கணித நிறுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11: வரிசை 11:
}}</ref>]]
}}</ref>]]


கணிதத்தில் '''கணித நிறுவல்''' என்பது, அத்துறையின் வரையறைகளுக்கு உட்பட்ட வகையில், [[கணிதவியல் கூற்று]] ஒன்றை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் விளக்குவதாகும். நிறுவல் என்பது தருக்க அடிப்படையில் உய்த்தறியும் ஒரு முறை. சோதனைகள் மூலம் பெறப்படுவது அல்ல. அதாவது, எடுகோள், ஒரு விதிவிலக்குக் கூட இல்லாமல் அது பயன்படுத்தப்படும் எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் உண்மை என்பதை, நிறுவல் விளக்கவேண்டும். சரியாக இருக்கக்கூடும் என நம்பப்படும் ஆனால் நிறுவப்படாத ஒரு கூற்று, [[ஊகம்]] எனப்படும்.
கணிதத்தில் '''கணித நிறுவல்''' என்பது, அத்துறையின் வரையறைகளுக்கு உட்பட்ட வகையில், [[கணிதவியல் கூற்று]] ஒன்றை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் விளக்குவதாகும். நிறுவல் என்பது தருக்க அடிப்படையில் உய்த்தறியும் ஒரு முறை. சோதனைகள் மூலம் பெறப்படுவது அல்ல. அதாவது, எடுகோள், ஒரு விதிவிலக்குக் கூட இல்லாமல் அது பயன்படுத்தப்படும் எல்லாச் சூழல்களுக்கும் உண்மை என்பதை, நிறுவல் விளக்கவேண்டும். சரியாக இருக்கக்கூடும் என நம்பப்படும் ஆனால் நிறுவப்படாத ஒரு கூற்று, [[ஊகம்]] எனப்படும்.


நிறுவல் தருக்கத்தைப் பயன்படுத்துகிறது எனினும், வழமையாக இயல்பான மொழியும் பயன்படுத்தப்படுகின்ற காரணத்தால் நிறுவலில் ஓரளவு மயக்க நிலையும் (ambiguity) காணப்படுவதுண்டு. உண்மையில் எழுத்துமூலக் கணிதத்தில் பெரும்பாலான நிறுவல்கள் [[முறைசாராத் தருக்கம்|முறைசாராத் தருக்கத்தைப்]] (informal logic) பயன்படுத்துகின்றன. தூய [[முறைசார் நிறுவல்]]கள் [[நிறுவல் கோட்பாடு|நிறுவல் கோட்பாட்டில்]] கையாளப்படுகின்றன. முறைசார்ந்த நிறுவலுக்கும், முறைசாரா நிறுவலுக்கும் இடையிலான வேறுபாடு தற்காலத்திலும், முன்னரும் கைக்கொள்ளப்பட்ட கணிதச் செயல்முறைகள் பற்றிய பல ஆய்வுகளுக்கு வித்திட்டுள்ளது. [[கணித மெய்யியல்]], நிறுவல்களில் மொழியினதும், தருக்கத்தினதும் பங்குகளைக் கருத்தில் எடுத்துக்கொள்கிறது.
நிறுவல் தருக்கத்தைப் பயன்படுத்துகிறது எனினும், வழமையாக இயல்பான மொழியும் பயன்படுத்தப்படுகின்ற காரணத்தால் நிறுவலில் ஓரளவு மயக்க நிலையும் (ambiguity) காணப்படுவதுண்டு. உண்மையில் எழுத்துமூலக் கணிதத்தில் பெரும்பாலான நிறுவல்கள் [[முறைசாராத் தருக்கம்|முறைசாராத் தருக்கத்தைப்]] (informal logic) பயன்படுத்துகின்றன. தூய [[முறைசார் நிறுவல்]]கள் [[நிறுவல் கோட்பாடு|நிறுவல் கோட்பாட்டில்]] கையாளப்படுகின்றன. முறைசார்ந்த நிறுவலுக்கும், முறைசாரா நிறுவலுக்கும் இடையிலான வேறுபாடு தற்காலத்திலும், முன்னரும் கைக்கொள்ளப்பட்ட கணிதச் செயல்முறைகள் பற்றிய பல ஆய்வுகளுக்கு வித்திட்டுள்ளது. [[கணித மெய்யியல்]], நிறுவல்களில் மொழியினதும், தருக்கத்தினதும் பங்குகளைக் கருத்தில் எடுத்துக்கொள்கிறது.

13:27, 19 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

Papyrus Oxyrhynchus 29,P. Oxy. 29, ஆயிரம் ஆண்டுகளாக நிறுவல் எழுதல் நுட்பங்களைக் கற்பிக்கும் பாட நூலாகிய யூக்கிளிடின் அடிப்படைகள் (Elements) நூலின் மிகப்பழைய நிலவல் பகுதிகள். இந்த விளக்கப்படம் நூல் II, முற்கோள் 5 இல் உள்ளது.[1]

கணிதத்தில் கணித நிறுவல் என்பது, அத்துறையின் வரையறைகளுக்கு உட்பட்ட வகையில், கணிதவியல் கூற்று ஒன்றை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் விளக்குவதாகும். நிறுவல் என்பது தருக்க அடிப்படையில் உய்த்தறியும் ஒரு முறை. சோதனைகள் மூலம் பெறப்படுவது அல்ல. அதாவது, எடுகோள், ஒரு விதிவிலக்குக் கூட இல்லாமல் அது பயன்படுத்தப்படும் எல்லாச் சூழல்களுக்கும் உண்மை என்பதை, நிறுவல் விளக்கவேண்டும். சரியாக இருக்கக்கூடும் என நம்பப்படும் ஆனால் நிறுவப்படாத ஒரு கூற்று, ஊகம் எனப்படும்.

நிறுவல் தருக்கத்தைப் பயன்படுத்துகிறது எனினும், வழமையாக இயல்பான மொழியும் பயன்படுத்தப்படுகின்ற காரணத்தால் நிறுவலில் ஓரளவு மயக்க நிலையும் (ambiguity) காணப்படுவதுண்டு. உண்மையில் எழுத்துமூலக் கணிதத்தில் பெரும்பாலான நிறுவல்கள் முறைசாராத் தருக்கத்தைப் (informal logic) பயன்படுத்துகின்றன. தூய முறைசார் நிறுவல்கள் நிறுவல் கோட்பாட்டில் கையாளப்படுகின்றன. முறைசார்ந்த நிறுவலுக்கும், முறைசாரா நிறுவலுக்கும் இடையிலான வேறுபாடு தற்காலத்திலும், முன்னரும் கைக்கொள்ளப்பட்ட கணிதச் செயல்முறைகள் பற்றிய பல ஆய்வுகளுக்கு வித்திட்டுள்ளது. கணித மெய்யியல், நிறுவல்களில் மொழியினதும், தருக்கத்தினதும் பங்குகளைக் கருத்தில் எடுத்துக்கொள்கிறது.

உண்மை என நிறுவப்பட்ட ஒரு கூற்று தேற்றம் (theorem) எனப்படும். நிறுவப்பட்ட ஒரு தேற்றத்தை வேறு கூற்றுக்களை நிறுவுவதற்குப் பயன்படுத்தலாம். பிற தேற்றங்களை நிறுவுவதற்கு அடிப்படையாகப் பயன்படும் தேற்றங்களை கிளைத்தேற்றங்கள் (lemma) எனக் குறிப்பிடுவர். அடிக்கோள்கள் என்பன ஒருவரால் நிறுவப்படத் தேவையற்ற அடிப்படை உண்மையை வெளிப்படுத்தும் கூற்றுக்கள் ஆகும்.

நிறுவல் முறைகள்

நேரடி நிறுவல்

நேரடி நிறுவலில், அடிப்படை உண்மைகள், வரைவிலக்கணங்கள், நிறுவப்பட்ட தேற்றங்கள் என்பன தருக்க முறையில் ஒன்றிணைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டு இரட்டை முழுஎண்களின் கூட்டுத்தொகை எப்பொழுதும் இரட்டை எண்ணே என நிறுவுவதற்கு நேரடி நிறுவல் முறையைப் பயன்படுத்தலாம்.

எதிர்மறுப்பு நிறுவல்

எதிர்மறுப்பு நிறுவல் முறையில், ஒரு கூற்று உண்மையானது என்பதை நிறுவ, அக்கூற்று உண்மையில்லை என எடுத்துக்கொண்டு, அதன் விளைவாக ஏற்கனவே நிறுவப்பட்ட வேறு கூற்றுகளில் முரண்பாடு ஏற்படுவதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் கூற்று உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என நிறுவப்படுகிறது. இது மறைமுக நிறுவல் அல்லது முரண்பாட்டு நிறுவல் எனவும் அழைக்கப்படுகிறது.

உய்த்தறி முறை நிறுவல்

இடமாற்ற முறை நிறுவல்

மேற்கோள்கள்

  1. Bill Casselman. "One of the Oldest Extant Diagrams from Euclid". University of British Columbia. பார்க்கப்பட்ட நாள் 2008-09-26. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

தகவல் வாயில்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணித_நிறுவல்&oldid=2404507" இலிருந்து மீள்விக்கப்பட்டது