ஆனந்த விகடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Series update
ஆனந்த விகடன் மாதிரி அட்டைப்படம் புதிதாக (சமீபத்தியது) மாற்றம்.
வரிசை 1: வரிசை 1:
{{Infobox journal
{{Infobox journal
| title = ஆனந்த விகடன்
| title = ஆனந்த விகடன்
| cover = [[படிமம்:Ananda vikatan.jpg|250px|ஆனந்த விகடன்]]
| cover = [[File:Ananda vikatan wrapper.jpg|thumb|நவம்பர் 15, 2017 தேதியிட்ட ஆனந்த விகடன் வார இதழ்]]
| editor = கி.கார்த்திகேயன்
| editor = கி.கார்த்திகேயன்
| ஆசிரியர் = ரா.கண்ணன்
| ஆசிரியர் = ரா.கண்ணன்

09:28, 12 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

ஆனந்த விகடன்  
படிமம்:Ananda vikatan wrapper.jpg
நவம்பர் 15, 2017 தேதியிட்ட ஆனந்த விகடன் வார இதழ்
துறை பல்சுவை
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: கி.கார்த்திகேயன்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் விகடன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: வார இதழ்

ஆனந்த விகடன்(ஆங்கில மொழி: Anandha vikatan) என்பது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் வார இதழ். எஸ். எஸ். வாசனால் 1928 இல் தொடங்கப்பட்டது. வாரம் தோறும் நூறாயிரத்திற்கும் மேலான படிகள் அச்சாகி விற்பனையாகும் இதழ்.

விகடன் பத்திரிகை தமிழகத்தின் இரண்டாவது பத்திரிகையும் பொதுமக்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்படும் பத்திரிக்கையும் ஆகும். (56 லட்சம் வாசகர்கள்)[1] இலக்கியம், அரசியல், சினிமா, விளையாட்டு, கல்வி, வாணிகம் எனப் பலதுறைகளிலும் தனது கருத்தாக்கங்களை ஆனந்த விகடன் வெளிப்படுத்தி வருகிறது. இதனுடைய வளர்ச்சியாகவே இக்காலத்தில் அவற்றுக்கெனத் தனி இதழ்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆனந்த விகடன் என்னும் தனி நிறுவனம் தற்போது விகடன் குழுமமாகச் செயல்பட்டு வருகிறது.

இவை தவிரவும் இணைய தளத்திலும் விகடனின் பங்கு குறிப்பிடத்தக்கது. யூத்புல் விகடன், மின்னிதழ் விகடன் போன்ற வெளியீடுகள் இணையதள வாசகர்களுக்கானவை. அவ்வப்போது இணைப்பு இதழ்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் ஆகிய பகுதிகளுக்காகத் தற்போது 'என் விகடன்' என்னும் புதிய இணைப்பும் வெளிவருகிறது.

இலக்கியப் பங்களிப்பு

புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பலரையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை ஆனந்த விகடனுக்கு உண்டு. குறிப்பாக ஆனந்த விகடனில் வெளியிடப் பெற்ற முத்திரைக் கதைகள் பல கதாசிரியர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வித்தன. கார்ட்டூன் எனப்படும் கருத்தோவியச் சித்திரங்களும் ஆனந்தவிகடனில் பெயர் பெற்றவை.

தொடர்கள்

ஆண்பால் பெண்பால் அன்பால்,உயிர் மெய்,பிளஸ் மைனஸ் ப்ளீஸ்,சொல் அல்ல செயல் முதலிய தொடர்கள் தற்பொழுது வெளிவருகின்றன.

இதற்கு முன் வெளியான பிரபலமான தொடர்கள் 

நானும் விகடனும் 

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ளும் பக்கம். ஒவ்வொரு வாரமும் புதிய புதிய பிரபலங்கள் பங்கெடுக்கின்ற தொடர்.

வட்டியும் முதலும்

வட்டியும் முதலும் தொடர் எழுத்தாளர் ராஜு முருகனால் எழுதப்படுகிறது. இத்தொடரில் தன் வாழ்வில் பல்வேறு சம்பவங்களையும், சமூக நல கருத்துகளையும் எழுத்தாளர் பதிவு செய்கிறார்.

வலைபாயுதே

சமூக வலைத்தளங்களில் மக்கள் பதிவிட்ட நகைச்சுவைகள், தகவல்கள் நடப்பு செய்திகள் இப்பகுதியில் எழுத்தாளர் பதிவு செய்கிறார்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Saras Salil continues its lead in the overall magazine genre
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_விகடன்&oldid=2442077" இலிருந்து மீள்விக்கப்பட்டது