் போக்கு இருந்தது, இருக்கின்றது. இவற்றை நீக்குவது பற்றி அலசலாம். எனினும் இது தொடர்பாக ஒரு வழிகாட்டல் உருவாக்கி, அவகாசம் கொடுத்து பின்னர் செய்வது கூடிய பொருத்தம். வரலாற்றுத் தகவல்கள் இருப்பின் ஒரு வாருப்புருவை இடலாம் (எ.கா இப் பக்கம் வரலாற்றுக்காக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது போன்று).
யாரால் என்று நினைவில்லை, மூன்றுவரிக் கட்டுரைகள் சில/பல தவறாக நீக்கப்பட்டு இருந்தன. தமிழ் விக்கியில் ஆகக் குறைந்தது 3 வரிகள் உள்ள குறுங்கட்டுரைகள் நீக்கப்படுவதில்லை என்று வழிகாட்டல் இருக்கும் போது மூன்றுவரிகளை உள்ளன என்று காரணம் காட்டி நீக்குவது தவறு. வேறு காரணங்களுக்காக குறு/நெடுங் கட்டுரைகள் நீக்கப்படலாம். ஆனால் நீளத்துக்காக 3 வரி அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுரைகள் நீக்கப்படல் ஆகாது. இதை இங்கு குறிப்பிடக் காரணம் இருந்த வழிகாட்டலை பொருட்படுத்தாமல் செயற்பட்டதே. ஆனால் பேச்சுப் பக்கங்கள் தொடர்பாக வழிகாட்டல்கள் இல்லை.
துப்புரவுப் பணிகள் செய்வதில் பல சிரமங்கள் உள்ளது என்பதை அறிவேன். எனினும் நீக்கும் போது, குறிப்பாக புதுப் பயனர்களின் ஆக்கங்களைக் கையாழும் போது சிறப்புக் கவனம் தேவை. நீங்கள் முன்னெடுத்த பணி செய்யப்பட வேண்டியதில் ஐயமில்லை. அணுகுமுறையில் திருத்தங்கள் தேவை. நன்றி. --Natkeeran (பேச்சு) 19:17, 25 பெப்ரவரி 2014 (UTC)

நூல்கள் தொடர்பாக குறிப்பிடத்தக்கமை

பகுப்பு பேச்சு:நூல்கள் நூல்களின் குறிப்பிடத்தக்கமை தொடர்பான கொள்கை/வழிகாட்டல் உரையாடல் நடக்கிறது.

--Natkeeran (பேச்சு) 13:47, 24 மார்ச் 2014 (UTC)

unrefernece வார்ப்புரு

தூக்கம் (விலங்கியல்) போன்ற பொதுக் தகவல்கள் கண்ட கட்டுரைகளுக்கு, குறிப்பாக பிறமொழி இணைப்புக் கொண்ட கட்டுரைகளுக்கு unrefernece என்ற வார்ப்புரு தேவையா என்று தெரியவில்லை. மேற்கோள்களை முறைப்படி சேர்க்கும் வழக்கு தமிழ் விக்கியில் உருவாக வேண்டும் என்ற உங்கள் அவா புரிகிறது. இதை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று விரிந்து பார்க்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 18:50, 16 மார்ச் 2014 (UTC)

மேற்கோள் வார்ப்புரு, சான்று தேவை வார்ப்புரு குறித்து முன்னமே உரையாடப்பட்டுள்ளதாக நினைவு. ஒரு மேற்கோள் கூட இல்லாத எல்லாக் கட்டுரைகளிலும் மேற்கோள்கள் தரக்கோருவது என்பது நல்லதே. எனவே இதனைத் தானியங்கி கொண்டு செய்யலாம்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:56, 16 மார்ச் 2014 (UTC)
வணக்கம் நக்கீரன் மற்றும் மரு. பெ. கார்த்திகேயன், ஏற்கனவே இதுகுறித்து நான் உரையாடியுள்ளேன். தற்போது unrefernece வார்ப்புரு இடப்பட்டுள்ள 99% கட்டுரைகள் 20 பிப்ரவரிக்கு பிறகு உருவாக்கப்பட்டவை. பழைய கட்டுரைகள் மேற்கோள்களின்றி பல உள்ளன, அவற்றையும் சரி செய்ய வேண்டும். பொதுத் தகவல்கள் உள்ள கட்டுரைகளுக்கும் மேற்கோள்கள் தேவை என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. பிற மொழி இணைப்பு இருக்குமேயானால் மேற்கோள்கள்/சான்றுகள் சேர்ப்பது மிக எளியது. தானியங்கி கொண்டு செய்யலாம் கார்த்திகேயன், ஆனால் யார் தானியங்கி உருவாக்குவது? எனக்கு தானியங்கி உருவாக்குமளவு காலம் இல்லை :( தானியங்கி கோரியுள்ளேன் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:39, 17 மார்ச் 2014 (UTC)
இந்தத் துப்புரவுப் பணி தேவையானது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும் சில நடைமுறைச் சிக்கல்களை கருத்தில் கொண்டு இயங்குவது நல்லது. நற்கீரன் கூறுவதுபோல அனைத்துக் கட்டுரைகளிலும் இந்த வார்ப்புருவை இடுவது எதிர்மறையாக முடியலாம்.
  1. மிகக் கூடிய அளவில் இங்கு கட்டுரைகள் சேர்ந்தால் திருத்த முயல்வோர் முன்வராது போகக்கூடும். இதனால் உங்களது (நமது) முதன்மை நோக்கம் நிறைவேறாது இருக்கும்.
  2. திருத்தப்பட்டக் கட்டுரைகளில் இந்த வார்ப்புருவை நீக்குவது ஒரு தனி துப்புரவுப் பணியாக அமையும்.
எனவே முதற்கட்டத்தில் பொதுக் தகவல்கள் கண்ட கட்டுரைகளுக்கு, குறிப்பாக பிறமொழி இணைப்புக் கொண்ட கட்டுரைகளுக்கும் குறுங்கட்டுரைகளுக்கும் இந்த வார்ப்புருவை இடுவதைத் தவிர்க்கலாம் என்பது எனது தனிப்பட்டக் கருத்து.--மணியன் (பேச்சு) 03:50, 17 மார்ச் 2014 (UTC)
வணக்கம் மணியன், தங்களுடைய கருத்திற்கு நன்றி. தற்போது உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டே புது கட்டுரைகளுக்கு மட்டும் இவ்வார்ப்புரு இடப்பட்டுள்ளது. நேற்று மற்றும் இன்று மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் அதனை உருவாக்கியவர்கள் மற்றும் பங்களித்தவர்கள் ஆதாரங்களை இணைத்துள்ளனர். இது சரியான முறையாகவே எனக்குத் தோன்றுகிறது. எப்போதோ தொடங்கிய கட்டுரைகளில் இவ்வார்ப்புரு இடுவது பயனளிக்காது, ஏனெனில் அவர் தொடங்கிய போது இருந்த ஆதாரங்கள் அழிந்திருக்கலாம், தொலைந்திருக்கலாம், அல்லது அதனுடைய மூலத்தை மறந்திருக்கலாம். விரைந்து ஆதாரம் திரட்டும் பணியில் களமிறங்குகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:16, 17 மார்ச் 2014 (UTC)
மேற்கோள் சேர்ப்பது பற்றி அறிவித்தல்கள், கையேடுகள், பயிற்சி, சிறந்த எடுத்துக்காட்டுக்கள், கருவிகள் ஊடாக தற்போது செயற்படும் விக்கியர்களுக்கு இடையே ஒரு விழிப்புணர்வு உருவாக்குவோம். அதன் பின்பு இறக்கமாக வார்ப்புருக்களைச் சேர்க்கலாம். --Natkeeran (பேச்சு) 02:27, 18 மார்ச் 2014 (UTC)

தினேசு, தானியங்கி மூலம் வார்ப்புரு இடல் குறித்து பயனர்கள் கலந்துரையாடிய பின் கொள்கை முடிவு எட்டப்பட வாய்ப்புண்டு. அறியாமை, அனுபவமின்மை, சோம்பல், நேரமின்மை, பிற பயனர்கள் செய்து விடுவார்கள் என்ற எண்ணம் போன்ற காரணங்களால் மேற்கோள்கள் தரப்படாமல் இருக்கலாம். மேற்கோள் தேவை வார்ப்புருவைக் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இடலாம் என எண்ணுகிறேன். கட்டுரைப் பக்கத்தில் இடுவதால், விக்கியரல்லாத வெளியாட்களின் பார்வையில் தமிழ்விக்கியின் நம்பகத்தன்மையைக் குறைக்குமோ என்று தோன்றுகிறது. மற்றப் பயனர்களின் கருத்துரை தேவை. நன்றி.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 06:17, 18 மார்ச் 2014 (UTC)

என் பேச்சுப்பக்கத்தில் இருந்து கொள்கைப் பக்கம் வந்த தகவல் எனக்கு கிடைக்கவில்லை :( // மேற்கோள் தேவை வார்ப்புருவைக் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இடலாம் என எண்ணுகிறேன்// பேச்சு பக்கத்தில் இடுவதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறேன். //அறியாமை, அனுபவமின்மை, சோம்பல், நேரமின்மை, பிற பயனர்கள் செய்து விடுவார்கள் என்ற எண்ணம் போன்ற காரணங்களால் மேற்கோள்கள் தரப்படாமல் இருக்கலாம்.// அப்படி அறியாமை, அனுபவமின்மை, சோம்பல், நேரமின்மை காரணங்களால் கட்டுரை மட்டும் எழுதியவர்கள் கூறிய கருத்துகளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுகிறது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:35, 19 மார்ச் 2014 (UTC)

மன்னிக்கவும். குறிப்புத் தர மறந்துவிட்ட்னே. வார்ப்புரு இடுவதனினால் மேற்கோள்கள் தானாக இணைக்கப்படப்போவதில்லை. அவ்வாறு வார்ப்புரு இடுவதன் நோக்கங்கள், பலன்கள், பக்க விளைவுகள் எவை என்று பார்க்க வேண்டும்.

நோக்கங்கள்/பலங்கள்

  • பயனர்களுக்கு அறிவுறுத்தல்.
  • பங்களிப்பாளரை மேற்கோள் சேர்க்க வேண்டுதல்/ஊக்கப்படுத்தல்.
  • மேற்கோள்களைக் கூட்டி நம்பகத்தன்மையைக் கூட்டல்.

பாதிப்புகள்

  • பயனர் ஊக்கம் குறைதல், பங்களிப்புக்கள் குறைவதற்கான வாய்ப்பு உண்டு. சிறிய விக்கிகளில் இதன் தாக்கம் பெரிதாக அமையும்.
  • விக்கியர் அல்லாதப் பொதுப் பயனர்களிடம் கார்த்திகேயன் சுட்டியது போல எல்லாம் தவறு என்று perception உருவாகல்.

எமது நோக்கம், நெடுங்கால பயனர்கள் அனைவரும் தகுந்த மேற்கோள்களைச் சேர்ப்பதை வழமையாக கொள்ளல். எப்படிச் செய்யலாம்:

  • விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் போன்ற பக்கங்கங்களை முழுமையாக்கல். மேற்கோள் சுட்டுதல் முறைமை இன்னும் விரிவாக அறியப்படாத ஒன்றாகவே உள்ளது. எ.கா Reflist.
  • மேற்கோள் சுட்ட உதவும் கருவிகளை அறிமுகப்படுத்தல், உருவாக்கல்.
  • தள அறிவித்தல்கள் ஊடாக அறிவுறுத்தல்.
  • அனுபவம் வாய்ந்த பயனர்களை முதலில் அணுகுதல்.

மேற்சுட்டிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். வார்ப்புரு இணைப்பதுவே சிறந்த வழிமுறை என்று கருதினால், சிறிய வார்ப்புருவாக, பக்கத்தின் அடிப் பக்கத்தில் சேர்த்தல். --Natkeeran (பேச்சு) 02:16, 20 மார்ச் 2014 (UTC)

விக்கிப்பீடியா:கொள்கை வகுத்தல் வழிகாட்டல்

  • விக்கிப்பீடியா:கொள்கை வகுத்தல் தொடர்பாக கருத்துக்களும், அதில் திருத்தங்களும் பேச்சு பக்கத்தில் தரப்பட்டுள்ளன. கொள்கை வழிகாட்டல் உருவாக்கம் தொடர்பாக அண்மையில் பல கேள்விகள் எழுப்பட்டுள்ளதால், இது ஒரு முக்கிய வழிகாட்ட. இதன் உள்ளடக்கம், திருத்தம், பிற கருத்துக்கள் தொடர்பாக பரந்த பயனர்கள் உள்ளீடு தருதல் நலம். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:15, 24 மார்ச் 2014 (UTC)

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவை - கேள்விக்கு உட்படுத்தல்

பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கவை --Natkeeran (பேச்சு) 17:10, 24 மார்ச் 2014 (UTC)

வலைத்தளங்கள்

கிறிஸ்தவ இணைப்பகம், கிறிஸ்தவ திரட்டி, பைபிள் அங்கிள் அருட்பனி ஊடகம் இவ்வாறான வலைத்தளங்கள் மட்டில் எப்படி செயற்படுவது? கட்சிக்கும், சமய நிலையங்களுக்கும் என இருக்கும் வலைத்தளங்களை தனிக் கட்டுரையாக அனுமதிக்கலாமா? இவ்வாறான வலைத்தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனவே? இவற்றை நீக்கப் பரிந்துரைக்கிறேன். --AntonTalk 19:33, 4 ஏப்ரல் 2014 (UTC)

மூன்றையும் இணைத்து பைபிள் அங்கிள் அருட்பனி ஊடகம் என்ற கட்டுரையில் தரலாம். --Natkeeran (பேச்சு) 01:43, 5 ஏப்ரல் 2014 (UTC)

Y ஆயிற்று--AntonTalk 02:10, 5 ஏப்ரல் 2014 (UTC)

பதிப்புரிமை மீறல்

பயனரின் பதிப்புரிமை மீறல் குறித்த தெளிவற்ற தன்மையினால் இங்குள்ள ஏறக்குறைய எல்லா படிமங்களும் (1300+) பதிப்புரிமை மீறலைக் கொண்டிருக்கின்றன. என்ன செய்யலாம்? --AntonTalk 16:41, 8 ஏப்ரல் 2014 (UTC)

  • இதில் அவரது படங்களும் அடங்கும் என்று கருதுகிறேன். அவரோடு தொடர்பு கொண்டு அவரது படங்களுக்கு காப்புரிமை பற்றி தெளிவு பெற முயற்சி செய்யலாம்.
  • அப்படித் தொடர்பு கொள்ள முடியாவிட்டால்
ஒரு கட்டுரைக்கு ஒரு படம் வீதம் நியாப் பயன்பாடு கருதி விடலாம். பிறவற்றை நீக்கலாம்.
மலேசியாவை மையப்படுத்தி, ஒரு போட்டி ஒன்றை நடத்தி மாற்றீட்டுப் படங்களைப் பெற்று, பின்னர் நீக்கலாம்.

--Natkeeran (பேச்சு) 16:43, 8 ஏப்ரல் 2014 (UTC)

இது தொடர்பாக பயனர் பதில் தந்துள்ளமையால் ஒரு கட்டுரைக்கு ஒரு நியாயப் பயன்பாட்டுப் படிமத்தை ஏற்று மற்ற பதிப்புரிமை தெளிவில்லாத படிமங்களை நீக்கலாம். --இரவி (பேச்சு) 10:54, 13 ஏப்ரல் 2014 (UTC)

விளக்கத்திற்காக

இரவி, நீங்கள் சான்றிதழ் தொடர்பில் கேட்ட கேள்விக்கு பலருக்கும் பயன்படும் என்ற வகையில் இங்கு பதிலளிக்கிறேன். இவற்றைப் பாருங்கள்:

  1. Commons:License laundering
  2. //என்னுடைய வீட்டைக் கூட படம் எடுத்துப் பதிய முடியாது. ஏன் எனில், அந்தக் கட்டட வடிவமைப்பின் உரிமம் பொறியாளரிடம் இருக்கக்கூடும்.// ஆம். Commons:Derivative works If I take a photograph of a kid who is holding a stuffed Winnie the Pooh toy, does Disney own the copyright in the photo since they own the Pooh design? While Disney does not hold a copyright on the photo, there may be an infringement on Disney's copyright of Pooh by virtue of copying via the photograph. In fact, you may have created a derivative work without permission.
  3. Commons:Copyright rules by subject matter eg:Posters are normally copyright-protected even if the artist is unknown.
  4. Commons:Freedom of panorama India - Not OK for 2D (paintings, drawings, maps, pictures, engravings, etc.). USA - Artworks and sculptures not OK.

இவ்வாறான பல நுணுக்கமாக சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதனால்தான், ஆ.வி பழைய முறையிலான பதிவேற்றத்தை மாற்றீடு செய்துள்ளது. சொந்தமில்லாத படிமங்களை பதிவேற்ற முடியாதவாறு ஆ.வி.யின் புதிய முறை செயற்படுகின்றது. நியாயப் பயன்பாட்டுப் படிமம் கூட முன்புபோல் பதிவேற்ற முடியாது. கட்டாய உள்ளீடுகளை வழங்காதவரை பதிவேற்ற முடியாது. அதன்பின் பின் நிர்வாகி "உகந்தது" என்று குறிக்காத வரை நீக்கப்படலாம். File Upload Wizard - இந்த முறை இங்கு இல்லாததும், பதிப்புரிமை பற்றிய விழிப்புணர்வு இன்மையும் படங்களை இங்கு குவிய வைக்கிறது. த.வி.யாது ஆ.வி போல் வளராவிட்டாலும் சட்டம் தொடர்பில் அவதானமாக இருப்பது நல்லதே. --AntonTalk 13:02, 13 ஏப்ரல் 2014 (UTC)

அன்டன், விளக்கத்துக்கு நன்றி. சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சட்டம் மிகவும் கடுமையாக இருக்கிறதே என்பதே ஆதங்கம். இது எந்த வகையிலும் படைப்பூக்கத்தையும் சுதந்திரத்தையும் அளிப்பதாக இல்லை. இது தொடர்பாக https://en.wikipedia.org/wiki/Free_Culture_%28book%29 என்ற நூலைப் படிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பிட்ட சான்றிதழைப் பொருத்தவரை, அந்த வடிவமைப்புக்கு உரிமையுள்ள தமிழக அரசு விக்கிமீடியாவின் மீது வழக்கு தொடுக்கும் வாய்ப்பு எல்லாம் மிகவும் குறைவு என்பதால், அதனை நியாய பயன்பாட்டுப் படிமமாக ஏற்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:52, 14 ஏப்ரல் 2014 (UTC)

உங்கள் ஆதங்கம் சரியானதே. //தமிழக அரசு விக்கிமீடியாவின் மீது வழக்கு தொடுக்கும் வாய்ப்பு எல்லாம் மிகவும் குறைவு// வாய்ப்பு எல்லாம் மிகவும் குறைவு என்பதே நியாயப்படுத்தலாகிவிடும். மேலும் நாமாக அனுமானத்திற்கு வரத்தேவையில்லை. கொள்கையின்படி செயல்படுவோம். --AntonTalk 07:20, 15 ஏப்ரல் 2014 (UTC)

கைப்பாவைகள் குறித்த கொள்கையில் சேர்க்கை

பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:கைப்பாவை#கைப்பாவையின் பேச்சுப் பக்க உரையாடல்கள் பற்றிய கொள்கை. --இரவி (பேச்சு) 10:57, 13 ஏப்ரல் 2014 (UTC)

வெளியிணைப்புகள் குறித்த கொள்கையில் சேர்க்கை

பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:வெளி இணைப்புகள்#மேற்கோள்கள், உசாத்துணைகளில் வணிக வெளியிணைப்புகளைத் தவிர்த்தல்--இரவி (பேச்சு) 11:04, 13 ஏப்ரல் 2014 (UTC)

நூல்கள் குறித்த குறிப்பிடத்தக்கமை வழிகாட்டல் உரையாடல்

பார்க்க: பகுப்பு பேச்சு:நூல்கள்--இரவி (பேச்சு) 11:29, 13 ஏப்ரல் 2014 (UTC)

துடுப்பாட்டக்காரர்கள் குறித்த குறிப்பிடத்தக்கமை வழிகாட்டல் உரையாடல்

பார்க்க: பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள்--இரவி (பேச்சு) 12:32, 13 ஏப்ரல் 2014 (UTC)

ஒருகிழமைக் கொள்கை அமுலாக்கம்

ஒரு பரிந்துரை முன்வைக்கப்படுகிறது. அப் பரிந்துரைக்கு எக் கருத்தும் 1 கிழமைக்குள் கருத்துக் கூறாது விடத்து அப் பரிந்துரை அமுலாகிவிடும். ஒரு கிழமை என்பது மிகவும் குறைவான காலம். தொடர்ந்து செயற்படும் பயனர்கள் கூட ஒவ்வொரு கிழமையும் விக்கியைப் பார்ப்பார் என்று கூற முடியாது. குறைந்தது 2 கிழமைகள் அவகாசம் வேண்டும். சிக்கலான விடயங்களுக்கு மேலும் கூடிய அவகாசம் தேவைப்படலாம். --Natkeeran (பேச்சு) 18:28, 13 ஏப்ரல் 2014 (UTC)

அண்மைய இரு கொள்கைச் சேர்க்கை முன்மொழிவுகள் ஏப்பிரல் 8 அன்று இடப்பட்டன. ஒரு கொள்கைக்குச் சுந்தர் மட்டும் கருத்து தெரிவித்தார். இன்னொரு கொள்கை உரையாடலுக்கு ஒரு எதிர்வினையும் இல்லை. போதிய எதிர்வினை இல்லாமைக்கு இரு காரணங்களே இருக்க முடியும்: 1. மறுக்கும் அளவுக்கோ கருத்து சொல்லும் அளவுக்கோ ஒன்றும் இல்லை. 2. கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம் ஒரு முடிவை நோக்கி நகர விடாமல் இழுத்தடிப்பது. நிருவாக அணுக்க நீக்கல் கொள்கை உருவாக்கத்தின் போது இதுவே நடந்தது. எனவே, போதிய எதிர்வினைகளைப் பெற்று ஒரு இணக்க முடிவை எட்டும் நோக்கிலேயே இத்தூண்டல் அறிவிப்பு இடப்படுகிறது. அவசரம் அவசரமாக கொள்கையை நிறைவேற்ற அன்று. முதல் எதிர்வினையைப் பெறுவதற்குத் தான் காலக்கெடுவே தவிர, அவசரம் அவசரமாக திணிக்கப்பட்ட முடிவை எடுக்க அன்று. எனவே, கொள்கையின் சிக்கலைப் பொறுத்து உரையாடலுக்கும் முடிவெடுப்பதற்கும் கூடுதல் கிழமைகள் தருவதில் சிக்கல் இல்லை. இன்னொன்று, தமிழ் விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 100+ பயனர்கள் பங்களிக்கிறார்கள். இவர்களில் பலர் போதிய விக்கி அனுபவம் உள்ளவர்கள். தேவைப்படும் இடங்களில் சரி, தவறுகளைச் சுட்டிக் காட்ட வல்லவர்கள். எனவே, யாரேனும் சிலர் வந்து கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக காலத்தை நீட்டிக்கத் தேவையில்லை. நிருவாக அணுக்கத் தேர்தல் உட்பட பல முக்கிய விக்கி நடவடிக்கைகள் ஒரு வார காலத்திலேயே செய்யப்படுகின்றன என்பதையும் கவனிக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 20:26, 13 ஏப்ரல் 2014 (UTC)


நான் நீங்கள் குறிப்பிடும் 2 கொள்கைச் சேர்க்கைகளைப் பற்றி அறியேன்! எதோ ஒரு மூலையில், எந்த அறிவித்தல்களும் இல்லாமல் அமைந்த பேச்சுப் பக்கத்தை யாரும் கவனிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது. ஆகவே தற்போது நீங்கள் செய்வது போல, முறைப்படி ஆலமரத்தடியில் அறிவித்தல் தாருங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:59, 13 ஏப்ரல் 2014 (UTC)

எடுத்தவுடன் எல்லாவற்றையும் ஆலமரத்தடியில் குவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழ் விக்கிப்பீடியா வளர வளர எண்ணற்ற உரையாடல்கள் பெருகும் போது இது சிக்கல் ஆகும். அண்மைய மாற்றங்கள், கவனிப்புப் பட்டியல் ஆகியவற்றை இன்னும் திறம்பட பயன்படுத்த பயனர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். என்னைப் பொருத்த வரை, எத்தனை நாட்கள் கழித்து வந்தாலும் அண்மைய மாற்றங்களில் பேச்சுப் பக்க பெயர் வெளிகளை மட்டும் தெரிவு செய்தும், விக்கிப்பீடியா பெயர்வெளியைத் தெரிவு செய்தும் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வேன். எனினும், உங்கள் வேண்டுகோளை ஏற்று கொள்கை உரையாடல்களை முதலிலேயே இங்கு தெரிவித்து விடுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:47, 14 ஏப்ரல் 2014 (UTC)

Deletionism and inclusionism in Wikipedia - தமிழ் விக்கியில் வலுப்பெறும் நீக்கல் இயக்கம்

In 2009, Wikipedia began to see a reduction in the amount of edits to the site, which some called a result of user frustration due to excessive deletionism.[1]

இக் கட்டுரையைப் பாருங்கள்: en:Deletionism and inclusionism in Wikipedia. அண்மைக் காலமாக, தமிழ் விக்கியில் நீக்குவோர் இயக்கம் வலுப்பெற்று வருகிறது. காப்புரிமை விடயங்கள் மீறப்பட்டவையோ, வணிக/பிரச்சார நோக்கிலான உள்ளடக்கங்களை நீக்குவதையோ இங்கு நான் குறிப்பிடவில்லை.

குறிப்பிடத்தக்கமை என்பதன் நுணுக்கங்களை அறிந்து விக்கியர்கள் செயற்படாவிடால், தமிழ் விக்கி அரும்பிலேயே பெரும் பின்னடைவைச் சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அச்சில் வெளிவந்த ஆக்களின் அடிப்படையில் மட்டும் தமிழ்க் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்று கூறினால், பல விழிம்புநிலைத் தலைப்புகளை நாம் தொட முடியாது. பல அழியும் கலைகளைப் பற்றி கட்டுரைகள் எழுத முடியாது. ஆங்கில சூழல் போல் அன்றி. தமிழ்ச் சூழலில் நிகழும் ஒட்டுமொத்த சினிமா ஆதிக்கத்தைத் தாண்டி படைப்புகள் தொடர்பாக நாம் விரிவான பதிவுகளையும் செய்ய முடியாது. எந்த ஒரு மொக்கைப் படம் என்றாலும் பத்து வலைத்தளங்களில் விளம்பரங்கள் மதிப்பீட்டுரை என்ற பெயரில் வரும். அவற்றை "ஆதாரங்களாகக்" கொண்டு எந்த ஒரு தமிழ்ப் படத்துக்கும் ஒரு கட்டுரை எழுத முடியும். ஆனால் பிற தலைப்புகளில் அப்படிச் செய்ய முடியாது. எ.கா தமிழ் ராப். ஒரு தமிழ் நூல், ஆய்வுக் கட்டுரை கிடைக்குமா. ஆகத் தோண்டினால் சில வலைப்பதிவுகள் கிடைக்கும். வலைப்பதிவுகளை மேற்கோளாகக் காட்டுவதும் அவ்வளவு விரும்பப்படுவது இல்லை (இது கூட தமிழ்ச் சூழலுக்கு பொருந்தாத ஒரு வழிகாட்டலே. தமிழில் பேராசியர்கள், எழுத்தாளர்கள் கூட வலைப்பதிவுகள்தான் வைத்துக்கின்றார்கள். அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் கூட வலைப்பதிவுகளில்தான் கிடைக்கிறது.) ஆனால் தமிழ் ராப் இல்லையா? அக் கலைஞர்கள், அவர்களின் படைப்புகள் பற்றி குறுங்கட்டுரைகள் அமைவது தவறா?

நான் குறிப்பிடத்தக்கமையை யார் வரையறை செய்வது என்ற அரசியல் நிறைந்த வாதத்துக்குள் போகவே இல்லை. ஒரு தலைப்பில் மிக நீண்ட கட்டுரை இருப்பதால், அது முக்கியமானது என்றோ, ஒரு குறுங்க் கட்டுரை இருப்பதால் முக்கியம் இல்லை என்றோ எப்படி முன்முடிவு செய்ய முடியும். மஞ்சரி (கனடா இதழ்) என்ற கட்டுரையை எடுத்துக் கொள்வோம். அது ஒரு குறுங்கட்டுரை. பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. சான்று இல்லை என்பது நியாமான விமர்சனம். ஆனால் அது முக்கியத்துவம் இல்லை என்று தீர்க்தரசி மாதிரி முடிவுசெய்து, எல்லாவற்றையும் ஒரு நீண்ட பட்டியலில் சேர்த்தல் பொருத்தமானதா? தமிழ் விக்கியையே ஏன் நாம் ஒரு நீண்ட பட்டியலாத் தொகுக்க முடியாது.

யாரும் இது முக்கியம் இல்லை என்று எளிதில் வார்ப்புரு சேர்த்துவிடலாம். ஏன் என்றா முக்கியம் என்று நிறுவுவதற்கான முழும் பொறுப்பும் கட்டுரையாளரைச் சார்கிறது. "நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்" (beyond a reasonable doubt) சான்றுகள் இருந்தால் மட்டுமே கட்டுரையைத் தொடங்குகள் போன்று அறைகூறுவது ஆங்கில விக்கிக்கும் சரிவராது. சிறிய விக்கியான தமிழ் விக்கிக்கு நிச்சியம் சரிவராது.

ஆங்கில விக்கியில் குறிப்பிடத்தக்கமை உண்மையில் சரிவர நிறைவேற்றப்படுகிறதா. இல்லை. எ.கா பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள். அது எப்படி அந்தளவு மிகச் சீரிய, உயரிய கொள்கைகளை நூல்களுக்கு வைத்துக் கொண்டு, திரைப்படத்துக்கு மிகவும் அடிமட்டமான சீர்தரத்தைக் கொண்டு இருக்கலாம். இது யாருக்காவது விரிவாக சிந்தித்து முன்மொழியப்பட்ட கொள்கையாகத் தெரிகிறதா? அப்படி இருக்கையில் மிகவும் அவசரமாக தமிழ் விக்கியில் இந்தக் கொள்கையை மிகவும் இறுக்கமாக அமுல்படுத்த வேண்டுமா. இது ஒரு பெரும் பிரச்சினையாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதா?

இவை ஒரு புதுப் பயனரை, ஏற்கனவே பங்களிப்புக்கள் செய்த பயனரை எப்படிப் பாதிக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். அனுபப்பட்ட என் போன்ற பயனர்களே இது பெரும் அளவு அழுத்தத்தைத் தருகின்றது என்றால் மூத்த பயனர்களை இது எவ்வாறு பாதிக்கும். நாம் கொண்டாடும் சங்கைப் பொதுவனின் ஆக்கங்கள் எமக்கு கிடைத்துருக்குமா. (நிச்சியமாக இல்லை. அவரின் ஆக்கங்கள் எதிர்காலத்தில் விக்கியில் இருக்குமா என்பதையும் கடினமாக நீக்கல் இயக்க கொள்கை முனைப்பு கேள்விக்கு உட்படுத்துகின்றது.). நிச்சியமற்ற தன்மை, நீண்ட வறண்ட உரையாடல்கள் நிச்சியம் நிலைக்கும்.

ஆகவே, குறிப்பிடத்தக்கமையும், அதை நிறைவேற்ற பல அவதாரங்களாக (6 வரிகள், கட்டுரை இணைப்பு) எடுக்கும் கொள்கைகளும் மிகவும் அவதானமாக வடிவமைக்கப்பட வேண்டும்.

பதிப்புரிமை, மேற்கோள்கள் தொடர்பாக நாம் கூடிய சிரத்தையுடன் செயற்படுவதை வரவேற்கிறேன். குறிப்பிடத்தக்கவை என்ற பெயரில் மிகவும் உயர்ந்த தடைகளை கட்டுரை ஆக்கத்துக்கு, இருப்புக்கு விடுவது நல்லதல்ல, நல்லதல்ல, நல்லதல்ல. --Natkeeran (பேச்சு) 19:16, 13 ஏப்ரல் 2014 (UTC)

"Deletionists rule Wikipedia. Ironically, they're constrained by print-era thinking. What harm does it do if an online reference has a long tail of articles that are only interesting to a few people, so long as everyone can still find whatever they're looking for? There is room to do to Wikipedia what Wikipedia did to Britannica." - Paul Graham

"There are some people on Wikipedia now who are just bullies, who take pleasure in wrecking and mocking people's work – even to the point of laughing at non-standard 'Engrish'. They poke articles full of warnings and citation-needed notes and deletion prods till the topics go away." - Nicholson Baker

--Natkeeran (பேச்சு) 20:05, 13 ஏப்ரல் 2014 (UTC)

தொடர்ந்து மாறும் கட்டுரை அளவீடுகள் - மூன்று வரிகள் - போதிய உள்ளடக்கம்

அண்மையில், பல மொத்தப் பகுப்புகளே பட்டியலாகத் தொகுத்து விடலாம் என்று. எ.கா பகுப்பு பேச்சு:ஈழத்து சஞ்சிகைகள். போதிய உள்ளடக்கம் இல்லை, ஆகையால் ஒரு பட்டியலில் இடுங்கள் என்று கோரப்பட்டு இருந்தது. எ.கா சுட்டப்பட்ட கட்டுரைகள் மூன்று வரிகளைக் கொண்டு இருந்தன. ஆக, மூன்று வரிகள் இருந்தாலும், யாராவது "போதிய உள்ளடக்கம்" என்ற கருதாவிட்டால், அவற்றை நீக்கிவிட்டு, ஒரு பட்டியலில் தொகுக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, போதிய உள்ளடக்கம் என்றால் என்ன? இதை யார் தீர்மானிப்பது? ஏன் இக் கட்டுரைகள் விரிவுபெற முடியாது என்று முன்கூட்டியே சாத்திரம் கூறப்படுகிறது. இந்த முன்மொழிவை முன்வைத்தவருக்கு ஈழத்துச் சஞ்சிகைகள் தொடர்பாக எந்தளவு பரிச்சியம் உள்ளது. அல்லது எதாவது மூன்றைப் பொறுக்கி எடுத்துகாட்டுத் தரப்பட்டுள்ளதா? அவ்வாறானல், அந்த அணுகுமுறையை என்னவென்று கூறுவது. இந்தமாதிரிக் கொள்கைகள், அணுகுமுறைகள் எப்பொழுது உருவாக்கப்பட்டன? (மேற்கோள் தரப்பட வேண்டும் என்ற விதி அண்மைக் காலமாகவே தமிழ் விக்கியில் கூடிய சிரத்தையுடன் கவனப்படுத்தப்படுகிறது. அதையும் சாட்டாக் கொண்டு, பல கட்டுரைகளை நீக்கும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்க முடிகிறது.) இன்னும் சிறுது காலத்துக்கும் பின், ஒரு வரா காலம் யாரும் கருத்துக் கூறாதால், எல்லாவற்றையும் இணைக்கிறேன், நீக்குகிறேன் என்று செயற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. ஆகையால்தான், மிக உறுதியாக இந்தன் போதாமைகளை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். --Natkeeran (பேச்சு) 19:38, 13 ஏப்ரல் 2014 (UTC)

//ஆக, மூன்று வரிகள் இருந்தாலும், யாராவது "போதிய உள்ளடக்கம்" என்ற கருதாவிட்டால், அவற்றை நீக்கிவிட்டு, ஒரு பட்டியலில் தொகுக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, போதிய உள்ளடக்கம் என்றால் என்ன? இதை யார் தீர்மானிப்பது?//

விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு கொள்கையின் அடிப்படையிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

// ஏன் இக் கட்டுரைகள் விரிவுபெற முடியாது என்று முன்கூட்டியே சாத்திரம் கூறப்படுகிறது.//

பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் from November 2012 பகுப்பில் மட்டும் இதழ்கள் தொடர்பான 124 கட்டுரைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு மேற்கோள் கூட சேர்க்க முடியாமல் தேங்கி உள்ளன. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இதழ்கள் தொடர்பான கட்டுரைகளில் இன்னும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

// இந்த முன்மொழிவை முன்வைத்தவருக்கு ஈழத்துச் சஞ்சிகைகள் தொடர்பாக எந்தளவு பரிச்சியம் உள்ளது.//

கட்டுரைகளின் குறிப்பிடத்தக்கமை பற்றி உரையாடவே துறை சார் அறிவு தேவை. அதுவும் கூட புறவயமான, நடுநிலையான, நம்பகமான ஆதாரங்கள் தந்தால் எவரும் ஒப்பிட்டு முடிவெடுக்கலாம்.

//ல்லது எதாவது மூன்றைப் பொறுக்கி எடுத்துகாட்டுத் தரப்பட்டுள்ளதா? //

உங்களுக்கு எத்தனை எடுத்துக்காட்டுகள் வேண்டும்? :) 50? 100?

//இன்னும் சிறுது காலத்துக்கும் பின், ஒரு வரா காலம் யாரும் கருத்துக் கூறாதால், எல்லாவற்றையும் இணைக்கிறேன், நீக்குகிறேன் என்று செயற்படுத்தி விடும் அபாயம் உள்ளது.//

என்ன எழுதினார்கள் என்றே தெரியாதவர்களை எல்லாம் எழுத்தாளர்களாக கருதி கட்டுரையில் தரவுகளைச் சேர்த்து வைத்திருக்கும் தமிழ் விக்கிப்பீடியாவில் இது தேவையற்ற அச்சம். --இரவி (பேச்சு) 07:40, 14 ஏப்ரல் 2014 (UTC)


ஒருபுறத்தில் இணக்க முடிவு என்று கூறிக் கொண்டு, மறு புறத்தில் உங்கள் விரும்பம் போல வார்ப்புருக்களைச் சேர்க்கிறீகள். போதுமான உள்ளடக்கம் என்பது objective ஆனா ஒரு அளவீடு இல்லை. ஆங்கில விக்கியை விட இறுக்கமான முன்மொழிவுகள் கோள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் போது, உங்கள் விரும்பப்படி மூன்று வரிக் கட்டுரைகளுக்கு நீக்கல் வார்ப்புரு சேர்த்து உள்ளீர்கள். ஏன் என்று கேட்டால், நீங்கள் உருவாக்கிய கொள்கைகளைக் சுட்டுகிறீர்கள். --Natkeeran (பேச்சு) 14:01, 14 ஏப்ரல் 2014 (UTC)

நற்கீரன், குறும்பக்கங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நேற்று நான் மேம்படுத்திய இரண்டு கட்டுரைகள் இதோ: விழித்திரை நோய், உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய். இத்தகைய குறும்பக்கங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளள:

  • பிற விக்கி இணைப்பு இன்மை
  • மேற்கோள் / ஆதாரம் / வெளியிணைப்பு இன்மை
  • தேவையற்ற பக்க வழிமாற்றுப் பக்கங்கள்
  • தலைப்பை விளக்கும் கட்டுரைகள் (எடுத்துக்காட்டு: கால்நடை மருத்துவக் கல்லூரி , குழந்தை அறுவை சிகிச்சை.
  • மூன்று வரிகள் இருந்தாலும் முக்கியமான உள்ளடக்கம் இல்லாதது.

எடுத்துக்காட்டு: சோமனூர் - இங்கு ஒரு தொடர்வண்டி நிலையம் உள்ளது என்பது ஒரு வரி. ஒரு ஊரைப்பற்றி இருக்க வேண்டிய அடிப்படை விவரங்கள் இங்கு இல்லை. எடுத்துக்காட்டுக்கு, இந்த ஊரின் புவியிருப்பிடம் என்ன, மக்கள் தொகை என்ன, ஊராட்சி நிலை என்ன போன்ற விவரங்கள் இல்லை. மூன்று வரியில் இருந்தாலும் இந்த ஊரின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விவரங்கள் இல்லை. இதே அடிப்படையில் அம்மாப்பட்டி என்று ஒரு கட்டுரை எழுதிக் காட்டியுள்ளேன். இவ்வாறான கட்டுரைகளை எழுதத் தான் ஊக்குவிக்கிறோமா?

பால்டிக் கடல் என்ற கட்டுரை 2006ல் எழுதப்பட்ட வடிவத்தில் இருந்து பெரிய முன்னேற்றம் ஏதும் காணவில்லை.இதிலும் மூன்று வரிகள் உள்ளன. ஆனால், //இதனைச் சுற்றி ஸ்கான்டினேவிய நாடுகள் உள்ளன. டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இக்கடலைத் தொட்டுக்கொண்டுள்ளன.// ஆகிய இரண்டு வரிகளும் ஒரே விசயத்தைத் தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றனது. மூன்று வரி இருக்கிறது என்பதற்காக இதனை எப்படிப் போதுமான உள்ளடக்கம் என்று கருத முடியும்? Inclusionism, incrementalism, separatism, eventualism என்று பல இசங்களைச் சுட்டிக் காட்டும் நீங்கள் ஆங்கில விக்கியில் பல ஆண்டுகளாக இது போல் தேங்கி நிற்கும் ஒரு முக்கிய கட்டுரையைக் காட்ட முடியுமா?

தலைப்பை விளக்கும் பல்வேறு கட்டுரைகளுக்கு எடுத்துக்காட்டாக கழுதைப் புலி கட்டுரையை எழுதிக் காட்டியுள்ளேன். இது மூன்று வரி இருக்கிறது என்பதற்காக விட்டு விடலாமா?

வெற்றி தரும் மேலாண்மை உத்திகள் (நூல்) என்று ஒரு நூல். இதில் நூலாசிரியர் குறிப்பு, அணிந்துரை, வாழ்த்துரை, மதிப்புரை, மகிழ்வுரை (!), உள்ளடக்கம் என்று 7000 பைட்டுகளுக்குக் கட்டுரை செல்கிறது. ஆனாலும் நூல் விலையையும் பக்கத்தையும் தவிர குறிப்பிட அங்கு ஒன்றுமில்லை. எங்கள் பள்ளியில் ஒரு எடுத்துக்காட்டு சொல்வார்கள். மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால், தென்னை மரத்தைப் பற்றி விரிவாக எழுதிவிட்டு அத்தகைய தென்னை மரத்தில் பசு மாட்டைக் கட்டியிருந்தார்கள் என்று எழுதுவார்களாம். இது போன்ற வெற்றுக் கட்டுரைகளை வைத்துக் கொண்டு என்ன சாதிக்கிறோம்?

இதே போல் மு. கணேசன் (தள்ளுவண்டி கடைக்காரர்) என்று ஒரு கட்டுரை எழுதினேன். இது கலைக்களஞ்சியத்தில் இருக்கக்கூடாத ஒரு கட்டுரை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், அதனை நீக்குவது என்றால் பேச்சு:மு. கணேசன் (தள்ளுவண்டி கடைக்காரர்) பக்கத்தில் சுட்டியுள்ள வழிமுறைகளைத் தாண்டித் தான் செல்ல வேண்டும்.

செங்கைப் பொதுவன் ஐயா போன்றோரின் பங்களிப்புகளை அரவணைக்க வேண்டும் என்ற நோக்கில் நாம் இளக்கும் கொள்கைகள் வேறு சிலரின் பொறுப்பற்ற செயல்பாடுகளுக்கும் விளம்பர நோக்குகளுக்குமே உதவுகின்றன.

தமிழ் விக்கிப்பீடியாவில் நாம் புதிதாக ஏதும் கொள்கை இயற்றவில்லை. ஆனால், இருக்கிற கொள்கைகளை நடைமுறைப்படுத்தவே போராட வேண்டி இருக்கிறது. Inclusionism பேசி தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு கலைக்களஞ்சியத்துக்கான அடிப்படைத் தரம் கூட இல்லாமல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்போது ஏன் இந்த அவசரம் என்றால், இப்போது செய்யாவிட்டால் எப்போதும் செய்ய இயலாது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு, ஏன் முன்பே சுட்டிக் காட்டவில்லை, ஏன் அனைத்துப் பிரச்சினைகளையும் ஒன்றாக குவிக்கிறீர்கள் என்று கேள்வி வருகிறது. எனவே, துப்புரவுப் பணியை இயன்ற போதெல்லாம் அன்றன்றே செய்து முடிப்பதே சிறப்பாகத் தோன்றுகிறது.

குறித்த கால நீக்கல் வேண்டுகோள் இடுவது, ஒன்றிணைப்பு வேண்டுகோள் இடுவது ஆகியன எல்லாம் வழக்கமான துப்புரவுப் பணிகள் தான். இவற்றுக்கும் விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு கொள்கைக்கும் தொடர்பில்லை. அக்கொள்கை தொடர்பாகவே இணக்க முடிவு அடிப்படையைச் சுட்டிக் காட்டி இருந்தேன். இன்னொன்று, விக்கிப்பீடியாவில் நான் எழுதிய கட்டுரை, நீங்கள் உருவாக்கிய கொள்கை என்று ஏதும் இல்லை. அனைத்துமே சமூக ஏற்பு பெற்றுத் தான் செயல்படுத்தப்படுகின்றன. பொதுவாக, எந்த ஒரு தொகுப்பினைப் பற்றிய மாற்றுக் கருத்தையும் பேச்சுப் பக்கத்தில் குறித்தால் பேசி இணக்க முடிவுக்கு வரலாம். எந்தக் காரணமும் சொல்லாமல் வார்ப்புருக்களை மீள்விப்பதும் தொகுத்தல் போர்களில் ஈடுபடுவதும் உங்களைப் போன்ற நெடுநாள் பயனருக்கு அழகன்று.

தற்போது வார்ப்புரு இடும் பல கட்டுரைகள் வேறு கட்டுரைகளில் இருந்து இணைப்புகளோ கூடுதல் பக்கப் பார்வைகளோ பெறுவன அன்று. இவ்வாறு வார்ப்புரு இட்டால் ஒழிய அவற்றின் இருப்பே யார் கவனத்துக்கும் வராது. நேற்று வார்ப்புரு இட்ட பிறகு கோபி ஒரு கட்டுரையை மேம்படுத்தினார். நீங்கள் இரு கட்டுரைகளில் பிழை திருத்தினீர்கள். அடுத்த ஒரு மாதத்தில் இன்னும் சிலர் பங்களிக்க வாய்ப்புண்டு.

வார்ப்புருவே இட வேண்டாம் என்று கோருவதன் மூலம் இத்தகைய மேம்பாடுகளுக்கான வாய்ப்புகளைத் தடுக்க வேண்டாமே?

தமிழ் விக்கிப்பீடியாவில் மிகச் சிலரே துப்புரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களை வேண்டா விருந்தாளிகள் போல் நோக்காமல் போதிய ஒத்துழைப்பைத் தர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 04:39, 15 ஏப்ரல் 2014 (UTC)


கடந்த மூன்று நாட்களின் உருவாக்கப்பட்ட புதுப் பக்கங்களில் பெரும்பானவை குறுங்கட்டுரைகள், பல புதுப் பயனர்களால் உருவாக்கப்பட்டவை

:: குறுங்கட்டுரைகள், எற்கனவே உள்ள கொள்கைகளுக்கு (3 வரிகள்)  ஏற்ப உருவாக்கப்பட்டு இருந்தால் அவற்றை நீக்கவேண்டாம்.  மேம்படுத்துக, விரிவாக்குக என்ற ஒரு புதுப் பகுப்புக்குள் சேர்க்கவும்.  3 வரிக் கட்டுரைகள் ஏற்கப்படுவதில்லை என்று கொள்கை வகுப்பதாயின், வழமை போல இணக்க முடிவு எடுத்துச் செய்யவும்.  --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 19:00, 15 ஏப்ரல் 2014 (UTC)
6:50, 15 ஏப்ரல் 2014 ‎பால்டிக் கடலை சூழவுள்ள நகரங்கள் பட்டியல் (வரலாறு) ‎[11,525 பைட்டுகள்] ‎Maathavan (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("[[Darłowo]] File:Stockholm old town..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
14:25, 15 ஏப்ரல் 2014 ‎எர்ணாகுளம் மக்களவைத் தொகுதி (வரலாறு) ‎[1,634 பைட்டுகள்] ‎தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்) முதலில் "எறணாகுளம் மக்களவைத் தொகுதி" என உருவாக்கப்பட்டது
14:20, 15 ஏப்ரல் 2014 ‎சாலக்குடி மக்களவைத் தொகுதி (வரலாறு) ‎[1,867 பைட்டுகள்] ‎தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்)
14:13, 15 ஏப்ரல் 2014 ‎திருச்சூர் மக்களவைத் தொகுதி (வரலாறு) ‎[1,804 பைட்டுகள்] ‎தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்)
14:03, 15 ஏப்ரல் 2014 ‎ஆலத்தூர் மக்களவைத் தொகுதி (வரலாறு) ‎[1,725 பைட்டுகள்] ‎தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்)
12:33, 15 ஏப்ரல் 2014 ‎பாலக்காடு மக்களவைத் தொகுதி (வரலாறு) ‎[1,782 பைட்டுகள்] ‎தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்)
12:31, 15 ஏப்ரல் 2014 ‎கிளீசு 667 (வரலாறு) ‎[16,081 பைட்டுகள்] ‎Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Starbox begin | name=கிளீசு 667 எ /பி /சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
12:20, 15 ஏப்ரல் 2014 ‎பொன்னானி மக்களவைத் தொகுதி (வரலாறு) ‎[2,554 பைட்டுகள்] ‎தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்)
12:07, 15 ஏப்ரல் 2014 ‎மலப்புறம் மக்களவைத் தொகுதி (வரலாறு) ‎[1,852 பைட்டுகள்] ‎தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்)
09:27, 15 ஏப்ரல் 2014 ‎சிராய்ப்பு (வரலாறு) ‎[3,078 பைட்டுகள்] ‎Velprakash2 (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("சிராய்ப்பு என்பது "ஒரு ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (Tag: குறும் பக்கம்)
08:58, 15 ஏப்ரல் 2014 ‎வார்தா கல்வித் திட்டம் (வரலாறு) ‎[3,058 பைட்டுகள்] ‎Semmal50 (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("'''வார்தா கல்வித் திட்டம்'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
04:46, 15 ஏப்ரல் 2014 ‎எச்டி 163376 (வரலாறு) ‎[948 பைட்டுகள்] ‎Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{starbox short |constell= விருச்சிக விண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
04:14, 15 ஏப்ரல் 2014 ‎எச்டி 163145 (வரலாறு) ‎[945 பைட்டுகள்] ‎Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{starbox short |constell=விருச்சிக விண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
02:58, 15 ஏப்ரல் 2014 ‎தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (2014) (வரலாறு) ‎[1,044 பைட்டுகள்] ‎Selvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (*துவக்கம்*)
16:09, 14 ஏப்ரல் 2014 ‎நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் (வரலாறு) ‎[4,956 பைட்டுகள்] ‎Drpalanichamy (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("சிவகங்கையிலிருந்து எட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (Tag: விக்கிப்படுத்த வேண்டிய கட்டுரை)
14:32, 14 ஏப்ரல் 2014 ‎பில்லி கிரஹாம் (வரலாறு) ‎[3,100 பைட்டுகள்] ‎Yesappa Pillai (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (பில்லி கிரஹாம் உலகின் மிகப் பிரபலமான சுவிசேஷகர் ஆவார்.) (Tag: விக்கிப்படுத்த வேண்டிய கட்டுரை)
13:52, 14 ஏப்ரல் 2014 ‎ரோ விருச்சிக விண்மீன் (வரலாறு) ‎[1,604 பைட்டுகள்] ‎Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Starbox short | name=ரோ விருச்சக விண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) முதலில் "ரோ விருச்சக விண்மீன்" என உருவாக்கப்பட்டது
13:43, 14 ஏப்ரல் 2014 ‎நினைத்து நினைத்து பார்த்தால் (வரலாறு) ‎[12,653 பைட்டுகள்] ‎Dineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{தொகுக்கப்படுகிறது | 15 நி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) முதலில் "நினைத்து நினைத்துப் பார்த்தால்" என உருவாக்கப்பட்டது
12:11, 14 ஏப்ரல் 2014 ‎குழிய வன்கூடு (வரலாறு) ‎[10,862 பைட்டுகள்] ‎G.Kiruthikan (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("அனைத்துக் உயிரணு|கலங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
11:36, 14 ஏப்ரல் 2014 ‎எச்டி 161840 (வரலாறு) ‎[950 பைட்டுகள்] ‎Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{starbox short |constell= விருச்சிக விண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
11:28, 14 ஏப்ரல் 2014 ‎நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோவில் (வரலாறு) ‎[57 பைட்டுகள்] ‎Drpalanichamy (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("நாட்டரசன் கோட்டை"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
11:18, 14 ஏப்ரல் 2014 ‎எச் டி 146624 (வரலாறு) ‎[1,042 பைட்டுகள்] ‎Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{starbox short |constell= விருச்சிக விண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
10:45, 14 ஏப்ரல் 2014 ‎கேட்டை விண்மீன் (வரலாறு) ‎[10,355 பைட்டுகள்] ‎Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Starbox begin | name=கேட்டை விண்மீன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
04:57, 14 ஏப்ரல் 2014 ‎சங்ககாலப் புலவர் பாடல் எண்ணிக்கை (வரலாறு) ‎[5,085 பைட்டுகள்] ‎Sengai Selvi (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("பத்துப்பாட்டும் எட்டுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
18:49, 13 ஏப்ரல் 2014 ‎பூங்காற்று திரும்புமா (திரைப் பாடல்) (வரலாறு) ‎[2,183 பைட்டுகள்] ‎Mayooranathan (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("'''பூங்காற்று திரும்புமா''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
16:28, 13 ஏப்ரல் 2014 ‎தூக்குத் தூக்கி (திரைப்படம், 1954) (வரலாறு) ‎[2,674 பைட்டுகள்] ‎Saranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ((edited with ProveIt))
15:22, 13 ஏப்ரல் 2014 ‎லலிதா (வரலாறு) ‎[4,464 பைட்டுகள்] ‎Saranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Infobox person | name = லலிதா | image = | caption =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
11:03, 13 ஏப்ரல் 2014 ‎ஸ்டுடியோ கிரீன் (வரலாறு) ‎[1,970 பைட்டுகள்] ‎Thilakshan (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Infobox company |name = ஸ்டுடியோ க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
10:18, 13 ஏப்ரல் 2014 ‎பரவுர் (வரலாறு) ‎[3,379 பைட்டுகள்] ‎Coppercholride (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (new.)
10:16, 13 ஏப்ரல் 2014 ‎ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் (வரலாறு) ‎[4,139 பைட்டுகள்] ‎Thilakshan (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Infobox company |name = ஃபாக்ஸ் ஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
09:41, 13 ஏப்ரல் 2014 ‎விருச்சிக விண்மீன் குழாம் (வரலாறு) ‎[7,752 பைட்டுகள்] ‎Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Infobox Constellation | name = Scorpius | symbolism = தே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
09:16, 13 ஏப்ரல் 2014 ‎மீனாட்சிசுந்தரம் (வரலாறு) ‎[4,600 பைட்டுகள்] ‎Saba rathnam (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("''திருமங்கலம் புலி மீனாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) முதலில் "திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்" என உருவாக்கப்பட்டது

ஆக, இந்தக் குறுங்கட்டுரைகளுக்கு எதிரனா நீக்கல், இணைத்தல் போக்கு, தமிழ் விக்கியை மிகவும் பாதிக்கும். இதனால்தான் குறுங்கட்டுரைகள் வேண்டாம் என்று வாதம் முன்வைக்கப்படக் கூடும். என்னத்தைச் சொல்ல.--Natkeeran (பேச்சு) 21:40, 15 ஏப்ரல் 2014 (UTC)

@நற்கீரன், ஒரு தகவலுக்காக - ‎தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (2014) எனும் கட்டுரை, நடப்பு நிகழ்வு குறித்தது. பக்க வடிவமைப்பினை முன்கூட்டியே இறுதிசெய்யும் முகமாக தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது, பின்னர் விரிவாக்கப்படும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 16 ஏப்ரல் 2014 (UTC)
இதனால் தாக்கம் எதுவுமில்லை, காரணம்: 1. இக்கட்டுரைகள் அழிக்கப்படவில்லை. 2. இப்பயனர்களில் 3-4 மாத அனுபவம் கொண்ட பயனர்கள் உட்பட நிருவாகியையும் உள்ளனர். 3. இப்பயனர்கள் சிறப்பான கட்டுரைகளையும் உருவாக்கியுள்ளனர். 4. வெறுமனே குறுங்கட்டுரைகள் நீக்கப்படுவதில்லை. எ.கா: எச்டி 161840. ஆ.வி.யில் குறுங்கட்டுரைகள் நீக்க 7 நாட்கள், இங்கு 30 நாட்கள் உள்ளது. ஆனால், 2008‎ இல் உருவாக்கப்பட்ட பனிமனிதன் (5 வருடங்கள்) உருவாக்கப்பட்டவாறே உள்ளது. காரணம்: பொறிமுறை இல்லை அல்லது பொறிமுறை செயற்படுத்துவதில் இங்குள்ள எதிர்ப்பு. பொறிமுறையும் இல்லை எதிர்ப்பும் என்றால் தமிழ் விக்கியை மிகவும் பாதிக்கும். ஆரம்பத்தில் உறுதியான கொள்கைள் இருந்திருந்தால், நெகிழ்வான போக்குப் பாரம்பரியம் இன்று வரை இங்கு வந்திருக்காது. 10 வருடங்கள் கடந்த பின்பும் வளரவில்லை, வளம் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தால் 20 வருடங்களின் பின்பும் த.வி. அப்படியேதான் இருக்கும். --AntonTalk 04:11, 18 ஏப்ரல் 2014 (UTC)

Inclusionism/Separatism/Eventualism/Incrementalism எதிர் Deletionism/Exclusionism

  • Deletionists may subjectively pick-and-choose from a long and diverse list of Wikipedia notability and other guidelines as a rationale for the blanket deletion of an article. When one chosen standard is disproven, another rule is searched for and then stated as a rationale for deletion.
  • Deleting an article under the generic basis of notability both reduces Wikipedia to the level of traditional encyclopedias (which won't cover topics that Wikipedia will for various reasons, including notability), and also doesn't provide the oversight that a traditional encyclopedia has to justify it trimming articles. Part of the reason people use Wikipedia is that it is a vibrant source of obscure knowledge, especially about obscure topics that aren't covered in a more traditional encyclopedia. Other methods of ensuring quality, such as labeling a page "In Need of Editing and Sources", are more than enough to correct problems.
  • Deletionists may use absolutist rationales and stances to justify article deletion. A notable example in Articles for deletion logs is arguing that absolutely no reliable sources exist to establish notability for and/or verify an article, while utilizing only one brief search for news and other sources, such as on Google or Google news, to qualify the statement. Sometimes it takes only seconds to disqualify such statements by utilizing web searches in other mediums, particularly those that are empirical, research-based, and lack a profit motive

--Natkeeran (பேச்சு) 19:52, 14 ஏப்ரல் 2014 (UTC)

இணைப்பு வார்ப்புருவின் புதிய பயன்பாடு

பொதுவாக இணைப்பு வார்ப்புரு ஒரே தலைப்பில் இரண்டு கட்டுரைகள் அமையும் போதே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அது தொடர்புடைய கட்டுரைகளை இணைக்கப் இடப்பட்டு வருகிறது. எ.கா பாடல்கள் தொடர்பான கட்டுரைகள் படத்துடன் இணைக்க வேண்டப்பட்டுள்ளன. இதே போன்று பகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ் இதழ்கள், பல பகுப்புகள் இவ்வாரு இலக்கு வைக்கப்பட்டுள்ளன. தயந்து இப்படி அணுக வேண்டாம். இது ஒரு மரபுவழி கலைக்களஞ்சியம் இல்லை. தேடல் வசதி கொண்ட இணையக் களஞ்சியம்.

  • தேடலில் வரம் வாய்ப்பு குறையும்
  • வெளி இணைப்புக்களைச் சேர்ப்பதில் சிக்கல்
  • தொகுப்பது இலகுவல்ல (எ.கா உப பகுதிகள்)

இந்த லோயிக்கின் படி எல்லாக் குறுங்கட்டுரைகளும் ஒரு பெரிய பட்டியலில் இணைக்கப்பட்டக் கூடியனவே. ஒரு விடயத்தைப் புதைக்க வேண்டும் ஆயின், இப்படிச் செய்யலாம்.

கட்டுரைகளை இணைப்பது போல, பிரிப்பதற்கும் ஒரு கொள்கை எழுதி, தானியங்கி மூலம் நிறைவேற்ற முடியும்.

  • தரவு இற்றைப்படுத்தல் நோக்கில் பாராமரிப்புச் சிக்கல்கள் கொண்ட பகுப்புகளைப் பற்றி கருத்தில் கொள்ள முடியும். பிற குறுங்கட்டுரைகளை தயந்து இணைக்க வேண்டாம்.
  • தகவல்களைத் தொகுத்து வழங்க விரும்பினால், பட்டியல்கள் உருவாக்க்ப்படலாம்.
  • தரவு இற்றைப்படுத்தல் தவிர்த்து வேறு என்ன பராமரிப்புச் சிக்கல் என்று கூறின் மேலும் ஆராயலம். (முன்னர் கூறியது போல, மேற்கோள் தொடர்பாக மேலும் சிரத்தையுடன் செயற்படவேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றே.) --Natkeeran (பேச்சு) 17:23, 17 ஏப்ரல் 2014 (UTC)
--Natkeeran (பேச்சு) 16:22, 17 ஏப்ரல் 2014 (UTC)


இதழ்கள் தொடர்பான தனிக் கட்டுரைகள்

இதழ்கள் தொடர்பான தனிக் கட்டுரைகள் இருப்பது ஏன் பொருத்தம் இல்லை? தற்போது, குறிப்பிடத்தக்க எனபதற்கு ஒரு படி மேல் போய், எல்லா தமிழ் இதழ் குறுங்கட்டுரைகளையும் இணைகக வேண்டும் என்று வார்ப்புரு இடப்படுகிறது. இவற்றை ஒன்றிணைக்க வேண்டும் என்ற வேட்கை விக்கிச் சமூகத்தில் உள்ளதா?. அல்லது பயனர்கள் தாம் விரும்பியபடி ஒரு பகுப்பில் உள்ள கட்டுரைகளை "இணைக்கலாமா". இணைக்க முடிவு என்று ஒரு பக்கம் கூறுக் கொண்டு, தனிமுடிவுகளை செயற்படுத்துவதை தமிழ் விக்கிச் சமூகம் எப்படி எதிர்கொள்வது. குறுங்கட்டுரைகளை விரிவாக்குவதில் பங்ககெடுப்பதில் தாம் பங்கெடுப்பதாக் கூறிய பயன்ர்கள், அவ்வாரு தொடர்ந்து பங்களிப்புச் செய்யாமல் வார்ப்புரு சேர்ப்பது பயன்மிக்கதா?--Natkeeran (பேச்சு) 13:50, 2 மே 2014 (UTC)[பதிலளி]

நற்கீரன், நீங்கள் இப்படி எல்லா சிக்கல்களையும் ஆலமரத்தடியில் குவிப்பதால் உரையாடல் தொடர்ச்சி சிதைகிறது. அல்லது, ஒரே பதிலை பல இடங்களில் இட வேண்டி இருக்கிறது. இதனைத் தவிர்க்க வேண்டுகிறேன். பகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ் இதழ்கள் பகுதியில் உரையாடலைத் தொடர வேண்டுகிறேன். அதே போல் குறுங்கட்டுரை நீக்கம் / விரிவாக்கம், குறிப்பிடத்தக்கமை அனைத்தும் வெவ்வேறு சிக்கல்கள். அனைத்தையும் தனித்தனியாக உரிய இடத்தில் உரையாட வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 14:22, 2 மே 2014 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரைக் குற்றவாளிகள்

முக்கியம் இல்லை, விரிவாக்க முடியாது, ஒருங்கிணைப்போம் என்று பல்வேறு வழிகளில் குறுங்கட்டுரைகள், குறுங்கட்டுரை ஆக்கர்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்படுவதாக நான் உணர்கிறேன். தேடலில் கிடைக்கும், விரிவாக்குவது இலகு, பகுப்பில் இடலாம், பட்டியலில் இடலாம். உள்/வெளி இணைப்புக்கள் சேர்க்கலாம், ஊக்கம் தரும், இது ஒரு மரபுவழி காகித கலைக்களஞ்சியம் இல்லை, உள்வாங்கும் பண்பு விக்கிக்கு வளமானது என்று பல வலுவான வாதங்கள் முன்வைக்கப்படாலும் ( விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரை ஒன்றிணைப்பு) வழிகாட்டலில் மாற்றாம் இல்லை.


பொதுவான விக்கி விதிகளுக்கு அமைந்த (எ.கா 3 வரிகள், மேற்கோள் காட்டுதல்)

  • ஒரு குறுங்கட்டுரை, குறுங்கட்டுரையாக இருப்பது குற்றம் இல்லை, தவறு இல்லை.
  • ஒரு குறுங்கட்டுரை, குறுங்கட்டுரையாக இருக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
  • குறுங்கட்டுரைகளை உருவாக்குவர்கள் அவை நீக்கப்படுமா, இல்லையா என்று பயமுறுத்தல் கூடாது.
  • குறுங்கட்டுரை கூட தரமானதாக இருக்க முடியும்.

பொதுவான விதி என்று, மிக இறுக்கமான குறிப்பிடத்தக்கமை கொள்கையைக் கொண்டு வருதலும் எமக்குச் சாதகாமக இருக்காது.

தமிழ் விக்கியின் ஒரு முக்கிய தருணம் என்று இதனைக் கருதுகிறேன். உள்வாங்கும் (meta:Inclusionism), எதிர்காலத்தில் நம்பிக்கை உள்ள (meta:Eventualism), மரபுவழிக் கலைக்களஞ்சியம் போல் அல்லாத (தளர்வான குறிப்பிடத்தக்க கொள்கை, meta:Separatism) தமிழ் விக்கி தெரிவு செய்யப் போகிறதா, இல்லை இறுக்கமான, meta:Deletionism, meta:Mergism நிலைப்பாடுகளை எடுக்கப் போகிறோமா.

இடைப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பது பொருத்தம் போன்று தோன்றலாம். ஆனால் அந்த இடைப்பட்ட நிலைப்பாடு பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட, சாய்வுகளை உடைய, குறைபாடுகளைக் கொண்ட மரபுவழிக் கலைக்களஞ்சியத்தின் பக்கம் சாயும் ஆனால் நாம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வோம். ஆங்கில விக்கியில், சிம்மி வேல்சு கூட Deletionism ஒரு பெரும் சிக்கலாக அடையாளம் கண்டுள்ளனர். ஆங்கில விக்கியில் எந்த ஒரு obscure தலைப்பில் எழுதினாலு, அதற்கு சான்று காட்ட முடியும். அதற்கான வாதாட ஒரு படை இருக்கும், அங்கேயே இந்த நிலை என்றால் ஒரு தலைப்பைப் பற்றி விரித்துத் தேடினாலும் ஒரு வரி இல்லாத தமிழ்ச் சூழலில் நீக்கல் இயக்கமும், இறுக்கமான குறிப்பிடத்தக்கமை கொள்கையும் எந்தளவு உதவும்?


--Natkeeran (பேச்சு) 04:18, 3 மே 2014 (UTC)[பதிலளி]

தமிழ் சிற்றிதழ்கள் குறிப்பிடத்தக்கமை

பார்க்க: பகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ் இதழ்கள்--இரவி (பேச்சு) 18:48, 11 மே 2014 (UTC)[பதிலளி]

தமிழ் திரைப்படப் பாடல்கள் குறிப்பிடத்தக்கமை

பார்க்க: பகுப்பு பேச்சு:தமிழ்த் திரைப் பாடல்கள்--இரவி (பேச்சு) 18:48, 11 மே 2014 (UTC)[பதிலளி]

தமிழ் எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்கமை

பார்க்க: பகுப்பு பேச்சு:தமிழ் எழுத்தாளர்கள்--இரவி (பேச்சு) 12:25, 16 மே 2014 (UTC)[பதிலளி]

புதிய நிருவாகிகள் தேர்தல் குறித்த கொள்கை உரையாடல்

பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்#புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுப்பு குறித்த அணுகுமுறை--இரவி (பேச்சு) 10:43, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கமையை முன்வைத்த துப்புரவுப் பணிகள் தொடர்பான வழிகாட்டல் தேவை

பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கமை#குறிப்பிடத்தக்கமையை முன்வைத்த துப்புரவுப் பணி தொடர்பான கேள்விகள்--இரவி (பேச்சு) 11:40, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]

கைப்பாவை - ஒரே IP-ஐ பகிர்தல்

கைப்பாவை என்ற கொள்கையின் கீழ் ஒரே IP-ஐ பகிர்தல் என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துக்களை வழங்குங்கள். இதனை மொழிபெயர்த்துத் தொகுத்த ஜெயரத்தின மாதரசனுக்கு நன்றிகள். --AntonTalk 03:36, 15 சூலை 2014 (UTC)[பதிலளி]

விக்கிபீடியாவின் கொள்கை பற்றி விளக்கம் தேவை: சில மாதங்களுக்கு முன் " திருக்குறள் " பற்றிய பக்கத்தில் external reference ஆக என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்கான தொடுப்பைச் சேர்த்தேன் . அந்தக் கட்டுரை கீதை குறள் இரண்டையும் ஒப்பிட்டு எழுதப் பட்டது . கட்டுரையில் ஒப்பீட்டின் முடிபாக குறளின் கருத்துக்கள் கீதையின் கருத்துக்களுக்கு அடிப்படை என எழுதியுள்ளேன் . அந்தக்கருத்து உடனடியாக நீக்கப்பட்டது .நான் குழப்பவாதி என எச்சரிக்கை வந்தது . நான் விக்கியின் வளர்ச்சியின் ஆர்வலன் . ஆதலின் குறள் பற்றிய கருத்துக்கள் வெளியிடுமுன் பொறுப்பாளர்களின் முன் அனுமதி பெறும் வழி கூறுங்கள்.

கட்டுரை நடை - கொள்கை

பள்ளிக் கல்வி மட்டும் முடித்தோரும் கூட புரிந்து கொள்ளத் தக்க வகையில் கட்டுரையின் மொழி நடை இயன்ற அளவு எளிமையானதாக இருத்தல் வேண்டும் என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கையாக இருப்பின், பல கட்டுரைகள் மற்றும் அவற்றின் தமிழாக்கம் நன்கு பயின்றவருக்கே புரிந்துகொள்ள கடுமையாக பெருவாரியான நடைக்கு புறம்பாக இருக்குமாறு அமைக்கப்பட்டிருப்பது ஏன்? எடுத்துக்காட்டிற்கு,

  • ஸ்பெயின் - எசுப்பானியா
  • உலகக்கோப்பை - உலகக்கிண்ணம்
  • மட்டைப்பந்து - துடுப்பாட்டம் (ஏன், கிரிக்கெட் என்றே கூட குறிப்பிடலாமே? :))
--சத்தியராஜ் (பேச்சு) 08:55, 31 மார்ச் 2015 (UTC)
விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வு படித்தேன். இது, மிகவும் விவாதிக்கப்பட்டுள்ளது போலிருக்கிறதே!!  :) :) சத்தியராஜ் (பேச்சு) 09:27, 31 மார்ச் 2015 (UTC)
சத்தியராஜ், தமிழ் விக்கிப்பீடியா என்பது ஒரு கலைக்களஞ்சியம், வார இதழோ மாத இதழோ இல்லை. இதற்கென ஒரு நடையுண்டு அதன்படியே பெயர்கள், சொற்கள் என அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:30, 31 மார்ச் 2015 (UTC)

திரும்பவும் முதல்ல இருந்தா? இப்பவே கண்ணைக் கட்டுதே :)--இரவி (பேச்சு) 09:36, 31 மார்ச் 2015 (UTC)

இரவி, அந்த இணைப்பைக்குடுத்துவிட்டு நழுவிறது??? அந்த உரையாடலை ஆவணப்படுத்த வேண்டும். * தமிழ், தாய்மொழியானது அடிப்படை அறிவு, பள்ளிக்கல்வி - அது மொழி மட்டுமல்ல !!!!! --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:50, 31 மார்ச் 2015 (UTC)

//தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கையாக இருப்பின்// அது ஒரு வழிகாட்டல். மேலும் அது தமிங்கிலத்தில் எழுதப் பரிந்துரைக்கவில்லை என்பதையும் கவனிக்க. --AntonTalk 11:22, 31 மார்ச் 2015 (UTC)

அன்ரன், நானும் தமிங்கிலத்தில் எழுதலாம் என கூறவில்லை. எசுப்பானியா என்னும் வார்த்தையை முதன்முறையாக தமிழ் விக்கியில் தான் பார்த்தேன். முதல் முறை படித்தபோது விளங்கவில்லை. பின்பு மூலக்கட்டுரையை வாசிக்கும் போது தான் புரிந்தது. மேலும் அப்படி குறிப்பிடப்பட்டதின் காரணத்தையும் அதன் உரையாடல் பக்கத்தில் படித்தேன். இன்று Cricket World Cup பற்றி சில கட்டுரைகளைப் படிக்கும் போது உலகக்கிண்ணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது புதியதாக இருந்தது. ஏனெனில் இதுவரை உலகக்கோப்பை என்றே படித்திருக்கிறேன். Cricket என்பதை மட்டைப்பந்து என்றே அறிந்திருந்தேன், துடுப்பாட்டம் புதிதாக இருந்தது. கிரிக்கெட் என்னும் பெயர்ச்சொல்லை அப்படியே பயன்படுத்தலாமே என்று தோன்றியது அதனால் கேட்டேன். காரணப்பெயரை தமிழாக்கலாம் என்றால் 'விக்கிப்பீடியா' என்பதே முரனாகப் பட்டது. :) மற்றபடி எனக்குப் புதியதாய் இருப்பதால் தவறு என்று கூறவில்லை. புரிந்துகொள்ள கடுமையாக இருப்பதாய் பட்டது. அதனால் தோன்றியதைக் கேட்டேன்.
'விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வு' & 'விக்கிப்பீடியா பேச்சு:பெயரிடல் மரபு' பக்கங்களில் இது குறித்து முன்னர் நடைபெற்ற உரையாடல்களைப் படித்தேன்; அதன்மேலும் விவாதிக்க விரும்பவில்லை! :) :)
நன்றி தினேஷ்குமார், இரவி, ஆதவன், அன்ரன்.
--சத்தியராஜ் (பேச்சு) 12:16, 31 மார்ச் 2015 (UTC)
கோப்பை தமிழ் மூலச் சொல்லல்லாததால் கிண்ணம் எனப் பயன்படுத்தப்படுகிறது.--Kanags \உரையாடுக 19:38, 31 மார்ச் 2015 (UTC)

ஒன்றிணைத்தல் மற்றும் தலைப்பு மாற்றலுக்கான கால அளவு வரையறை

கட்டுரையின் தலைப்பு மற்றும் ஒன்றிணைத்தல் (article merge) மாற்றம் தொடர்பானவற்றில் வார்ப்புரு:speed-delete-on போன்ற ஒன்றை கொள்கை அளவில் வரவேண்டும் என்று கருதுகிறேன். கட்டுரை உள்ளடக்கங்களில் கவனம் செலுத்துவதற்கு பதில் தலைப்புகள் மாற்றப்படுவதால் பயனர்களின் கவனம் சிதறலாம் அல்லது அயர்ச்சியை ஏற்படுத்தும். விக்கிப்பீடியாவில் தலைப்பு, உள்ளடக்கம் இரண்டும் சரிசமமான அளவிலேயே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தும் அமையும்.

அதேபோல், ஒரு கட்டுரையின் உள்ளடக்கம் குறைவாக இருக்கிறது என்பதால், வேறொரு தலைப்பில் கட்டுரை துவங்க வேண்டாம் என்றும் பயனர்கள் வலியுறுத்துவதும் (அதனால் அவற்றை முதல் கட்டுரையுடன் இணைப்பது) பற்றிய கருத்துக்களைப் பற்றியும் விவாதிக்கப்பட வேண்டும். நன்றி -- மாகிர் (பேச்சு) 17:45, 11 ஏப்ரல் 2015 (UTC)


தொடர்புடைய முதன்மை கட்டுரையில் சில தகவல்கள் கொடுத்து விட்டு முதன்மை கட்டுரை [...] என்று கொடுத்தால் நன்று, [...] சிறிது அதிக தகவல்களை கொண்டிருக்க வேண்டும். --குறும்பன் (பேச்சு) 22:54, 17 ஏப்ரல் 2015 (UTC)

முன்னிலையாக்கர், உரோந்திடுபவர் அணுக்கங்கள்

முன்னிலையாக்கர், உரோந்திடுபவர் போன்ற அணுக்கங்களை யாருக்கு, எந்நியதிகளின் கீழ் வழங்கலாம் என்பது தொடர்பில் கொள்கை முடிவை எடுத்தல் நன்று. விசமத் தொகுப்புகளை மீளமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொடர்பங்களிப்பாளர்களுக்கு முன்னிலையாக்கர் அணுக்கத்தை வழங்குவது அவர்களுக்கு உதவியாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 09:04, 10 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@Ravidreams, Sundar, Natkeeran, and Mayooranathan: --மதனாகரன் (பேச்சு) 16:57, 11 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மதனாகரன், தாங்களே இது தொடர்பான முன்மொழிவைத் தர வேண்டுகிறேன். மற்றவர்கள் ஆதரவையும் கருத்துகளையும் வழங்குவர். --இரவி (பேச்சு) 18:26, 11 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
+1. பொதுவாக உரோந்திடும் பணியை வழமையான பங்களிப்பாளர் எவரும் செய்யுமாறு இருத்தல் நலம். 3 திங்கள், 100 தொகுப்புகள், 3 பெயர்வெளிகள் என்பதுபோல வரையறுக்கலாமா? -- சுந்தர் \பேச்சு 09:31, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

முன்னிலையாக்கர்

  • குறைந்தது 200 500 முதன்மைவெளித் தொகுப்புகளையாவது செய்திருக்க வேண்டும்.
  • கணக்கைத் தொடங்கி, குறைந்தது 1 மாதம் 3 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும்.
  • ஏற்கெனவே, விசமத் தொகுப்புகளைத் தடுக்கும் வகையில் செயற்பட்டு வருபவராக இருக்க வேண்டும்.
  • இவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவை பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால் நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கிவிட்டு, அது தொடர்பில் விளக்கம் கோரலாம்.
  • பயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 24 மணித்தியாலங்களின் 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.
  • உலகளாவிய முன்னிலையாக்கர்களுக்கும் நிருவாகிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இவ்வணுக்கம் ஏற்கெனவே உள்ளது.
  • மேற்கூறிய அணுக்கம் தொடர்பில் விக்கிப்பீடியர்களின் கருத்தை வேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 14:49, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கருத்துகள்

  • 500 முதன்மைவெளித் தொகுப்புகள், தொடர்ந்து குறைந்தது 3 மாதங்களாகப் பங்களித்து வருதல் நன்று. இதற்குக் குறைவான பங்களிப்பில் விக்கிப்பீடியாவைப் பற்றி போதிய புரிதலையும் விக்கிசமூகத்தில் அறிமுகத்தையும் பெற இயலும் என்று தோன்றவில்லை. 24 மணிநேரத்தில் அணுக்கம் தர அவசரம் இல்லை. மற்றவர்கள் கருத்துக்கும் நேரம் தந்து, குறைந்தது 3 நாட்கள் பொறுத்திருந்து தரலாம்.--இரவி (பேச்சு) 15:11, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கிப்பீடியாவை விட முன்னிலையாக்கர் அணுக்கம் தொடர்பில் சற்றுக் கூடிய இறுக்கம் காட்டுவது நல்லதாகவே தோன்றுகிறது. விக்கித்தொழினுட்பத்தைச் சரிவர அறியாத நிலையில் தவறுதலாக முன்னிலையாக்கப்பட்டால், சில வேளைகளில் கவனிக்கப்படாதிருக்கவும் வாய்ப்புண்டு. --மதனாகரன் (பேச்சு) 15:19, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மதனாகரன், பரிந்துரையை ஏற்றமைக்கு நன்றி. ஆதரவு அளிக்கிறேன்.--இரவி (பேச்சு) 15:59, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
  • //ஏற்கெனவே, விசமத் தொகுப்புகளைத் தடுக்கும் வகையில் செயற்பட்டு வருபவராக இருக்க வேண்டும்.// என்பது சிறப்பான குறிப்பு. +1இரவி --AntanO 16:37, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
  • இவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவைப் பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால் அது தொடர்பில் விளக்கம் கோரலாம் (மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கக் கோரலாம்). விளக்கம் தவறாக இருந்தாலோ அல்லது பதிலளிக்கத் தவறினாலோ நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கலாம். ஏனெனில் அணுக்கத்தை நீக்கிவிட்டு, அது தொடர்பில் விளக்கம் கேட்பது சரியாகப்படவில்லை.--நந்தகுமார் (பேச்சு) 17:34, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஏற்கிறேன். தொடர்ச்சியாகப் பல கட்டுரைகளில் ஊறு விளைவிப்பதாகத் தெரிந்தால் மட்டும் அதனைத் தடுப்பதற்காக அணுக்கத்தை உடனடியாக நீக்கி விடலாம். --மதனாகரன் (பேச்சு) 02:25, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மதனாகரன், ஏற்றுக் கொள்கிறேன். உரிய திருத்தங்களைக் கொள்கை முன்மொழிவில் செய்துவிடுங்கள். ஆதரவு அளிக்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 04:54, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

-Antan, ஏற்கனவே விசமத் தடுப்பில் ஈடுபாடு உள்ளோருக்கு இவ்வணுக்கத்தை வழங்குவது சிறப்பே. தொடர்ச்சியாக அண்மைய மாற்றச் செயற்பாடுகளைக் கவனித்து வருவோர் அத்தகையோரை இனங்கண்டு முன்மொழிய வேண்டுகிறேன். ஆனால், நம்பிக்கைக்கு உரிய விக்கிப்பீடியர்கள் பலருக்கும் இவ்வணுக்கத்தை அளித்து விசமத் தடுப்பில் ஈடுபடுமாறு ஊக்குவிக்க வேண்டும். இவ்வணுக்கத்தைப் பொருத்தவரை, பயன்படுத்தாமல் இருப்பது பெரிய பிரச்சினை இல்லை. தவறாகப் பயன்படுத்துவதே பிரச்சினை. அப்படிப் பிரச்சினை வந்தால் கவனித்து அணுக்கத்தை மீள்விக்கலாம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக நான் கண்ட அனுபவத்தில் வாய்ப்பும் பொறுப்பும் கொடுத்தால் மட்டுமே நாம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவோரைக் கண்டுள்ளேன். ஐந்து பேருக்குத் தந்து ஒருவர் இவ்வாறு செயற்பட்டாலேயும் கூட மிகு பயன் விளையும். ஐவருக்கும் அணுக்கம் இல்லை என்றால் அந்த ஒருவரும் கிடைக்க மாட்டார். எனவே, நம்பிக்கைக்கு உரிய பங்களிப்பாளர்களை நாமே முன்மொழிந்து இப்பணியில் ஈடுபட வேண்ட வேண்டும். இதே கருத்து சுற்றுக்காவலுக்கும் பொருந்தும். பல ஆயிரம் பங்களிப்பாளர்கள் உள்ள ஆங்கில விக்கிப்பீடியாவில் நமக்குத் தேவையான பராமரிப்பாளர்கள் தாமாக அணுக்கம் கோரும் வழக்கம் உண்டு. ஆனால், தமிழ் விக்கிப்பீடியா சூழலைப் பொருத்தவரை, புதியவர்களை நாம் தான் இனங்கண்டு வளர்த்தெடுக்க வேண்டிய தேவை உண்டு.--இரவி (பேச்சு) 07:41, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@AntanO: தங்கள் கருத்துகளையும் வேண்டுகிறேன். இரவி கூறியபடி, முன்னிலையாக்கர் அணுக்கம் தொடர்பில் சற்று இறுக்கத்தைத் தளர்த்துவதும் நல்லதாகத் தோன்றுகிறது. சுற்றுக்காவலர் தொடர்பில் இறுக்கமான கொள்கையைப் பின்பற்றலாம். சுற்றுக்காவலரின் பொறுப்புகளைப் பட்டியலிட்டுத் தந்தால், கொள்கைப் பக்கத்தை உருவாக்க உதவியாக இருக்கும். கொள்கையில் நந்தகுமார் கூறிய மாற்றம் குறித்தும் இரவி, ஆண்டன் (இருவரும் முன்னைய கொள்கைக்கே ஆதரவு தெரிவித்ததால்) ஆதரவு தெரிவித்தால் முன்மொழிவில் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம். --மதனாகரன் (பேச்சு) 16:36, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஆதரவு. (Patroller) விக்கிப்பீடியா:சுற்றுக்காவல் பக்கம் ஒன்றினை உருவாக்குங்கள். பொதுவான சுற்றுக்காவலரின் பொறுப்புக்களைப் பட்டியலிடுங்கள். அதன் பேச்சுப்பக்கத்தில் கருத்துக்களை உள்வாங்கலாம். --AntanO 16:47, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர் - இதுவும்கூட --AntanO 16:55, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நன்றி ஆண்டன். --மதனாகரன் (பேச்சு) 03:09, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

சுற்றுக்காவலர் (உரோந்திடுபவர்)

  • குறைந்தது 1000 முதன்மைவெளித் தொகுப்புகளையாவது செய்திருக்கவேண்டும்.
  • கணக்கைத் தொடங்கி, குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகியிருக்க வேண்டும்.
  • தற்காவல் அணுக்கத்தைப் பெறுவதற்கான தகுதிகளை நிறைவு செய்ய வேண்டும். 50 கட்டுரைகள் என்பதை மட்டும் தவிர்த்து விடலாம். புதிய கட்டுரைகளை உடனடியாகக் கவனித்து வரும் பயனராக இருக்க வேண்டும்.
  • இவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவை பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால் நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கிவிட்டு, அது தொடர்பில் விளக்கம் கோரலாம்.
  • இதனையும் பயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.
  • அதிகாரிகளுக்கும் நிருவாகிகளுக்கும் இவ்வணுக்கம் ஏற்கெனவே உள்ளது.
  • மேற்கூறிய அணுக்கம் தொடர்பில் விக்கிப்பீடியர்களின் கருத்தை வேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 14:49, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கருத்துகள்

  • //50 கட்டுரைகள் என்பதை மட்டும் தவிர்த்து விடலாம்.// 100+ கட்டுரை எழுதியோரும் சுற்றுக்காவல் செய்வார்களா என்பது கேள்வி. அல்லது தக்க காரணத்தை விண்ணப்பிப்பவர் தெரிவிக்க வேண்டும். விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தெரியாதவர்கள் சுற்றுக்காவல் செய்வது குழப்பத்தை உருவாக்கும். இப்போதும் நிருவாகிகள் சிலர் சுற்றுக் காவல் செய்திருப்பர். அக் கட்டுரைகளை நோக்கினால், அங்கு உசாத்துணை இல்லாமை, பகுப்பு இல்லாம, விக்கித்தரவில் இணைக்கப்படாமை போன்ற பல சிக்கல்கள் அப்படியே இருக்கும். :( இவ்வணுக்கம் பெறுபவர்கள் சுற்றுக்காவலை முறையாக விளங்கிக் கொள்ளல் வேண்டும். அதற்கு பக்கம் உருவாக்குவது நன்று. --AntanO 16:47, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஆண்டன் கூறியது உண்மை. தொடங்கிய கட்டுரைகளின் எண்ணிக்கையைக் கட்டாயப்படுத்தாமல், அதனை ஒரு பரிந்துரையாக (50 அல்லது 100) விட்டுவிடலாம். சுற்றுக்காவல் தொடர்பான கொள்கைக்கான வரைவை உருவாக்கும்படி தங்களிடமே வேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 02:39, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
  • மேற்கூறிய கருத்தையே இங்கும் பதிவு செய்கிறேன். இவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவைப் பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால் அது தொடர்பில் விளக்கம் கோரலாம் (மூன்று நாட்களுக்குள் பதிலளிக்கக் கோரலாம்). விளக்கம் தவறாக இருந்தாலோ அல்லது பதிலளிக்கத் தவறினாலோ நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கலாம். ஏனெனில் அணுக்கத்தை நீக்கிவிட்டு, அது தொடர்பில் விளக்கம் கேட்பது சரியாகப்படவில்லை.--நந்தகுமார் (பேச்சு) 17:35, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஏற்கிறேன். தொடர்ச்சியாகப் பல நீக்கப்பட வேண்டிய கட்டுரைகளைச் சுற்றுக்காவல் செய்ததாகக் குறிப்பதாகத் தெரிந்தால் மட்டும் அதனைத் தடுப்பதற்காக அணுக்கத்தை உடனடியாக நீக்கி விடலாம். --மதனாகரன் (பேச்சு) 02:39, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மதனாகரன், ஏற்றுக் கொள்கிறேன். உரிய திருத்தங்களைக் கொள்கை முன்மொழிவில் செய்துவிடுங்கள். ஆதரவு அளிக்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 04:55, 14 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கிரந்த எழுத்துப் பயன்பாடு

தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்துப் பயன்பாடு தொடர்பான கொள்கையைத் திட்டமாக வரையறுப்பது நன்றென உணர்கிறேன். இது தொடர்பான வரைவு கீழே:- விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு/கொள்கை வரைவு --மதனாகரன் (பேச்சு) 15:22, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

அணுக்கங்களை வழங்கும் வரிசை

முன்னிலையாக்கர், தற்காவல் ஆகிய அணுக்கங்களை வழங்குவதற்கு ஒரு குறித்த ஒழுங்கைப் பேண வேண்டியதில்லை என்பது எனது கருத்து. பொதுவாக, சுற்றுக்காவல் அணுக்கத்தை இறுதியாக வழங்கலாம். தற்காவல் அணுக்கம் வழங்கப்படாத (அண்மைய மாற்றங்களைக் கவனித்து வரும்) நீண்ட நாள் பயனர்களுக்கும் முன்னிலையாக்கர் அணுக்கத்தை வழங்கலாம். --மதனாகரன் (பேச்சு) 11:58, 10 செப்டம்பர் 2015 (UTC)


விக்கிப்பீடியா கொள்கைகள், வழிகாட்டல்கள்

விக்கிப்பீடியா கொள்கைகள், வழிகாட்டல்கள் என்பன பல ஆங்கில விக்கிப்பீயாவில் உள்ளதுபோல் இல்லாமல் அல்லது இற்றைப்படுத்தப்படாமல் உள்ளன. பலவற்றுக்கு ஆ.வி.யை மேற்கோளாகக் கொள்கிறோம். ஆகவே, முக்கியமாகத் தேவையானவற்றை இங்கு பட்டியலிட்டு, பொருத்தமான இடத்தில் உரையாடலாம். சிக்கல் அற்று இருப்பின் உருவாக்கலாம் அல்லது இற்றைப்படுத்தலாம்.

கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

--AntanO 12:55, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் இருந்து கொள்கைகளை, வழிகாட்டல்களை பொருத்தமானபடியே இங்கு பயன்படுத்துகிறே. இரண்டு செயற்திட்டங்களின் அளவு, தன்மை வேறு. ஆகவே எல்லாக் கொள்கைகளும் இங்கு பொருந்துவது இல்லை, தேவையானவை இல்லை. தமிழ் விக்கிக்குப் என்ன கொள்வை தேவை, ஏன் தேவை, எப்படிச் செயற்படுத்துவது, எப்படி இங்கு பொருந்தும் என்று பார்த்துச் செய்தல் வேண்டும். குறிப்பான இக் கொள்கையை இற்றைப் படுத்தலாம். படக் காட்சியங்களை பொருத்தமானபடி கட்டுரைகளில் இணைக்கலாம், அல்லது பொதுவகத்துக்கு நகர்த்தலாம். --Natkeeran (பேச்சு) 15:38, 19 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
Antan, இத்தேவை குறித்து கவனம் ஈர்த்தமைக்கு நன்றிதங்கள் துப்புரவுப் பணி அனுபவத்தில் கண்டுணர்ந்த இத்தகைய மற்ற கொள்கைகளையும் பட்டியல் இடுங்கள். அவை குறித்து உரையாடி தமிழ் விக்கிப்பீடியா வழிகாட்டல்களையும் கொள்கைகளையும் இற்றைப்படுத்துவோம். படக்காட்சியகம் தொடர்பான என் கருத்துகளை இங்கு இட்டுள்ளேன்.--இரவி (பேச்சு) 17:43, 20 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
இரவி, இங்கு அவ்வப்போது குறிப்பிடுவேன். தற்போதைக்கு இதனை இற்றைப்படுத்தலாம். மேலும், ஆ.வி போன்ற வளர்ந்த விக்கிப்பீடியாக்களில் இருந்து பல வழிகாட்டல்களையும் கொள்கைகளையும் உள்வாங்குவது நல்லது. வழிகாட்டல்களும் கொள்கைகளும் ஒரு நேர்த்தியான கலைக்களஞ்சியம் உருவாக்க உதவும். அவற்றை மொழிபெயர்க்க உதவி பெறலாமா? இதுபற்றி விரிவாக உரையாடலாம் என நினைக்கிறேன். --AntanO 10:04, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

குறுக்குவழி தொடர்பான வழு

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள குறுக்கு வழிகள் WP: முன்னொட்டுடன் அமைந்த முதன்மை வெளியிலுள்ள வழிமாற்றுப் பக்கங்களாக உள்ளன (பட்டியல்). ஆனால் அவை விக்கிப்பீடியா பெயர்வெளியில் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக WP:VP பக்கம் விக்கிப்பீடியா:ஆலமரத்தடிக்கு வழிமாற்றப்படுகின்றது ஆனால் ஆவியில் en:WP:VP என்றபெயரில் ஒரு பக்கம் இல்லை அது தானாகவே en:Wikipedia:VP பக்கத்தை சென்றடைந்து பின் வழிமாற்றப்படுகின்றது. ஆவியில் விக்கிப்பீடியா Server மூலம் தானாகவே WP:Wikipedia: ஆகவும் WT:Wikipedia talk: ஆகவும் மொழிமாற்றப்படுகின்றது. விபரங்களுக்கு இங்கு பாருங்கள். இது தொடர்பாக ஆவியில் நடந்த உரையாடல் (வாக்கெடுப்பு) பப்ரிகேட்டரில் பதியப்பட்ட வழு phab:T8313 என்பவற்றைப் பாருங்கள். இங்கு வாக்கெடுப்பு நடத்திய பின் பப்ரிகேட்டரில் வழு பதிந்து தவியிலும் இவ்வாறு மாற்றவேண்டும். ஆவியில் 2007 இல் இருந்தே செயற்பாட்டிலுள்ளது இவ்வளவுகாலமும் எவ்வாறு கவனிக்கப்படாது விடப்பட்டது எனத் தெரியவில்லை. அண்மைக்காலமாக அதிகளவான குறுக்கு வழிகள் தேவைக்காக உருவாக்கப்படுவதால் விரைந்து செயற்படுவது நன்று. கவனிக்க @Ravidreams, AntanO, Kanags, மதனாஹரன், and Shanmugamp7:--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:13, 21 சனவரி 2016 (UTC)[பதிலளி]

கருத்து

@கனக்ஸ் அவர்களே நீங்கள் கூறியது போல வழுபதிந்து செயற்பாட்டுக்கு வந்த பின் தற்போது WP: முன்னொட்டுடன் உள்ள அனைத்து பக்கங்களையும் வழிமாற்றின்றி விக்கிப்பீடியா: முன்னொட்டுள்ளதாக நகர்த்தவேண்டும். இவ்வாறு குறுக்குவழி தொடர்பான திருத்தத்தை மேற்கொண்டபின் குறுக்குவழி அல்லாத விக்கிப்பீடியா: பெயர்வெளி பக்கங்களையும் இலகுவாக அணுகலாம் (எகா:en:WP:Village pump, en:WT:Help desk, en:WP:Peer review, en:WT:Peer review)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:50, 21 சனவரி 2016 (UTC)[பதிலளி]
வழுவானது சீர்செய்யப்படும் வரையில், அவ்வழிமாற்றிகள் அவ்வாறே இருப்பது நல்லது. அவற்றை நீக்குவதால் சில கருவிகளின் தொகுப்புச் சுருக்கங்களில் உடைந்த இணைப்புகள் தோன்றும். --மதனாகரன் (பேச்சு) 15:27, 22 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பப்ரிகேட்டரில் வழு (phab:T126604) பதிந்துள்ளேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:17, 11 பெப்ரவரி 2016 (UTC)

It's deployed now --சண்முகம்ப7 (பேச்சு) 16:52, 17 பெப்ரவரி 2016 (UTC)

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இப்போது பலரால் எழுதப்பட்டு வருகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு திட்டமாக இது இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது போல் தெரிகிறது. அனேகமாக இவை கூகுள் போன்ற கருவி கொண்டே மொழிபெயர்க்கப்படுகின்றன போல் தெரிகிறது. ஆனாலும், அனேகமானவை நல்ல தரத்தில் உள்ளன. இருந்தாலும், கட்டுரைகளை மொழிபெயர்ப்பவர்கள் கட்டுரைகளில் மேற்கோள்களை இணைப்பதில்லை. ஆங்கிலக் கட்டுரைகளில் மேற்கோள்கள் இருந்தாலும், அவற்றைத் தமிழ்க் கட்டுரைகளில் இணைக்கிறார்கள் இல்லை. இதனால், இவை மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகளாக இனங்காணப்பட்டு, பிற்காலத்தில் நீக்கப்படவும் வாய்ப்புண்டு. இத்திட்டத்தை முன்னெடுப்பவர்கள் இது குறித்துக் கவனமெடுக்க வேண்டும். @Ravidreams:--Kanags \உரையாடுக 11:05, 22 ஏப்ரல் 2016 (UTC)

👍 விருப்பம் --AntanO 14:06, 22 ஏப்ரல் 2016 (UTC)
இந்தக் கட்டுரைகளைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். விக்கிமீடியாவின் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டே எழுதியிருக்கிறார்கள். இது தமிழுக்கு இன்னும் தானியக்க மொழிபெயர்ப்பைத் தரவில்லை. மேற்கோள்கள் விடுபடுவது கருவியின் வழுவாகவோ கருவி செயற்படும் முறையை அறிந்து கொள்ளாமல் எழுதுவதாலோ இருக்கலாம். அவர்களிடமே கேட்டுப் பார்ப்போம். கலைக்களஞ்சிய முக்கியத்துவம் உள்ள, மேற்கோள் சேர்க்க வாய்ப்புள்ள இக்கட்டுரைகள், மேற்கோள் இல்லை என்ற காரணத்தால் நீக்கப்பட வாய்ப்பில்லை. --இரவி (பேச்சு) 16:27, 22 ஏப்ரல் 2016 (UTC)

முக்கிய அறிவிப்பு: தனிநபர் அச்சுறுத்தல், தணிக்கை அச்சுறுத்தலை எதிர்கொள்ளல் தொடர்பான கொள்கை

விக்கிப்பீடியாவின் உள்ளடக்கமும் செயற்றிட்டங்களும் திறந்த முறையில் கூட்டாக்கமாக பயனர்களால் உருவாக்கப்படுவன. விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் செயற்பாடுகளை மேம்படுத்த பல்வேறு கொள்கைகளும் அமைவுகளும் உள்ளன. தரமான மேற்கோள்கள் சுட்டுதல், நடுநிலை நோக்கு, பன்முகப் பார்வைகளுக்கு ஏற்கத்தகு இடம் தருதல் உட்பட்ட கொள்கைகள் உள்ளடக்கங்கள் மேம்பட உதவுகின்றன. நன்னோக்கு, கண்ணியம், கூட்டுச் செயற்பாடு, இணக்க முடிவு, முழுமையான தணிக்கை எதிர்ப்பு ஆகியன செயற்பாடுகள் மேம்பட உதவுகின்றன. உள்ளடக்கமும் செயற்பாடுகளும் தொடர்ச்சியான மேம்பாட்டுக்கு உட்பட்டவையே என்பது விக்கியின் அடிப்படை விழுமியங்களில் ஒன்றாகும்.

எந்த ஒரு கட்டுரை குறித்தும் விக்கிப்பீடியா தனிப்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதோ, வலியுறுத்துவதோ, நடைமுறைப்படுத்துவதோ, தலையிடுவதோ இல்லை. எந்த ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்துக்கும் தனிப்பட்ட விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களோ, நிருவாகிகள்/அதிகாரிகள்/மேலாளர்கள் போன்ற தளப் பராமரிப்பு உதவி செய்யும் பயனர்களோ விக்கிப்பீடியா அறக்கட்டளையின் ஊழியர்களோ பொறுப்பாக மாட்டர்கள்.

விக்கிப்பீடியா எந்த வகையிலும் தனிநபர்கள் அச்சுறுத்தப்படுவதையோ, துன்புறுத்தப்படுத்தப்படுவதையோ, விக்கிப்பீடியா தணிக்கை அல்லது தடை செய்யப்படும் என்று அச்சுறுத்தப்படுவதையோ, தணிக்கை அல்லது தடை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையோ ஏற்றுக்கொள்வதில்லை; பொறுத்துக்கொள்வதும் இல்லை.

இத்தகைய செயற்பாடுகளுக்கான எடுத்துக்காட்டுகள்:

  • விக்கிப்பீடியா உள்ளடக்கத்தை முன்வைத்து பயனர் மீதோ திட்டத்தின் மீதோ வழக்கு தொடர்வதாகவோ சட்டத்துக்கு அப்பாற்பட்ட மையங்கள் ஊடாகவோ நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தல்
  • விக்கிப்பீடியா தளம் அல்லது குறிப்பிட்ட பக்கங்களை தடை அல்லது தணிக்கை செய்ய முற்படல்
  • விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அவர்களையோ விக்கிப்பீடியா திட்டத்தையோ சட்டத்துக்கு * எதிரானவர்களாகவும் அத்தகையை இயக்கங்களோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபடுத்தியும் கருத்திடல்

இத்தகைய செயற்பாடுகள் நோக்கில் விக்கிப்பீடியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறது.

இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் பயனர் கணக்குகள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தடை செய்யப்படும்.

பார்க்க:

இக்கொள்கையின் படியினை இங்கு காணலாம். --இரவி (பேச்சு) 15:25, 11 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

கட்டுரைகளின் உரையாடல் பக்கங்கள்...

கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் நடக்கும் கண்ணியக் குறைவான பேச்சுகளை நாம் யாரும் கண்டுகொள்வது இல்லை. இது ஆரோக்கியமானது அன்று. பிறரை இழிக்கும் வகையில் எழுதுபவர்களிடத்து கனிவான முறையில்கூட நாம் நமது வருத்தத்தைத் தெரிவிப்பதில்லை. புவியெங்கும் பரவியிருக்கும் இந்தக் கலைக்களஞ்சியத்தின் பக்கங்களில் பதிவாகும் பண்பற்ற உரைநடைகள், பெருமை சேர்ப்பதில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:16, 20 செப்டம்பர் 2016 (UTC)

மா. செல்வசிவகுருநாதன், தங்களின் கவனத்துக்கு வரும் அத்தகைய பக்கங்களில் விக்கிப்பீடியா:கண்ணியம் இணைப்பினை இடலாம். பகுப்பு:விக்கிப்பீடியா கண்ணியம் தொடர்பான உரையாடல்கள் என்று தொகுத்தால் மற்ற பயனர்களின் பார்வைக்குக் கொண்டு வர உதவும். என் கண்ணில் படுகிற பக்கங்களில் நிச்சயம் கருத்திடுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:43, 21 செப்டம்பர் 2016 (UTC)

இந்த வழிமுறையை இனிமேல் கடைப்பிடிக்கிறேன்; நன்றி, இரவி.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:56, 22 செப்டம்பர் 2016 (UTC)

செய்தியுடன் தொடர்புபட்ட கட்டுரை

வார்ப்புரு பேச்சு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்#செய்தியுடன் தொடர்புபட்ட கட்டுரை - இதனைக் கவனித்து கருத்திடுக. நன்றி. --AntanO 03:08, 7 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:செய்திகளில் என்பது விக்கிப்பீடியா செய்திகள் தொடர்புபட்ட வழிகாட்டல் பக்கம். கருத்துக்கள் இருப்பின் இதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கலாம். --AntanO 12:12, 7 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

த இ க க தளத்திலிருந்து பிரதி எடுக்கப்படும் கட்டுரைகள்

தமிழ் இணையக்கல்விக்கழக தளத்திலிருந்து பிரதி எடுக்கப்படும் கட்டுரைகளுக்கு பேச்சுப்பக்கத்தில் ஏதாவது வார்ப்புரு இடலாமா? த இ க க தனது ஆக்கங்களை கிரியேடிவ் காமன்சில் கொடுத்தது அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியுமா? தெரியாதவர்கள் காப்புரிமை மீறல் என நீக்கிவிட வாய்ப்புண்டு. அதனால் இது பற்றி சில உரையாடல்கள் தேவை.

பயனர்:Ravidreams, பயனர்:AntanO --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:49, 1 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

கட்டுரைகளை முழுமையாக இங்கு எழுத முடியுமா? காப்புரிமையற்றதாக இருந்தாலும், முழுக் கட்டுரையும் வரிக்கு வரி பிரதி எடுத்து இங்கு எழுதலாமா? கட்டுரை விக்கி நடைக்கேற்பவும் எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 19:17, 1 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
உதவி:ஆக்குநர்சுட்டு பார்க்கவும். இதே போல் தொகுப்புச் சுருக்கத்தில் எந்த த. இ. க. பக்கத்தில் இருந்து ஆக்கத்தைப் பயன்படுத்துகிறீர்களோ அதற்கான இணைப்பைத் தாருங்கள். கூடவே, CC-BY-SA 4.0 என்ற குறிப்பையும் இடுங்கள். இது தொடர்பான த. இ. க. அறிவிப்பு இங்கு இருக்கிறது. --இரவி (பேச்சு) 07:41, 2 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
வரிக்கு வரி கட்டுரையைப் பிரதி செய்து எழுதுவதானால் அதற்கு விக்கிப்பீடியா களமாக இராது. விக்கிமூலத்தில் இடுவதே சிறந்தது.--Kanags \உரையாடுக 20:39, 2 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
CC-BY-SA 4.0 உள்ளதால் அதனை பயன்படுத்துலதில் சிக்கலில்லை. ஆனால் வழமையான விக்கியாக்கம் தேவை (உசாத்துணை உட்பட்ட பிறவும்). த. இ. க. க. "தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்குப் பதிப்புரிமை உள்ள அனைத்து ஊடக ஆக்கங்களும் (உரை, படிமங்கள், ஒலிக்குறிப்புகள், நிகழ்படங்கள், தரவு முதலியன) படைப்பாக்கப் பொதுமங்கள் ஆக்குநர்சுட்டு-பகிர்வுரிமை 4.0 என்னும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகின்றன." என்று குறிப்பிட்டுவிட்டு, ஏன் "இந்த கட்டற்ற ஆக்கங்களின் முழுமையான பட்டியல் இங்கு இற்றைப்படுத்தப்பட்டு வருகிறது" என்று வரையறை செய்கிறது? அத்துடன் பட்டியல் த.வி.இற்கு செல்கிறது. த. இ. க. க. தான் பட்டியலைத் தன்னுள்ளே கொண்டிருக்க வேண்டும். ஆக மொத்தத்தில் குழப்பமான கூற்றாகவுள்ளது. --AntanO 02:23, 3 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

தகவல் பெட்டி: இனம், மதம்

இனம், மதம் தொடர் கொண்ட தகவல் பெட்டியில் அல்லது கட்டுரையில் தெரிந்தெடுத்த சில பிரபலங்களின் படங்களை இடுவதை தவிர்ப்பது நல்லது. தமிழர் கட்டுரையில் அவ்வாறு நீக்கியுள்ளேன். ஆளாளுக்கு யார் படம் இருக்க வேண்டும் என்ற கருத்து வேறுபாடு இருப்பதால் தவிர்ப்பது ஏற்றது. சிக்கல் இல்லாத அல்லது தனிநபர் வேறுபாடு இல்லாத கட்டுரைகளுக்கு அது ஏற்புடையதல்ல. மாற்றுக் கருத்து இருந்தால் இதனை கொள்கையாக ஏற்றுக் கொள்வதா எனப் பரிசீலிக்கலாம். தொடர்புடையது: Proposal for the deletion of all the galleries of personalities from the infoboxes of articles about ethnic groups --AntanO 01:59, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

எ.கா: தமிழர் - படத்தில் உள்ளவர் தமிழரா, ஏன் இன்னொருவர் உள்ளடக்கப்படவில்லை என்ற வினாக்களுக்கு பதில் காணுவது கடினம். மராத்தியர் - இங்கு மாற்றுக் கருத்து இல்லாததால் விட்டுவிடலாம் என்பது என் கருத்து. இங்கு தனிநபர் செல்வாக்கு இருந்நதாலும் குறித்த இன, குழு செல்வாக்கு இருந்நதாலும் நீக்கியுள்ளேன். --AntanO 02:06, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:54, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --Natkeeran (பேச்சு) 14:30, 12 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

யாழ்ப்பாண மாணவர்களின் பங்களிப்பு

வணக்கம், இலங்கையின் வடக்கில் இருந்து பல மாணவர்கள் கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார்கள். இவர்கள் தமது கல்லூரியில் கொடுக்கப்பட்ட project ஒன்றுக்காக எழுதுகிறார்கள் என நம்புகிறேன். இவை பெரும்பாலும் கலைக்களஞ்சிய நடையில் இருப்பதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவற்றை முழுமையாக நீக்காமல், அவர்களின் பயனர் பக்கவெளிக்கு வழிமாற்றின்றி மாற்றி விட்டு அவர்களுக்கு அது பற்றித் தெரியப்படுத்துங்கள். அவர்களது project முடிந்தவுடன் அவற்றை நீக்குவதா அல்லது பொதுவெளிக்கு மாற்றுவதா என்பதைத் தீர்மானிக்கலாம். பயனர்களைத் தடை செய்வது அவ்வளவு நல்லதல்ல. உங்களுக்கு வேறு கருத்து இருந்தால் தெரியப்படுத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:03, 5 சனவரி 2017 (UTC)[பதிலளி]

வணக்கம், இது பற்றி ஆலமரத்தடியில் உரையாடலாமா என நினைத்திருந்தேன். ஆனால், முன்னர் சில கருத்துக்களைப் பகிர்ந்தும் "கண்டும் காணாமல்" இருக்கும் போக்கு இருந்ததால், "இது தேவைதானா?" எனக் கருதி, உரையாடலைத் தொடராமல் விட்டுவிட்டேன். பாடசாலைத் திட்டத்தினூடாக சிலர் தொடர்ந்தும் எழுதலாம் அல்லது தொடராதுவிடலாம். ஆனால், அவர்களிடம் இருக்கும் அவசரம் கலைக்களஞ்சியம் பற்றிய விளங்கிக் கொண்டு பங்களிக்க இடமளிக்காது போல் உள்ளது. மேலும், அவர்களின் பங்களிப்பு கலைக்களஞ்சியம் உருவாக்க அல்ல, மாறாக Trying to score brownie points outside of Wikipedia or Little / no interest in working collaboratively என்று தங்களின் பாடசாலைத் திட்டம் தொடர்பாக விக்கியைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என்பதும் என் கருத்து. இவர்கள் வலைப்பூக்களை தங்கள் திட்டத்திற்குப் பயன்படுத்தினால் என்ன அல்லது யாழில் உள்ள விக்கிப்பீடியர் யாராவது இவர்களைத் தொடர்கொண்டு வழிநடத்துவது சாத்தியமா?--AntanO 10:22, 5 சனவரி 2017 (UTC)[பதிலளி]
எனக்குத் தெரிந்த வரையில், இவர்களுக்கு விக்கிப்பீடியாவில் கலைக்களஞ்சியக் கட்டுரை எழுதுவதற்குத் தான் செயல்திட்டம் பொறுப்பாசிரியர்களினால் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்டுரைகளின் தலைப்புகள் விக்கிக்கு ஏற்றவையே. அனைத்துக் கட்டுரைகளையும் திருத்தி எழுதினால் பெரும்பாலான கட்டுரைகள் விக்கியில் தேறக்கூடிய சாத்தியம் உண்டு. மேலும், //அவர்களிடம் இருக்கும் அவசரம் கலைக்களஞ்சியம் பற்றிய விளங்கிக் கொண்டு பங்களிக்க இடமளிக்காது போல் உள்ளது.// மாணவர்களிடம் இருந்து இதனை எதிர்பார்ப்பது அதிகம். தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் பலர் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள். இன்னும் பயிற்சி அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனை பேர் ஒழுங்கான கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். எத்தனை பேர் தொடர்ந்து எழுதுகிறார்கள்? இலங்கையில் இருந்து இம்மாதிரியான பாடசாலைத் திட்டம் வருவது வரவேற்கத்தக்கது. இது குறித்து ஆலமரத்தடியில் உரையாடுவதும் நல்லது. @Mayooranathan, Natkeeran, and Ravidreams:.--Kanags \உரையாடுக 10:40, 5 சனவரி 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:44, 5 சனவரி 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மணல்தொட்டிக்கு நகர்த்தலாமே? புதியவர்களுக்கு இது அவசியம். தொடர்ந்து ஊக்கப்படுத்தும் நடவடிக்கை வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.--உழவன் (உரை) 10:56, 5 சனவரி 2017 (UTC)[பதிலளி]
சிறீதரன், யார் யார் மாணவர்கள் அல்லது எக் கட்டுரைகள் என்று அடையாளப்படுத்த முடிந்தால், அவற்றை துப்பரவு செய்ய நான் உதவ முடியும். நீங்கள் குறிப்பிட்டது போன்று பயிற்சி, திருத்தம் ஊடாக அவர்களை வளர்த்தெடுப்பதே அனைவருக்கும் நன்று. --Natkeeran (பேச்சு) 14:50, 5 சனவரி 2017 (UTC)[பதிலளி]
கல்வியில் விக்கிப்பீடியா என்பது உலகளவில் ஊக்குவிக்கப்படும் செயற்பாடு. முறையான விக்கிப்பீடியா அறிமுகம் இன்றி இம்முயற்சியைத் தொடங்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் இது போன்ற கட்டுரைகளை உருவாக்குவது வழமையே. யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள விக்கிப்பீடியர்கள் கல்லூரியைத் தொடர்பு கொண்டு பயிற்சி அளிக்கலாம். கட்டுரைகள் ஏற்புடைய தரத்தை எட்டும் வரை அவர்களின் பயனர் துணைப்பக்கத்துக்கு நகர்த்தலாம். --இரவி (பேச்சு) 19:49, 5 சனவரி 2017 (UTC)[பதிலளி]
இரவி அவர்களே! யாழ்ப்பாணத்தில் பயிற்சிப்பட்டறைகள் நடாத்துவது தொடர்பில் யாழ்ப்பாண விக்கிப்பீடியர்கள் சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்பட்டது. எனினும்செயல் வடிவம் பெறவில்லை. வயதில் பெரியோர்களான சிவகோசரன், மதனாஹரன் ஆகியோர் முழுமனதுடன் குறித்த பாடசாலை சமூகத்துடன் தொடர்பு தொடர்பு கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இது பற்றி சிவகோசரனுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனில் விக்கியில் தெரியப்படுத்தலாம். அதைவிட அவரை தனியாகத் தொடர்புகொள்ள வேண்டு. தங்களின் பதிலை எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:45, 8 சனவரி 2017 (UTC)[பதிலளி]
இலங்கையைச் சேர்ந்த பயனர்கள், யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் தெரிவிக்கலாம். நேரில் செல்லும் முன் தொடர்புடைய மாணவர்கள் மூலம் கல்லூரி ஆசிரியர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு திட்டமிடுதல் நல்லது. ஒருங்கிணைக்க முன்வருபவருக்கு சிறீதரன் தன்னிடம் உள்ள மின்மடல் முகவரிகளைத் தந்து உதவ முடியும். இதனை முறைப்படியான ஒரு கல்வியில் விக்கிப்பீடியா திட்டமாக முன்னெடுக்க என்னைத் தொடர்பு கொள்ளலாம். --இரவி (பேச்சு) 13:01, 10 சனவரி 2017 (UTC)[பதிலளி]
இம்மாணவர்கள் எந்தப் பாடசாலையைச் சேர்ந்தவர்கள், அல்லது ஏதாவது தனியார் கல்வி நிலையத்தின் செயற்பாடுகளில் ஒன்றாக இதனைச் செய்கிறார்களா போன்ற விபரங்கள் ஏதும் தெரியுமா? இல்லாவிடின் அவர்களது மின்னஞ்சல் முகவரிகளை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தொடர்புகொண்டு அவர்களை ஆக்கபூர்வமான பங்களிப்பாளர்களாக மாற்றத் தேவையான சில நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிக்கலாம். --சிவகோசரன் (பேச்சு) 14:52, 16 சனவரி 2017 (UTC)[பதிலளி]

தற்போதைய நிலை

இதுவரைக்கும் எந்தளவிற்கு சக விக்கிப்பீடியர்கள் உதவினீர்கள் என்று தெரியாது. ஒருசிலர் உதவியுள்ளீர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டுரைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. பராமரிப்பு வார்ப்புருக்கள் நீக்கப்படுகின்றன. கலைக்களஞ்சியத்திற்கு ஏற்பற்ற கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. எ.கா: தலையாழி ஞான வைரவர் ஆலயம் என்ற கட்டுரையைக் கவனியுங்கள். இங்கு கிட்டத்தட்ட 30,000 பைட்டுகளில் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிடத்தக்கதா? வலிந்து தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளதை அறிவீர்கள். அவற்றுக்கெல்லாம் கட்டுரை உருவாக்கலாமா?

ஒரு சிலர் முகநூல் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டனர். நான் உதவுவதற்கு எவ்வளவே முயன்றும், அவர்கள் தங்கள் கருத்தில்தான் கரிசனையாக உள்ளனர். அவர்களுக்கு குறிப்பிடத்தக்கமை, உசாத்துணை, விக்கி வழிகாட்டல், கொள்கை பற்றியெல்லாம் கவலையில்லை. தங்கள் கட்டுரை இங்கு இடம்பெற வேண்டும். அவ்வளவே! ஒரு சிலர் இன்னும் கொஞ்சம் மேலே சென்று, நான் இரு கணக்குகள் வைத்திருக்றேன் அதனால் தாங்களும் பல கணக்குகள் வைத்திருக்கின்றார்களாம். எனக்கொரு நீதி, தங்களுக்கொரு நீதி இருக்க முடியாதாம். "மட்டக்களப்புத் தமிழிலும்" என்னுடன் கருத்துச் சொல்கின்றனர். இவ்வாறு தங்கள் அறிவுக்கெட்டியபடி நியாயப்படுத்தல்களும், என் மீது வசைபாடல்களும் தொடர்கின்றன. விக்கி சமூகம் அறிக்கை விடாது நடடிவடிக்கை எடுக்குமாறு கேட்கிறேன். --AntanO 04:10, 20 சனவரி 2017 (UTC)[பதிலளி]

பரிந்துரைகள்

  • விக்கிப் பொதுவெளியில் புதியவர் தவறாக புரிந்து கொள்ளுதல், அவ்வப்போது நடப்பது தானே, பொறுத்தருள்க. இங்கு நாம் உட்பட யாரும் அனைத்தும் அறிந்தவர் கிடையாது. ஒவ்வொருவரும், ஒரு விக்கி பங்களிப்பில் முக்கியமானவர்கள். புதியவர்களின் வேகத்தை மட்டுப் படுத்துவதை விட, திசைத் திருப்புதல் தமிழ் விக்கிமீடியத் திட்டங்களுக்கும் உதவுமென்றே நம்புகிறேன். பயிற்சி தருபவர்கள், முதலில் மணல்தொட்டி என்ற தற்போது அழைக்கப்படும் பயிற்சிப்பக்கத்தில் பயிலச் செய்யலாம். அப்பதிவுக்கு ஏற்ற, ஏற்கனவே உள்ள கட்டுரையை காட்டலாம். அதே கட்டுரை ஆங்கிலத்திலோ அல்லது பிற மொழியிலோ எவ்வளவு செறிவுடன் இருக்கிறது என்பதைக் காட்டி, நம் தமிழ் வளம் கூட, உழைக்க வேண்டியதை உணர்த்தலாம். இதன் மூலம் படிப்படியாக வளர்ச்சியை உணர்வர். வார்ப்புரு இடல், நீக்குதல் என்பது நிரந்தர தீர்வாக இருக்கவே முடியாது. ஒரு புதிய நபருக்கு, ஒரு புதிய கட்டுரை. தொடர்ந்து தொந்தரவு செய்வதையே நோக்கமாகக் கொண்டவர்களை, குறிப்பிட்ட காலம் தடை செய்யலாம் என்பதே எனது முன்மொழிவு ஆகும். மணல்தொட்டி என்பதை யாவருக்கும் புரியம் படி, பயிற்சிப் பக்கம் என மாற்றினால், இடர்கள் குறைய அதிக வாய்ப்புண்டு--உழவன் (உரை) 05:07, 20 சனவரி 2017 (UTC)[பதிலளி]
    • குறிப்பிடத்தக்கமையற்ற கட்டுரைகளை பயனர் வெளிக்கு நகர்த்தலாம். ஆனால் அவர்கள் பொதுவெளிக்கு நகர்த்தும்போது, தாமதமாக, குறிப்பிடத்தக்கமை பற்றி எடுத்துக்கூறுவதால் என்ன பயன்? அவ்வப்போது தேவையான அறிவுரைகள் வழங்குவதுதான் விக்கிமுறை. அப்போதுதான் கலைக்களஞ்சியம் பற்றிய அறிவை உண்டாக்க முடியும். சிலர் தாங்கள் குறிப்பிட்ட கட்டுரைக்காக உழைத்துள்ளதாகத் முகநூல் ஊடாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பிடத்தக்கமையற்ற கட்டுரைகளில் அவர்கள் உழைப்பை வீணாக்கி வெதுவெளியில் வைத்து நீக்குவதோ அல்லது வார்ப்புருவிடுவதோ அவர்களைப் பொருத்தவரை இடையூறாக அல்லது அவர்களின் உழைப்பு வீணாக்குவதாகவே அமையும். அதனால், அவர்களுக்கு தேவையான அறிவுரை அவசியம் என்பது என் கருத்து. ஆனால் நான் தனிப்பட உரையாடியவர்கள் "தங்கள் கட்டுரை இங்கு இருக்க வேண்டும்" என்று கருதுகிறார்கள். அவர்களுக்கு "கலைக்களஞ்சியம்" பற்றியக் கவலையில்லை. நிற்க, பொதுவெளியில் உள்ள கட்டுரையில் பாரமரிப்பு செயல்களில் ஈடுபடல் வேண்டாம் என்பது முறையல்ல. இதனை விக்கியூடகம் ஆதரிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, பொதுவெளியில் உள்ள கட்டுரைகளில் துப்புரவு உட்பட்ட பராமரிப்புக்களில் ஆர்வம் உள்ளேன். பயிற்சி அளிக்கக்கூடியவர்கள் முன் வரலாம். --AntanO 05:34, 20 சனவரி 2017 (UTC)[பதிலளி]

கட்டுரைகளை ஒன்றிணைத்தல்

விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்#எதனை முதன்மைப்படுத்துவது? என்பது தொடர்பில் கருத்துக்கள் தேவைப்பகிறது. --AntanO 09:09, 26 பெப்ரவரி 2017 (UTC)

வாய்மொழி வரலாற்றுத் தகவல்களை கட்டுரையில் பயன்படுத்தல்

பழங்குடிமக்கள், ஆப்பிரிக்கா, இந்தியா, தமிழ்ச் சூழல்களில் பல கலைகள், நுட்பங்கள், வாழ்வியல் அம்சங்கள் வாய்வழியாகவே கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றைப் பற்றி கட்டுரைகள் எழுத நாம் எழுத்தாவணங்களோடு முறைப்படி உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்ட வாய்மொழி வரலாறுகளை, பல்லூடக ஆவணங்களை சான்றுகளாக பயன்படுத்துவது உதவும். வாய்மொழி வரலாறுகள் ஒன்றோடு ஒன்று cross check செய்யக் கூடியவாறு உருவாக்க முடியும். ஒரு நூலில் இருந்து மேற்கோள் காட்டுவது போன்றே, வாய்மொழி வரலாற்றில் இருந்து மேற்கோள் காட்ட சீர்தரங்கள் (http://guides.library.uwa.edu.au/c.php?g=325241&p=2178600) உண்டு. வாய்மொழி வரலாறுகலை supplementary ஆதாரங்களாவும் பயன்படுத்த முடியும். வாய்மொழி வரலாறுகளை தமிழ் விக்கியில் சான்றுகளாக ஏற்கலமா? ஏற்கலாம் என்றால் எத்தகைய வாய்மொழி வரலாறுகளை நாம் ஏற்கலாம்? இந்த விடயங்கள் பற்றி பயனர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் உதவியாக அமையும். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:22, 19 மே 2017 (UTC)[பதிலளி]

வாய்மொழி வரலாறுகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமின்றி, தமிழ் விக்சனரிக்கும் உதவும் என்று நம்புகிறேன். எ.கா: http://aavanaham.org/islandora/object/noolaham%3A1811 என்ற வாய்மொழி வரலாற்றில் கொம்பறை, பட்டறை என்ற நெல் சேமிக்கும் முறைகள் பற்றி விபரிக்கிறார். இது ஒரு தனிமனித subjective view தான். ஆனால் அதில் பொதிந்துள்ள தகவல்களை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஆய வேண்டும்.

@Arulghsr, கி.மூர்த்தி, உலோ.செந்தமிழ்க்கோதை, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, Ksmuthukrishnan, Kanags, சா அருணாசலம், Selvasivagurunathan m, Semmal50, Drsrisenthil, and Rselvaraj:

--Natkeeran (பேச்சு) 14:53, 29 மே 2017 (UTC)[பதிலளி]

Natkeeran, தமிழ் விக்கிப்பீடியாவில் வாய்மொழி ஆதாரங்களை ஏற்றுக் கொள்வது தொடர்பாக கவனத்துடனே செயல்பட வேண்டும். ஏனெனில் தமிழகத்தில் இனம் மற்றும் சாதி சார்ந்து பல்வேறு கட்டுக்கதைகள் இணையத்தளங்களிலேயே வெளிவருகின்றன. இதில் வாய்மொழி தரவுகளையும் ஆதாரங்களாகக் கொண்டால் உண்மையான செய்திக்குப் பதில் சுய இனச் சார்பு அல்லது சாதிச் சார்பு மிகைத் தகவல்களே கிடைக்கும். எனவே எவ்வாறான விசயங்களில் வாய் மொழித் தகவல்களை ஏற்பது என ஆலோசிக்க வேண்டும்.--இரா. பாலா (பேச்சு) 20:05, 29 மே 2017 (UTC)[பதிலளி]
மிகவும் முக்கியமான கருத்துப் பாலா. பரப்புரை சார் உள்ளடக்கங்கள் வாய்மொழி வரலாறு வடிவத்தில் மட்டும் அல்லாமல் நூல்/திரைப்படம் உட்பட்ட பிற வடிவங்களிலும் உள்ளன. ஆனால் வாய்மொழி வரலாற்றில் இவ்வாறான கட்டுக்கதைகளை கூடிய அளவில் உள்ளன என்பது சரியான அவதானிப்பே. --Natkeeran (பேச்சு) 12:39, 30 மே 2017 (UTC)[பதிலளி]
தத்தமது சாதிகளுக்கு உயர்வு கூறும் கதைகள், குறிப்பாகச் சாதிகளின் தோற்றம் பற்றிய கதைகள் பரவலாக உலா வருவது உண்மைதான். இவ்வாறான கதைகள் வாய் வழியாக மட்டுமன்றி இன்று நூல்களாகவே வெளியிடப்பட்டுள்ளன. எனவே, வாய் மொழி வரலாற்றைச் சான்றுகளாக எடுப்பதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பயன் விளையப் போவதில்லை. இன்னொரு வகையில் பார்த்தால், ஆதிக்கச் சாதிகளால் பாதிக்கப்பட்டுத் தாழ்வடைந்தவர்களின் குரல்களாகவே பெரும்பாலும் இக்கதைகள் உருவாகின்றன. எனவே, இவை தற்போது பரவலாக நம்பப்பட்டுவரும் நிலைப்பாடுகளுக்கு மாற்றுப் பார்வைகளை வழங்கக் கூடியனவாகவும் இருக்கின்றன. எவ்வாறாயினும், இவை ஒரு குறிப்பிட்ட நோக்கிற்குச் சான்று வழங்கலாமே அன்றி முற்று முழுதான உண்மைக்குச் சான்றாக இருக்காது. எனவே வாய்மொழி வரலாற்றை முற்றாகவே ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதை விடுத்து அவற்றை எவ்வாறு விக்கிக் கொள்கைகளுக்குப் பாதிப்பில்லாமல், அவற்றை வலுப்படுத்தும் வகையில் பயன்படுத்துவது என்று சிந்திப்பது நல்லது. ---மயூரநாதன் (பேச்சு) 15:17, 30 மே 2017 (UTC)[பதிலளி]
வாய்மொழி வரலாற்றை/கள ஆய்வை முன்னெடுப்பதற்கான ஓர் ஒரு முறையியலைப் பற்றி பேரா. பாலசுந்தரம் அவர்கள் இங்கே சுருக்கமாகப் பகிர்ந்துள்ளார்: விக்கிப்பீடியா பேச்சு:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்/Field-Work Guide. --Natkeeran (பேச்சு) 12:42, 30 மே 2017 (UTC)[பதிலளி]
வாய்மொழி வரலாற்றினை மேற்கோளாகப் பயன்படுத்தல். ஒர் எடுத்துக்காட்டு சொர்ணாளி (இசைக் கருவி) --Natkeeran (பேச்சு) 20:52, 13 சூன் 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கியர் சீனிவாசன்(Tshrinivasan) தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெறுகிறார்

கூகிள் எழுத்துணரியைப் பயன்படுத்துவதற்கான கருவியாக்கம் மூலம் தமிழ் விக்கிமூலத்தில் 400,000 மேலானா பக்கங்களை பதிவேற்ற உதவிய சீனிவாசன் அவர்களுக்கு 2016 ஆன தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது கிடைத்துள்ளது. பாராட்டுக்கள். நல்வாழ்த்துக்கள். தமிழில் கட்டற்ற இயக்கத்தை கொள்கையிலும் செயலிலும் முன்நகர்த்திச் செல்வதில் முதன்மையான ஒரு பங்களிப்பாளரான சீனிவாசனுக்கு இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சியே. கடந்த ஆண்டு இந்த விருதை நீச்சல்காரன் பெற்றார். இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழ் விக்கியர்கள். முகுந்தராஜ் சுப்பிரமணியன் சேர்ந்து, மூன்றாவது தமிழ் விக்கியர் இந்த விருதைப் பெறுகிறார் என்று எண்ணுகிறேன். --Natkeeran (பேச்சு) 16:19, 30 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்.--இரா. பாலா (பேச்சு) 01:40, 31 மே 2017 (UTC)[பதிலளி]
நல்ல செய்தி. விக்கிமூலம் மட்டுமல்ல, நூலகத்திலும் இவரது கருவி பயன்பட்டுள்ளது என நம்புகிறேன். வாழ்த்துகள் சீனிவாசன்.--Kanags \உரையாடுக 02:19, 31 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள், சீனிவாசன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:16, 31 மே 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கியர் சீனிவாசனின் ஆக்கமான பங்களிப்பு தொடரட்டும்.வாழ்த்துகள்.--Semmal50 (பேச்சு) 14:56, 31 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள், --Arulghsr (பேச்சு) 15:01, 31 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் சீனிவாசன்--குறும்பன் (பேச்சு) 15:04, 31 மே 2017 (UTC)[பதிலளி]

அருமை நண்பரே --Sriman.kandeepan (பேச்சு) 09:17, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் சீனிவாசன் -- Sgvijayakumar (பேச்சு) 21:38, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]

பள்ளிகளின் குறிப்பிடத்தக்கமை

பள்ளிகளின் குறிப்பிடத்தக்கமை தொடர்பான கொள்கை உரையாடலை இங்கு முன்னெடுத்துள்ளேன். அனைவரின் கருத்துகளும் தேவை. --இரவி (பேச்சு) 07:30, 16 சூன் 2017 (UTC)[பதிலளி]

பள்ளிப் பாடநூல்களில் இருந்து மேற்கோள் சுட்டுதல்

அண்மைக் காலங்களில் பல ஆசிரியப் பயனர்கள் பள்ளிப் பாடநூல்களில் இருந்து மேற்கோள் சுட்டி எழுதுகிறார்கள். குறிப்பாகப் போட்டிக் கட்டுரைகளில் ஏறத்தாழ முழுப் பகுதியும் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்து எழுதுகிறார்கள். இது குறித்து ஒரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடப்பட்டுள்ளது. பள்ளிப் பாடநூல்களில் எழுதப்படுவது பொதுவான கருத்து என்றும், வேறு நம்பகமான துறைசார்ந்த மேற்கோள்களும் சுட்டப்பட வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பயனர்கள் முடிவு எடுக்க வேண்டும். @Ravidreams, Mayooranathan, Kalaiarasy, Natkeeran, Selvasivagurunathan m, AntanO, and Drsrisenthil:--Kanags \உரையாடுக 09:29, 30 சூலை 2017 (UTC)[பதிலளி]

தமிழில் அனைத்துத் துறைகளிலும் போதுமான அளவு இணையத்திலும் அச்சுநூல்களிலும் ஆதாரங்கள் சிக்காமை, எளிதில் அணுக இயலாமை உள்ளிட்ட காரணங்களால் பல கட்டுரைகளில் வலைப்பதிவுகளைக் கூட ஆதாரங்களாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எனவே, பள்ளி பாடநூல் என்ற ஒரே காரணத்துக்காக குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. பல இலட்சம் பேர் படிக்கும் இந்நூல்கள் முறையான பாடத்திட்டக் குழுவால் எழுதப்படுவதால் அதன் தரம் ஏற்புடையதே. குறிப்பாக, +1, +2 நூல்களில் இருந்து பல அடிப்படைத் தலைப்புகளுக்கு மேற்கோள் காட்ட இயலும். ஆனால், பள்ளிப் பாட நூல்களை ஒரு மூன்றாம் நிலை ஆதாரமாகவே கருத இயலும் என்பதால் அவற்றுக்கு மேற்கோள் தருவதைத் தவிர்க்கலாம். அவ்வாறு தருபவர்களைக் கூடுதல் அல்லது மாற்று ஆதாரங்கள் தர வலியுறுத்தலாம். ஆங்கிலம் உட்பட பிற மொழிகளிலும் வேறு ஆதாரமே சிக்க வழி இல்லை எனில் இந்நூல்களை ஏற்றுக் கொள்ளலாம். இன்னொரு சிக்கல்: பாடநூல்களை மேற்கோள்களாகக் காட்டி எழுதுகிறார்களா இல்லை முற்றிலும் அப்படியே வரிக்கு வரி எடுத்து எழுதுகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். வரிக்கு வரி எழுதுகிறார்கள் என்றால் அவற்றை மேற்கோளாகச் சுட்டாமல் உள்ளடக்கத்துக்கான முறையான ஆக்குநர்சுட்டு வழங்கவேண்டும். --இரவி (பேச்சு) 15:32, 30 சூலை 2017 (UTC)[பதிலளி]
@Kanags, Ravidreams, Mayooranathan, Natkeeran, Selvasivagurunathan m, AntanO, and Drsrisenthil: இலங்கை, தமிழ்நாட்டுப் பாடநூல்களில் உள்ளதை வரிக்குவரி எடுத்து எழுதுகிறார்களா இல்லையா என்பதை என் போன்றவர்கள் சரிபார்த்தல் இயலாத காரியம். எனவே அவர்களை ஆக்குநர்சுட்டு வழங்கச் சொல்வதே சரியாகப் படுகிறது. எனக்கு முதலில் ஆக்குநர்சுட்டு என்றால் என்ன என்பதைச் சொன்னால் புரிந்துகொள்ள முயல்கிறேன். என்னைப் பொறுத்த அளவில் அறிவியல் கட்டுரைகளுக்குப் பாடநூலை ஆதாரமாகக் கொண்டு எழுதுவது பிரச்சனை இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அரசியல், வரலாறு திரிக்கப்பட்டுப் பாடநூல்கள் வருவதை அறிந்துள்ளேன் என்பதனால், அத்தகைய கட்டுரைகளுக்கு பாடநூல்களை ஆதாரம் காட்டுதல் சரியா என்பது தெரியவில்லை. --கலை (பேச்சு) 21:39, 31 சூலை 2017 (UTC)[பதிலளி]
ஒரு பாடநூலில் குறிப்பிட்ட அத்தியாயத்துக்குரிய "உசாத்துணைகள்" கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அத்தகைய பாடநூல்களைத் தழுவி தமது உரையில் எழுதுதல் தவறல்ல. குறைந்தபட்சம், பாட நூலின் இறுதியிலாவது, பயன்படுத்தப்பட்ட உசாத்துணை நூல்கள் கொடுக்கப்பட்டிருத்தல் அவசியமானது. நான் பார்த்தவரையில் தமிழ் நாட்டுப் பாட நூல்களின் (உயிரியல், கணிதம்) இறுதியில் உசாத்துணை நூல்கள் "பார்வை நூல்கள்" எனும் தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. எனினும் அங்கு கையாளப்பட்டிருக்கும் கலைச்சொற்கள், உரைநடை விக்கிக்கு உகந்தது அல்லாதாக இருக்கலாம். மதம், மொழி தொடர்பான பாட நூல்களுக்கும் இவ்வாறு உள்ளதா எனத் தெரியவில்லை.--சி.செந்தி (உரையாடுக) 00:49, 1 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

Edit warring

சில செயற்பாடுகள் இங்கு en:Wikipedia:Edit warring என்பது தேவையென்பதை உணர்த்துகின்றன. நிர்வாகிகளானாலும் 3 மீளமைப்புச் செய்தால் தடை செய்யப்பட வேண்டும். கருத்துக்கள் தேவை. --AntanO (பேச்சு) 07:50, 15 சனவரி 2018 (UTC)[பதிலளி]

ஆதரவு. அவர் அதிகாரி என்றாலும் நிரந்தரத் தடை செய்யப்பட வேண்டும்.--Kanags (பேச்சு) 11:13, 15 சனவரி 2018 (UTC)[பதிலளி]
ஆதரவு.--நந்தகுமார் (பேச்சு) 10:21, 11 பெப்ரவரி 2018 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா/விக்சனரி அகரவரிசை சீராக்கம்

தமிழ் விக்கி, விக்‌சனரி உள்ளிட்ட திட்டங்களில் அகரவரிசைப்படுத்தல் சீராக இல்லை. அதற்காக phabricator.wikimedia.orgல் வழுவும், அதற்கான முறையையும் நாம் பரிந்துரைக்க விரும்புகிறேன். ஏற்கனவே இது தொடர்பாக விக்கிப்பீடியா மீது சமூகத்தளத்தில் விமர்சனத்தைச் சிலர் வைத்துள்ளதை நாம் அறிந்திருக்கலாம். கீழ்க்கண்ட சில வழுக்களை ஆய்ந்து -ஆலோசனைகளோ, ஆதரவையோ தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்மெய் இடையே கிரந்தம் புகுதல்: பகுப்பு:ஐரோப்பிய_நாடுகள் போல பகுப்புகளில் சரியாக இருந்தாலும் [2] சிறப்புப் பக்கங்களில் வெளிப்படுவதில்லை.
தமிழின் முதலெழுத்தாக அகரத்திற்கு முன் ஃ வருதல் : [3]
ஔகாரத்திற்குப் பின் மெய் வராதல் : [4] இங்கே சரியாக வந்தாலும் பகுப்பு:வாழும்_நபர்கள் இங்கே அக்பருக்குப் பின்னே அகமது வருகிறது.

பரிந்துரைக்கும் வரிசை (பொதுவாகத் தமிழ் அகரவரிசைப்படுத்தல் தொடர்பாக மேலும் அறிய இங்கே செல்லலாம் http://tech.neechalkaran.com/2018/02/tamil-sorting.html) அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ க கா கீ கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க் ங் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ஜ ஜா ஜ் ஷ் ஸ் ஸ்ரீ ஹ் -நீச்சல்காரன் (பேச்சு) 06:57, 11 பெப்ரவரி 2018 (UTC)

  1. 👍 விருப்பம்--Kanags (பேச்சு) 07:13, 11 பெப்ரவரி 2018 (UTC)
  2. --உழவன் (உரை) 08:34, 11 பெப்ரவரி 2018 (UTC)
  3. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:03, 11 பெப்ரவரி 2018 (UTC)
  4. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 10:19, 11 பெப்ரவரி 2018 (UTC)
  5. 👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 15:02, 11 பெப்ரவரி 2018 (UTC)
  6. 👍 விருப்பம்--பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:50, 8 செப்டம்பர் 2018 (UTC)

3 வரிக் கட்டுரைகளை நீக்குவது குறித்த கொள்கை உரையாடல்

3 வரிக் கட்டுரைகளை நீக்குவது குறித்த கொள்கையை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டுகிறேன். இங்கு இது தொடர்பான உரையாடலில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 14:03, 18 சூன் 2018 (UTC)[பதிலளி]

Inscription Stones of Bangalore - A Citizen Project

In Kannada Wikipedia we did a project on Inscription stones of Bangalore. In that project we added 30 articles about inscription stones which are intact in Bengaluru. In that Tamil inscription stones are also included.
This weekend i.e on 3rd November at 5:30PM there is a talk about inscription stones. This is hosted by Tamil Heritage Trust at Arkay Convention Center (ACC), Chennai. Inscription stone team would like to add articles on Tamil Wikipedia. There are bunch of enthusiasts who wants write on Tamil Wikipedia but have less Tamil typing skills. I kindly request interested Tamil Wikipedians/ Wikipedians around Chennai to attend this event. --Gopala Krishna A (பேச்சு) 07:51, 31 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

கிரந்த நீக்க முறைகள்

தமிழில் கலந்துள்ள கிரந்த சொற்களை மற்றும் எளிய வழிமுறையை நன்னூல் விளக்குகிறது. அதனைக் கொண்ட JavaScript இங்கு காணக் கிடைக்கிறது. எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் இங்கு உள்ளது. இந்த Library விக்கிபீடியா'வுக்கு உதவலாம் எனும் நோக்கில் ஆலமரத்தடியில் இந்தச் செய்தியை வைக்கிறேன்.

வழிமாற்று கொள்கை - மறு ஆய்வு கோரிக்கை

வணக்கம். வழிமாற்று கொள்கையில் மறு ஆய்வு செய்ய வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:வழிமாற்று#எதற்கு_பயன்படுத்தக்_கூடாது என்ற தலைப்பில் சிறு மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை உள்ளது என நம்புகிறேன்.

புதிய சொற்களை உருவாக்கும் போது, தற்போது பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கு வழிமாற்று உருவாக்குவது வழமையானது என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் வார்த்தைகளில் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கின்றது. க், த், ட், ப், உள்ளிட்ட எழுத்துகளில் கட்டுரை வழிமாற்றுகள் நேற்று வரை இருந்தது. இன்று ஒருவேளை அழிக்கப்பட்டிருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, ப்ளாக்செயின் என்று பரவாலாக[1][2][3][4] அறியப்பட்ட ஒரு சொல்லை, தமிழில் தொடரேடு என்று புதியதாக ஒரு இணையான சொல்லை உருவாக்கி கட்டுரை எழுதும்போது பயன்பாட்டில் உள்ள ஒரு சொல்லிற்கு வழிமாற்றாவது உருவாக்க வேண்டும். இதற்கு பிற விக்கி பயனர்களின் கருத்தும் ஆதரவும் தேவை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:51, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

[1] இந்திய நடுவண் அரசு இணையத்தளம் [2] பிபிசி தமிழ் [3] விகடன் குழுமம் [4] தமிழ் கிசுபாட்

ஆதரவு

  1. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:30, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

கருத்துக்கள்

இவ்வாறான நடைமுறை சொற்களைக் கொண்டு தேடுபவர்களுக்கு சரியான கட்டுரையை அடைய இந்த முயற்சி வழிவகுக்கும் எனக்கருதுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:29, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

  • தமிழில் மெய் எழுத்துக்களில் சொற்கள் ஆரம்பிக்காது எனவே கட்டுரைகளோ வழிமாற்றுப்பக்கங்களோ மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கவேண்டாம். தேவையானவர்கள் ஆங்கிலத்தில் தேடி தமிழைத் தெரிவுசெய்து படிக்கலாம். அல்லத்து பிளக்செயின் என்னும் வழிமாற்றுப் பக்கத்தை உருவாக்கியும் விடலாம். இலக்கணப்பிழையான வழிமாற்றங்கள் தேவையற்றது அது கலைக்கழஞ்சியத்தின் தரத்தைக் குறைத்துவிடும்.