24 மனை தெலுங்குச்செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{துப்புரவு}}
{{துப்புரவு}}
[[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] வீழ்ச்சிக்குப் பிறகு, தஞ்சாவூரும் மதுரையும் நாயக்க மன்னர்கள் வசம் வந்தது. இந்த சமயம் [[தெலுங்கு]] பேசும் [[திராவிடர்|திராவிட]] இனமக்கள் பலர் மதுரை, தஞ்சாவூர்,கோவை போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வரத்தொடங்கினர். இப்படி வந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் 24 மனை தெலுங்குச் செட்டியார்கள். இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. [[தமிழ்நாடு]] முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் [[மதுரை]], [[தேனி]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]] மற்றும் [[சென்னை]] பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
24 மனையார் என்று அழைக்கப்படும் தெலுங்குச் செட்டியார்கள், வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது.
இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
[[தமிழ்நாடு]] முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் [[மதுரை]], [[தேனி]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]] மற்றும் [[சென்னை]] பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர்.
இவர்கள் [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

24 மனையாருக்கு புலம்பெயர்ந்த வரலாற்று ஆதாரங்கள் முழுமையாக இல்லாததாலும், தெலுங்கு பெயர் இருப்பதால், விசயநகர காலத்தில் மற்ற தெலுங்கு இனத்தவர் போல் ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்ததாக கொள்ளமுடியாது. ஏன் எனில் சில குல(தவளையார்,சொப்பியர்) மக்களின் பூர்வீகம் 1000 ஆண்டுகளுக்கு மேல் கொங்கு பகுதியாக உள்ளது.

மேலும் செட்டியார் பலிஜாவின் உட்பிரிவாக இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலே சேர்க்கப்பட்டுள்ளது.இதற்கும் வரலாற்று ஆதாரம் இல்லை.


==திருமண உறவுமுறை மற்றும் குலதெய்வ வழிபாடு ==
==திருமண உறவுமுறை மற்றும் குலதெய்வ வழிபாடு ==


24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. சிலர் வீடு என்றும் குறிப்பிடுவார்கள். இதில் 16 (பதினாறு) கோத்திரங்கள் ஆண் வீடு என்றும் 8 (எட்டு) கோத்திரங்கள் பெண் வீடு என்றும் வகைப்படுத்தபட்டுள்ளன.
24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. சிலர் வீடு என்றும் குறிப்பிடுவார்கள். இதில் 16 (பதினாறு) கோத்திரங்கள் ஆண் வீடு என்றும் 8 (எட்டு) கோத்திரங்கள் பெண் வீடு என்றும் வகைப்படுத்தபட்டுள்ளன.

மேலும் குலம் என்பதே ரத்த சம்பந்தப்பட்டது என்பதை டாக்டர் துரை அங்குசாமி "தென் கொங்குநாடு : தமிழரின் வரலாற்றுக் கருவூலம்" என்ற நூலில், 24 மனையாரின் குலப்பிரிவுகளை கொண்டே விளக்குகிறார்.மேலும் குல தெய்வ வழிபாடான மூதாதையர் வழிபாட்டை 24 மனையாரின் சிறு தெய்வ வழிபாட்டை கொண்டே டாக்டர் துரை அங்குசாமி விளக்குகிறார்.த.ஞானப்பிரகாசம் "24 மனையாரின் வரலாறு" என்ற நூலை எழுதியுள்ளார்.


===24 மனை தெலுங்கு செட்டியார் மனை அல்லது வீடு (கோத்திரங்கள்)===
===24 மனை தெலுங்கு செட்டியார் மனை அல்லது வீடு (கோத்திரங்கள்)===
வரிசை 167: வரிசை 179:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://www.dinamalar.com/Supplementary/kumudam_detail.asp?news_id=292&dt=10-29-09 குமுதம்: நான் தமிழன் - இரா.மணிகண்டன் கட்டுரை தகவல்]
*[http://www.dinamalar.com/Supplementary/kumudam_detail.asp?news_id=292&dt=10-29-09 குமுதம்: நான் தமிழன் - இரா.மணிகண்டன் கட்டுரை தகவல்]
*[https://www.udumalai.com/then-kongunadu.htm தென் கொங்குநாடு : தமிழரின் வரலாற்றுக் கருவூலம்]





13:14, 19 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

24 மனையார் என்று அழைக்கப்படும் தெலுங்குச் செட்டியார்கள், வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் வாழ்வியல் முறையும், கலாச்சாரமும் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது.

இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் மதுரை, தேனி, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர்.

இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

24 மனையாருக்கு புலம்பெயர்ந்த வரலாற்று ஆதாரங்கள் முழுமையாக இல்லாததாலும், தெலுங்கு பெயர் இருப்பதால், விசயநகர காலத்தில் மற்ற தெலுங்கு இனத்தவர் போல் ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்ததாக கொள்ளமுடியாது. ஏன் எனில் சில குல(தவளையார்,சொப்பியர்) மக்களின் பூர்வீகம் 1000 ஆண்டுகளுக்கு மேல் கொங்கு பகுதியாக உள்ளது.

மேலும் செட்டியார் பலிஜாவின் உட்பிரிவாக இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலே சேர்க்கப்பட்டுள்ளது.இதற்கும் வரலாற்று ஆதாரம் இல்லை.

திருமண உறவுமுறை மற்றும் குலதெய்வ வழிபாடு

24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. சிலர் வீடு என்றும் குறிப்பிடுவார்கள். இதில் 16 (பதினாறு) கோத்திரங்கள் ஆண் வீடு என்றும் 8 (எட்டு) கோத்திரங்கள் பெண் வீடு என்றும் வகைப்படுத்தபட்டுள்ளன.

மேலும் குலம் என்பதே ரத்த சம்பந்தப்பட்டது என்பதை டாக்டர் துரை அங்குசாமி "தென் கொங்குநாடு : தமிழரின் வரலாற்றுக் கருவூலம்" என்ற நூலில், 24 மனையாரின் குலப்பிரிவுகளை கொண்டே விளக்குகிறார்.மேலும் குல தெய்வ வழிபாடான மூதாதையர் வழிபாட்டை 24 மனையாரின் சிறு தெய்வ வழிபாட்டை கொண்டே டாக்டர் துரை அங்குசாமி விளக்குகிறார்.த.ஞானப்பிரகாசம் "24 மனையாரின் வரலாறு" என்ற நூலை எழுதியுள்ளார்.

24 மனை தெலுங்கு செட்டியார் மனை அல்லது வீடு (கோத்திரங்கள்)

'16 பதினாறு வீடு (ஆண் வீடு)

மனை (குலம்) கோத்திரம் குல ரிஷி
மும்முடியார் ஸ்ரீ முகுந்த ரிஷி
கோலவர் (கோலையர்) ஸ்ரீ குடிலஹு ரிஷி
கணித்தியவர் ஸ்ரீ கௌதன்ய ரிஷி
தில்லையவர் தொந்துவ ரிஷி
பலிவிரியர் (பலுவிதியர்) ஸ்ரீ ஸௌலய ரிஷி
சென்னையவர் ஸ்ரீ ஹரிகுல ரிஷி
மாதளையவர் ஸ்ரீ குந்தள ரிஷி
கோதவங்கவர் ஸ்ரீ கணத்த ரிஷி
ராஜபைரவர் ஸ்ரீ ரோசன ரிஷி
வம்மையர் ஸ்ரீ நகுல ரிஷி
கப்பவர் ஸ்ரீ சாந்தவ ரிஷி
தரிசியவர் ஸ்ரீ தர்ஷிய ரிஷி
வாஜ்யவர் ஸ்ரீ வசவ ரிஷி
கெந்தியவர் ஸ்ரீ அனுசுயி ரிஷி
நலிவிரியவர் ஸ்ரீ மதஹனு ரிஷி
சுரையவர் ஸ்ரீ கரஹம ரிஷி

'8 எட்டு வீடு (பெண் வீடு)

மனை (குலம்) கோத்திரம் குல ரிஷி
மக்கடையர் ஸ்ரீ மங்கள ரிஷி
கொரகையர் ஸ்ரீ கௌதம ரிஷி
மாரெட்டையர் ஸ்ரீ மண்டல ரிஷி
ரெட்டையர் கௌஷிக ரிஷி
பில்லிவங்கவர் ஸ்ரீ பில்லி ரிஷி
தவளையார் ஸ்ரீ கௌந்தைய ரிஷி
சொப்பியர் ஸ்ரீ சோமகுல ரிஷி
லொட்டையவர் ஸ்ரீ பார்த்துவ ரிஷி


இந்த சமூகத்தினர் 16 வீடு மற்றும் 8 வீடு ஆகிய இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் 16 (ஆண்) வீட்டைச்சேர்ந்த கோத்திரப் பிரிவினர் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. அது போல 8 (பெண்) வீட்டைச்சேர்ந்த பிரிவினரும் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. இதன் காரணம் ஒரே பிரிவில் இருப்பவர்கள் சகோதர உறவாக கருதப்படுவதே ஆகும்.

இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை, செட்டுமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். பல கிராமங்களில் இவர்கள் தலைமையில் இச்சாதியினரின் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். நகர்ப்புறங்களில் அவ்வழக்கம் கிடையாது.

24 மனை தெலுங்குச் செட்டியார்களின் குலதெய்வ வழிபாடு கூட அவரவர் கோத்திர அடிப்படையிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களுக்குள் ஒரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு, அத்தெய்வத்துக்கு சொந்தமாக ஒரு கோவிலையும் அமைத்துக் கொண்டுள்ளார்கள். பெருங்கோவில்களுக்கும் குலதெய்வ கோவில்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், இம்மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட பங்காளிகள் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும்

ஒரு கோத்திரத்திற்கு உள்ளே அங்காளிகள், பங்காளிகள் என்று இரண்டு வகையினர் உண்டு. அங்காளிகள் என்றால் அங்கத்துடன் ஒட்டிப் பிறந்தவர்கள், அதாவது கூடப் பிறந்தவர்கள். பங்காளிகள் என்றால் சித்தப்பா பிள்ளைகள், பெரியப்பா பிள்ளைகள், ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட என்பார்களே அவர்கள். இதுபோல, அங்காளிகளும், பங்காளிகளும் சேர்ந்து வழிபடுவதுதான் குல தெய்வ வழிபாடு.

ஸ்ரீ காமாட்சி அம்மன் அனைத்து 24 மனை தெலுங்கு செட்டியார் கோத்திரத்தாராலும் ஒருமித்த குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பண்டை காலத்தில் காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம் 24 மனை தெலுங்கு செட்டியார்ளால் பராமரிக்க பட்ட கோயிலாக இருந்ததற்கு சான்றாக காஞ்சிபுரம் செப்பு ஏடுகளில் செய்திகள் அறியப்படுகின்றனவாம். பிற்காலத்தில் இவர்கள் கோவில் பராமரிப்பு உரிமையை பிற பத்தர்களுக்காக விட்டு கொடுத்து, பிடிமண் எடுத்து வந்து, கரூர் அருகில் அமைந்துள்ள வேஞ்சமகூடல் என்னும் ஊரில் தனி காமாட்சி அம்மன் கோயில் கட்டியதாக வரலாறு! ஸ்ரீ காமாட்சி அம்மனை இன்றும் கூட வேஞ்சமாகூடலில் பக்தர்களுக்கு அருளாட்சி புரிகிறாள்.

திருமால் (பெருமாள்), மகாலட்சுமி, கன்னிமார் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற தெய்வங்கள் சில கோத்திரத்தவர்க்கு குலதெய்வங்கள் ஆகும். பெரும்பாலும் 24 மனை தெலுங்கு செட்டியார் கோத்திரங்களில் குல தெய்வம் என்பது கடவுளாக இல்லாமல் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களாக கூட இருப்பார்கள்: உதாரணமாக குங்குமகாளியம்மன், சின்னம்மன், பாலாயி, பாப்பாயி, வீரமாத்தியம்மன் மற்றும் பல சிறு தெய்வங்கள்.,

நாட்டு மரபைப் பின்பற்றும் இக்கோவில்களில் தற்போது தீவிரமாக வைதீகமயமாக்கல் நடந்து வருகின்றன. அதன் முறைகளைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.

1) ஆகம நெறிப்படி கோவிலைக் கட்டுதல்.

2) பலி, சாமியாட்டம், சடங்குகள் போன்ற கூறுகளுடைய நாட்டு வழக்குகள் நிறுத்தப்படல்

3) வழிபாடு, விழாக்களில் வைதீக முறை பின்பற்றப்படல்; வட மொழி மந்திரம் ஓதப்படல்

4) துணைத் தெய்வங்களாக நவக்கிரகங்கள், விநாயகர், சுப்பிரமணியர் போன்ற பெருநெறித் தெய்வ உருவங்களை ஆகம முறைப்படி நிறுவுதல்; கருவறைத் தெய்வ உருவத்தைப் பெருநெறித் தெய்வமாக்கல்

5) கோவில் தொடர்பான பிரயோகங்கள் கூட வைதீக மரபில் கூறப்படல் (அபிஷேகம், நைவேத்தியம், கும்பாபிஷேகம், ஸ்ரீபலி, உற்சவ விக்ரகம், கர்ப்பக் கிரகம் முதலியன)

6) கோவிலின் பூசை செய்பவரைப் பிராமணராக நியமித்தல்

7) கோவிலின் முக்கிய தெய்வத்தின் பழைய கதை மறைக்கப்பட்டு, புராணங்களுடன் தெய்வம் தொடர்பான வரலாறு இணைக்கப்படல்

8) சமயப் பிரச்சாரக் கூட்டங்கள், பட்டி மன்றம், வழக்காடு மன்றம், கருநாடக இசைக் கச்சேரி நடத்தல்

9) பெண்களை ஒரே இடத்தில் கூட்டுவதற்குரிய திருவிளக்கு பூசை முதலியவற்றை நடத்தல்

10) முக்கிய தெய்வத்தை கர்மா, மாயா போன்ற தத்துவார்த்தங்களுடன் இணைத்துப் பேசுதல்.

சமூகப் பிரமுகர்கள்

  • உடுமலை நாராயணகவி - சுதந்திர போராட்ட தியாகி
  • முசிறிபுத்தன் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக)
  • கே.சி.பழனிச்சாமி - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (கரூர் மக்களவைத் தொகுதி)
  • பொள்ளாச்சி ஜெயராமன் - முன்னாள் அமைச்சர், இந்நாள் சட்டமன்ற துணை சபாநாயகர் (அதிமுக)
  • இ.ஜி. சுகவனம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி)
  • ரத்னவேலு - நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
  • எஸ்.ஜி. விநாயகமூர்த்தி - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
  • வெங்கடேசன் - முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர்
  • உடுமலை ராதாகிருஷ்ணன் - அமைச்சர் (அதிமுக)
  • ஜெகநாத் மிஸ்ரா - பிரபல தொழிலதிபர் [[1]]

வினோத வழிபாடுகள்: மயானக்கொள்ளை, காமாட்சியம்மன் நோன்பு

மயானக்கொள்ளை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின்படி, பிரம்மனின் தலையை சிவபெருமான் கொய்ததால் கோபமடையும் சரஸ்வதி தேவி கொடுக்கும் சாபத்தினால் சிவபெருமானின் கரத்தில், பிரம்ம கபாலம் ஒட்டிக் கொள்கிறது. இந்தக் கபாலம் சிவபெருமானுக்குப் படைக்கும் உணவை உண்டு விடுவதால், பசியால் பித்து பிடித்து காடுமலைகளில் அலைந்து திரியும் சிவபெருமான், மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார். மறுநாள் காலை இங்கு நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சியில் பார்வதியின் அம்சமான அங்காளம்மன், சிவனுக்குப் படைக்கும் உணவை எடுக்க வரும் பிரம்ம கபாலத்தை, அங்காளபரமேஸ்வரி விஸ்வரூபம் எடுத்து தரையில் மிதித்து ஆட்கொள்கிறார். சிவபெருமானின் சாபம் நீங்குகிறது. இந்தப் புராணத்தை நினைவு கூறும் நிகழ்ச்சி, எல்லா அங்காளம்மன் கோவில்களிலும் மகாசிவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாக மயானக்கொள்ளை என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

24 மனை தெலுங்கு செட்டியார்களில் பலர் அங்காளபரமேஸ்வரி அம்மனைக் குல தெய்வமாக வழிபடுபவர்கள். கோவையை அடுத்த சுண்டக்காமுத்தூரில் கோலையார் கோத்திரத்தைச்சேர்ந்த 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினருக்குப் பாத்தியப்பட்ட குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி கோவிலிலும் மகாசிவராத்திரியை அடுத்து இரண்டாம் நாள் விழாவாக மயானகொள்ளை நிகழ்ச்சி நள்ளிரவில் கொண்டாடப்படுவது வழக்கம். அங்காளம்மன் விஸ்வரூப கோலத்தில் மயானத்தில் எழுந்தருளி, மயானக் கொள்ளையில், பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.

கோவிலில் இருந்து அங்காளம்மன் புறப்பட்டு வரும்போது, எலும்பை மாலையாக அணிந்து கொண்டு சுடுகாட்டுச் சாம்பலை உடலில் பூசிக் கொண்டு சாமி வந்து ஆக்ரோஷத்துடன் ஆடும் பூசாரிகள், தங்கள் பற்களால், உயிருடன் இருந்த கோழியை கடித்து அம்மனுக்கு பலி கொடுப்பது வழக்கம். இது போன்ற வினோத பழக்கம் மேல்மலையனூர் உட்பட எல்லா அங்காளம்மன் கோவில்களிலும் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து நடைபெறும் சடங்காகும்.

காமாட்சியம்மன் நோன்பு

24 மனை தெலுங்கு செட்டியார்கள் அன்னை காமாட்சியம்மனை தங்களின் சமூக குலதெய்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் சார்பில் பல கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஆண்டுதோறும் காமாட்சியம்மன் வழிபாட்டு நோன்பு அல்லது திருவிழா கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நோன்பில் முற்றிலும் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வர். இது ஆண்கள் மட்டும் கடைப்பிடிக்கும் நோன்பு ஆகும். எனவே இந்த நோன்பில் கண்டிப்பாக பெண்களுக்கு அனுமதியில்லை. பிற சமூகத்தினருக்கும் அனுமதியில்லை.

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருக்கும் தோப்பு அல்லது வயல்காடுகளில் இந்த நோன்பு நடைபெறுவது வழக்கம். பாம்பு புற்றில் இருந்து மண் எடுத்து . வந்து சாமி செய்து, தென்னம்பாளையால் அலங்கரித்து, காமாட்சியம்மனாக பாவித்து வழிபடுவார்கள். பின்பு காமாட்சியம்மனுக்கு அமைக்கப்பட்ட நந்தவனத்தில் கிடா வெட்டி பூஜை செய்வார்கள். பூஜைக்குப்பின் சமையல் செய்வது, பரிமாறுவது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் செய்வது ஆண்கள்தான். மீதமான . உணவுகளையும் இவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை. மாறாக .அங்கேயே குழி தோண்டிப் புதைத்து விடுவது வழக்கம்.

[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்