மூசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9: வரிசை 9:
== இறைவனின் அழைப்பு ==
== இறைவனின் அழைப்பு ==
எகிப்திற்கு திரும்பவேண்டுமென்று மூசா அவர்களின் மனதினில் இறைவன் எண்ணத்தை ஏற்படுத்த மூசா(அலை) திரும்பி செல்லும்போது [[சினாய்]] மலையில் இறைவனுடன் பேசும் வாய்ப்பு மூசா(அலை) அவர்களுக்கு கிடைத்தது.

20:9 மேலும் (நபியே!) மூஸாவின் செய்தி உமக்கு எட்டியதா? 20:10 அவர் நெருப்பைக் கண்டபோது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: “கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கின்றேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டு வரக்கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்துகொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல் எனக்குக் கிடைக்கக்கூடும்.” 20:11 அங்குச் சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: “மூஸாவே! 20:12 நானே உம்முடைய இறைவன்; உம்முடைய காலணிகளைக் கழற்றிவிடும். திண்ணமாக நீர் “துவா” எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். 20:13 மேலும், நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே “வஹியாக”* அருளப்படுகின்றவற்றைச் செவியேற்பீராக! 20:14 திண்ணமாக, நான்தான் அல்லாஹ்; என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, எனக்கு அடிபணிவீராக! என்னை நினைவுகூர்வதற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவீராக! 20:15 மறுமைநாள் வருவது திண்ணம். அது வரும் நேரத்தை நான் மறைத்து வைக்க விரும்புகின்றேன்; ஒவ்வொரு ஆன்மாவும் அவரவரின் முயற்சிகளுக்கேற்ற கூலி பெற வேண்டும் என்பதற்காக! 20:16 எனவே, எவன் அந்த நாளின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தன் மன இச்சையைப் பின்பற்றுகின்றானோ அவன் அந்நாளைப் பற்றிய சிந்தனையிலிருந்து உம்மைத் தடுத்திட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிவிற்குள்ளாகி விடுவீர் 20:17 மேலும், மூஸாவே! உம்முடைய வலக்கரத்தில் இருப்பது என்ன?” 20:18 அதற்கு மூஸா பதிலளித்தார்: “இது என்னுடைய கைத்தடி; இதனை ஊன்றிக் கொண்டு நடப்பேன்; இதன் மூலம் என்னுடைய ஆடுகளுக்கு இலை தழைகளைப் பறித்துப் போடுவேன்; இன்னும் இதன் மூலம் என்னுடைய வேறு பல தேவைகளும் நிறைவேறுகின்றன.” 20:19 அப்போது இறைவன், “மூஸாவே! நீர் அதனைக் கீழே எறிந்துவிடும்” என்றான். 20:20 அவர் அதனை எறிந்துவிட்டார். உடனே அது நெளிந்து செல்லும் பாம்பாயிற்று; 20:21 இறைவன் கூறினான்: “இதனைப் பிடியும்; அஞ்சாதீர்; முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இதனை மீண்டும் ஆக்கிவிடுவோம். 20:22 மேலும், உம்முடைய கையை உம்முடைய கக்கத்தில் சேர்த்து வைப்பீராக! அது பிரகாசமாக வெளிப்படும், எத்தகைய ஊறுமின்றி! இது மற்றொரு சான்றாகும். 20:23 ஏனெனில், நாம் உமக்கு நம்முடைய மாபெரும் சான்றுகளைக் காண்பிக்கக் கூடியவராய் இருக்கிறோம். 20:24 இனி, நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும்; அவன் வரம்பு மீறியவனாக இருக்கின்றான்.”
சினாய் மலையில் நெருப்பினை கண்ட மூஸா தன் குடும்பத்தாரிடம் "நீங்கள் இங்கே சிறிது நேரம் தங்குங்கள், நிச்சயமாக நான் நெருப்பினை கண்டேன், ஒரு வேளை அதிலிருந்து வெளிச்சத்தையோ அல்லது நாம் செல்லவேண்டிய பாதையையோ அந்த நெருப்பின் உதவிக்கொண்டு காணலாம்" என்று கூறினார்.

நெருப்பின் அருகே அவர் சென்றவுடன் "மூசாவே" என்று அழைக்கப்பட்டார்.

"நிச்சயாமாக நான் தான் உன் இறைவன். உன் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும், நிச்சயமாக நீ துவா எனும் புனித பள்ளத்தாக்கில் உள்ளீர்"

இன்னும் நான் உம்மை என் தூதராகத் தேர்வுசெய்தேன் ஆதலால் வஹியின் வாயிலாக உமக்கு அறிவிக்கப்படுவதற்கு நீர் செவி ஏற்ப்பீராக.

நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே என்னையே நீ வணங்கும்; என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக."
([http://www.tamililquran.com/quran.asp?sura=20&line=9])

"மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?" என்று இறைவன் கேட்க

(அதற்கவர்) "இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன் இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன் இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன" என்று கூறினார்.

அதற்க்கு இறைவன் "மூசாவே! அதை கீழே எறியும்" என்றான்.

மூஸா அவ்வாறு செய்ததும் அது ஊர்ந்து செல்லும் ஒரு மலை பாம்பாயிற்று.

இறைவன் கூறினான்: "அதைப் பிடியும் பயப்படாதீர் உடனே நான் அதை பழைய நிலைக்கே மீட்டுவேன்"

இன்னும் உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி வெளியில் எடும் அது மாசற்ற வெண்மையாக வெளிவரும் இது மற்றோர் அத்தாட்சி ஆகும்.

இவ்வாறு என்னுடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து சிலவற்றை உமக்கு காண்பிக்கிறேன்
ஃபிர்அவுனிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்" என்றும் அல்லாஹ் கூறினான்.
([http://www.tamililquran.com/quran.asp?sura=20&line=25])

== [[அல்-கிள்ரு]] நபியும் மூஸா(அலை) அவர்களும் ==
== [[அல்-கிள்ரு]] நபியும் மூஸா(அலை) அவர்களும் ==

08:51, 25 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

மூசா (அரபி : موسى BC 1526- 1406BC)[1](Quran 20:13) இசுலாமியக் கோட்பாட்டின் படி "கலீம் அல்லாஹ்" (இறைவனுடன் பேசியவர்) என்று இவரை அழைப்பார்கள்."[மேற்கோள் தேவை] மற்ற நபிகளையும் பார்க்க அதிக முறை மூசாவின் பெயர் புனித குரானில் இடம்பெற்று உள்ளது.[2] இவர் 120 வயது வரை வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.[1][3] தவ்ராத் வேதம் மூசா (அலை) அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்டது.

இளமை காலம்

மூசா எகிப்தில் வாழ்ந்து வந்த இசுரேலியக் குடும்பத்தில் பிறந்தவர். அந்த காலக்கட்டத்தில் எகிப்தை ஆண்டு வந்த பாரோ மன்னன் குறிசொல்பவர்களை நம்பும் பழக்கம் உடையவன். எகிப்தில் பிறக்க போகும் ஒரு ஆண் குழந்தையின் கையால் ஃபிர்அவுன் (பார்வோன்) மன்னனின் உயிர்க்கு ஆபத்து என்று குறி சொல்பவர்கள் சொல்ல, குறிப்பிட்ட காலம் வரை பிறக்க போகும் ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொல்ல ஆணை பிறப்பித்தான் மன்னன் ஃபிர்அவுன். தன்னுடைய பிள்ளையை காப்பாற்ற வேண்டுமென்று மூசா (அலை) அவர்களின் தாயார் வைக்கோலினால் படகு போன்று செய்து நைல் நதியினில் மூசா (அலை) அவர்களை மிதக்கவிட்டார். பின்பு நைல் நதிக்கு குளிக்கவந்த (பார்வோன்) ஃபிர்அவுனின் மனைவி ஆசியா ஆற்றில் மிதந்து வந்த அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார்.

மூசா ஃபிர்அவுனுடைய வீட்டிலேயே அவன் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தார். மூசா(அலை) அவரை வளர்க்கும் பொறுப்பு சொந்த தாயார் வசமே வந்தது. எகிப்தியர்களிடம் அடிமைகளாக வேலை செய்து வந்த இஸ்ரேலியர்களை எகிப்தியர்கள் கொடுமை படுத்துவதை கண்டு மனம் நொந்து போனார் மூசா(அலை) அவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு எகிப்தியரை மூசா அவர்கள் கொன்றுவிட்டார்கள். இதனால் மூசா(அலை)அவர்களை குற்றவாளி என்று கூறி தண்டனை கொடுக்குமாறு உத்தரவிட்டான் ஃபிர்அவுன். ஆனால் மூசா(அலை) அவர்கள் தப்பித்து பாலைவனத்திற்கு சென்றுவிட்டார்கள்.

நீண்ட பயணத்திற்கு பிறகு மூசா மதியன் (மிடியன்) என்ற இடத்தினை வந்தடைந்தார். மதியன் நகரத்து மக்களுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்ட சுஹைப் (அலை) அவர்கள் இஸ்ரேலியர்களை வழிநடத்தி செல்ல அனுப்பப்பட்ட இறைதூதர் என்று மூசாவை அடையாளம் கண்டுகொண்டார்கள் . பின்பு சிறிது காலம் அங்கே இருந்த மூசாவுக்கு சுஹைப் அவர்கள் தன்னுடைய மகள் ஷஃபூராவை திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு சிறிதுக் காலம் மூசா அங்கே தங்கி இருந்தார்.

இறைவனின் அழைப்பு

20:9 மேலும் (நபியே!) மூஸாவின் செய்தி உமக்கு எட்டியதா? 20:10 அவர் நெருப்பைக் கண்டபோது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: “கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கின்றேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டு வரக்கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்துகொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல் எனக்குக் கிடைக்கக்கூடும்.” 20:11 அங்குச் சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: “மூஸாவே! 20:12 நானே உம்முடைய இறைவன்; உம்முடைய காலணிகளைக் கழற்றிவிடும். திண்ணமாக நீர் “துவா” எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். 20:13 மேலும், நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே “வஹியாக”* அருளப்படுகின்றவற்றைச் செவியேற்பீராக! 20:14 திண்ணமாக, நான்தான் அல்லாஹ்; என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, எனக்கு அடிபணிவீராக! என்னை நினைவுகூர்வதற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவீராக! 20:15 மறுமைநாள் வருவது திண்ணம். அது வரும் நேரத்தை நான் மறைத்து வைக்க விரும்புகின்றேன்; ஒவ்வொரு ஆன்மாவும் அவரவரின் முயற்சிகளுக்கேற்ற கூலி பெற வேண்டும் என்பதற்காக! 20:16 எனவே, எவன் அந்த நாளின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தன் மன இச்சையைப் பின்பற்றுகின்றானோ அவன் அந்நாளைப் பற்றிய சிந்தனையிலிருந்து உம்மைத் தடுத்திட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிவிற்குள்ளாகி விடுவீர் 20:17 மேலும், மூஸாவே! உம்முடைய வலக்கரத்தில் இருப்பது என்ன?” 20:18 அதற்கு மூஸா பதிலளித்தார்: “இது என்னுடைய கைத்தடி; இதனை ஊன்றிக் கொண்டு நடப்பேன்; இதன் மூலம் என்னுடைய ஆடுகளுக்கு இலை தழைகளைப் பறித்துப் போடுவேன்; இன்னும் இதன் மூலம் என்னுடைய வேறு பல தேவைகளும் நிறைவேறுகின்றன.” 20:19 அப்போது இறைவன், “மூஸாவே! நீர் அதனைக் கீழே எறிந்துவிடும்” என்றான். 20:20 அவர் அதனை எறிந்துவிட்டார். உடனே அது நெளிந்து செல்லும் பாம்பாயிற்று; 20:21 இறைவன் கூறினான்: “இதனைப் பிடியும்; அஞ்சாதீர்; முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இதனை மீண்டும் ஆக்கிவிடுவோம். 20:22 மேலும், உம்முடைய கையை உம்முடைய கக்கத்தில் சேர்த்து வைப்பீராக! அது பிரகாசமாக வெளிப்படும், எத்தகைய ஊறுமின்றி! இது மற்றொரு சான்றாகும். 20:23 ஏனெனில், நாம் உமக்கு நம்முடைய மாபெரும் சான்றுகளைக் காண்பிக்கக் கூடியவராய் இருக்கிறோம். 20:24 இனி, நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும்; அவன் வரம்பு மீறியவனாக இருக்கின்றான்.”

அல்-கிள்ரு நபியும் மூஸா(அலை) அவர்களும்

ஒரு முறை மூசா(அலை) அவர்கள் இஸ்ரேலிய மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களில் ஒருவர் "இந்த உலகத்தில் உள்ளவற்றை நன்கு அறிந்த மனிதர் யார் என்று கேட்க. அதற்க்கு மூசா(அலை) அவர்கள் "நான் தான்" என்று யோசிக்காமல் கூறிவிட்டார்கள்.

இந்த சம்பவம் நடந்த பின்பு இறைவன் மூசாவிடம் உன்னைவிட நன்கு அறிவுடைய ஒருவர் இருக்கிறார் என்றும் அவரிடம் நீ படிப்பினைகளை கற்க வேண்டுமென்றும் இறைவன் கூற. "அவரை நான் எங்கே? எப்படி? அணுக வேண்டும்" என்று மூஸா(அலை) அவர்கள் கேட்க,

"இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடம்வரை செல்க, செல்லும்பொழுது உங்களுடைய உணவிற்காக மீனினை கொண்டு செல்க அங்கே நடக்கும் நிகழ்ச்சிகள் அவரை அடையாளம் காட்டும்" என்று இறைவன் கூறினான்.

மூசா(அலை) மற்றும் அவருடைய பணியாள் ஒருவருடன் இரண்டு கடல்கள் சங்கமிக்கும் நோக்கி நடந்து கொண்டிருக்க. வழியில் கடற்கரை ஓரமாக இருந்த பாறையில் அமர்ந்தார்கள். அச்சமயம் பணியாள் கூடையிலிருந்த மீன் கடலில் துள்ளி குதித்து பனிக்கட்டியில் துளையிட்டது போன்று ஒரு பாதை அமைத்துக் கொண்டு சென்றது. இதை இருவரும் கண்டு ஆச்சரியமுற்றனர் பின்பு சிறிது நேரம் கழித்து இருவரும் நடந்த நிகழ்ச்சிகளை பற்றி சிறிதும் யோசிக்காமல் பயணத்தினை தொடர்ந்தனர்.

நெடுந்தூரம் சென்ற பின்பு "நமது உணவினை எடுங்கள் பயணக் களைப்பை நான் உணர்கிறேன் " என்று தன் பணியாளிடம் கூறினார் மூசா (அலை). தான் வைத்திருந்த கூடையினை பணியாள் பார்க்கையில் அதிலிருந்த மீன் உணவினை காணவில்லை என்றதும். " நிச்சயமாக காலையில் அந்த பாறையினில் தான் நமது உணவானது தொலைந்து இருக்க வேண்டும் நிச்சயமாக இதனை சைத்தான் தான் நம்மிடத்திலிருந்து மறைத்து இருக்க வேண்டும். இறைவன் நமக்கு கூறிய அடையாள எல்லாம் அந்த இடமாக தான் இருக்க வேண்டும்" என்று மூசா(அலை) அவர்கள் தன் பணியாளிடம் கூறி மறுபடியும் அந்த பாறையை நோக்கியவாறு நடந்தார்கள்.

இதையும் பார்க்கவும்

  • மோசே (கிருத்துவ பார்வையில் மூசா)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 :: www.zainab.org
  2. Twenty Five Prophets Mentioned in the Holy Qur'an
  3. The Truth of Life

1.^ a b :: www.zainab.org 2.^ Twenty Five Prophets Mentioned in the Holy Qur'an 3.^ The Truth of Life

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூசா&oldid=2420243" இலிருந்து மீள்விக்கப்பட்டது