பார்வைக் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 33: | வரிசை 33: | ||
* [[கண் அழுத்த நோய்]] |
* [[கண் அழுத்த நோய்]] |
||
* [[கண் புரை நோய்]] |
* [[கண் புரை நோய்]] |
||
* விலகல் வழு ([[:en:Refraction error]] |
* விலகல் வழு ([[:en:Refraction error]]) |
||
* [[சிதறல் பார்வை]] |
* [[சிதறல் பார்வை]] |
||
* நீரிழிவு விழித்திரைப்பாதிப்பு |
* நீரிழிவு விழித்திரைப்பாதிப்பு |
18:22, 27 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்
பார்வைக் குறைபாடு | |
---|---|
ஒத்தசொற்கள் | பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு |
ஓரு வெள்ளை குச்சி, பார்வைக் குறைபாடுக்கான சர்வதேச சின்னம் | |
சிறப்பு | கண் |
அறிகுறிகள் | குறைவான பார்வைத் திறன் [1] [2] |
காரணங்கள் | கண் அழுத்த நோய், கண் புரை நோய்,சிதறல் பார்வை [3] |
நோயறிதல் | கண் பரிசோதனைகள் [2] |
நிகழும் வீதம் | 940 மில்லியன் / 13% (2015)[4] |
பார்வைக் குறைபாடு (Visual impairment) அல்லது காட்சிக் குறைபாடு (vision impairment) அல்லது பார்வை இழப்பு (vision loss) என்பது, மூக்குக்கண்ணாடிகளைப் பயன்படுத்தல் போன்ற வழக்கமான வழிகளில் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சிக்கல்களைக் கொண்டிருக்கும், பார்வையிலுள்ள குறைபாட்டைக் குறிக்கும் ஒரு நிலையாகும்.[1][2] சிலசமயம் மூக்குக்கண்ணாடிகள் மற்றும் தொடு வில்லைகளைப் பயன்படுத்தும் வசதியற்றிருப்பதனால் பார்வையைச் சரிசெய்துகொள்ள முடியாமல் போகும் நிலைமையும் இங்கு சிலரால் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு.[1] அதாவது இந்நிலை மிகக் குறைந்த பார்க்கும் திறன் உள்ள அல்லது முழுமையாக பார்க்கும் திறன் இழந்த, மற்றும் சரிசெய்ய முடியாத ஒரு நிலை எனலாம். முழுமையாகப் பார்க்கும் திறன் இழந்த நிலையான பார்வை இழப்பு என்பது குருட்டுத்தன்மை (blindness) என்றும் அழைக்கப்படுகிறது.[5] இத்தகைய பார்வைக் குறைபாட்டினால், ஒருவரால் தனது அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய பல விடயங்களிலும் இடர்கள் ஏற்படுகின்றன.[2]
உலகளவில் இக் குறைபாட்டிற்கான பொதுவான காரணிகளில் 43% மானவை கிட்டப்பார்வை, தூரப்பார்வை, புள்ளிக்குவியமில்குறை, மூப்புப்பார்வை போன்ற விலகல் வழுக்களாகவும் (refractive errors) [6], 33% மானவை கண் புரை நோயாகவும், 2% மானவை கண் அழுத்த நோயாகவும் உள்ளன.[3] குருட்டுத்தன்மை அல்லது பார்வை இழப்புக்கான மிகப் பொதுவான காரணியாக கண் புரை நோய் இருக்கிறது.[3]
காரணிகள்
பின்வரும் காரணிகள் உலகம் முழுவதும் அறியப்படும் பார்வை குறைபாடுகளுக்கானப் பொதுவான காரணங்களாக உள்ளது.
- கண் அழுத்த நோய்
- கண் புரை நோய்
- விலகல் வழு (en:Refraction error)
- சிதறல் பார்வை
- நீரிழிவு விழித்திரைப்பாதிப்பு
- கருவிழிப் பாதிப்பு
- குழந்தைப் பருவ பார்வையிழப்பு
- கண்நோய்
மருத்துவ சிகிச்சை முறைகள்
மேல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கண் நோய்களுக்கும் அதற்குத் தகுந்த சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் அதன் காரணிகளுக்குத் தகுந்தால் போல் உள்ளது. அவை பின்வருமாறு:
- பொதுவாக கண் புரை நோய்க்கு, அறுவை சிகிச்சையின் மூலம் இயற்கையான படிக லென்ஸ்க்குப் மாற்றாக உள்விழி கண்ணாடி வில்லை பொருத்தி பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.
- பிழையான ஒளிவிலகல் மற்றும் சிதறல் பார்வைக் கோளாறுகளை, மூக்குக் கண்ணாடி, தொடு வில்லை, உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை போன்றவைகள் மூலம் சரி செய்ய முடியும்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Change the Definition of Blindness" (PDF). World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Blindness and Vision Impairment". February 8, 2011. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "CDC2011" defined multiple times with different content - ↑ 3.0 3.1 3.2 "Visual impairment and blindness Fact Sheet N°282". August 2014. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "WHO2014" defined multiple times with different content - ↑ GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet (London, England) 388 (10053): 1545–1602. பப்மெட்:27733282.
- ↑ Maberley, DA; Hollands, H; Chuo, J; Tam, G; Konkal, J; Roesch, M; Veselinovic, A; Witzigmann, M et al. (March 2006). "The prevalence of low vision and blindness in Canada.". Eye (London, England) 20 (3): 341–6. doi:10.1038/sj.eye.6701879. பப்மெட்:15905873.
- ↑ "Facts About Refractive Errors". NEI. October 2010. Archived from the original on 28 July 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016.
{{cite web}}
: Unknown parameter|deadurl=
ignored (help)