பார்வைக் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
கட்டுரை இணைப்புக்காக
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|பார்வைக் குறைபாடு}}
{{Infobox medical condition (new)
{{Infobox medical condition (new)
| name = பார்வைக் குறைபாடு
| name = பார்வைக் குறைபாடு

18:16, 2 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

பார்வைக் குறைபாடு
ஒத்தசொற்கள்பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு
ஓரு வெள்ளை குச்சி, பார்வைக் குறைபாடுக்கான சர்வதேச சின்னம்
சிறப்புகண்
அறிகுறிகள்குறைவான பார்வைத் திறன் [1] [2]
காரணங்கள்கண் அழுத்த நோய், கண் புரை நோய்,சிதறல் பார்வை [3]
நோயறிதல்கண் பரிசோதனைகள் [2]
நிகழும் வீதம்940 மில்லியன் / 13% (2015)[4]


பார்வைக் குறைபாடு (Visual impairment) அல்லது காட்சிக் குறைபாடு (vision impairment) அல்லது பார்வை இழப்பு (vision loss) என்பது, மூக்குக்கண்ணாடிகளைப் பயன்படுத்தல் போன்ற வழக்கமான வழிகளில் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சிக்கல்களைக் கொண்டிருக்கும், பார்வையிலுள்ள குறைபாட்டைக் குறிக்கும் ஒரு நிலையாகும்.[1][2] சிலசமயம் மூக்குக்கண்ணாடிகள் மற்றும் தொடு வில்லைகளைப் பயன்படுத்தும் வசதியற்றிருப்பதனால் பார்வையைச் சரிசெய்துகொள்ள முடியாமல் போகும் நிலைமையும் இங்கு சிலரால் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு.[1] அதாவது இந்நிலை மிகக் குறைந்த பார்க்கும் திறன் உள்ள அல்லது முழுமையாக பார்க்கும் திறன் இழந்த, மற்றும் சரிசெய்ய முடியாத ஒரு நிலை எனலாம். முழுமையாகப் பார்க்கும் திறன் இழந்த நிலையான பார்வை இழப்பு என்பது குருட்டுத்தன்மை (blindness) என்றும் அழைக்கப்படுகிறது.[5] இத்தகைய பார்வைக் குறைபாட்டினால், ஒருவரால் தனது அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய பல விடயங்களிலும் இடர்கள் ஏற்படுகின்றன.[2]

உலகளவில் இக் குறைபாட்டிற்கான பொதுவான காரணிகளில் 43% மானவை கிட்டப்பார்வை, தூரப்பார்வை, புள்ளிக்குவியமில்குறை, மூப்புப்பார்வை போன்ற விலகல் வழுக்களாகவும் (refractive errors) [6], 33% மானவை கண் புரை நோயாகவும், 2% மானவை கண் அழுத்த நோயாகவும் உள்ளன.[3] குருட்டுத்தன்மை அல்லது பார்வை இழப்புக்கான மிகப் பொதுவான காரணியாக கண் புரை நோய் இருக்கிறது.[3] இந்த பார்வைக்குறைபாடு உடற்கூற்றியல் மற்றும் நரம்பியல் காரணிகளால் ஏற்படக்கூடிய பார்வை உணர்வுக் (:en:Visual perception) குறைவு நிலையைக் குறிக்கும். பார்வை இழப்பின் அளவை விளக்குவதற்கும் பார்வைக் குறைபாட்டை வரையறுப்பதற்கும் பல அளவீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவ உணர்வும், பார்க்கக்கூடிய ஒளியை முற்றாகவே உணர முடியாத நிலையும் முழுமையான குருட்டுத் தன்மை எனப்படும். இதனை மருத்துவ அடிப்படையில், "என்எல்பி" (NLP) எனக் குறிப்பிடுவர் இது "ஒளியுணர்வின்மை" என்பதன் ஆங்கிலத் தொடரின் (no light perception) சுருக்கம் ஆகும். "ஒளியுணர்வு" (light perception) கொண்டவர்களால் ஒளியை இருளில் இருந்து பிரித்து அறியமுடியும். "ஒளிவீழ்ப்பு" (light projection) உணர்வு கொண்டவர்கள் ஒளி மூலத்தின் பொதுவான திசையை அறிந்து கொள்ள முடியும்.

பார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல நாடுகளில் அரசாங்க நீதியமைப்புக்கள் சட்டக் குருட்டுத்தன்மைக்கான விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன.[7] வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் பார்வைக் கூர்மையின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய பார்வைப் புலம் (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார்.

காரணிகள்

பின்வரும் காரணிகள் உலகம் முழுவதும் அறியப்படும் பார்வை குறைபாடுகளுக்கானப் பொதுவான காரணங்களாக உள்ளன.[8]

  1. கண் அழுத்த நோய் (Glaucoma)
  2. கண் புரை நோய் (cataract)
  3. விலகல் வழு (en:Refraction error)
  4. சிதறல் பார்வை அல்லது புள்ளிக்குவியமில்குறை
  5. மூப்பினை ஒட்டி ஏற்படக் கூடிய விழிப்புள்ளிச் சிதைவு (en:Macular degeneration): ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் ஏதும் இருக்காது. நாளாவட்டத்தில் சிலர் படிப்படியாக பார்வைக் குறைபாட்டை உணர்வார்கள். முழு குருட்டுத்தன்மை இல்லாவிட்டாலும், கண்ணின் மத்தியப் பகுதியில் பார்வை இல்லாததால் தினசரி வாழ்வில் அனைத்து செயல்களும் கடினமாகி விடும். மரபணுக் காரணிகள் மற்றும் புகைபிடித்தலுக்கு முக்கியப் பங்குண்டு. விழித்திரையில் உள்ள மேக்யூலா (விழித்திரையின் மத்தியில் உள்ள நீள்வட்ட நிறமிப் பகுதி) பாதிப்பதால் இது ஏற்படுகிறது.
  6. நீரிழிவு நோயினால் ஏற்படும் விழித்திரைப் பாதிப்பு (en:Diabetic retinopathy): நீரிழிவு விழித்திரைக் குறைபாடு, விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் கசிவு காரணமாக ஏற்படும். இதை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
  7. கருவிழிப் பாதிப்பு (விழிப்படலம் படிதல்)
  8. குழந்தைப் பருவ பார்வையிழப்பு: குழந்தை தாயின் வயிற்றில், கருவாக இருக்கும் போதே நிகழும் சில பாதிப்புகளால், குழந்தை பிறப்பு!பிறக்கும்போதே குருட்டுத்தன்மை ஏற்படும். இதை பிறவிக் குருடு என்பர். கண் முழுமையாக வளர்ச்சி அடையாதது மற்றும் அரிதாக கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் சில வைரசு தாக்குதல் காரணமாக குழந்தைக்கு பிறவிக்குருடு ஏற்படலாம்.
  9. கண்ணில் ஏற்படும் நோய்த்தொற்றுக்கள்
  10. மரபணு வழுக்கள்: மரபணுக்களில் ஏற்படும் சில வழுக்களும் பார்வைக் குறைபாட்டைக் கொடுக்கும். எ.கா. அல்பினிசம் உள்ளவர்களில் பகுதியான அல்லது முழுமையான பார்வைக்குறைபாடு காணப்படலாம்.
  11. விபத்துக்கள் மற்றும் கண்ணின் மேற்புறத்தில் ஏற்படும் காயங்கள்: சாலை விபத்துகளின் போது கண்ணில் ஏற்படும் அதிர்ச்சி காரணமாகவும் குருட்டுத்தன்மை ஏற்படும். விபத்துக்களின்போது தலையில் குறிப்பாக மூளையில் ஏற்படும் காயம் காரணமாகவும் இது ஏற்படுகிறது.
  12. வேதிப்பொருட்களால் ஏற்படும் காயங்கள்: அமிலங்கள் பொதுவாக கண்ணின் முற்பகுதியில் மட்டும் பாதிப்பு ஏற்படுத்தும். எனினும் சில சமயங்களில் அவை கருவிழியில் (cornea) மோசமான பாதிப்பை ஏற்படுத்தி குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
  13. விளையாடும்போது ஏற்படும் காயங்கள்
  14. இவற்றுடன் பக்கவாதம், குறைப்பிரசவம் போன்ற காரணங்களால் மூளையில் ஏற்படும் பாதிப்புக்களும் பார்வைக்குறைபாட்டிற்குக் காரணமாகலாம்.[9]

தடுப்பு முறைகள்

பார்வைத்திறனை அளக்கப் பயன்படும் சினெல்லன் அட்டவணை

உலக சுகாதார அமைப்பு 80% மான பார்வைக்குறைபாடுகள் தடுக்கப்படக் கூடியவை என்று கணித்துள்ளது.[3][10]

மருத்துவ சிகிச்சை முறைகள்

மேல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கண் நோய்களுக்கும் அதற்குத் தகுந்த சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் அதன் காரணிகளுக்குத் தகுந்தால் போல் உள்ளது. அவை பின்வருமாறு:

  1. பொதுவாக கண் புரை நோய்க்கு, அறுவை சிகிச்சையின் மூலம் இயற்கையான படிக லென்ஸ்க்குப் மாற்றாக உள்விழி கண்ணாடி வில்லை பொருத்தி பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.
  2. பிழையான ஒளிவிலகல் மற்றும் சிதறல் பார்வைக் கோளாறுகளை, மூக்குக் கண்ணாடி, தொடு வில்லை, உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை போன்றவைகள் மூலம் சரி செய்ய முடியும்.

பார்வைக்குறைபாடுள்ளவர்களின் நகர்திறன்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Change the Definition of Blindness" (PDF). World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 "Blindness and Vision Impairment". February 8, 2011. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
  3. 3.0 3.1 3.2 3.3 "Visual impairment and blindness Fact Sheet N°282". August 2014. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
  4. GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet (London, England) 388 (10053): 1545–1602. பப்மெட்:27733282. 
  5. Maberley, DA; Hollands, H; Chuo, J; Tam, G; Konkal, J; Roesch, M; Veselinovic, A; Witzigmann, M et al. (March 2006). "The prevalence of low vision and blindness in Canada.". Eye (London, England) 20 (3): 341–6. doi:10.1038/sj.eye.6701879. பப்மெட்:15905873. 
  6. "Facts About Refractive Errors". NEI. October 2010. Archived from the original on 28 July 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  7. "Defining the Boundaries of Low Vision Patients". SSDI Qualify. Archived from the original on January 27, 2014. பார்க்கப்பட்ட நாள் January 22, 2014. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  8. GLOBAL DATA ON VISUAL IMPAIRMENTS 2010. WHO. 2012. பக். 6 இம் மூலத்தில் இருந்து 2015-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150331221058/http://www.who.int/blindness/GLOBALDATAFINALforweb.pdf?ua=1. 
  9. Lehman, SS (September 2012). "Cortical visual impairment in children: identification, evaluation and diagnosis.". Current Opinion in Ophthalmology 23 (5): 384–7. doi:10.1097/ICU.0b013e3283566b4b. பப்மெட்:22805225. 
  10. "Causes of blindness and visual impairment". Archived from the original on 5 June 2015. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வைக்_குறைபாடு&oldid=2423663" இலிருந்து மீள்விக்கப்பட்டது