நீராவிச்சுழலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''நீராவிச்சுழலி''' (steam turbine) என்பது உயரழுத்த நீராவியில் இருக்கும...
(வேறுபாடு ஏதுமில்லை)

05:35, 12 மே 2008 இல் நிலவும் திருத்தம்

நீராவிச்சுழலி (steam turbine) என்பது உயரழுத்த நீராவியில் இருக்கும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றும் ஒரு கருவி. நீராவி எந்திரமும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் அதிகரித்த வெப்பத் திறன் காரணமாக உலகில் பெரும்பாலான நீராவி எந்திரங்களை சுழலிகள் நீக்கிவிட்டன. அதோடு நீராவி எந்திரங்களைப் போல முன்பின் நகர்ச்சியைத் தராமல், சுழலிகள் சுழலும் நகர்ச்சியைத் தருவதால், மின்னாக்கிகளை ஓட்டும் வேலைக்கு இவை பொருத்தமானதாக இருக்கின்றன. இன்றைய உலகின் பெரும்பாலான மின் உற்பத்திக்கு நீராவிச் சுழலிகள் பயன்படுகின்றன. ஒற்றை அடுக்கு என்றில்லாமல் பல அடுக்குகளில் நீராவியைப் பாவிப்பதால் சுழலிகளுக்கு வெப்ப இயக்கவியல் திறன் அதிகமாக இருக்கிறது.

சீமென்சு நிறுவனத்தின் நீராவிச்சுழலி.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராவிச்சுழலி&oldid=240066" இலிருந்து மீள்விக்கப்பட்டது