இரா. இளங்குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படத்தை இணைத்தல்
வரிசை 1: வரிசை 1:
{{Unreferenced}}
{{Unreferenced}}
புலவர் '''இரா. இளங்குமரனார்''' ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார்.
புலவர் '''இரா. இளங்குமரனார்''' ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார்.
[[File:மதுரை இரா.இளங்குமரனார்.jpg|thumb|300x268px|செந்தமிழ் அந்தணர் மதுரை இரா.இளங்குமரனார் 2008]]


==பிறப்பு==
==பிறப்பு==

19:12, 15 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

புலவர் இரா. இளங்குமரனார் ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார்.

படிமம்:மதுரை இரா.இளங்குமரனார்.jpg
செந்தமிழ் அந்தணர் மதுரை இரா.இளங்குமரனார் 2008

பிறப்பு

இளங்குமரானார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் சனவரி 30, 1927 அன்று பிறந்தார். தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார். ஏப்ரல் 8, 1946 முதல் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் தனியே தமிழ் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக 1951 ஆம் ஆண்டில் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார் . பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் பாடலியற்றும் திறனும் பெற்றிருந்த இவர் இயற்றிய குண்டலகேசி என்னும் காவியம் 1958 ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

நூல்கள்

இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும்

உள்ளிட்ட நூல்கள். இவருடைய நூல்கள் மதுரை பாரதி புத்தக நிலையத்தின் வாயிலாகப் பல நூல்கள் வெளிவரத் தொடங்கின.இளங்குமரனார் நூல்கள் யாவும் இதுபொழுது கோ. இளவழகன் அவர்களின் தமிழ்மண் பதிப்பகம் வழியாக மறுபதிப்பும் செம்பதிப்புமாக வெளிவந்துள்ளன.

விருதுகள்

  • 2012 பச்சமுத்து பைந்தமிழ் விருது-வாழ்நாள் சாதனையாளர் விருது, எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்.

தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள்

பல ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பணிபுரிந்தாலும் இவர் விரும்பிச் செய்வது நூலாக்கப் பணிகளேயாகும்.பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணிபுரிந்துள்ளார். தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர்,மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர்,தேர்வுக்குழு அமைப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துத்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் அறிஞர் தமிழண்ணல் முயற்சியால் விருந்து பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ்க்குடிமகன், கா. காளிமுத்து உள்ளிட்ட அரசியல் சார்புற்ற தமிழ் அறிஞர்கள் இரா.இளங்குமரனாரைப் போற்றி மதித்தவர்கள். தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும வருகிறார்.

தமிழக அரசு இவர்தம் தமிழ்ப்பணியை மதித்துப் பல சிறப்புப் பரிசில்கள், விருதுகளை வழங்கியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._இளங்குமரன்&oldid=2429069" இலிருந்து மீள்விக்கப்பட்டது