புவி மணிநேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44: வரிசை 44:
[[படிமம்:Earth-Hour-Logo.jpg|thumb|200px|left|புவி மணிக்கான சின்னம்]]
[[படிமம்:Earth-Hour-Logo.jpg|thumb|200px|left|புவி மணிக்கான சின்னம்]]
[[படிமம்:Sydney Harbour Bridge and Opera House Earth Hour.jpg|thumb|300px|[[சிட்னி துறைமுகப் பாலம்]] மற்றும் [[ஓப்பரா மாளிகை]] ஆகியன 2007 புவி மணி அன்று இருளில் மூழ்கின.]]
[[படிமம்:Sydney Harbour Bridge and Opera House Earth Hour.jpg|thumb|300px|[[சிட்னி துறைமுகப் பாலம்]] மற்றும் [[ஓப்பரா மாளிகை]] ஆகியன 2007 புவி மணி அன்று இருளில் மூழ்கின.]]
'''புவி மணி''' (''Earth Hour'') என்பது, [[வீடு]]களிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள [[மின் விளக்கு]]களையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும்.
'''புவி மணி''' (''Earth Hour'') என்பது, [[வீடு]]களிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள [[மின் விளக்கு]]களையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும்.

இந்த 2018 ஆம் ஆண்டின் புவி மணி மார்ச்சு 24இல் இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் கடைபிடிக்கப்பட்டது.


==வரலாறு==
==வரலாறு==

11:55, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம்

|holiday_name = புவி மணி நேரம்

|type =

|image = Earth Hour 60+ Logo.jpg

|imagesize =

|caption =

|official_name =

|nickname =

|observedby =

|litcolor =

|longtype =

|significance =

|begins =

|ends =

|date = 24 மார்ச்சு 2018, இரவு 8:30 இல் இருந்து இரவு 9:30 வரை.

|scheduling =

|duration =

|frequency =

|celebrations =

|observances =

|relatedto =

}}


புவி மணிக்கான சின்னம்
சிட்னி துறைமுகப் பாலம் மற்றும் ஓப்பரா மாளிகை ஆகியன 2007 புவி மணி அன்று இருளில் மூழ்கின.

புவி மணி (Earth Hour) என்பது, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும்.

இந்த 2018 ஆம் ஆண்டின் புவி மணி மார்ச்சு 24இல் இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் கடைபிடிக்கப்பட்டது.

வரலாறு

இந்நிகழ்வு ஆஸ்திரேலியாவின் உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது. முதலாவது புவி மணி நிகழ்வு 2007 மார்ச் 31 ஆம் தேதி 7:30 க்கும், 8:30 க்கும் இடையில், சிட்னியில் இடம்பெற்றது. 2.2 மில்லியன் மக்கள் பங்குபற்றிய இந்த முதல் நிகழ்வின்போது ஆஸ்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவினால் குறைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

2008ஆம் ஆண்டு

உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி மார்ச்சு 29ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு (பிற்பகல் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையிலான காலப்பகுதி) விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. இது மின் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிப்பதையும், கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ஒளிசார் மாசடைதலைக் குறைப்பதற்கும் இது உதவக்கூடும். 2008 ஆம் ஆண்டின் புவி மணி, ஐக்கிய அமெரிக்காவில் தேசிய இருள் வான் வாரத்தின் தொடக்கத்துடன் பொருந்தி வந்தது. புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓப்பரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.

பங்கேற்கும் நாடுகள் மற்றும் ஆட்சியிடங்கள்

ஆப்பிரிக்கா

ஆசியா

ஐரோப்பா

வட அமெரிக்கா

ஓசியானியா
தென் அமெரிக்கா

2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வு

புவி மணிநேர நிகழ்வு 2013, மார்ச்சு 23, சனிக்கிழமை இரவு 8:30 மணியிலிருந்து 9:30 மணிவரை உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.[1] 2013இல் மார்ச்சு மாதத்தின் கடைசி சனிக்கிழமை "புனித சனி" என்று கிறித்தவர்களால் அனுசரிக்கப்படுவதால் ஒருவாரம் முன்னதாக புவி மணிநேரம் கடைப்பிடிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு புவி மணிநேர நிகழ்வின் சில சிறப்புக் கூறுகள் இவை:

  • உகாண்டா நாட்டில் ஒவ்வொரு மாதமும் 6000 எக்டேர் காடுகள் அழிந்துவருகின்றன. இந்த அழிவைத் தடுக்க முதல் முயற்சியாக புவி மணிநேரம் உகாண்டாவில் நிகழ்ந்தது. சீரழிந்துள்ள சுமார் 2700 எக்டேர் நிலங்களில் தனிமனிதர், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் 2013ஆம் ஆண்டில் குறைந்தது 500,000 மரங்கள் நட வேண்டும் என்று உகாண்டா இயற்கைக்கான உலகளாவிய நிதியம் திட்டம் வகுத்துச் செயல்படுத்தத் தொடங்கியது. "நீ செய்தால் நானும் செய்வேன்" (I will if you will) என்னும் விருதுவாக்கு இதற்கு செயலூக்கம் அளித்தது. ஓர் உகாண்டா வங்கி 250,000 மரங்கள் நடுவதாக உறுதியளித்தது.[2]
  • போட்சுவானா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபெஸ்டல் மோகே (Festus Mogae) என்பவர் நான்கு ஆண்டுக் காலத்தில் ஒரு மில்லியன் மரங்கள் நடப்போவதாக வாக்களித்தார்.[3]
  • "நீ செய்தால் நானும் செய்வேன்" (இந்தோனேசிய மொழியில் Ini Aksiku! Mana Aksimu?) என்னும் விருதுவாக்கைப் பின்பற்றி இந்தோனேசியா டுவிட்டர் ஊடகத்தைப் பயன்படுத்தி மக்கள் புவி மணிநேரத்துக்குப் பிறகும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட ஊக்குவித்தது.
  • சுற்றுச்சூழல் பேணலில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்குவிக்க "நீ செய்தால் நானும் செய்வேன்" பரப்புரை 50 நாடுகளுக்கு மேலாக இதில் பங்கேற்க வழிகோலியது.[4]
  • புவி மணிநேரத்தின் தலைவரும் இணைநிறுவுனருமான ஆண்டி ரிட்லீ (Andy Ridley) என்பவர் பின்வருமாறு கூறினார்:

[5][6][7]

குறிப்புகள்

  1. Malezer, Rosie. "Dare the World to Save the Planet". பார்க்கப்பட்ட நாள் 2012-11-24.
  2. http://www.earthhour.org/uganda2013
  3. http://www.earthhour.org/blog/botswana-plant-one-million-trees-restore-forests
  4. http://www.news24.com/Green/News/Earth-Hour-spreads-20130227
  5. http://earthhour.org/global-launch-2013
  6. இந்தியாவில் புவி மணிநேரம்
  7. படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
புவி மணி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவி_மணிநேரம்&oldid=2525500" இலிருந்து மீள்விக்கப்பட்டது