ஆலத்தூர் கிழார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Nan பக்கம் ஆலத்தூர்க்கிழார் என்பதை ஆலத்தூர் கிழார் என்பதற்கு நகர்த்தினார்
(வேறுபாடு ஏதுமில்லை)

05:25, 7 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

ஆலத்தூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் ஏழு இடம்பெற்றுள்ளன. அவற்றில் இவர் சோழ அரசர்கள் மூவரைக் குறிப்பிட்டுள்ளார்.

சேட்சென்னி நலங்கிள்ளி,
சோழன் நலங்கிள்ளி,
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
ஆகியோர் அந்த அரசர்கள்.

இவர் ஆலத்தூர் என்னும் ஊரிலிருந்த வேளாளார் போலும். இவர் கடைச் சங்கத்தவர். இவர் சோழன் நலங்கிள்ளியின் படைப்பெருக்கினைக் காண்கையில் படைசெல்லும் வழியிலுள்ள பனை மரங்களின் நுங்குகளைத் தலைப்படையும், பழங்களை இடைப்படைகளும், அப்பழங்களின் கொட்டைகளாலாகிய கிழங்குகளைக் கடைப்படைகளும் நுகர்ந்து சென்றன எனத்தமிழரசன் படைமிகுதி கூறினார். “தலையோர் நுங்கின தீஞ்சாறு மிசைய, இடையோர் பழத்தின்பைங்கனிமாந்தக், கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர”(புறம்-312) எனக் கூறினார்.[1]

ஆலத்தூர் கிழார் பாடல்கள்

குறுந்தொகை 112, 350
புறநானூறு 34[2], 36[3], 69[4], 225, 324

  1. ஆ.சிங்காரவேலுமுதலியார், அபிதான சிந்தாமணி, தமிழ்க் களஞ்சியம், சீதை பதிப்பகம், முதற் பதிப்பு- டிசம்பர் 2004. பக்கம்- 169
  2. ஆலத்தூர் கிழார் பாடல் புறநானூறு 34
  3. ஆலத்தூர் கிழார் பாடல் புறநானூறு 36
  4. ஆலத்தூர் கிழார் பாடல் புறநானூறு 69
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலத்தூர்_கிழார்&oldid=2560440" இலிருந்து மீள்விக்கப்பட்டது