விழுப்புரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 11°56′28″N 79°29′35″E / 11.941°N 79.493°E / 11.941; 79.493
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 111: வரிசை 111:
* 2011<ref name=2011census/>
* 2011<ref name=2011census/>
* 2014<ref name="Viluppurampopulation">{{cite web|url=https://data.gov.in/resources/area-wise-population-within-corporations-and-municipalities-tamil-nadu/download|format=XLS|title=Area-wise Population within corporations and municipalities in Tamil Nadu|publisher=Government Of India|accessdate=2014-02-13|page=2}}</ref>
* 2014<ref name="Viluppurampopulation">{{cite web|url=https://data.gov.in/resources/area-wise-population-within-corporations-and-municipalities-tamil-nadu/download|format=XLS|title=Area-wise Population within corporations and municipalities in Tamil Nadu|publisher=Government Of India|accessdate=2014-02-13|page=2}}</ref>
}}1961ஆம் ஆண்டு சுமார் 43,496 பேர் ஆக இருந்த விழுப்புரம் இன்று
}}1961ஆம் ஆண்டு சுமார் 43,496 பேர் ஆக இருந்த விழுப்புரம் இன்று சுமார் 1.5 லட்சத்தையும் தாண்டி பெருகிக்கொண்டுள்ளது.


== சுற்றுலாத்தலங்கள் ==
== சுற்றுலாத்தலங்கள் ==

17:38, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

விழுப்புரம்
தேர்வு நிலை நகராட்சி்
விழுப்புரம் சந்திப்பு, மாவட்ட நீதிமன்றம், செஞ்சிக் கோட்டை
ஆள்கூறுகள்: 11°56′28″N 79°29′35″E / 11.941°N 79.493°E / 11.941; 79.493
நாடுஇந்தியா இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாகாணம்தொண்டைநாடு
மாவட்டம்விழுப்புரம்
நிறுவப்பட்ட ஆண்டு1919
அரசு
 • வகைதேர்வு நிலை நகராட்சி
 • நிர்வாகம்விழுப்புரம் நகராட்சி
 • நகராட்சித்தலைவர்திரு.ஜி.பாஸ்கரன்
பரப்பளவு[1]
 • மொத்தம்33.13 km2 (12.79 sq mi)
ஏற்றம்44 m (144 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்1,56,253 பேர்
மொழி
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்605602, 605401
தொலைப்பேசி குறியீட்டு எண்+91–4146(STD எண்)
வாகனப் பதிவுTN–32
சென்னையிலிருந்த தொலைவு161 கி.மீ
மதுரையிலிருந்து தொலைவு305 கி.மீ
பெங்களூர் - தொலைவு269 கி.மீ
பால் விகிதம்1019 /
இந்திய காலநிலைAw(Köppen)
எழுத்தறிவு90.16%
இணையதளம்விழுப்புரம் நகராட்சி

விழுப்புரம்((உச்சரிப்பு)), தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் முதல் பெரிய மாவட்டமாகும்.[2]

இம்மாவட்டம் திருச்சிசென்னையை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்(பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.

விழுப்புரத்தின் முக்கிய வருமான மூலம் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகும். 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை சுமார் 1,45,874 ஆகும். 2011ஆம் ஆண்டைய மக்கள்தொகை ஆய்வின்படி எழுத்தறிவு சதவீதம் 90.16% ஆகும்.[3]

மாவட்ட தலைநகர் எனும் தகுதி ஆட்சியார் அலுவலகம் உள்ளிட்டவை அடங்கிய பெருந்திட்ட வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்கள், பிரம்மாண்ட பேருந்து நிலையம், விரிவுபடுத்தப்பட்ட இரயில் சந்திப்பு, புறவழிச்சாலை, அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என முன்னேற்றமடைந்து வருகிறது விழுப்புரம்.  

பெயர்க்காரணம்

  • ‘எப்போதும் விழித்துக் கொணடே இருக்கும் ஊர், அறியாமையில் இருந்து விழிப்பைத் தரக்கூடிய ஊர் - விழுப்புரம்‘ என்கிறார் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திரர்,
  • ‘விழுப்புரம் என்றால் விழுமியபுரம்‘ என்று பொருள் தருவார் கிருபானந்த வாரியார், ‘இராமன் வில்லைப் பிடித்துப் பொன்மனை நோக்கி அம்பு எய்த இடம் என்பதால், இந்த இடம் வில்லுப்புரமாயிற்று‘ என்பார் திருக்குறளார் வீ.முனிசாமி.

இந்தப் பெருமைகள் ஒருபுறமிருத்தாலும் விழுப்புரத்திறக்கு வரலாற்று ரீதியிலானப் பெயர்க்காரணங்களும் இருக்கிறது,

  • 'பல்லவப் பேரரசன் நிருபதுங்க வர்மன் இப்பகுதிக்கு 'விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம்' எனத் தனது பெயரை இட்டு, நான்கு வேதமும் ஓதும் அந்தணர்களுக்கு தானமாக வழங்கியிருக்கிறான்.
  • 'ஜனநாதச் சதுர்வேதி மங்கலம்' என தனது பெயரை இந்தப் பகுதிக்குச் சூட்டிய முதலாம் இராசராசன் அந்தணர்களுக்கு மானியமாகவும் வழங்கியிருக்கிறான்.
  • விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம், ஜனநாதச் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலம் (1265) முதல் விழுப்பரையபுரம்-விழுப்புரம் என அழைக்கப்பட்டு வருகிறது.
  • ‘விழுப்பாதராயர் (விழுப்பரையார்)‘ என்பவர்களைப் பற்றிக் குறிப்பிடும் அபிதான சிந்தாமணி "ஆவணித் திருவிழாவிற் சுந்தரபாண்டியரின் பட்டாபிஷேக தினமாகய (7)ஆம் திருநாளில் அவரிடமிருந்து பொன்னேழுத்தாணியைப் பெற்று நாடோறும் கணக்கு வாசிக்கும் உரிமையுடையவர்கள்" என்றும்," பாண்டிபதினாலுக்கும் வேண்டிய விழுப்பாதராயர் என இவர்கள் சம்பந்தமாக ஒரு பழமொழியும் வழங்கப்படுவதாக"வும் தெரிவிக்கிறது. "யார் இந்த விழப்பரையார்?"பிறந்த குடிக்கே சிறப்பு உண்டாக்கியவர்கள் விழுப்பரையர். வைதீக பிராமிணர்களுக்கு அடுத்தபடியாக ராஜ சபையில் உத்தியோகத்திற்குப் பேர் போனவர்கள். தஞ்சாவூர் நாயக்க ராஜாக்கள் காலம் வரைகூட அந்தச் சமூகத்துக்கு ராஜாங்கத்தில் இருந்த முக்கியத்துவம் தெரிகிறது. இந்த விழுப்பரையர்களை 'விழுப்பிரமர்' என்றும் சொல்வதுண்டு. பிரமர் என்பது பூர்வத்தில் அவர்களுக்கு இருந்த வைதீகப் பிராமண மூலத்தைக் காட்டுவது. 'அரையர்' என்பது பிறப்பாடு ஏற்பட்ட ஷத்ரிய ஸ்தானத்தைக் காட்டுவது, 'விழுப்பாடராயர் (விழுப்பாதராயர்) என்றும் இன்னொரு பேரும் அவர்களுக்கு இருந்ததாகக் கருதப்படுகிறது.
  • சோழர்கள் காலம் வரையில் பிரம்மதேயமாயிருந்த நடுநாட்டுச் சதுர்வேதிமங்கலத்தில், அப்புறம் காடவராயர் ஆட்சி ஏற்பட்டு அதற்கும் அப்புறம் பாண்டியன் பிடித்தபோது விழுப்பரையர்களே அங்கே நிர்வாகத்தில் முக்கியமான ஸ்தானம் வகிக்கிற சமூகமாக ஆகி, அதனால் தான் ஊருக்கே விழுப்புரம் என்று பேர் மாறியிருப்பதாகத் தோன்றுகிறது" - என விழுப்பாதராயர் எனப்படுவோர் குறித்தும் விழுப்புரம் குறித்தும் நினைவில் வாழும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திரர் அளித்துள்ள விளக்கம் (நூல்: காஞ்சி முனிவர் நினைவுக்கு கதம்பம்) இங்கு குறிப்பிடித்தக்கது. இவர்கள் வழிவந்த, வீரராசேந்திரக்காரனை விழுப்பரையன் எனும் படைத்தலைவன் அபிராமேசுவரர் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
  • 'ஜெயன்கொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வான்' என்கிறது திருநாவலூர்க் கல்வெட்டு. முதலாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாக விளங்கியவன் "ஆதிநாதன் விழுப்பரையன்"[4]. அவனை வாழ்த்தி "கரணை விழுப்பரையன் மடல்" (அ) "ஆதிநாதன் வளமடலைப்" பாடினார் ஜெயங்கொண்டார் [5]
  • விழுப்பரையன் என்பவனின் ஆளுகைக்கு உட்பட்டப் பகுதியாக விழுப்புரம் இருந்துள்ளது என்பதற்கு மேற்கண்டவை சான்றாதாரமாக உள்ளன. வணிகர்கள் பெருமளவில் வாழ்ந்த ஊர்கள் 'புரம்' என்று பின்னொட்டால் அழைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வகையில் முன்னொரு காலத்தில் விழுப்புரம் வணிக நகரமாக இருந்திருத்தல் வேண்டும்.
  • மேலும் விழுப்புர வாசிகளால், பரந்த நிலப்பரப்பை சுட்டுமாறு பெரிய விழியுடைய "விழிமா நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது 

வரலாறு

சோழர்களின் ஆட்சிக்குட்பட்ட விழுப்புரம், சிம்மவிஷ்ணு பல்லவ மன்னனால் கைப்பற்றப்பட்டு பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் வந்த விஜயாளய சோழன் இப்பகுதியை மீட்டு மீண்டும் சோழப்பேரரசுடன் இணைத்தான். பிந்நாளில் ஆண்ட சோழர்களிடமிருந்து வென்று கிழக்கத்திய சாளுக்கியர்கள் ஆண்டனர். அதன் பின்னர் வந்த சோழர்கள் மீட்டு ஆண்ட போதும் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1251ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். இதனால் சோழப்பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சுமார் 50ஆண்டுகள் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்த இப்பகுதி முகலாயர்களின் படையெடுப்பால் கி.பி.1334-1378 ஆண்டுகள் வரையிலும் முகலாயர்களின் வசம் இருந்தது. முகாலாயர்களிடமிருந்து விஜய நகரப்பேரரசும், நாயக்க மன்னர்களும் ஆண்டனர்.

கி.பி.1677ஆம் ஆண்டு கோல்கொண்டா படையினரால் சிவாஜி மன்னர் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் முகலாயப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. முகாலாய ஆட்சியின் போதே ஆங்கில, பிரெஞ்சுப் படைகளிடம் ஒப்பந்தப்படுத்தப்பட்டு தென்னார்க்காடு மாவட்டமாக மதராசு மாகாணாத்தின் கீழ் வந்தது. கர்நாடகப் போரின் போது போர்க்களமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியால் ஆக்கிரமிக்கப்பட்டு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரையிலும் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தது.

புவியியல்

புவியியலில் 11° 56' N 79° 29' E.[6] தக்காணா இந்தியாவின் தென் கிழக்குப்பகுதியிலும் அமைந்துள்ளது. பாண்டிச்சேரி இதன் வங்கக் கடற்சார்ந்த எல்லையை பகிர்ந்து கொள்கிறது. சென்னை சுமார் 160 கி.மீ தொலைவிலும், திருச்சி 160 கி.மீ தொலைவிலும், சேலம் 144 கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரி சுமார் 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளன.[7]

மக்கள் தொகை

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
196143,496—    
197160,242+38.5%
198177,091+28.0%
199188,788+15.2%
200195,455+7.5%
201196,253+0.8%
20141,45,874+51.6%
மூலம்:

1961ஆம் ஆண்டு சுமார் 43,496 பேர் ஆக இருந்த விழுப்புரம் இன்று சுமார் 1.5 லட்சத்தையும் தாண்டி பெருகிக்கொண்டுள்ளது.

சுற்றுலாத்தலங்கள்

  • செஞ்சிக் கோட்டை
  • தியாகதுருகம்
  • கல்வராயன் மலை

வழிபாட்டுத்தலங்கள்

  • திருக்கோயிலூர்
  • திருவக்கரை
  • திருவெண்ணை நல்லூர்
  • மண்டகப்பட்டு
  • மேல்மலையனூர்
  • கூவாகம் கூத்தாண்டவர் கோயில்

திருவிழா

  • கூவாகம் திருவிழா வருடந்தோறும் சித்திரைத்திங்கள் பௌர்ணமி நாளன்று நடைபெறுகிறது.

கல்லூரிகள்

  • அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  
  • அண்ணா பல்கலைக்ககழக பொறியியல் கல்லூரி
  • அரசு சட்ட கல்லூரி 
  • மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Area-wise Population within corporations and municipalities in Tamil Nadu" (XLS). Government Of India. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  2. "Viluppuram, not Villupuram". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "Viluppuram Census 2011".
  4. http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16399.html
  5. http://tamil-ilakiyam.blogspot.in/2007/08/08.html
  6. "Imperial Gazetteer of India ..." google.com.
  7. {{cite and web|url=https://www.google.com/maps/place/Villupuram,+Tamil+Nadu,+India/@11.9766285,79.3158042,10z/data=!3m1!4b1!4m2!3m1!1s0x3a5356ebd4449db7:0xe06a76a0bf5f11a9%7Ctitle=Google Maps|work=Google Maps}}
  8. "historic population" (PDF).
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 2011census என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழுப்புரம்&oldid=2437191" இலிருந்து மீள்விக்கப்பட்டது