உண்மையான இயேசு தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hif:Isa masih saty girajaghar [r5530]
சி தானியங்கி மாற்றல்: sw:Kweli Kanisa la Yesu
வரிசை 226: வரிசை 226:
[[su:Garéja Yésus Sajati]]
[[su:Garéja Yésus Sajati]]
[[sv:The True Jesus Church]]
[[sv:The True Jesus Church]]
[[sw:True Jesus Church]]
[[sw:Kweli Kanisa la Yesu]]
[[szl:Prowdźiwy Kośćou Jezusa]]
[[szl:Prowdźiwy Kośćou Jezusa]]
[[te:నిజ ఏసుక్రీస్తు మండలి]]
[[te:నిజ ఏసుక్రీస్తు మండలి]]

09:49, 27 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

படிமம்:T J C.jpg

உண்மையான இயேசு தேவாலயம் ஒரு "சுதந்திர புரட்சி கிறிஸ்தவ திருசபை" ஆகும். இச்சபையில் கிறிஸ்துமஸ், உயிர்த்த ஞாயிறு போன்றவை கொண்டாடப்படுவதில்லை. திரித்துவத்தை ஏற்றுக் கொள்வதில்லை, மாறாக ஒரேகடவுள் என்பதை பின்பற்றுகின்றன. இச்சபை சீனாவில் உள்ள பீஜிங்கில் 1917ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது. இத்தேவாலயமானது இந்தியாவில் முதன் முதலாக 1932ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் கிளைகள் தமிழ்நாட்டின் அம்பத்தூர், செங்கல்பட்டு, பம்மல், திருவொற்றியூர், திருநெல்வேலி, திருநீலை, ஓட்டேரி மற்றும் பண்டுவன்சேரி போன்ற இடங்களில் அமைந்துள்ளன.

ஐந்து போதனைகள்

புனித ஆத்மா

நாபட உரைத்து பரிசுத்த ஆவியை ஏற்போமாயின், அதுவே நாம் தேவ இராச்சியத்தின் முழு அருளினை பெறுவதற்கான வழிசெய்யும்.

திருமுழுக்கு

திருமுழுக்கு எனும் சடங்கு, பாவங்களை கழுவி மறுபிறவியளிப்பதாகும். இயற்கையாக அமைந்த நீர்நிலையான ஆறு, கடல் அல்லது ஏரி போன்ற ஒன்றில் திருமுழுக்கு கொடுக்கப்படும்.

ஏற்கனவே நீரினாலும் படிசுத்த ஆவியாலும் திருமுழுக்கு பெற்ற ஒருவர், இயேசுவின் பெயரால் திருமுழுக்கு கொடுக்க வேண்டும். திருமுழுக்கு பெறுபவர் தலை குனிநத நிலையில் முகம் கீழாக இருக்க முழுமையாக நீரில் அமிழ்த்தப்பட வேண்டும்.

பாதம் கழுவுதல்

"பாதம் கழுவும் திருவருட்சாதம் இயேசுவுடன் பங்குதாரியாக மாற்றுகின்றது. இது தொடர்ந்து அன்பு செய்தலைடும் புனிதத்தையும் பணிவையும், மன்னிப்பையும் கடைப்பிடிக்க நினைவூட்டுகிறது.

திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவருக்கும் இயேசுவின் பெயரால் பாதங்கள் கழுவப்படும். ஒருவரினொருவர் பாதங்களை கழுவுதல் பொருத்தமான எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படும்".

திவ்விய நற்கருணை

திவ்விய நற்கருணை இயேசுவின் இறப்பை நினைவுகூறும் திருவருட்சாதானமாகும். இது இயேசுவின் இரத்தத்டிலுன் உடலிலும் எம்மை பங்குகொள்ளச் செய்து இயேசுவுடன் இணைக்கிறது. இதன்மூலம் நிலையான வாழ்வை ஈட்ட வழிசெய்கிறது. இச்சடங்கின் போது புளிக்காத மாவினால் செய்த அப்பமும் திராட்சை இரசமும் பாவிக்கப்படுகிறது.

ஓய்வு நாள்

"ஓய்வு நாள் அல்லது சபத் நாள்,கிழமையின் 7 வது நாள்(சனிக்கிழமை), புனித நாளாகும். அது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும். கடவுளின் உலக படைப்பையும், வரவிருக்கும் நிலைவாழ்வில் கிடைகும் ஓய்வையும் நினைவு கூறும் வகையில் ஓய்வு நாள் அனுசரிக்கப்படுகிறது".

மேலதிக கோட்பாடுகள்

யேசு கிறிஸ்து

"வார்த்தையாய் இருந்து மாம்சமான, இயேசு கிறிஸ்து பாவிகளின் விடுதலைக்காக சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து விண்ணகம் சென்றார்.அவரே மனுகுலத்தின் ஒரே மீட்பரும், வானங்களையும் பூமியையும் படைத்தவரும் ஒரே உண்மைக் கடவுளுமாவார்."

புனித வேதாகமம்

"பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் கொண்ட புனித விவிலியம் கடவுளின் வார்த்தையாகும், அதுவே உண்மை வேதமும், கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையுமாகும்."

இரட்சிப்பு

"மீட்பு விசுவாசத்தினூடாக கடவுளின் கருணையால் வழங்கப்படுவதாகும். விசுவாசிகள் பரிசுத்த ஆவியில் தேவனை மகிமைப் படுத்துவதோடு மனிதத்தை அன்பு செய்ய வேண்டும்".

தேவாலயம்

"உண்மையான இயேசு தேவாலயம், இயேசுக்கிறிஸ்துவால் பரிசுத்த ஆவி மூலமாக 'latter rain' காலத்தில் தொடக்கப்பட்டதாகும். இது அப்போஸ்தலர் காலத்துல் இருந்த சபைக்கு ஒத்ததாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது."

இரண்டாம் வருகை

கர்த்தர் இயேசுவின் இரண்டாம் வருகை உலகின் கடைசிநாளில் நடைபெறும். அவர் சகல ஆத்துமாக்களையும் நடுத்தீர்க்க விண்ணகத்திலிருந்து இறங்கிவருவார். நீதிமான்களுக்கு நித்திய சீவனையும், பாவிகளுக்கு நித்திய நரகத்தையும் தீர்ப்பளிப்பார். ak:Ỳesu Asafo Ankasaankasa

"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மையான_இயேசு_தேவாலயம்&oldid=257387" இலிருந்து மீள்விக்கப்பட்டது