இரா. நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 77: வரிசை 77:
*மன்றம் என்னும் இதழை நடத்தினார்.
*மன்றம் என்னும் இதழை நடத்தினார்.
* திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட '''நம்நாடு''' இதழின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.
* திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட '''நம்நாடு''' இதழின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.

== நடிகர் ==
1952ஆம் ஆண்டில் [[தேனி|தேனியில்]] இவர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவ்வூர் காங்கிரசுகாரர்களால் கலவரம் ஏற்பட்டது. அதனால் நெடுஞ்செழியன் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கை எதிர்கொள்ள 'தேனி கல்வர வழக்கு நிதி' திரட்டுவதற்காக பல்வேறு இடங்களில் நாடகங்கள் நடத்தப்பட்டன. அவ்வகையில் 11-7-1952ஆம் நாள் [[கம்பம்]] நகரிலிருந்த வ.உ.சி.தியேட்டரில் [[ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன்]] தலைமையில் [[கா. ந. அண்ணாதுரை]] எழுதிய '''கல்சுமந்த கசடர்''' என்னும் நாடகம் நடைபெற்றது. அதில் நெடுஞ்செழியன் முதன்மையான வேடந்தாங்கி நடித்தார். <ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:6-7-1952, பக்கம் 8</ref>


== மறைவு ==
== மறைவு ==

10:43, 10 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

இரா. நெடுஞ்செழியன்
படிமம்:இரா. நெடுஞ்செழியன்.jpg
தமிழ்நாட்டு நிதியமைச்சர்
பதவியில்
1967-1976,1977-1988,1991-1996
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை
தொகுதிஆத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1920-07-11)சூலை 11, 1920
திருக்கனாபுரம், பட்டுக்கோட்டை
இறப்புசனவரி 12, 2000(2000-01-12) (அகவை 79)
சென்னை
அரசியல் கட்சிஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்விசாலாட்சி
பிள்ளைகள்மதிவாணன்
வாழிடம்சென்னை
கல்விமுதுகலைமானி தமிழ்

இரா. நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் "நாவலர்" என்றும் அழைக்கப்படுவார்.

குடும்பம்

பட்டுக்கோட்டையின் அருகேயுள்ள திருக்கனாபுரத்தில் 11-7-1920 ஆம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் (பிறப்பு 20-6-1951) [1] என்னும் மகனும் உள்ளனர். இவர் பேரன் ஜீவன் நெடுஞ்செழியன் இந்திய டென்னிஸ் வீரராக விளங்குகிறார். மருமகள் கல்யாணி மதிவாணன் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.

புகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான இரா. செழியன் இவர்தம் தம்பிகளுள் ஒருவர் ஆவார்.

கல்வி

சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து கலைமுதுவர் பட்டம் பெற்றவர். அங்கு இவரோடு பயின்றவர் க. அன்பழகன்.

அரசியல்

சுயமரியாதை இயக்கத்தில்

பல்கலைக்கழகத்தில் பயிலும்பொழுதே இவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு அதில் சேர்ந்தார்.

திராவிடர் கழகத்தில்

இவ்வியக்கம் நீதிக்கட்சியோடு இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவானபொழுது அதில் தொடர்ந்தார். அக்கழகத்தின் முன்ணணிபேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். அப்பொழுது பெரியாரைப்போல இவருக்கும் தாடியிருந்ததால் 'இளந்தாடி' நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில்

பேரறிஞர் அண்ணா, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய பொழுது அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில் (அண்ணா, ஈ. வெ. கி. சம்பத், நெடுஞ்செழியன், என். வி. நடராசன். க. மதியழகன்) ஒருவராகத் திகழ்ந்தார். 1949 முதல் 1957 வரை அக்கழகத்தின் பிரச்சாரக்குழு செயலாளராக இருந்தார். 1957 முதல் 1962 வரை அக்கட்சியின் இரண்டாவது பொதுச்செயலாளராக பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர், 1969 முதல் 1975ஆம் ஆண்டு வரை மீண்டும் பொதுச்செயலாளராகப் பதவிவகித்தார்.

மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்

1975ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து க. இராசராமோடு இணைந்து மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டுத்தேர்தலில் அ.தி.மு.க. அமைத்த கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்

1977ஆம் ஆண்டில் ம.தி.மு.க.வை அ.தி.மு.க.வில் இணைத்தார். அதன்பின் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராகவும் பொதுச்செயலாளராகவும் சிலகாலம் இருந்தார். 1987ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அப்போதைய கொள்கைபரப்புச் செயலாளரான ஜெ.ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பாடுபட்டார்.

அ.தி.மு.க. (நால்வர் அணி)

ஜெயலலிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் க.இராசராம், செ. அரங்கநாயகம், பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அ.தி.மு.க (நால்வர் அணி) என்னும் பிரிவை உருவாக்கினார். அந்த அணியின் சார்பில் அதற்கு அடுத்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதனால் சிறிதுகாலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

மீண்டும் அ.தி.மு.க.வில்

பின்னர் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார்.

அமைச்சர்

  • 1967 முதல் 1969 வரை அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.
  • 1969 ஆம் ஆண்டில் அண்ணா மறைந்தபொழுது ஏற்பட்ட பிணக்கால் கருணாநிதியின் அமைச்சரவையில் பங்கேற்காமல் விலகி இருந்தார்.
  • 1971 முதல் 1975 வரை கருணாநிதி அமைத்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.
  • 1977 முதல் 1980 வரை எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தார்.
  • 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவை அமைக்கும் பொழுதெல்லாம் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார்.

அண்ணா இறந்த பொழுது பெப்ரவரி 3, 1969 முதல் பெப்ரவரி 10, 1969 காலமும் எம்.ஜி.ஆர் இறந்த பொழுது டிசம்பர் 24, 1987 முதல் ஜனவரி 7, 1988 வரை இடைக்கால முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

எழுதிய நூல்கள்

  • கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த கழகம் (தேனி கலவரம் பற்றியது)
  • திமுக
  • தீண்டாமை
  • திருக்குறள் தெளிவுரை
  • பாவேந்தர் கவிதைகள் - திறனாய்வு
  • நீதிக்கட்சியின் வரலாறு
  • இங்கர்சால் நூலொன்றை மொழிபெயர்த்துள்ளார்

இதழாளர்

  • மன்றம் என்னும் இதழை நடத்தினார்.
  • திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட நம்நாடு இதழின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.

மறைவு

இவர் 12-1-2000ல் காலமானார்.

சான்றடைவு

  1. திராவிடநாடு (இதழ்) நாள்:1-7-1951, பக்கம் 7
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._நெடுஞ்செழியன்&oldid=2586643" இலிருந்து மீள்விக்கப்பட்டது