போலந்துக் கொடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''போலந்துக் கொடி''' சமமான அகலம் கொண்ட இரண்டு கிடைப் பட்டைகளைக் கொண்டது. மேலுள்ள பட்டை [[வெள்ளை]] நிறமானது, கீழுள்ளது [[சிவப்பு]] நிறமானது. இவ்விரு நிறங்களும் [[போலந்து|போலந்தின்]] அரசியல் சட்டத்தில் தேசிய நிறங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
'''போலந்துக் கொடி''' சமமான அகலம் கொண்ட இரண்டு கிடைப் பட்டைகளைக் கொண்டது. மேலுள்ள பட்டை [[வெள்ளை]] நிறமானது, கீழுள்ளது [[சிவப்பு]] நிறமானது. இவ்விரு நிறங்களும் [[போலந்து|போலந்தின்]] அரசியல் சட்டத்தில் தேசிய நிறங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. இக்கொடியின் ஒரு வேறுபாடாக, வெள்ளைப் பட்டையின் நடுவில் தேசிய மரபுச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி வெளிநாடுகளிலும், கடலிலும் பயன்படுத்துவதற்கு சட்டப்படி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு முனையில் கவைவால் வடிவம் கொண்ட இதே போன்ற கொடி போலந்தின் கடற்படைக் கொடியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

1831 ஆம் ஆண்டில் வெள்ளையும், சிவப்பும் தேசிய நிறங்களாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிறங்கள் "போலிய-லித்துவேனியப் பொதுநலவாயத்தின்" உறுப்பு நாடுகள் இரண்டினதும் மரபுச் சின்னங்களில் இருந்து பெறப்பட்டவை. போலந்தின் மரபுச் சின்னத்தில் சிவப்பு நிறக் கேடயத்தில் வெள்ளை நிறப் போலந்துக் கழுகுச் சின்னமும், லித்துவேனியாவின் மரபுச் சின்னத்தில் சிவப்பு நிறக் கேடயத்தில் வெள்ளை நிறத்தில் பிரபு ஒருவர் குதிரையில் சவாரி செய்யும் தோற்றமும் இருந்தன. 1919 இல் போலந்தின் தேசியக் கொடி அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2004 ஆம் ஆண்டிலிருந்து போலந்தின் கொடிநாள் மே 2 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம், சனாதிபதி மாளிகை போன்ற உயர் அதிகாரம் கொண்ட கட்டிடங்களில் தேசியக் கொடி தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படுகிறது. பிற நிறுவனங்களும், பல போலந்து மக்களும் தேசிய விடுமுறை நாட்களிலும், பிற தேசிய முக்கியத்துவம் கொண்ட நாட்களிலும் தேசியக் கொடியைப் பறக்க விடுகின்றனர். அவமதிப்புக்கு உள்ளாக்காதவரை மரபுச் சின்னம் பொறிக்கப்படாத தேசியக் கொடியைப் பயன்படுத்துவதைத் தற்போதைய போலந்தின் அரசியல் சட்டம் தடை செய்யவில்லை.

கிடையாக வெள்ளை, சிவப்பு நிறங்களைக் கொண்ட வடிவமைப்பு ஒப்பீட்டளவில் பரவலாகக் காணப்படுகின்றது. போலந்தோடு தொடர்பில்லாத பல கொடிகள் இதை ஒத்ததாகக் காணப்படுகின்றன. இந்தோனேசியா, மொனாக்கோ ஆகிய நாடுகள் மேலே சிவப்பு நிறத்தையும், கீழே வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளன. போலந்திலும் தேசிய வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட பல கொடிகள் தேசிய நிறங்களைக் கொண்டுள்ளன.

[[பகுப்பு:தேசியக் கொடிகள்]]
[[பகுப்பு:தேசியக் கொடிகள்]]

11:11, 27 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

போலந்துக் கொடி சமமான அகலம் கொண்ட இரண்டு கிடைப் பட்டைகளைக் கொண்டது. மேலுள்ள பட்டை வெள்ளை நிறமானது, கீழுள்ளது சிவப்பு நிறமானது. இவ்விரு நிறங்களும் போலந்தின் அரசியல் சட்டத்தில் தேசிய நிறங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. இக்கொடியின் ஒரு வேறுபாடாக, வெள்ளைப் பட்டையின் நடுவில் தேசிய மரபுச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி வெளிநாடுகளிலும், கடலிலும் பயன்படுத்துவதற்கு சட்டப்படி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு முனையில் கவைவால் வடிவம் கொண்ட இதே போன்ற கொடி போலந்தின் கடற்படைக் கொடியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

1831 ஆம் ஆண்டில் வெள்ளையும், சிவப்பும் தேசிய நிறங்களாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிறங்கள் "போலிய-லித்துவேனியப் பொதுநலவாயத்தின்" உறுப்பு நாடுகள் இரண்டினதும் மரபுச் சின்னங்களில் இருந்து பெறப்பட்டவை. போலந்தின் மரபுச் சின்னத்தில் சிவப்பு நிறக் கேடயத்தில் வெள்ளை நிறப் போலந்துக் கழுகுச் சின்னமும், லித்துவேனியாவின் மரபுச் சின்னத்தில் சிவப்பு நிறக் கேடயத்தில் வெள்ளை நிறத்தில் பிரபு ஒருவர் குதிரையில் சவாரி செய்யும் தோற்றமும் இருந்தன. 1919 இல் போலந்தின் தேசியக் கொடி அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2004 ஆம் ஆண்டிலிருந்து போலந்தின் கொடிநாள் மே 2 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம், சனாதிபதி மாளிகை போன்ற உயர் அதிகாரம் கொண்ட கட்டிடங்களில் தேசியக் கொடி தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படுகிறது. பிற நிறுவனங்களும், பல போலந்து மக்களும் தேசிய விடுமுறை நாட்களிலும், பிற தேசிய முக்கியத்துவம் கொண்ட நாட்களிலும் தேசியக் கொடியைப் பறக்க விடுகின்றனர். அவமதிப்புக்கு உள்ளாக்காதவரை மரபுச் சின்னம் பொறிக்கப்படாத தேசியக் கொடியைப் பயன்படுத்துவதைத் தற்போதைய போலந்தின் அரசியல் சட்டம் தடை செய்யவில்லை.

கிடையாக வெள்ளை, சிவப்பு நிறங்களைக் கொண்ட வடிவமைப்பு ஒப்பீட்டளவில் பரவலாகக் காணப்படுகின்றது. போலந்தோடு தொடர்பில்லாத பல கொடிகள் இதை ஒத்ததாகக் காணப்படுகின்றன. இந்தோனேசியா, மொனாக்கோ ஆகிய நாடுகள் மேலே சிவப்பு நிறத்தையும், கீழே வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளன. போலந்திலும் தேசிய வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட பல கொடிகள் தேசிய நிறங்களைக் கொண்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலந்துக்_கொடி&oldid=2503007" இலிருந்து மீள்விக்கப்பட்டது