புது பாபிலோனியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 35: வரிசை 35:

[[File:Fotothek df ps 0002470 Innenräume ^ Ausstellungsgebäude.jpg|thumb|right|220px|பாபிலோனின் இஷ்தர் கோயிலின் நுழைவவாயில், சீரமைத்து [[பெர்லின்]] பெர்காமோன் அருங்காட்சியகத்தில் உள்ளது]]
[[File:Fotothek df ps 0002470 Innenräume ^ Ausstellungsgebäude.jpg|thumb|right|220px|பாபிலோனின் இஷ்தர் கோயிலின் நுழைவவாயில், சீரமைத்து [[பெர்லின்]] பெர்காமோன் அருங்காட்சியகத்தில் உள்ளது]]

[[File:Nebukadnessar II.jpg|right|thumb|200px| [[இரண்டாம் நெபுகாத்நேசர்]] உருவம் பொறித்த கருங்கல் சிற்பத்தின் பிரதி]]
[[File:Nebukadnessar II.jpg|right|thumb|200px| [[இரண்டாம் நெபுகாத்நேசர்]] உருவம் பொறித்த கருங்கல் சிற்பத்தின் பிரதி]]

[[File:Fotothek df ps 0002472 Innenräume ^ Ausstellungsgebäude.jpg| thumb|200px| பாபிலோன் நகரத்தின் சுவரின் பிரதி, பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகம், [[ஜெர்மனி]]]]
[[File:Fotothek df ps 0002472 Innenräume ^ Ausstellungsgebäude.jpg| thumb|200px| பாபிலோன் நகரத்தின் சுவரின் பிரதி, பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகம், [[ஜெர்மனி]]]]

[[File:Ogrody semiramidy.jpg|thumb|left| புது பாலோனியப் பேரரசர் [[இரண்டாம் நெபுகாத்நேசர்]] நிறுவிய [[பாபிலோனின் தொங்கு தோட்டம்]]]]
[[File:Ogrody semiramidy.jpg|thumb|left| புது பாலோனியப் பேரரசர் [[இரண்டாம் நெபுகாத்நேசர்]] நிறுவிய [[பாபிலோனின் தொங்கு தோட்டம்]]]]

[[File:Cylinder Nabonidus BM WA91128.jpg|thumb|left|கிமு 555 - 539 காலத்திய [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]] நகரத்தின் சந்திரக் கடவுள் கோயில் சீரமைத்ததை [[ஆப்பெழுத்து]]களில் எழுதப்பட்ட உருளை வடிவ சுடுமட் பாண்டம்]]

'''புது பாபிலோனியப் பேரரசு''' ('''Neo-Babylonian Empire''') ('''இரண்டாம் பாபிலோனியப் பேரரசு''') என்றும் அழைப்பர்), [[மெசொப்பொத்தேமியா]]வை மையமாகக் கொண்டு கிமு 626 முதல் 539 முடிய<ref>Talley Ornan, ''The Triumph of the Symbol: Pictorial Representation of Deities in Mesopotamia and the Biblical Image Ban'' (Göttingen: Academic Press Fribourg, 2005), 4 n. 6</ref> 87 ஆண்டுகள், தற்கால [[ஈராக்]], [[சிரியா]], [[துருக்கி]] போன்ற வளமான பிரதேசங்களை ஆட்சி செய்த [[பாபிலோன்|பாபிலோனின்]] 11வது வம்சத்தினரான [[சாலடிய நாகரிகம்|சால்டியர்கள்]] ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர் [[பாபிலோனின் தொங்கு தோட்டம்|பாபிலோனின் தொங்கு தோட்டத்தை]] அமைத்த [[இரண்டாம் நெபுகாத்நேசர்]] ஆவார்.

12:16, 30 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

புது பாபிலோனியப் பேரரசு
கிமு 626–கிமு 539
புது பாபிலோனியப் பேரரசு உச்சத்தில் இருந்த போது அதன் பரப்பளவு
புது பாபிலோனியப் பேரரசு உச்சத்தில் இருந்த போது அதன் பரப்பளவு
தலைநகரம்பாபிலோன்
பேசப்படும் மொழிகள்அக்காதியம், அரமேயம்
சமயம்
மெசொப்பொத்தேமியா சமயங்கள்
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
• கிமு 626–605
நபோபோலசர் (முதல்)
• கிமு 556–539
நபோனிடஸ் (இறுதி)
வரலாறு 
• பாபிலோனியக் கிளர்ச்சி (கிமு 626)
கிமு 626
• ஓபிஸ் போர்
கிமு 539
முந்தையது
பின்னையது
புது அசிரியப் பேரரசு
அகமானிசியப் பேரரசு
தற்போதைய பகுதிகள் ஈராக்
 குவைத்
 சிரியா
 துருக்கி
 எகிப்து
 பலத்தீன்
 சவூதி அரேபியா
 யோர்தான்
 லெபனான்
 இசுரேல்
 சைப்பிரசு
பாபிலோனின் இஷ்தர் கோயிலின் நுழைவவாயில், சீரமைத்து பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகத்தில் உள்ளது
இரண்டாம் நெபுகாத்நேசர் உருவம் பொறித்த கருங்கல் சிற்பத்தின் பிரதி
பாபிலோன் நகரத்தின் சுவரின் பிரதி, பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகம், ஜெர்மனி
புது பாலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் நிறுவிய பாபிலோனின் தொங்கு தோட்டம்
கிமு 555 - 539 காலத்திய ஊர் நகரத்தின் சந்திரக் கடவுள் கோயில் சீரமைத்ததை ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட உருளை வடிவ சுடுமட் பாண்டம்

புது பாபிலோனியப் பேரரசு (Neo-Babylonian Empire) (இரண்டாம் பாபிலோனியப் பேரரசு) என்றும் அழைப்பர்), மெசொப்பொத்தேமியாவை மையமாகக் கொண்டு கிமு 626 முதல் 539 முடிய[1] 87 ஆண்டுகள், தற்கால ஈராக், சிரியா, துருக்கி போன்ற வளமான பிரதேசங்களை ஆட்சி செய்த பாபிலோனின் 11வது வம்சத்தினரான சால்டியர்கள் ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர் பாபிலோனின் தொங்கு தோட்டத்தை அமைத்த இரண்டாம் நெபுகாத்நேசர் ஆவார்.

புது பாபிலோனிய வம்சத்தவர்களுக்கு முன்னர் பாபிலோனை அக்காதியம் மற்றும் அசிரிய மக்கள் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். புது அசிரியப் பேரரசர் அசூர்-பனிபால் கிமு 627ல் இறந்த ஒராண்டு கழித்து கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பாபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே[2] நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார்.

முதலாம் பாபிலோனியப் பேரரசர் அம்முராபி கிமு 18ம் நூற்றாண்டின் நடுவில் இறந்த பிறகு, பாபிலோன் நகரம் மீண்டும் கிமு 626ல் பாபிலோனியர்களின் தலைநகரமாயிற்று. கிமு 539ல் அகாமனிசியப் பேரரசர் சைரசு புது பாபிலோனியப் பேரரசை கைப்பற்றி அகாமனிசியப் பேரரசில் இணைத்தார்.

வரலாறு

பழைய அசிரியப் பேரரசு (கிமு 1365–1020) மற்றும் புது அசிரியப் பேரரசு (கிமு 911–626) காலத்திலும் தொடர்ந்து அசிரியர்களின் ஆட்சியின் கீழ் பாபிலோனிய நாடு இருந்ததது. புது அசிரியப் பேரரசில் கிமு 626ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பின், பாபிலோனில் வாழ்ந்த சால்டியர்கள் பபிலோனியாவைக் கைப்பற்றி ஆண்டனர். பின்னர் தற்கால வடக்கு ஈராக், குவைத், சிரியா, துருக்கி போன்ற பிரதேசங்களை கைப்பற்றி 87 ஆண்டுகள் ஆண்டனர்.

பழைய மரபுகளின் மறுமலர்ச்சி

புது பாபிலோனியப் பேரரசில் கிமு 639 முதல் பபிலோனியா தன்னாட்சியுடன் ஆண்ட போது, சுமேரிய-அக்காடிய பண்பாட்டுகளின் படி கோயில்களை கட்டினர். அரமேயம் மொழி மக்களின் பேச்சு மொழியானது. அக்காதியம் ஆட்சி மொழியானது. அக்காடியர்களின் ஆப்பெழுத்து முறை சீரமைக்கப்பட்டடது. அக்காடிய வழக்கப்படி, அரசகுடும்பப் பெண் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டார்.

பண்பாட்டு மற்றும் பொருளாதார வாழ்க்கை

மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த புதுப் பாபிலோனியப் பேரரசில் யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் பாய்வதால், வேளாண்மைத் தொழில் செழித்தது. வேளாண் நிலங்களுக்கு ஆற்று நீர் பாய்வதற்கு வசதியாக கால்வாய்கள், வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் அமைத்தனர். பாபிலோனியர்களின் நகரங்களான பாபிலோன் மற்றும் நினிவே தன்னாட்சியுடன் நிர்வகிக்கப்பட்டது. கோயிலை மையப்படுத்தி நகரங்கள் இருந்தது. நீதிமன்றங்களில் வழக்குகள் உடனடியாக விசாரித்து தீர்ப்புகள் அறிவித்தனர்.

புது பாபிலோனியப் பேரரசர்கள்

புது பாபிலோனியப் பேரரசர்கள் (பாபிலோனின் 11வது சால்டிய வம்சத்தினர்)

  • நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர் - கிமு 626–605
  • இரண்டாம் நெபுகாத்நேசர் - கிமு 605–562
  • அமேல்-மருதுக் - கிமு 562–560 -
  • நெரிக்லிசர் - கிமு 560–556 -
  • லபாசி-மரதுக் அ -கிமு 556
  • நபோனிடஸ் - கிமு 556–539

பாபிலோனியாவின் வீழ்ச்சி

87 ஆண்டுகள் ஆண்ட புது பாபிலோனியப் பேரரசை, கிமு 539ல் ஓபிஸ் போரில் அகாமனிசியப் பேரரசர் சைரசு கைப்பற்றி தனது பேரரசில் இணைத்துக் கொண்டார். அகாமனிசியப் பேரரசில் புது பாபிலோனியப் பேரரசும், அசிரியப் பேரரசும் சிற்றரசுகளாக விளங்கியது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Talley Ornan, The Triumph of the Symbol: Pictorial Representation of Deities in Mesopotamia and the Biblical Image Ban (Göttingen: Academic Press Fribourg, 2005), 4 n. 6
  2. A Companion to Assyria : page 192
"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_பாபிலோனியப்_பேரரசு&oldid=2557799" இலிருந்து மீள்விக்கப்பட்டது