நாகூர் ரூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22: வரிசை 22:
*'''''6. திராட்சைகளின் இதயம்''''' (நாவல்,கிழக்கு வெளியீடு, சென்னை)
*'''''6. திராட்சைகளின் இதயம்''''' (நாவல்,கிழக்கு வெளியீடு, சென்னை)
*'''''7. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்''''' (ஆன்மிகம், கிழக்கு வெளியீடு, சென்னை)
*'''''7. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்''''' (ஆன்மிகம், கிழக்கு வெளியீடு, சென்னை)
*'''''8. அடுத்த விநாடி''''' (கிழக்கு வெளியீடு, சென்னை. ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது).
*'''''8. அடுத்த விநாடி''''' - 2007 (கிழக்கு வெளியீடு, சென்னை. ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது).
*'''''9. ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்''''' (மாணவர்களுக்கு)
*'''''9. ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்''''' (மாணவர்களுக்கு)
*'''''10. காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை''''' (கிழக்கு, சென்னை)
*'''''10. காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை''''' (கிழக்கு, சென்னை)
*'''''11. கொல்லப் பிறந்த கொடுங்கோலன்''''' (எச்.ஐ.வி. பற்றிய நூல். நலம் வெளியீடு, சென்னை).
*'''''11. கொல்லப் பிறந்த கொடுங்கோலன்''''' (எச்.ஐ.வி. பற்றிய நூல். நலம் வெளியீடு, சென்னை).
*'''''12. ஆல்ஃபா தியானம்''''' (ஆல்ஃபா தியானம் பற்றிய விரிவான நூல். ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது. கிழக்கு வெளியீடு, சென்னை).
*'''''12. ஆல்ஃபா தியானம்''''' - 2007 (ஆல்ஃபா தியானம் பற்றிய விரிவான நூல். ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது. கிழக்கு வெளியீடு, சென்னை).
*'''''13. நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்''''' (நாகூர் மற்றும் நாகூர் ஆண்டவரின் வரலாறு. வரம் வெளியீடு, சென்னை).
*'''''13. நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்''''' (நாகூர் மற்றும் நாகூர் ஆண்டவரின் வரலாறு. வரம் வெளியீடு, சென்னை).
*'' '''14. மேஜிக் ஏணி''''', ப்ராடிஜி, சென்னை
*'' '''14. மேஜிக் ஏணி''''', ப்ராடிஜி, சென்னை

23:37, 9 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

நாகூர் ரூமி

நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றும் ரூமி, தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனிக் கவனம் பெற்றவர். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் மீது இரண்டு பேர் எம்ஃபில் ஆய்வு செய்து பட்டமும் பெற்றுள்ளனர். கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை இவர் 38 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் நான்கு நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்படவை. Alpha Meditation பற்றிய நூல் ஐந்தாவது நூலாக விரைவில் வெளிவர உள்ளது.

இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்கிற நூல், இஸ்லாத்தைக் குறித்து எல்லாத் தரப்பினரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டது. அடுத்த வினாடி, ”இந்த விநாடி”, ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ், “மேஜிக் ஏணி” ஆகியவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இவர் எழுதிய சுய முன்னேற்ற நூல்களாகும். ”அடுத்த விநாடி” நூல் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றுள்ளது. You are Your Future என்ற நூல் இவரது மிகச்சமீபத்திய, சுய முன்னேற்றம் தொடர்பான ஆங்கில நூல்.

மொழிபெயர்ப்பு

சிக்மண்ட் ஃப்ராய்டின் உலகப்புகழ் பெற்ற The Interpretation of Dreams நூலைச் சுருக்கமான கனவுகளின் விளக்கம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். முதலில் இது ஸ்நேகா பதிப்பாக வெளிவந்தது. இது மீண்டும் மறுபதிப்பாக காரைக்குடி அழகப்பர் பதிப்பகத்தால் வெளிவந்துள்ளது. பாரசீக கவிஞானி ஜலாலுத்தின் ரூமியின் கதைகள் கவிதைகள் என்ற பெயரில் மஸ்னவி காவியத்திலிருந்து சூஃபி கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவரது சமீபத்திய ஆதாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப் எழுதிய சுயசரிதையான In the Line of Fire என்பதன் தமிழாக்கம். உடல் மண்ணுக்கு என்ற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. ஹோமரின் 'இலியட்' காவியத்தையும் இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். கிழக்கு வெளியீடாக வந்துள்ள இதில் ஹோமர் பற்றியும் இலியட் காவியம் பற்றியும் சுவையான முன்னுரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்புக்காக இவருக்கு 2009-ம் ஆண்டுக்கான நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது கிடைத்தது. ஒடிஸியை மொழி பெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். The Rules of Wealth என்ற நூலை பியர்சனுக்காக ”செல்வம் சேர்க்கும் விதிகள்” என்ற தலைப்பிலும், பாரக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலை “நம்மால் முடியும்” என்ற தலைப்பிலும் கிழக்கு வெளியீடாகவும் தமிழாக்கம் செய்துள்ளார்.

பறவையின் தடங்கள் என்ற பெயரில் இவரது வலைத்தளம் இயங்கி வருகிறது.

இதுவரை எழுதி வெளிவந்த நூல்கள்

  • 1. நதியின் கால்கள் (கவிதைத் தொகுதி, ஸ்நேகா வெளியீடு, சென்னை)
  • 2. ஏழாவது சுவை (கவிதைத் தொகுதி, சந்தியா வெளியீடு, சென்னை)
  • 3. குட்டியாப்பா (சிறுகதைகள், ஸ்நேகா வெளியீடு, சென்னை)
  • 4. கப்பலுக்குப் போன மச்சான் (நாவல், சந்தியா வெளியீடு, சென்னை)
  • 5. திரௌபதியும் சாரங்கப் பறவையும் (சிறுகதைத் தொகுப்பு, சந்தியா வெளியீடு, சென்னை).
  • 6. திராட்சைகளின் இதயம் (நாவல்,கிழக்கு வெளியீடு, சென்னை)
  • 7. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் (ஆன்மிகம், கிழக்கு வெளியீடு, சென்னை)
  • 8. அடுத்த விநாடி - 2007 (கிழக்கு வெளியீடு, சென்னை. ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது).
  • 9. ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ் (மாணவர்களுக்கு)
  • 10. காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை (கிழக்கு, சென்னை)
  • 11. கொல்லப் பிறந்த கொடுங்கோலன் (எச்.ஐ.வி. பற்றிய நூல். நலம் வெளியீடு, சென்னை).
  • 12. ஆல்ஃபா தியானம் - 2007 (ஆல்ஃபா தியானம் பற்றிய விரிவான நூல். ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது. கிழக்கு வெளியீடு, சென்னை).
  • 13. நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் (நாகூர் மற்றும் நாகூர் ஆண்டவரின் வரலாறு. வரம் வெளியீடு, சென்னை).
  • 14. மேஜிக் ஏணி, ப்ராடிஜி, சென்னை
  • 15. முற்றாத புள்ளி (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை வெளியீடு, சென்னை).
  • 16. சொற்களின் சீனப்பெருஞ்சுவர் (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை வெளியீடு, சென்னை).
  • 17. சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம் (கிழக்கு, சென்னை)
  • 18. இலியட் (குழந்தைகளுக்கான காவிய அறிமுகம். ப்ராடிஜி வெளியீடு, சென்னை)
  • 19. HIV எய்ட்ஸ் (மினிமாக்ஸ், அக்டோபர், 2008,சென்னை)
  • 20. சொல்லாத சொல் (கவிதை, நேர்நிரை, டிசம்பர், 2009 சென்னை.)
  • 21. மென்மையான வாள் (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2012,சென்னை)
  • 22. ஸ்டீஃபன் ஹாகிங்: சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் (சிக்ஸ்த்சென்ச் பப்ளிகேஷன்ஸ், ஆகஸ்ட் 2015,சென்னை)
  • 23. முத்துக்கள் பத்து (அம்ருதா பதிப்பகம், 2015,சென்னை)
  • 24. மந்திரச்சாவி (கல்கி வெளியீடு, சென்னை, டிசம்பர் 2012)
  • 25. இந்த விநாடி (சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2014)
  • 26. அதே வினாடி (சிக்ஸ்த்சென்ச் பப்ளிகேஷன்ஸ், 2015,சென்னை)

மொழிபெயர்ப்புகள்

  1. உடல் மண்ணுக்கு (பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதம்): கிழக்கு, சென்னை.
  2. இலியட் -- ஹோமரின் காவியம், கிழக்கு, சென்னை.
  3. கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள், சந்தியா, சென்னை.
  4. உமர் கய்யாமின் ருபாயியாத், ஆரூத் புக்ஸ்,சென்னை.
  5. கனவுகளின் விளக்கம் -- சிகமண்ட் ஃப்ராய்ட், ஸ்நேகா,சென்னை, அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி.
  6. செல்வம் சேர்க்கும் விதிகள்' ரிச்சர்ட் டெம்ப்ளர்(கிழக்கு, சென்னை), கிழக்கு. சென்னை
  7. நம்மால் முடியும் பராக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலின் தமிழாக்கம் (கிழக்கு, சென்னை)
  8. என் பெயர் மாதவி சுசித்ரா பட்டாச்சார்யாவின் வங்காளச் சிறுகதைகள் தமிழாக்கம் (அம்ருதா, சென்னை 2010)


ஆங்கில நூல்கள்

  • 1. HIDAYATUL ANAM (தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு)
  • 2. THE CAT AND THE SEA OF MILK (A Comparative Study of Kamban and Milton)
  • 3. Value Education (A Text book Kathavugal, Chennai, 2009)
  • 4. YOU ARE YOUR FUTURE (Karaikudi Alagappar Pathippagam, 2012)
  • 5. Alpha Meditation An Introduction (Sixthsense Publications, Chennai, 2012)
  • 6. The Ocean of Miracles: Life of Qadir Wali of Nagore (Kathavugal Publications, Chennai, 2014)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகூர்_ரூமி&oldid=2441067" இலிருந்து மீள்விக்கப்பட்டது