தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வகைகள்: விரிவாக்கம்
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{unreferenced}}
{{unreferenced}}
{{AEC BOOK|[[பயனர்:Cyarenkatnikh]]|செப்டம்பர் 17, 2017}}
{{AEC BOOK|[[பயனர்:Cyarenkatnikh]]|செப்டம்பர் 17, 2017}}

19:13, 21 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

தாராண்மையியம் (Liberalism) என்பது, தனிப்பட்டவர்களது சுதந்திரத்தை மிகவும் முக்கியமான அரசியல் இலக்காகக் கொண்ட அரசுகளின் அடிப்படையான கொள்கையாகும். இக் கொள்கை பரந்துபட்ட எண்ணக்கருக்களையும், கோட்பாடுகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. தனிப்பட்டவர்களது சுதந்திரம் தாராண்மையியக் கொள்கைகளின் அடிப்படையாக இருப்பினும், பொருளியல் அடிப்படையில் நல்ல நிலையில் உள்ளவர்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்குக் கொடுக்க வேண்டியது கடமையாகக் கருதப்படுகிறது. தாராண்மையியத்தின் மூலம் அறிவொளிக் காலத்தில் இருந்து வருகிறது. அரசர்களின் கடவுளுக்கு ஈடான உரிமை, தலைமுறை உரிமை, அரசு மதம், காப்பாண்மையியம் (protectionism) போன்ற முன்னைய அரசுக் கோட்பாடுகளின் அடிப்படை எடுகோள்கள் பலவற்றைத் தாராண்மையியம் ஏற்க மறுத்தது.

ஆடம் சிமித்

ஆடம் சிமித் என்பவராலும் பிறராலும் முதன் முதலில் உருவாக்கப்பட்ட பொருளியல் தாராண்மையியம், அமைதிக்கும், வளத்துக்குமான சிறந்த வழியாக கட்டற்ற சந்தை, கட்டற்ற வணிகம் என்பவற்றை ஏற்றுக்கொண்டது. தனியார் சொத்துரிமையும், தனிப்பட்ட ஒப்பந்தங்களுமே பொருளியல் தாராண்மையியத்தின் அடிப்படைகள்.

பண்பாட்டுத் தாராண்மையியம் என்பது, பாலியல் சுதந்திரம், மத சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், தனிப்பட்ட வாழ்வில் அரசின் தலையீட்டிலிருந்து பாதுகாப்பு என்பவை உள்ளிட்ட தனியார் சுதந்திரங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளது.

வெவ்வேறு வடிவங்களிலான தாராண்மையியங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், பல அடிப்படையான கொள்கைகளில் அவை ஒன்றுபட்டுள்ளன. சிந்தனைச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமாக எண்ணங்களைப் பகிர்தல், தனியார் சொத்துரிமை, கட்டற்ற சந்தை, வெளிப்படையான அரசு முறைமை என்பன இவற்றுள் அடங்குவன.

சொற்பிறப்பு

தாராளமாக , தாராளவாதி, தாராண்மையியம் போன்ற வார்த்தைகள் அனைத்தும், லத்தீன் மொழியின் 'லிபர்' என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. அதற்கு அர்த்தம் 'இலவசம்' என்பதாகும். இந்த வார்த்தை முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது 1375ல், 'தாராண்மை கலை' என்னும் வடிவத்தில். அனைத்து மனிதர்களுக்கும் இலவச கல்வி என்னும் கருத்தைக் கொண்டது.

பொருள்

அன்றாட வாழ்வில் 'தாராண்மை' என்பது பெருந்தன்மை, திறந்த மனம், பாரபட்சமின்றி [1] போன்ற பொருள்களைக் குறிக்கும்.

வரலாற்றில், ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் 'தாராண்மை'க்கு ஒவ்வொரு பொருள் உண்டு. 1387ல் தாராண்மை என்றால் ' இலவசமாய் வழங்குதல்' எனப் பொருள், 1433ல் 'வரையறையில்லாமல் செய்தல்' எனப் பொருள், 1530ல் 'இலவச அனுமதி' என்றுப் பொருள். 16ம் மற்றும் 17ம் நூற்றாண்டில் 'கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை' என்ற பொருளைக் கொண்டிருந்தது. 16ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களிடையே தாராண்மை என்பதற்கு எதிர்மறை அர்த்தத்திலும் நேர்மறை அர்த்தத்திலும் உபயோகப் படுத்தப்பட்டது. இதற்கான எடுத்துக்காட்டுகள், பிரபல எழுத்தாளர் சேக்ஸ்சிபியர் நாவல்களில் உள்ளன. அறிவொளிக் காலத்தில் இதனை விழிப்புணர்வுடன் நேர்மறை அர்த்தத்தில் மட்டுமே பயன்படுதத்ப்பட்டது. பின்னர், காலப் போக்கில், உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அர்த்தங்களை கொண்டது

தாராண்மையியம் பல பகுதிகளில் பல கோட்பாடுகளை கொண்ட போதிலும், தனிமனித உரிமைகள் மற்றும் சமமான வாய்ப்புகளைப் பற்றி வலியுறுத்துகிறது. தாராண்மையியம், பல வகைகளாக இருந்தாலும், பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்ற அடிப்படை கொள்கைகள் பொதுவானதே. தாராண்மையியம் தனிமனித உரிமைகளையே வலியுறுத்தம், எல்லா வித பொதுக்கூட்டுடைமைக்கும் எதிரானதே.

வரலாறு

வகைகள்

சித்தாந்தங்களைப் பொருட்டு தாராண்மையியம், இரண்டு வகைப்படும். பாரம்பரிய தாராண்மையியம் மற்றும் சமூக தாராண்மையியம்

  • பாரம்பரிய தாராண்மையியத்தின் மிக முக்கிய சித்தாந்தம், கட்டாயப்படுத்துதலிருந்து விடுதலை. பொருளாதாரத்தில் அரசு தலையீடும் ஆற்றல் என்பது ஒரு வகையான கட்டாயப்படுத்துதலே. இது தனி மனித பொருளாதரத்தை வரையறைப் படுத்துகிறது. 'லேஸ்ஸேஸ் பிரேர்ஸ்' என்னும் பொருளாதார வழிப்பாட்டை ஆதரிக்கிறது. இது பிரஞ்ச் தொடர்மொழியாகும், தமிழில் இதன் பொருள், 'அவர்களையே செய்ய விடுங்கள்'. அதாவது பாரம்பரிய தாராண்மையியம் பொருத்த வரையில் தனியார் பரிவர்த்தனைகள் அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட வேண்டும். அரசின் சுங்க வரிகள், ஒழுங்கு முறைகள், மாணியங்கள், சலுகைகள் ஆகியவை நீக்கப்பட வேண்டும். மேலும், இது அரசின் பொதுநல சேவைகளுக்கு எதிரானது.

மேற்கோள்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராளமயம்&oldid=2418643" இலிருந்து மீள்விக்கப்பட்டது