சாணக்கியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:


'''சாணக்கியர் (Chanakya)''' ([[சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி|சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடியின்படி]] '''சாணக்கியர்''' காலம்: கி. மு ஆம் நூற்றாண்டு) இவர் ஓர் இந்திய ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூல் அர்த்தசாஸ்திராவை (''Arthashastra'') எழுதியவர். இவர் கவுடில்யர் ('''Kauṭilya''') என்றும் விஷ்ணுகுப்தர் ('''Vishnugupta''') என்றும் அடையாளம் காணப்பட்டவர். இவர், இந்தியாவின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளின் முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். அவரது பணிகள், பாரம்பரிய பொருளாதாரத்திற்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் குப்த சாம்ராஜ்யத்தின் முடிவில் பொலிவிழந்தன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவை மீண்டும் பழக்கத்திற்கு வந்தன.
'''சாணக்கியர் (Chanakya)''' ([[சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி|சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடியின்படி]] '''சாணக்கியர்''' காலம்: கி. மு நான்காம் நூற்றாண்டு<ref>{{cite book|author=William H. Mott|title=Military Assistance: An Operational Perspective|url=https://books.google.com/books?id=_e9c-IJHCksC&pg=PA61|year=1999|publisher=Greenwood|isbn=978-0-313-30729-4|page=61}}</ref>) இவர் ஓர் இந்திய ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூல் அர்த்தசாஸ்திராவை (''Arthashastra'')<ref name="Mabbett">{{cite journal|last1=Mabbett|first1=I. W.|title=The Date of the Arthaśāstra|journal=Journal of the American Oriental Society|volume=84|issue=2|pages=162–169|issn=0003-0279|doi=10.2307/597102|jstor=597102|year=1964|publisher=American Oriental Society}}</ref> எழுதியவர். இவர் கவுடில்யர் ('''Kauṭilya''') என்றும் விஷ்ணுகுப்தர் ('''Vishnugupta''') என்றும் அடையாளம் காணப்பட்டவர். இவர், இந்தியாவின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளின் முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். அவரது பணிகள், பாரம்பரிய பொருளாதாரத்திற்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது.<ref>L. K. Jha, K. N. Jha (1998). "Chanakya: the pioneer economist of the world", ''International Journal of Social Economics'' '''25''' (2–4), p. 267–282.</ref><ref name="bss.sfsu.edu">Waldauer, C., Zahka, W.J. and Pal, S. 1996. [http://online.sfsu.edu/mbar/ECON605/Arthashastra.pdf Kauṭilya's Arthashastra: A neglected precursor to classical economics]. ''Indian Economic Review'', Vol. XXXI, No. 1, pp. 101–108.</ref><ref>Tisdell, C. 2003. [http://espace.library.uq.edu.au/view/UQ:84337 A Western perspective of Kauṭilya's Arthashastra: does it provide a basis for economic science?] ''Economic Theory, Applications and Issues Working Paper No. 18''. Brisbane: School of Economics, The University of Queensland.</ref><ref>Sihag, B.S. 2007. Kauṭilya on institutions, governance, knowledge, ethics and prosperity. ''Humanomics'' 23 (1): 5–28.</ref> இவரது படைப்புகள் குப்த சாம்ராஜ்யத்தின் முடிவில் பொலிவிழந்தன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவை மீண்டும் பழக்கத்திற்கு வந்தன.<ref name="bss.sfsu.edu" />


[[மௌரியர்|மௌரியப்]] பேரரசைத் தோற்றுவித்த [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியனின்]] முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் '''சாணக்கியர்'''. இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். கவுடில்யர், விட்ணுகுப்தர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார். இவர் [[பொருளியல்|பொருளியலின்]] முன்னோடியாகக் கருதப்படுகிறார். [[மேற்கத்திய உலகு|மேற்கத்திய உலகில்]] இவர் இந்தியாவின் [[மாக்கியவெல்லி]] என்று அறியப்படுகிறார். இவர் [[தக்சசீலப் பல்கலைக்கழகம்|தக்சசீலப் பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருந்தார். சாணக்கியரின் இன்னொரு பெயர் கௌடில்யர்; அர்த்தசாத்திரம் கௌடில்யம் எனவும் வழங்கப்படுகிறது.
[[மௌரியர்|மௌரியப்]] பேரரசைத் தோற்றுவித்த [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியனின்]] முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் '''சாணக்கியர்'''. இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். கவுடில்யர், விட்ணுகுப்தர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார். இவர் [[பொருளியல்|பொருளியலின்]] முன்னோடியாகக் கருதப்படுகிறார். [[மேற்கத்திய உலகு|மேற்கத்திய உலகில்]] இவர் இந்தியாவின் [[மாக்கியவெல்லி]] என்று அறியப்படுகிறார். இவர் [[தக்சசீலப் பல்கலைக்கழகம்|தக்சசீலப் பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருந்தார். சாணக்கியரின் இன்னொரு பெயர் கௌடில்யர்; அர்த்தசாத்திரம் கௌடில்யம் எனவும் வழங்கப்படுகிறது.

07:39, 31 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

சாணக்கியர் (Chanakya) (சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடியின்படி சாணக்கியர் காலம்: கி. மு நான்காம் நூற்றாண்டு[1]) இவர் ஓர் இந்திய ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூல் அர்த்தசாஸ்திராவை (Arthashastra)[2] எழுதியவர். இவர் கவுடில்யர் (Kauṭilya) என்றும் விஷ்ணுகுப்தர் (Vishnugupta) என்றும் அடையாளம் காணப்பட்டவர். இவர், இந்தியாவின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளின் முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். அவரது பணிகள், பாரம்பரிய பொருளாதாரத்திற்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது.[3][4][5][6] இவரது படைப்புகள் குப்த சாம்ராஜ்யத்தின் முடிவில் பொலிவிழந்தன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவை மீண்டும் பழக்கத்திற்கு வந்தன.[4]

மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியனின் முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் சாணக்கியர். இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். கவுடில்யர், விட்ணுகுப்தர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார். இவர் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். மேற்கத்திய உலகில் இவர் இந்தியாவின் மாக்கியவெல்லி என்று அறியப்படுகிறார். இவர் தக்சசீலப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். சாணக்கியரின் இன்னொரு பெயர் கௌடில்யர்; அர்த்தசாத்திரம் கௌடில்யம் எனவும் வழங்கப்படுகிறது.

படைப்புகள்

இவர் அர்த்தசாத்திரம், நீதிசாத்திரம் ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். அர்த்தசாத்திரம், பொருளாதாரக் கொள்கைகள், நலத்திட்டங்கள், பிற நாட்டு உறவுகள், போர்முறைகள் குறித்து விரிவாக விவரிக்கிறது. நீதி சாத்திரம் வாழ்வியல் நன்னெறிகள் பற்றிப் பேசுகிறது. இந்நூல் இந்திய வாழ்க்கை முறைகள் குறித்துச் சாணக்கியருக்கு இருந்த அறிவைக் காட்டுகிறது. இந்நூல் சாணக்கிய நீதி என்றும் அழைக்கப்படுகிறது.

கதைகள்

பின்வருபவை சாணக்கியர் வாழ்வில் நடந்ததாக நம்பப்படும் சுவையான சம்பவங்கள்:

  • பிற்காலத்தில் அரசனாவார் என்பதைக் குறிக்கும் வகையில் பிறக்கும் போதே பற்களோடு பிறந்தார். அந்தணர்கள் அரசாள்வது முறையற்றது என்பதால் இவரது பற்கள் உடைக்கப்பட்டன. அதனால் இவர் வேறொருவன் மூலம் அரசாள்வான் என்று கணிக்கப்பட்டது.
  • நந்த அரசன் சாணக்கியரை அவையிலிருந்து வெளியேற்றியதே இவரை பழிதீர்க்கும் உறுதியேற்கக் காரணம்.
  • தம் விருப்பப்படி ஆட்சி நடத்தத் தகுதியான ஒருவனைத் தேடி, இறுதியில் சந்திரகுப்தனைத் தேர்ந்தெடுத்தார்
  • நந்த அரசனை வீழ்த்தும் முதல் முயற்சியில் தோல்வி அடைந்தார். சூடான அப்பத்தை, ஓரத்திலிருந்து புக்காமல் நடுவில் கைவைத்துக் கையைச் சுட்டுக்கொண்ட மகனைத் திட்டும் ஒரு தாயைக் கண்ட போது தம் தவற்றை உணர்ந்தார்.
  • சந்திரகுப்தன் மன்னனாக இருந்த போது அவனுடைய உணவில் நஞ்சைச் சேர்த்து (அவனறியாமல்) உண்ணச் செய்தார். அவன் உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இவ்வாறு செய்தார். இதையறியாத மன்னன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தன் மனைவிக்கு தன் உணவை ஒரு நாள் கொடுத்தான். இதையறிந்த சாணக்கியர் அரசகுல வாரிசைக் காப்பதற்காக அரசியின் வயிற்றைப் பிளந்து குழந்தையை வெளியே எடுத்தார். அவனுக்கு பிந்துசாரன் என்று பெயரிட்டார்.
  • ஒரு முறை மௌரியப் படை ஒரு குகையில் ஒளிய நேர்ந்தது. அவர்களிடம் உணவு இல்லாததால் அனைவரும் பசியால் வாடினர். அப்போது சாணக்கியர் ஓர் எறும்பு ஒற்றைச் சோற்றைச் சுமந்துக்கொண்டுச் செல்வதைக் கவனித்தார். அவர்களைச் சுற்றி எங்கும் உணவு தென்படவில்லை. எனவே வீரர்களைக் குகையைச் சோதனை செய்யப் பணித்தார் சாணக்கியர். எதிரிகள் குகைக்குக் கீழே உணவருந்திக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். உடனே வீரர்களோடு இவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

தமிழகத் தொடர்பு

தமிழகத்தில் இருந்த சோழியர் என்ற பிராமண குலத்தவர், சாணக்கியர் தம் இனத்தைச் சார்ந்தவர் என்கின்றனர். இதே போன்று, அபிதசிந்தாமணி, சாணக்கியர் திராமிள இனத்தைச் சார்ந்தவர் என்று கூறுகிறது. (திராமிள என்பது திராவிட என்னுஞ் சொல்லின் மூலச் சொல்லாகக் கருதப்படுகிறது)

ஊடகம்

1990ல் தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் சாணக்கியா அவரது வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் எடுத்துக்காட்டியது.

  1. William H. Mott (1999). Military Assistance: An Operational Perspective. Greenwood. பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-30729-4. https://books.google.com/books?id=_e9c-IJHCksC&pg=PA61. 
  2. Mabbett, I. W. (1964). "The Date of the Arthaśāstra". Journal of the American Oriental Society (American Oriental Society) 84 (2): 162–169. doi:10.2307/597102. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-0279. 
  3. L. K. Jha, K. N. Jha (1998). "Chanakya: the pioneer economist of the world", International Journal of Social Economics 25 (2–4), p. 267–282.
  4. 4.0 4.1 Waldauer, C., Zahka, W.J. and Pal, S. 1996. Kauṭilya's Arthashastra: A neglected precursor to classical economics. Indian Economic Review, Vol. XXXI, No. 1, pp. 101–108.
  5. Tisdell, C. 2003. A Western perspective of Kauṭilya's Arthashastra: does it provide a basis for economic science? Economic Theory, Applications and Issues Working Paper No. 18. Brisbane: School of Economics, The University of Queensland.
  6. Sihag, B.S. 2007. Kauṭilya on institutions, governance, knowledge, ethics and prosperity. Humanomics 23 (1): 5–28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாணக்கியர்&oldid=2392293" இலிருந்து மீள்விக்கப்பட்டது