கறுப்புக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45: வரிசை 45:
வரலாற்றாசிரியர் அல் ஜுவைனி கருத்துப்படி 23 ஆண்டுகளுக்குப் பின்னர் 952இல் அது மீண்டும் காபாவுக்குக் கொண்டு வரப்பட்டது. "கட்டளை மூலம் அதை எடுத்துச் சென்றோம். மீண்டும் கட்டளை மூலம் கொண்டு வந்தோம்" என அறிவிக்கப்பட்டது. கடத்தல் மற்றும் அகற்றுதல் ஆகிய செயல்கள் மேலும் சேதத்தை ஏற்படுத்தியதால் கல் ஏழு துண்டுகளாக உடைக்கப்பட்டது. அதைக் கடத்திச் சென்ற அபு தாகிர் ஒரு கொடூரமான விதியை சந்தித்தாகக் கூறப்பட்டது. "அபு தாஹிருக்கு ஒரு புண் நோய் ஏற்பட்டது. உடலில் புழுக்கள் ஏற்பட்டு மிகவும் கொடூரமான மரணத்தை அவர் அடைந்தார்" என குத்புத்தீன் கூறுகிறார்.
வரலாற்றாசிரியர் அல் ஜுவைனி கருத்துப்படி 23 ஆண்டுகளுக்குப் பின்னர் 952இல் அது மீண்டும் காபாவுக்குக் கொண்டு வரப்பட்டது. "கட்டளை மூலம் அதை எடுத்துச் சென்றோம். மீண்டும் கட்டளை மூலம் கொண்டு வந்தோம்" என அறிவிக்கப்பட்டது. கடத்தல் மற்றும் அகற்றுதல் ஆகிய செயல்கள் மேலும் சேதத்தை ஏற்படுத்தியதால் கல் ஏழு துண்டுகளாக உடைக்கப்பட்டது. அதைக் கடத்திச் சென்ற அபு தாகிர் ஒரு கொடூரமான விதியை சந்தித்தாகக் கூறப்பட்டது. "அபு தாஹிருக்கு ஒரு புண் நோய் ஏற்பட்டது. உடலில் புழுக்கள் ஏற்பட்டு மிகவும் கொடூரமான மரணத்தை அவர் அடைந்தார்" என குத்புத்தீன் கூறுகிறார்.


== சடங்கு பங்களிப்பு ==
== சடங்குப் பங்களிப்பு ==
[[படிமம்:Mosquée_Masjid_el_Haram_à_la_Mecque.jpg|thumb|250x250px|மக்காவிலுள்ள கஹ்பா,கறுப்புக் கல்லானது கஹ்பாவின் கிழக்கு மூலையில் உள்ளது. ]]
[[படிமம்:Mosquée_Masjid_el_Haram_à_la_Mecque.jpg|thumb|250x250px|மக்காவிலுள்ள காபா. கறுப்புக் கல் காபாவின் கிழக்கு மூலையில் உள்ளது.]]
ஹஜ் கடமையின் போது யாத்திரிகர்கள் ஏழு தடவை கஹ்பாவை இடஞ்சுழியாக சுற்றி வரும்போது கறுப்புக்கல் ஆனது முக்கிய பங்கு வகிக்கின்றது. யாத்திரிகர்கள் ஒவ்வொரு முறையும் சுற்றி வரும் போது கருப்ப்க்கல்லை முத்தமிட முயற்சிக்கின்றனர் ஆனால் இன்றைய நவீன காலத்தில் பெருங்கூட்டம் ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதால் அனைவரும் அக்கல்லை முத்தமிடுவது சாத்தியமற்றது ஆகவே ஒவ்வொரு சுற்றின் போதும் அந்த கல்லின் திசையை சுட்டிக்காட்டுவது ஏற்கத்தக்கது.
ஹஜ் கடமையின் போது யாத்திரிகர்கள் ஏழு தடவை காபாவைச் சுற்றி வரும்போது கறுப்புக்கல் முக்கிய பங்கு வகிக்கின்றது. யாத்திரிகர்கள் ஒவ்வொரு முறையும் சுற்றி வரும் போது கருப்புக் கல்லை முத்தமிட முயற்சி செய்கின்றனர். ஆனால் இன்றைய காலத்தில் பெரும் கூட்டம் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதால் அனைவரும் அக்கல்லை முத்தமிடுவது சாத்தியமற்றது. ஆகவே ஒவ்வொரு சுற்றின் போதும் அந்தக் கல்லின் திசையைக் கையால் சுட்டிக் காட்டுவது ஏற்கத்தக்கது எனக் கருதப்படுகிறது.


சிலர் கஹ்பாவை சுற்றி வலம் (தவாப்) வரும் போது வெறுமனே சுற்று எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு சிறந்த அடையாள கள்ளக கருதினர். அதன் கருப்பு நிறமானது கடவுள் பற்றின்மை, மற்றும் அத்தியாவசிய ஆன்மீக நல்லொழுக்கச் சின்னமாகவும் மற்றும் தான் என்ற அகங்காரத்தை மனதிலிருந்து அளித்து(கல்ப்) கடவுளை நோக்கி முன்னேற உதவுவதாக கருதப்படுகிறது.
சிலர் காபாவைச் சுற்றி வலம் (தவாப்) வரும் போது வெறுமனே சுற்று எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு சிறந்த அடையாளக் கல்லாக இதைக் கருதினர்.

மதீனாவின் விடியலில் எழுதப்பட்டுள்ளது: ஒரு யாத்திரிகரின் முன்னேற்றம், முபாஷால் இக்பால் அவர்கள் மதீனாவிற்கான யாத்திரையின் போது கருப்புக்கல்லை வணங்கும் அனுபவத்தை பற்றி இவ்வாறு கூறுகிறார்:


== கருத்து மற்றும் அடையாளங்கள் ==
== கருத்து மற்றும் அடையாளங்கள் ==

06:17, 2 செப்தெம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

யாத்திரிகர்கள் முத்தமிட வாய்ப்பு பெற முட்டித் தள்ளுகின்றனர். அவர்களால் கல்லை முத்தம் முடியவில்லை என்றால், அவர்கள் தங்கள் வலது கையில் ஒவ்வொரு சுற்றிலும் கல் நோக்கி சுட்டிக்காட்ட முடியும்.

கறுப்புக் கல் (Black Stone, Hajarul Aswad, அரபு மொழி: الحجر الأسود‎) என்பது சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பெரிய பள்ளிவாசல் நடுவில் அமைந்துள்ள காபா எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி ஆதம், ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும்.[1]

இந்தக் கல் இஸ்லாத்தின் ஆரம்பக் காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் கிபி 605ஆம் ஆண்டு காபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605க்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது.[2]

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் காபாவைச் சுற்றி வந்து தவாப் செய்யும் போது இக்கல்லை போட்டியிட்டு ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள்.[3][4]

அமைப்பு விளக்கம்

கல்லின் நெருக்கமான காட்சி
கல்லின் துண்டுதுண்டான முன்பக்க எடுத்துக்காட்டு

கறுப்புக் கல் என்பது வெள்ளிச் சட்டம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சிறு பாகங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதால் இன்று 7 அல்லது 8 பாகங்கள் ஒன்றாக்கப்பட்ட நிலையில் காணப்படக்கூடியதாக இது உள்ளது. கல்லின் முழு வெளித்தோற்ற அளவு 20 சென்டிமீட்டர் (7.9 அங்குலம்), 16 சென்டிமீட்டர் (6.3 அங்குலம்) ஆகும். இந்தக்கல் பல முறை புதுப்பித்துக் கட்டப்பட்டதால் இதன் மூல அளவு பற்றிய தெளிவு இல்லை.[2]

"இக்கல் ஒரு முழம் (1.4 அடி அதாவது 0.46 மீட்டர்) நீளம் கொண்டது" என 10ஆம் நூற்றாண்டில் இதைக் கண்டவர்கள் கூறியதாக அறிய முடிகிறது.

18ஆம் நூற்றாண்டில் 'அலி பே' என்ற அறிஞரின் கூற்றுப்படி 42 அங்குலம் (1.10 மீட்டர்) உயரம் உடையது. முஹம்மது அலி பாஷர் என்ற அறிஞரின் கூற்றுப்படி 2.5 அடி (0.76 மீட்டர்) நீளமும் 1.5 அடி (0.46 மீட்டர்) அகலமும் கொண்டது.[2]

19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1814ம் ஆண்டு) சுவிஸர்லாந்தில் இருந்து யாத்திரிகராக காபாவுக்கு வந்த 'ஜோஹன் லட்விக் பர்கர்ட்' என்பவர் முதன் முதலாக மேற்கத்திய நூல்களில் கறுப்புக்கல்லைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவரின் 'அரேபியாவில் ஒரு பயணம்' என்ற புத்தகத்தில் பின்வருமாறு ஒரு விரிவான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.

"1853இல் காபாவுக்குச் சென்ற ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்டன் மேலும் குறிப்பிட்டது:

"ரிட்டர் வொன் லஹோரின், எகிப்தில் ஆஸ்திரிய தூதர் 1817இல் முஹம்மது அலி என்பவரால் அகற்றப்பட்ட கல்லின் ஒரு பகுதியை ஆய்வு செய்து அக்கல்லின் வெளிப்புறம் சாம்பல் போன்ற வெள்ளி நிறமும் உள்ளே தூளாக்கப்பட்ட வெள்ளி மற்றும் பச்சை நிறப் பொருட்கள் பதிக்கப்பட்டும் உள்ளது. கல்லின் முகப்புப் பகுதியில் வெள்ளை அல்லது மஞ்சள் புள்ளிகளும் உள்ளன என அறிவித்தார்.

"கருப்புக் கல்லைச் சுற்றி உள்ள சட்டம், கருப்பு கிஷ்வாஹ் அல்லது காபாவைச் சுற்றி உள்ள கருப்புத் துணியானது பல நூற்றாண்டுகளாக பள்ளிவாசலின் பொறுப்பாளரான 'ஒத்தமான் சுல்தான்' மூலமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அச்சட்டமானது யாத்திரிகர்களால் அவ்வப்போது மாற்றப்பட்டும் காலப்போக்கில் நிலையானதாகவும் அணிவிக்கப்படும். சில நேரங்களில் நீக்கப்படும். அச்சட்டமானது துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குக் கொண்டுச் செல்லப்படும். அவர்கள் இன்னும் அதனை புனித பீடத்தில் ஒரு பகுதியாக கருதி துருக்கியின் 'டொப்காபி' மாளிகையில் பராமரித்து வருகின்றனர்.

வரலாறு மற்றும் பாரம்பரியம்

1315 ஜாமி அல்-தவாரிக் விளக்கம். முஹம்மது சீரா (நபி வரலாறு), மக்காவின் குலத் தலைவர்கள் கல்லைத் தூக்கும் காட்சி

முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாம் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்னதாகவே காபாவில் கறுப்புக்கல் அமைக்கப்பட்டதுடன் அங்கு அது பெரும் மதிப்புடையதாகவும் இருந்தது. முஹம்மது (ஸல்) அவர்களுடைய காலத்தில் அது ஏற்கனவே காபாவுடன் தொடர்புடையதாக இருந்தது. அக்காலத்தில் மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை அங்கு சென்று வழிபட்டு வந்தனர். மக்காவில் அமைந்து இருக்கும் காபா ஆலயத்தில் 360 விக்கிரகங்களை வைத்து அவற்றைக் கடவுள்களாக வழிபடும் ஒரு தலமாக அதை மதித்தனர். மத்திய கிழக்கில் கற்களை வழிபடுகின்ற வழக்கம் இருந்து வந்தது. புனித குர்ஆன் மற்றும் பைபிளிலும் இது பிரதிபலிக்கறது ஒரு பொருளுக்கு முன்பாக குனிந்து மரியாதை செய்வது என்பது சிலை வழிபாட்டாளர்களின் செயலாகவும் தீர்க்கதரிசிகளால் கண்டிக்கப்பட்ட செயலாகவும் இது விவரிக்கப்படுகிறது.

வெள்ளிச் சட்டத்தின் அமைப்பு

சில எழுத்தாளர்களின் கருத்துப்படி கருப்புக்கல்லின் வெள்ளிச் சட்டம் பெண்களின் பிறப்பு உறுப்பின் மேற்பகுதி போன்று இருப்பதும் இக்கருத்து இஸ்லாத்துக்கு முந்தைய அரேபியாவின் அறியாமைக்காலச் சடங்குகளுடன் ஒத்ததாகவும் படைப்பின் அடிப்படையைப் போற்றும் பெண் தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையதாகவும் கருதப்பட்டது. ஆனாலும் இக்கருத்து பலராலும் மறுக்கப்படுகிறது.

கருப்புக் கல்லைப் போல ஒரு 'சிவப்புக்கல்' தென் அரேபியாவில் கைமன் எனும் நகரிலும் மற்றொன்று காபாவின் அல் அபலத் (தென் மக்காவின் தபலா) நகரிலும் அறியாமைக் காலத்தில் 'தெய்வீகத்தன்மை உடையதாக' கருதப்பட்டது. அந்தக் காலத்தில் வணக்க வழிபாடு என்பது பெரும்பாலும் பயபக்தியான கற்கள், மலைகள், சிறப்பான பாறை அமைப்புகள் அல்லது தனித்துவமான, அபூர்வமான மரங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாக இருந்தது.

காபாவில் பொருத்தப்பட்டுள்ள கறுப்புக் கல் "உலகத்தையும் சுவர்க்கத்தையும் இணைக்கும் ஒரு பொருளின் சின்னமாகவும்" கருதப்படுகிறது.

தற்போதைய கருப்புக்கல்லை காபாவின் சுவரில் முஹம்மது நநி அமைத்தார்கள் என அறிய முடிகிறது. இப்னு இஷாக் தொகுத்து எழுதிய 'சீரா ரசூலுல்லாஹ்' என்ற நூலில் ஒரு நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெரும் தீ விபத்தில் காபாவின் ஒரு பகுதி அளிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மீண்டும் காபாவை கட்டியெழுப்பும் வேலையின் போது தற்காலிகமாக அந்தக் கருப்புக் கல் அதன் இடத்தை விட்டு அகற்றப்பட்டது. மீண்டும் அதை அதே இடத்தில் பொருத்துவதற்குத் தகுதியான மரியாதைக்குரிய ஒரு பெரிய மனிதர் தமக்குள் இல்லை என அவர்கள் வாதிட்டனர். அப்போது அவர்கள் அந்த வாசல் வழியாக அடுத்து யாராவது ஒருவர் வரும் வரை காத்திருந்து அவரிடமே இது பற்றி முடிவு செய்யச் சொல்லலாம் எனக் கூறினர். இந்நிகழ்வு முஹம்மது அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது முஹம்மது நபியின் 35ஆம் வயதில் நடைபெற்றது. இதற்கு முடிவு கூறும் விதமாக முஹம்மது நபி அவர்கள், ஒரு துணியைக் கொண்டு வர செய்து மக்கா நகரத்து முக்கியப் பிரமுகர்களின் வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகளின் மூத்தவர்கள் அத்துணியின் நடுவில் அந்தக் கல்லைத் தூக்கி வைக்குமாறு கூறி அத்துணியின் மூலைகளை குலத் தலைவர்கள் ஒவ்வொருவரும் பிடித்துத் தூக்கிச் சென்று சரியான இடத்தில் வைக்கலாம் என்று கூறினார்கள்.

இவ்வாறாக முஹம்மது நபி அவர்கள் அக்கல்லை சரியான இடத்தில் பொருத்தினார்கள். இந்நிகழ்வு அனைத்து மக்கா வாசிகளுக்கும் திருப்தியை அளித்தது.

இக்கல்லின் 'தெய்வீக தன்மை' இழப்பு

கிபி 683இல் மக்காவில் உமையா காலத்தில் கவன் ஒன்றினால் நெருப்புத் துண்டுகள் எறியப்பட்டு கல்லின் ஒரு பகுதி முறிக்கப்பட்டது. கல்லின் துண்டுகளை அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் என்பவர் மீண்டும் வெள்ளி தசை நார் கொண்டு இணைத்தார். கிபி 930இல் இந்தக் கல் திருடப்பட்டு ஹஜர் (நவீன பஹ்ரைன்) கொண்டு செல்லப்பட்டது. 1857இல் ஒத்தமான் வரலாற்று ஆசிரியர் குத்புத்தீன் என்பவரின் கூற்றுப்படி அபு தாகிர் அல் கர்மாதி என்பவர் தனது மஸ்ஜித் அல் திரார் பள்ளிவாசலின் உச்சியில் அக்கல்லை நிறுவினார். ஹஜ் செய்ய செல்லும் யாத்திரிகர்களை திசை திருப்புவதற்காக அவரின் இந்தத் திட்டம் தோல்வியுற்றது. ஆனால் யாத்திரிகர்களும் கருப்புக்கல் இருந்த முந்தைய இடத்தையே வணக்கத் தலமாக தொடர்ந்தனர்.

வரலாற்றாசிரியர் அல் ஜுவைனி கருத்துப்படி 23 ஆண்டுகளுக்குப் பின்னர் 952இல் அது மீண்டும் காபாவுக்குக் கொண்டு வரப்பட்டது. "கட்டளை மூலம் அதை எடுத்துச் சென்றோம். மீண்டும் கட்டளை மூலம் கொண்டு வந்தோம்" என அறிவிக்கப்பட்டது. கடத்தல் மற்றும் அகற்றுதல் ஆகிய செயல்கள் மேலும் சேதத்தை ஏற்படுத்தியதால் கல் ஏழு துண்டுகளாக உடைக்கப்பட்டது. அதைக் கடத்திச் சென்ற அபு தாகிர் ஒரு கொடூரமான விதியை சந்தித்தாகக் கூறப்பட்டது. "அபு தாஹிருக்கு ஒரு புண் நோய் ஏற்பட்டது. உடலில் புழுக்கள் ஏற்பட்டு மிகவும் கொடூரமான மரணத்தை அவர் அடைந்தார்" என குத்புத்தீன் கூறுகிறார்.

சடங்குப் பங்களிப்பு

மக்காவிலுள்ள காபா. கறுப்புக் கல் காபாவின் கிழக்கு மூலையில் உள்ளது.

ஹஜ் கடமையின் போது யாத்திரிகர்கள் ஏழு தடவை காபாவைச் சுற்றி வரும்போது கறுப்புக்கல் முக்கிய பங்கு வகிக்கின்றது. யாத்திரிகர்கள் ஒவ்வொரு முறையும் சுற்றி வரும் போது கருப்புக் கல்லை முத்தமிட முயற்சி செய்கின்றனர். ஆனால் இன்றைய காலத்தில் பெரும் கூட்டம் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதால் அனைவரும் அக்கல்லை முத்தமிடுவது சாத்தியமற்றது. ஆகவே ஒவ்வொரு சுற்றின் போதும் அந்தக் கல்லின் திசையைக் கையால் சுட்டிக் காட்டுவது ஏற்கத்தக்கது எனக் கருதப்படுகிறது.

சிலர் காபாவைச் சுற்றி வலம் (தவாப்) வரும் போது வெறுமனே சுற்று எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு சிறந்த அடையாளக் கல்லாக இதைக் கருதினர்.

கருத்து மற்றும் அடையாளங்கள்

இஸ்லாமிய பாரம்பரியத்தில் கருப்புக்கல் ஆனது ஜன்னாஹ்வில் இருந்து விழுந்ததாகவும் அதை ஆதம், ஏவாள்க்கு கட்டுவதற்காக வைக்கப்பட்டதுடன் இது பூமியில் அமைக்கப்பட்ட மஸ்ஜித்களில் முதன்மையானதாகும். முஸ்லிம்கள் அந்தக்கல்லை முதலில் தூய மற்றும் திகைப்பூட்டும் வெள்ளை கல்லாக கண்டனர். பின்னர் அந்தக் கல் கருப்பாக மாறிவிட்டது ஏனெனில் மக்கள் அதை தொடர்ந்து தொட ஆரம்பித்ததாலாகும். ஒரு தீர்க்கதரிசன மரபுப்படி (கருப்புக்கல் மற்றும் அல் -ருகன் அல் -யமனி) இரண்டையும் தொடுவதானது பாவங்களில் பரிகாரமாகும். ஆதம் (அலை) ன் பலிபீடத்தில் கல் ஆனது நூஹ் (அலை) அவர்களின் வெள்ளத்தில் தொலைந்து போனதாக மறந்து கூறப்பட்டது. அதன் பின்னர் ஜிப்ரீல்(அலை) மூலமாக மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் புதிய கஹ்பா, பள்ளிவாசல் கட்டுவதற்காக இப்ராஹிம்(அலை) அவர்கள் தனது மகான் இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இரண்டாவது கலீபாவான Caliph உமர் இப்னு அல்-கத்தாப் (580–644) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். எனினும் கன்ஸ்-அல்-உம்மால் அவரினால் அறிவிக்கப்பட்ட ஹதீஸ் தொகுப்பில் அலி(ரலி) அவர்கள் உமர்(ரலி) க்கு பதில் அளித்தார்கள் " இந்தக்கல் (ஹஜருல் அஸ்வத்) ல் நன்மை அல்லது தீங்கை அடைய முடியும் .... அல்லாஹ் அல் குர்ஆனில் கூறியுள்ளான் அதாவது மனிதர்களை ஆதம்(அலை)ன் சந்ததியிலிருந்து உருவாக்கியும் அவர்களுக்கு தமக்கு தாமே சாட்சி கேட்டார் 'நான் உங்களை உருவாக்கியவரா? இதற்காக அவர்கள் உறுதி செய்து கொண்டார். இவ்வாறே அல்லாஹ் இதை உறுதிப்படுத்தி எழுதினார்.மற்றும் இந்தக்கல்லுக்கு கண்கள் ஒரு ஜோடி,காது மற்றும் நாக்கு மற்றும் அது அல்லாஹ்வின் கட்டளையின் பெயரில் யார் எல்லாம் ஹஜ் செய்ய வருகிரர்களோ அவர்களிடம் உறுதிப்படுத்தி, சாட்சியாக இருக்க உத்தரவிட்டார்.

முஹம்மது லபிப் அல்-படனுனி 1911ல், முன்னைய இஸ்லாமிய நடைமுறையில் கற்களை வணங்குவது பற்றிய கருத்துகலானது எழவில்லை ஏனெனில் அத்தகைய கற்கள் "தங்கள் சொந்த நலனுக்காக புனிதமாக்கின்றனர் ஏனெனில் அவற்றின் உறவானது தெய்வீகமான மற்றும் மரியாதைக்குரியது. இந்தியாவின் இஸ்லாமிய அறிஞர் முஹம்மது ஹமீதுல்லாஹ் பின்வருமாறு கருப்புக்கல்லின் பொருளை சுருக்கமாக கூறினார்:

சமீபத்திய காலங்களில் பல மொழியியலாளர்கள் கருப்புக்கல் பற்றி பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். எனினும் ஒரு சிறுபான்மை மொழியில் உண்மை என உறுதி செய்த உருவக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. " கல்லானது தீர்ப்பு நாள் அன்று (கியாமத் நாள்) பார்க்கக் கூடிய கண்கள், பேசக்கூடிய நா,மற்றும் உண்மையான பயபக்தியுடன் முத்தமிட்டவர்களுக்கு சாதகவாகவும் ஆனால் யாரொருவர் கஹ்பாவை சுற்றி வரும்போது வதந்தி, வீண்பேச்சி பேசினார்களோ அவர்களுக்கு பாதகமாகவும் சாட்சி கூறும்"

கார்ல் ஜங்ன் குறிப்பில் கனவுகள், பிரதிபலிப்புக்கள், நினைவுகள் திருமறை சார்ந்த சின்னமாக கற்கள் பல உள்ளன ஒரு வேலை ஆழமான அனுபவத்தில் சின்னம் என அர்த்தம் கொள்ளலாம். ஒரு மனிதனிடம் அழிவில்லாத மற்றும் மறக்க முடியாத கணங்கள் இருக்கலாம் அவை ஏதோ ஒரு நிலை பேறுடைய அனுபவமாகும். கஹ்பா இஸ்லாமிய உலகத்திலே ஒரு புனித தெய்வீக இல்லமாகவும் மற்றும் பயபக்தியுடைய முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கறுப்புக் கல்லை பார்க்க வாழ்வில் ஒரு தடவை ஏனும் யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

அறிவியற் தோற்றம்

கறுப்புக்கல்லின் தன்மையானது கடும் விவாதத்திற்கு உரிய ஒரு விடயமாகும். இது எரிமலை பாறைகள் எனவும் இரத்தினக்கற்களில் ஒன்று எனவும் இயற்கையான கண்ணாடி துண்டு எனவும் அனேகமாக கல்லுள் புதைவுற்ற விண்கல் எனவும் பல வகைகளில் கூறப்படுகிறது. 1857ல் ஆஸ்திரிய ஹங்கேரிய கனிமங்கள் தொகுப்பிற்கு பொறுப்பானவரின் முதல் விரிவான அறிக்கையில் கறுப்புக்கல் ஆனது ஒரு விண்கல் என குறிப்பிட்டுள்ளார். 1974 ல் கருப்புக்கல்லை பற்றி 'ராபர்ட்ஸ் டைட்ஸ்' மற்றும் 'ஜோன் மேக்ஹோன்' ம் இது ஒரு இரத்தினக்கல் வகை எனவும்,அரேபியா புவியியலாளர் அறிக்கை படி இதன் உடல் பண்புகளின் அடிப்படையில் இதில் தெளிவாக கவனிக்கதத்தக்க இரத்தினக்கல்லின் பரவல்பினைப்பு காணப்படுகிறது.

21 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கல்லானது கி.பி 951l மீட்கப்பட்ட பின் அதன் இயல்பு பற்றி குறிப்பிடத்தக்க துப்பு வழங்கப்பட்டது.வரலாற்று பதிவாளரின் கருத்துப்படி இக்கல் நீரில் மிதக்கக்கூடிய திறன் கொண்டது இக்கணக்கு துல்லியமாக இருந்தால் இக்கல்லானது இரத்தினக்கல், எரிமலை கருங்கல், விண்கல் ஆக இருக்க முடியாது எனினும் கண்ணாடி அல்லது படிக்கல்லாக இருக்க வாய்ப்புள்ளது.

கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த எல்சபத் தொம்சன் என்பவரின் கருத்து என்னவெனில் 1980ல் கருப்புக்கல் ஆனது வாபர் மணிக்கு சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் விழுந்தததாகும் என்றும் விண்கல்லின் தாக்கத்தினால் துண்டு துண்டாக ஆக்கப்பட்ட கண்ணாடி துண்டு அல்லது imactite ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மக்காவின் அல்-காலி பாலைவனத்தில் 1100 கிலோமீட்டர் மக்காவின் கிழக்கில் வாபர் மணிக்கு கிறேட்டரினரின் சிலிக்கா கண்ணாடி தொகுதிகள் முன்னிலையில் வெப்பத்தின் தாக்கத்தினால் விண்கல்லில் இருந்து நிக்கல்-இரும்பு கலவை மணிகள் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. கண்ணாடி தொகுதிகள் நீரில் தேக்க விடப்பட்டு மஞ்சள் அல்லது வெள்ளை உள்துறை மற்றும் எரிவாயு நிரப்பபட்ட்ட ஹொல்லொவ் என்பவற்றால் பள பளப்பான கருபுக்கன்னடி உருவாக்கப்படுகிறது. என்றாலும் 1932 வரை விஞ்ஞானிகள் வாபர் பள்ளம் பற்றி அறிந்து இருக்கவில்லை இது ஒமானிலிருந்து ஒரு சாத்து வழி அருகே அமைந்து உள்ள பாலைவனத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இது நிச்சயமாக நன்கு அறியப்பட்ட பரந்த பகுதியில் இருந்தது; பழங்காலத்து கவிஞர் வாபர் அல்லது உபர் (கோபங்களின் தூண்கள்)கூறினார் ஒரு அற்புதமான நகரம் அந்த நகரின் தீய அரசர் இருப்பதால் வானிலிருந்து தீ வெஇத்து அந்நகரம் தீ வைத்து அழிக்கப்பட்டது. அப்பள்ளத்தின் வயது மதிப்பிடப்பட்டது துல்லியமாக இருந்தால் அது அரேபியாவில் மனித வாழ்விற்குரிய காலமாகும் மற்றும் அங்கு மோதலும் ஏற்பட்டிருக்கும். நவீன விஞ்ஞானிகள் (2004) வாபர் பகுதியை அறைந்து இவ்வாறு கூறினர் முதல் சிந்தனையை விட இந்த மோதல் நிகழ்வு மிகவும் சமீபத்தில் 200-300 ஆண்டுகளுக்குள் நடந்துள்ளது.

இது ஒரு போலி விண்கல் எனவும் இன்னும் ஒரு வார்த்தையில் பூமிக்குரிய கல் தவறுதலாக ஒரு விண்கல்லின் பண்புகளை கொண்டுள்ளது எனவும் பிரிட்டிஷை சேர்ந்த இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பரிந்துரைத்தது.

குறிப்புகள்

  1. Sheikh Safi-ur-Rehman al-Mubarkpuri (2002). Ar-Raheeq Al-Makhtum (The Sealed Nectar): Biography of the Prophet. Dar-us-Salam Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59144-071-8. 
  2. 2.0 2.1 2.2 Burke, John G. (1991). Cosmic Debris: Meteorites in History. University of California Press. பக். 221–223. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-07396-8. 
  3. Elliott, Jeri (1992). Your Door to Arabia. Lower Hutt, N.Z.: R. Eberhardt. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-473-01546-3. 
  4. Mohamed, Mamdouh N. (1996). Hajj to Umrah: From A to Z. Amana Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-915957-54-X. 

சான்றாதாரங்கள்

  • Grunebaum, G. E. von (1970). Classical Islam: A History 600 A.D.–1258 A.D.. Aldine Publishing Company. ISBN 978-0-202-15016-1
  • Sheikh Safi-ur-Rahman al-Mubarkpuri (2002). Ar-Raheeq Al-Makhtum (The Sealed Nectar): Biography of the Prophet. Dar-us-Salam Publications. ISBN 1-59144-071-8.
  • Elliott, Jeri (1992). Your Door to Arabia. ISBN 0-473-01546-3.
  • Mohamed, Mamdouh N. (1996). Hajj to Umrah: From A to Z. Amana Publications. ISBN 0-915957-54-X.
  • Time-Life Books (1988). Time Frame AD 600–800: The March of Islam, ISBN 0-8094-6420-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்புக்_கல்&oldid=2571900" இலிருந்து மீள்விக்கப்பட்டது