பைசையகுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:

{{unreferenced}}
[[படிமம்:Standing Gilt-bronze Bhaisajyaguru Buddha of Baengnyulsa Temple(백률사 금동약사여래입상).jpg|right|thumb|200px|நிற்கும் பைஷஜ்யகுரு புத்தர்]]
[[படிமம்:Standing Gilt-bronze Bhaisajyaguru Buddha of Baengnyulsa Temple(백률사 금동약사여래입상).jpg|right|thumb|200px|நிற்கும் பைஷஜ்யகுரு புத்தர்]]
[[படிமம்:Bhaishajyaguru or Medicine Buddha, Tibet, 15th century, gilt bronze - Berkeley Art Museum and Pacific Film Archive - DSC04104.JPG|thumb|right|பைசையகுரு புத்தர்]]
[[படிமம்:Bhaishajyaguru or Medicine Buddha, Tibet, 15th century, gilt bronze - Berkeley Art Museum and Pacific Film Archive - DSC04104.JPG|thumb|right|பைசையகுரு புத்தர்]]
'''பைசையகுரு''' (藥師佛/薬師 [[சீன மொழி|சீனம்]] ''Yàoshīfó'', [[ஜப்பானிய மொழி|ஜப்பானியம்]] ''Yakushi'', [[சமஸ்கிருதம்]] ''भैषज्यगुरु'', [[IPA]] ''Bhaiṣajyaguru'' ) முழுமையான பெயர் Bhaiṣajyaguruvaidūryaprabha) (Jp. 薬師瑠璃光如来 ''Yakushirurikō nyorai'') மருத்துவத்திற்கான புத்தர் ஆவார். இவரது பெயருக்கு 'வைடூர்ய ஒளியின் அதிபதி' என்று பொருள். [[மஹாயான பௌத்தம்|மகாயன பௌத்தத்தில்]] இவரை [[கௌதம புத்தர்|சாக்கிமுனி புத்தரின்]] குணப்படுத்தும் தன்மையின் உருவகமாகக் கருதுகின்றனர். பௌத்தத்தில் புத்தரை மனத்தின் துன்பங்களை நீக்கும் மருத்துவராகக் கருதுகின்றனர்.எனவே இவரை ''''மருத்துவ புத்தர்'''' என்றும் அழைப்பர்.
'''பைசையகுரு''' (藥師佛/薬師 [[சீன மொழி|சீனம்]] ''Yàoshīfó'', [[ஜப்பானிய மொழி|ஜப்பானியம்]] ''Yakushi'', [[சமஸ்கிருதம்]] ''भैषज्यगुरु'', [[IPA]] ''Bhaiṣajyaguru'' ) முழுமையான பெயர் Bhaiṣajyaguruvaidūryaprabha) (Jp. 薬師瑠璃光如来 ''Yakushirurikō nyorai'') மருத்துவத்திற்கான புத்தர் ஆவார். இவரது பெயருக்கு 'வைடூர்ய ஒளியின் அதிபதி' என்று பொருள். [[மஹாயான பௌத்தம்|மகாயன பௌத்தத்தில்]] இவரை [[கௌதம புத்தர்|சாக்கிமுனி புத்தரின்]] குணப்படுத்தும் தன்மையின் உருவகமாகக் கருதுகின்றனர். பௌத்தத்தில் புத்தரை மனத்தின் துன்பங்களை நீக்கும் மருத்துவராகக் கருதுகின்றனர்.எனவே இவரை ''''மருத்துவ புத்தர்'''' என்றும் அழைப்பர்.<ref>[https://www.thoughtco.com/bhaisajyaguru-the-medicine-buddha-449982 Bhaisajyaguru: The Medicine Buddha]</ref>


== தோற்றம் ==
== தோற்றம் ==
வரிசை 57: வரிசை 57:


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
<references/>
*[http://www.buddhanet.net/pdf_file/medbudsutra.pdf பைஷஜ்யகுரு சூத்திரம்]
*[http://www.buddhanet.net/pdf_file/medbudsutra.pdf பைஷஜ்யகுரு சூத்திரம்]


வரிசை 67: வரிசை 68:


{{புத்தர்கள்|state=uncollapsed}}
{{புத்தர்கள்|state=uncollapsed}}

{{{{பௌத்தத் தலைப்புகள்}}


[[பகுப்பு:புத்தர்கள்]]
[[பகுப்பு:புத்தர்கள்]]
[[பகுப்பு:மகாயான பௌத்தம்]]
[[பகுப்பு:மகாயான பௌத்தம்]]
[[பகுப்பு:பௌத்தம்]]

08:29, 31 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

நிற்கும் பைஷஜ்யகுரு புத்தர்
பைசையகுரு புத்தர்

பைசையகுரு (藥師佛/薬師 சீனம் Yàoshīfó, ஜப்பானியம் Yakushi, சமஸ்கிருதம் भैषज्यगुरु, IPA Bhaiṣajyaguru ) முழுமையான பெயர் Bhaiṣajyaguruvaidūryaprabha) (Jp. 薬師瑠璃光如来 Yakushirurikō nyorai) மருத்துவத்திற்கான புத்தர் ஆவார். இவரது பெயருக்கு 'வைடூர்ய ஒளியின் அதிபதி' என்று பொருள். மகாயன பௌத்தத்தில் இவரை சாக்கிமுனி புத்தரின் குணப்படுத்தும் தன்மையின் உருவகமாகக் கருதுகின்றனர். பௌத்தத்தில் புத்தரை மனத்தின் துன்பங்களை நீக்கும் மருத்துவராகக் கருதுகின்றனர்.எனவே இவரை 'மருத்துவ புத்தர்' என்றும் அழைப்பர்.[1]

தோற்றம்

பைசையகுரு பைசையகுரு சூத்திரம் எனும் மஹாயான சூத்திரத்தில் குறிப்பிடப்படுகின்றார். அந்த சூத்திரத்தில் தனது 12 உறுதிமொழிகளை நிறைவேற்றிடும் போதிசத்துவராக அவர் இருக்கின்றார். அந்த 12 உறுதிமொழிகளுள் 2 உறுதி மொழிகள் குணப்படுத்தும் தன்மை சம்பந்தப்படுத்தி உள்ளன. இந்தச் சூத்திரத்தில் கௌதம புத்தர் மஞ்சுஸ்ரீ போதிசத்துவருக்கு மருத்துவ புத்தரின் பெருமைகளைக் கூறுகின்றனர்.

"வருங்காலத்தில் நான் போதி என்கிற புத்தத்தன்மை அடைகையில், கவனிக்க யாரும் இன்றி நோயால் அவதிப்படும் உயிர்கள் என் பெயரைக் கேட்கும் போது, அவர்கள் தங்கள் நோயில் இருந்து விடுபடுவர். மேலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இன்பமாக அனைத்து வித செல்வங்களையும் பெற்று இறுதியில் புத்தத்தன்மை அடைவர்" - பைசையகுரு புத்தர்

அவர் புத்தத்தன்மை அடைந்தவுடன், வைடூர்யநிர்பாஸா (Vaidūryanirbhāsa) எனும் கிழக்கு திசையில் உள்ள உலக்த்துக்குப் புத்தர் ஆனார். அங்கு சூர்யப்ரபர் மற்றும் சந்திரபிரபர் என்ற இரண்டு போதிசத்துவர்கள் அவருக்குச் சேவை புரிகின்றனர்

ஜப்பானிய பௌத்ததில் பங்கு

ஜப்பானிய மொழியில் பைஷஜ்யகுருவை 'யகூஷி' என்று அழைக்கின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக இருந்த அக்‌ஷோப்ய புத்தரின் வழிபாடு, இந்தப் புத்தரின் வரவால் பொலிவிழந்து போனது. மேலும் யகூஷியின் குணப்படுத்தும் செயல் க்‌ஷிதிகர்ப போதிசத்த்வராலும் செய்யப்படுவதால், ஜப்பானில் பெரும்பாலும் குணப்படுத்தும் வழிபாட்டிற்கு 'ஜிஸோ' என்றழைக்கப்படும் க்‌ஷிதிகர்பரையே வணங்குகின்றனர். இருந்தாலும் மரணத்தின் போது பைஷஜ்யகுரு வணங்கப்படுகிறார்.

திபெத்திய பௌத்தம்

திபெத்தில் பெரும்பான்மையான மக்கள், நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியத்தை வளர்க்கவும் மருத்துவ புத்தரை வணங்குகின்றனர். புற நோய்களை மட்டும் அல்லாது அக நோய்களாம் கோபம், பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபடவும் இவரின் வழிபாடு உதவுகின்றது.

சீன பௌத்தம்

மருத்துவ புத்தரை வணங்கும் பழக்கும் சீனத்தில் பிரபலமாக உள்ளது. மருத்துவ புத்தர், கௌதம புத்தர், அமிதாப புத்தர் ஆகிய மூவரும் ஒன்று இணைந்து திரிமூர்த்திகளாகத் திகழ்கின்றனர். சீனப் பௌத்தர்கள் இவரின் மந்திரத்தை நோய்களைக் குணப்படுத்த உச்சாடனம் செய்கின்றனர்.

மந்திரங்கள்

மஹாயான பௌத்தத்தில் மருததுவ புத்தர் தொடர்பான பல மந்திரங்கள் உள்ளன.

அவற்றில் முக்கியமாக, பைசையகுரு சூத்திரத்தில் கீழ்கண்ட தாரணி அமைந்துள்ளது

:நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்யப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்சம்புத்தாய தத்யதா: ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்ய-சமுத்கதே ஸ்வாஹா
namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye bhaiṣajya-samudgate svāhā

மேற்கூறிய மந்திரத்தின் இன்னோரு பதிப்பு:

ஓம் நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்யப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்சம்புத்தாய தத்யதா: ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே மஹாபைஷஜ்யே பைஷஜ்யே ராஜ சமுத்கதே ஸ்வாஹா

oṃ namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye mahābhaiṣajye bhaiṣajye rāja samudgate svāhā

மேற்கூறிய மந்திரத்தின் இறுதிப் பகுதி மட்டும் மருத்துவ புத்த இருதய மந்திரம் என்று அழைக்கப்படுகிறது

ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே மஹாபைஷஜ்யே பைஷஜ்யே ராஜ சமுத்கதே ஸ்வாஹா

ஷிங்கோன் பௌத்தத்தில் கீழ்க்கண்ட வேறு மந்திரம் பயன்படுத்தப்படுகிறது

ஓம் ஹுரு ஹுரு சண்டாளி மாதங்கி ஸ்வாஹா

திபெத்திய பௌத்தத்தில் மருத்துவ புத்தரின் மந்திரப் பயன்பாடு

தீய கருமங்களை நீக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும் மருத்துவ புத்தரின் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகக் கருதப்படுகிறது. ஒரு கோப்பை தண்ணீரின் மீது 108 முறை மருத்துவ புத்தரின் மந்திரத்தை தீமையகல ஓதும் பொழுது (அகலோதுதல்), அந்த தண்ணீர் மருத்துவ புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாகிறது. அந்த நீரைப் பருகினால் நோய்கள் குணமாகவதாக திபெத்தியர்கள் நம்புகின்றனர்

மேலும் திபெத்திய புத்தத்தில் புலால் உண்பதால் ஏற்படும் தீய கருமத்திலிருந்து விடுபட மருத்துவ புத்த இருதய மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. புலாலின் மீது இந்த மந்திரத்தை தீமையகல ஓதினால், கொல்லப்பட்ட விலங்கு மறுபிறவியில் மோட்சம் அடையும் எனத் திபெத்தியர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்கள்

  1. Bhaisajyaguru: The Medicine Buddha

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhaisajyaguru
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

{{

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசையகுரு&oldid=2436845" இலிருந்து மீள்விக்கப்பட்டது