தமிழ்க்கடவுள் முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox television | show_name = தமிழ்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:19, 28 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

தமிழ்க்கடவுள் முருகன்
தமிழ்தமிழ்க்கடவுள் முருகன்
வகைதமிழ் தொலைக்காட்சி தொடர்கள்

தொன்மவியல்
மூலம்கந்த புராணம்
இயக்கம்தீபக் கார்க் (காண்பியம்)
நிதின் கோபி (அத்தியாயம்)
நடிப்பு
  • சசீந்தர் புஷ்பலிங்கம்
  • பிரியா பிரின்ஸ்
  • அனிருத்
முகப்பு இசைகார்த்திகேய மூர்த்தி
முகப்பிசைகார்த்திகேய மூர்த்தி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்104
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்நிகில் சின்ஹா
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்அத்தியாயம் 1-59
சுமார் 45-50 மணித்துளி
(2.10.2017-22.12.2017)
அத்தியாயம் 60-104
சுமார் 20-22 மணித்துளி
(25.12.2017-2018)
தயாரிப்பு நிறுவனங்கள்ட்ரையாங்கில் படக் கம்பனி
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்2 அக்டோபர் 2017 (2017-10-02) –
23 பெப்ரவரி 2018 (2018-02-23)
Chronology
முன்னர்பிக் பாஸ் தமிழ்
பின்னர்பகல் நிலவு

தமிழ்க்கடவுள் முருகன் 2017-2018 இடைப்பட்ட காலத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது சைவக்கடவுளானமுருகனின் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டதாக ஒளிபரப்பானது.[1][2][3][4] நந்தினி தொலைக்காட்சித் தொடருக்குப் பின் தமிழில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடராக தமிழ்க்கடவுள் முருகன் இடம் பிடித்திருக்கிறது.[5] கடந்த ஒக்டோபர் 2, 2017 இலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு இந்திய நேரம் 21:00 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகி வந்தது. ()[6][7] விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற பிக் பாஸ் தமிழ் மெய்மக் காண்பியத்தை பிரதியீடு செய்த தமிழ்க்கடவுள் முருகன் தொடர், 29 ஜனவரி 2018 முதல் ஒளிபரப்பு நேரத்தை, திங்கள் முதல் வெள்ளி வரை, இந்திய நேரம் 18:00 ஆக மாற்றிக்கொண்டது. 23 பிப்ரவரி 2018இல் இதன் முதலாம் பருவம் முடிவடைந்துள்ளதுடன், விரைவில் அதன் இரண்டாம் பருவம் ஆரம்பமாகும்.


தொடர்

முருகன் இளைஞனாகத் தோற்றமளிக்கும் இத்தொடரின் முன்னோட்டமொன்று, 26 யூன் 2017 அன்று, விஜய் தொலைக்காட்சியால் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.[8] சிவன் தோன்றும் இரண்டாவது முன்னோட்டம் 5 செப்டம்பர் 2017 அன்றும், இளம் முருகன் தோன்றும் மூன்றாவது முன்னோட்டம், 11 செப்டம்பர் 2017 அன்றும், இன்னொரு முன்னோட்டம் 15 செப்டம்பர் 2017அன்றும் யூடியூப்பில் தொடர்ந்து வெளியிடப்பட்டன.


விஜய் தொலைக்காட்சியில் 2 அக்டோபர் 2017 அன்று முதல் இத்தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 மணிக்கு ஒருமணி நேரத்தொடராக இது ஒளீபரப்பானது. 25 டிசம்பர் 2017இல் அதன் நேர அளவு அரைமணி நேரமாகக் குறைக்கப்பட்டதுடன், அதன் மீதிப் பாதி நேரத்தில் "நினைக்கத் தெரிந்த மனமே" எனும் புதிய தொடரொன்று பிரதியிடப்பட்டது. 29 ஜனவரி 2018இல் நேயர் விருப்பப்படி, தமிழ்க்கடவுள் முருகன் தொடர், திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு மாற்றப்பட்டது. கல்யாணமாம் கல்யாணம் எனும் புதிய தொடர், அதற்குப் பதிலாக 9 மணிக்கு ஒளிபரப்பப்பட ஆரம்பித்தது. தற்போது முதல் பருவம் முடிவடைந்துள்ளதை அடுத்து, 6 மணிக்கு பகல் நிலவு எனும் தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது.

கதைச்சுருக்கம்

சூரபதுமன், தாருகன், சிங்கமுகன் ஆகியோர் தேவர்களை வதைப்பது. தேவர்களின் வேண்டுகோளை அடுத்து சிவன் முருகனைத் தோற்றுவிப்பது. அவரை அக்கினி தேவனும், வாயு தேவனும் கங்கையில் சேர்ப்பது, கங்கை அதைச் சரவணப்பொய்கையில் சேர்ப்பது, அதைக் கார்த்திகைப் பெண்கள் வளர்ப்பது, தன் மூலம் முருகன் பிறக்கவில்லை என்பதால் கோபமுற்று உமை தேவர்களையும் அவர்களது தேவியரையும் சபிப்பது, பின் முருகன் கார்த்திகைப் பெண்களிடம் பல கலைகள் கற்று வாழ்வது என்று கந்தபுராணத்தைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. பார்வதி மகிஷனை அழிப்பது, பிரமனை முருகன் சிறைவைப்பது முதலான உபகதைகளுடன் இத்தொடரின் முதற்பருவம் நிறைவுற்றது. எனினும் இத்தொடரில் சித்தரிக்கப்பட்டது போல, சூரபதுமன் முருகனை அழிக்க முயல்வதோ, பார்வதிக்குத் தெரியாமல் முருகன் அவதரிப்பதோ, திருமால், இயமன் போன்றோர் மாறுவேடத்தில் வந்து முருகனுக்குக் ஆயுதப்பயிற்சி அளிப்பதோ, மூல கந்தபுராணத்தில் இல்லை.[9]

நடிகர்கள்

ஒளிபரப்புகள்

ஏஷ்யாநெட் தொலைக்காட்சியில் மலையாளத்தில் மொழிமாற்றப்பட்டு, 23 அக்டோபர் 2017 இலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மாலை ஆறு மணிக்கு, இத்தொடர் "ஸ்ரீமுருகன்" என்ற பெயரில் ஒளிபரப்பாகின்றது.[11] மா தொலைக்காட்சியில் தெலுங்கில் மொழிமாற்றப்பட்டு, 12 பிப்ரவரி 2018இலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ சுப்ரமணிய சரிதம் என்ற பெயரில் ஒளிபரப்பாகின்றது.[12]

2 அக்டோபர் 2017 முதல் விஜய் தொலைக்காட்சியிலும் அதன் உயர்தர எச்.டி அலைவரிசையிலும் ஒளிபரப்பாகின்றது. இலங்கை, சிங்கப்பூர், வியட்நாம், யப்பான், ஆங்காங்,மெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, மொரிசியசு,தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விஜய் தொலைக்காட்சியின் சர்வதேச ஒளிபரப்பில் இத்தொடர் ஒளிபரப்பப்பட்டது. கனடாவில் விஜய் தொலைக்காட்சி கனேடியத் தமிழர் மைய அலைவரிசையான ஆசியன் தொலைக்காட்சி வலையமைப்பில் கனடிய நேரம் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பானது.

பருவ விவரங்கள்

பருவம் அத்தியாயம் ஒளிபரப்பானது நேரம்
முதல் ிறுதி
1 104 2 அக்டோபர் 2017 (2017-10-02) 23 பெப்ரவரி 2018 (2018-02-23) திங்கள் முதல் வெள்ளி
21:00 (இந்திய சீர் நேரம்)
18:00 (இந்திய சீர் நேரம்
2 அக்டோபர் 2018 (2018-10) 2019 (2019) திங்கள் முதல் வெள்ளி
விரைவில்
ஒளிபரப்பு நாள் நேரம் அத்தியாயம் பருவம்
2 அக்டோபர் 2017 (2017-10-02) - 26 சனவரி 2018 (2018-01-26) திங்கள் முதல் வெள்ளி
இரவு 9:00
1-83
பருவம் 1
29 சனவரி 2018 (2018-01-29) - 23 பெப்ரவரி 2018 (2018-02-23) திங்கள் முதல் வெள்ளி
மாலை 6:00
84-104

உசாத்துணைகள்

  1. "Vijay TV to launch 'Tamil Kadavul Murugan' from 2 October 2017" (in ta). cinema.dinamalar.com. http://cinema.dinamalar.com/tamil-tv-serials/60662/Chinna-thirai-Television-News/Devotional-mega-serial-in-vijay-tv-titled-as-tamil-kadavul-murugan.htm. 
  2. "Thamizh kadavul murugan mega television serial coming soon on vijay tv" (in en). www.tholaikatchi.in. https://www.tholaikatchi.in/thamizh-kadavul-murugan-vijay-tv/. 
  3. "Thamizh kadavul murugan mega television serial on Vijay TV" (in en). www.tholaikatchi.in. https://www.tholaikatchi.in/tamil-kadavul-murukan-serial/. 
  4. "The many tales of Lord Muruga" (in en). timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/tv/news/tam. 
  5. "பிரமாண்டமான பொருள் செலவில் தயாராகும் தமிழ் கடவுள் முருகன் தொடர்" (in ta). cinema.dinamalar.com. http://cinema.dinamalar.com/tamil-news/62572/cinema/Kollywood/Tamil-Kadavul-Murugan-serial-making-in-Mumbai-with-big-set.htm. 
  6. "Tamil Kadavul Murugan to be aired from October 2." (in en). timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/tamil-kadavul-murugan-to-be-aired-from-october-2-/articleshow/60824773.cms. 
  7. "விஜய் தொலைக்காட்ச்சியில் பிரமாண்டமான தொடர் தமிழ் கடவுள் முருகன்" (in en). cinema.dinamalar.com. http://cinema.dinamalar.com/tamil-tv-serials/63229/Chinna-thirai-Television-News/Murugan-serial-begins-in-Vijay-television.htm. 
  8. "தமிழ்க்கடவுள் முருகன் - விரைவில்..." Youtube Vijay TV. பார்க்கப்பட்ட நாள் 2017-07-26. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  9. கந்தபுராணம் கதை வடிவில்
  10. "Anirudha Playing the role of divine Lord Muruga in Vijay TV latest Serial Tamil Kadavul Murugan" (in en). www.tholaikatchi.in. https://www.tholaikatchi.in/anirudha-tamil-kadavul-murugan/. 
  11. "Sree murugan serial asianet starting on 23rd october 2017 at 6.30 P.M" (in en). www.keralatv.in. https://www.keralatv.in/2017/10/sree-murugan-serial-asianet/. 
  12. "Mythological show 'Sri Subramanya Charitham' gets a release date" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/telugu/mythological-show-sri-subramanya-charitham-gets-a-release-date/articleshow/62803509.cms. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்க்கடவுள்_முருகன்&oldid=2503387" இலிருந்து மீள்விக்கப்பட்டது