சவூதி அரேபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: szl:Arabja Saudyjsko
சி தானியங்கி இணைப்பு: hak:Sâ-vû-thi Â-lâ-pak
வரிசை 155: வரிசை 155:
[[gl:Arabia Saudí - العربية السعودية]]
[[gl:Arabia Saudí - العربية السعودية]]
[[gv:Yn Araab Saudi]]
[[gv:Yn Araab Saudi]]
[[hak:Sâ-vû-thi Â-lâ-pak]]
[[haw:Saudi ʻAlapia]]
[[haw:Saudi ʻAlapia]]
[[he:ערב הסעודית]]
[[he:ערב הסעודית]]

19:43, 7 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

சவுதி அரேபிய இராச்சியம்
المملكة العربية السعودية
அல்-மம்லக்கா அல்-அரபிய்யா அஸ்-ஸுவுதிய்யா
கொடி of சவுதி அரேபியா
கொடி
சின்னம் of சவுதி அரேபியா
சின்னம்
குறிக்கோள்: "أشهد أن لا إله إلاَّ الله و أشهد أن محمد رسول ال"
அல்லாஹ் தவிர கடவுள் இல்லை; முகம்மது அவரின் தூதர்
நாட்டுப்பண்: "Aash Al Maleek"
"Long live the King"
சவுதி அரேபியாஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
ரியாத்
ஆட்சி மொழி(கள்)அரபு மொழி
மக்கள்சவுதி, சவுதி அரேபியர்
அரசாங்கம்முழு இராச்சியம்
அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ்
சுல்தான் பின் அப்துல் அசீஸ்
தோற்றம்
• இராச்சியம் கூற்றம்
ஜனவரி 8, 1926
• திட்டப்படம்
மே 20, 1927
• ஒன்றியம்
செப்டம்பர் 23, 1932
பரப்பு
• மொத்தம்
2,149,690 km2 (830,000 sq mi) (14வது)
• நீர் (%)
குறைச்சல்
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
27,601,038[1] (46வது)
• அடர்த்தி
11/km2 (28.5/sq mi) (205வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$446 பில்லியன் (27வது)
• தலைவிகிதம்
$21,200 (41வது)
மமேசு (2004) 0.812
Error: Invalid HDI value · 61
நாணயம்ரியால் (SAR)
நேர வலயம்ஒ.அ.நே+3 (AST)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (இல்லை)
அழைப்புக்குறி966
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSA
இணையக் குறி.sa
  1. Population estimate includes 5,576,076 non-nationals.

சவூதி அரேபியா அல்லது சவூதி அரேபிய இராச்சியம் அரேபியக் குடாநாட்டின் மிகப் பெரிய நாடாகும். வடமேற்கு எல்லையில் யோர்தானும் வடக்கு, வடகிழக்க்கு எல்லைகளில் ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத், கட்டார், பகாரேயின் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும், தென்கிழக்கு எல்லையில் ஓமானும் தெற்கு எல்லையில் யேமனும் அமந்துள்ளது. மீதமுள்ள எல்லைகளாக பாரசீகக் குடா வடகிழக்கிலும் செங்கடல் மேற்கிலும் அமைந்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள இசுலாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல் ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது சிலவேலைகளில் இரண்டுபள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. 1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1932 ஆம் ஆண்டு அப்துல் அசீசு பின் சவூட் தனது மூதாதையரது நகரமான ரியாட்ட்டை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.

சவூதி அரேபியா உலகில் அதிகளவு மசகுஎண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடாகும்[2]. மசகு எண்ணெய் ஏற்றுமதி அந்நாட்டின் 90% பங்கை வகிப்பதோடு அரசின் வருவாயில் 75% இதன் மூலம் பெறப்படுகிறது. இவ்வருவாய் நாட்டின் நலன்புரி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.[3][4] மசகுஎண்ணெயின் விலை குறையும் சந்தர்ப்பங்களில் அரசு இவற்றுக்கு நிதியை வழங்குவதற்கு சிரமப்படுகிறது[5]. மனித உரிமைகள் கண்காணிப்பகம், பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்கள் சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் நிலைப் பற்றி தொடர்ந்து கவலை வெளியிட்டுள்ளன எனினும் சவூதி அரசு இதனை மறுத்து வருகின்றது.

மக்கா, மதீனா, தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான்,தபூக் ஆகியவை சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களாகும்.

வரலாறு

சவூதி அரேபிய மன்னர்கள்

  • மன்னர் அப்துல் அசீசு பின் சவூட்
  • மன்னர் சவூத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூட்டின் மகன்
  • மன்னர் பைசல் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூட்டின் மகன்
  • மன்னர் காலித் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூட்டின் மகன்
  • மன்னர் ஃபஹத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூட்டின் மகன்
  • மன்னர் அப்துல்லா -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூட்டின் மகன்

புவியியல்

சவூதி அரேபியா தோராயமாக அரேபியக் குடாநாட்டின் பரப்பளவில் 80% ஆகும். 2000 ஆம் ஆண்டு யேமனும் சவூதி அரேபியாவும் நீண்டகாலமாக தம்மிடையே காணப்பட்ட எல்லைத் தகராறை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டன[6]. நாட்டின் ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் என்பவற்றுடனான தெற்கு எல்லையில் குறிப்பிடத்தக்க அளவு சரியாக நிர்ணயிக்கப்படாமலும் குறிக்கப்படாமலும் உள்ளது. எனவே சவூதி அரேபியாவின் துல்லியமான பரப்பளவை அறிய முடியாதுள்ளது. சவூதி அரேபிய அரசின் மதிப்பீடு 2,217,949 சதுர கிலோமீட்டர் (856,356 சதுர மைல்) என்பதாகும். ஏனைய குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள் அதன் பரப்பளவை 1,960,582 கிமீ²[7] (756,934 mi²) முதல் 2,240,000 கிமீ² (864,869 மைல்²) வரை வேறுபடுகின்றன. சவூதி அரேபியா பொதுவாக உலகின் 14வது பெரிய நாடாக பட்டியலிடப்படுகிறது.

சவூதி அரேபியாவின் புவியியல் பலதரப்பட்ட வேறுபாடுகளைக் கொண்டது. மேற்குக்கரைப் பகுதியில் (தியாமா) தரை கடல்மட்டத்திலிருந்து மேலெழுந்து சாபல் அல் எயாசு என்ற மலைத் தொடரை ஆக்குகிறது. அதற்கு அப்பால் நசீட் மேட்டுநிலம் அமைந்துள்ளது. தென்மேற்கு அசீர் பகுதி 3000 மீட்டர் (9840 மீட்டர்) வரை உயரமான மலைகளைக் கொண்டுள்ளது. இப்பகுதி சவூதி அரேபியாவிலேயே காணப்படும் பசுமையான தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் உயரமான மலை அதன் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 3,133 மீட்டர் (10,279 அடி) ஜபல்-சவ்தா மலையாகும். கிழக்குப் பகுதி பாறைகளைக் கொண்ட தாழ்நிலப்பகுதியாகும் இது பாரசீகக்குடாவரை தொடர்கிறது. நாட்டின் தென்பகுதி ரப் அல்-காலி என்றழைக்கப்படும் பாலைவனமாகும். இப்பகுதி குடியிருப்புகள், உயிரினங்கள் அற்ற பகுதியாகும்.

சவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், அரை வறண்டப் பகுதிகளுமேயாகும். இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இல்லாதிருப்பதோடு பெதோயின் ஆதிவாசிகள் மாத்திரமே சிறிய எண்ணிக்கைகளில் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதிகளில் பற்றைகளும் புற்களுமே சிறிய அளவுகளில் காணப்படுகின்றன. நாட்டின் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் காணப்படுகிறது. முக்கிய மக்கள் குடியிருப்புகள் கிழக்கு, மேற்குக் கரையோரங்களிலும் பாலைவனப் பசுஞ்சோலைகளை அண்டியும் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவின் தென்பகுதியான ரப் அல்-காலியிலும், அராபிய பாலைவனத்திலும் மசகு எண்ணெய் அகழ்விற்காக குடியமர்த்தப்பட்ட சில குடியேற்றங்கள் தவிர மக்கள்குடியேற்றங்கள் அற்றதாகவே காணப்படுகிறது. சவூதி அரேபியாவில் ஆண்டு முழுவதும் பாயும் ஆறுகளோ அல்லது நீர் நிலைகளோ இல்லை எனினும் அதன் கடற்கரை 2640 கிமீ (1640 மைல்) நீளமானது செங்கடல்பக்கமான கடற்கரையில் முருகைப்பாறைகளைக் காணலாம்.

கலாச்சாரம்

கலாச்சார அரேபிய உடைகள்

ஆண்கள்

  1. தோப் : நன்றாக தாராளமாக வுள்ள, நீண்ட கை களையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. கோடை காலத்தில் வெள்ளை நிறத்தில் காட்டன் துணியிலும், குளிர்காலத் தில் அடர்ந்த நிறத்தில் சற்று தடித்த துணியிலும் (Wool).
  2. தகியா : வெள்ளைத் தொப்பி.
  3. குத்ரா : காட்டன் அல்லது பாலியெஸ்டரினாலான சதுர துண்டுத் துணி. தலையை மறைக்க தொப்பிக்கு மேல் அணியப்படுவது. முகத்தோடு காதுகள் இரண்டையும் சேர்த்துக் கட்டி பாலைவன மணற்காற்றிலிருந்து தற்சாட்துக் கொள்ளவும் பயன்படும்.

அகல் : இரட்டிப்பாக சுற்றப்பட்ட, தடித்த, கறுப்பு நிறத்தில் உள்ள கயிறு. குத்ரா துணி நகராமலிருக்க அதற்கு மேல் அணியப்படும்.

பெண்கள்

  1. தோப் : நன்றாக தாராளமாகவுள்ள, நீண்ட கைகளையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. ஆனால், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் எம்பிராய்டரி மூலம் அழகுபடுத்தப்பட்டிருக்கும்.
  2. அபயா : கறுப்பு நிறத்திலான, நீண்ட, தாராளமாக, உடல் முழுவதும் மறைக்கும்படியாக தைக்கப்பட்ட மேலங்கி. சில்க் அல்லது சிந்தெடிக் துணியாலானதாயிருக்கும்.
  3. போசியா : கறுப்பு நிறத்திலான, லேசாகவுள்ள, கண்ணை மட்டும் விட்டுவிட்டு, முகத்தை மறைக்கும் துணி.

வெளி இணைப்புகள்

  1. CIA - The World Factbook - Saudi Arabia
  2. U.S. Energy Information Administration - Saudi Arabia Country Energy Profile
  3. Social Services 2
  4. Royal Embassy of Saudi Arabia-London: The Kingdom Of Saudi Arabia - A Welfare State
  5. Gulf Daily News
  6. Yemen, Saudi Arabia sign border deal
  7. CIA World Factbook - Rank Order:area_km2
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவூதி_அரேபியா&oldid=250915" இலிருந்து மீள்விக்கப்பட்டது