கஞ்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 34: வரிசை 34:


=== இனப்பெருக்கம் ===
=== இனப்பெருக்கம் ===
கஞ்சா செடி ஒழுங்கற்ற [[மலர்|மலர்களைக்]] கொண்ட தாவரம். இதன் [[மகரந்தத் தாள்கள்|மகரந்தக்கேசரம்]]/பூவிந்தகம் (staminate) ஆண் செடியிலும், [[சூல்வித்தகம்|சூலகம்]] (pistillate) பெண் செடியிலும் தனித்தனியே தோன்றும்.<ref name="lebel1997">{{cite journal|doi=10.1016/S1360-1385(97)01012-1|title=Genetics of sex determination in flowering plants|year=1997|last1=Lebel-Hardenack|first1=Sabine|last2=Grant|first2=Sarah R.|journal=Trends in Plant Science|volume=2|issue=4|pages=130–6}}</ref> இந்த நிலை வழக்கத்திற்கு மாறான ஒன்றெல்லாம் இல்லை. ஆனாலும், தனித்தனிச் செடிகளும் ஆண் பெண் இரு வகையான மலர்களையும் கொண்டிருக்கும்.<ref name="moliterni2005">{{cite journal|doi=10.1007/s10681-004-4758-7|title=The sexual differentiation of Cannabis sativa L.: A morphological and molecular study|year=2004|last1=Moliterni|first1=V. M. Cristiana|last2=Cattivelli|first2=Luigi|last3=Ranalli|first3=P.|last4=Mandolino|first4=Giuseppe|journal=Euphytica|volume=140|pages=95–106}}</ref> ஓரில்லமுள்ள (monoecious) செடிகள் பொதுவாக இருபாலிகள் ("hermaphrodites") என்று அழைக்கப்படுகின்றன. கச்சிதமான ஓர் இருபாலி (பொதுவாகக் குறைவாகவே காணப்படும்) என்பது ஒரே மலரில் மகரந்தத்தையும் சூலகத்தையும் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும். அதே வேளையில், ஓரில்லமுள்ள செடிகள் ஆண் மலர்களையும் பெண் மலர்களையும் ஒரே செடியில் வெவ்வேறு இடங்களில் கொண்டிருக்கும். ஆண் மலர்கள் பொதுவாக [[:wikt:panicle}கூட்டுப் பூத்திரள்]] அமைவையும், பெண் மலர்கள் [[:wikt:raceme|நுனிவளர் பூந்துணரையும்]] கொண்டிருக்கும்.<ref name="bouquet1950">Bouquet, R. J. 1950. [http://wayback.archive.org/web/20071111115805/http://www.unodc.org/unodc/bulletin/bulletin_1950-01-01_4_page003.html ''Cannabis'']. [[United Nations Office on Drugs and Crime]]. Retrieved on 23 February 2007</ref> "மிகவும் முந்திய காலகட்டத்திலேயே சீனர்கள் கஞ்சா செடி இருபால் தாவரம் என்று உணர்ந்துள்ளனர்".<ref>Li Hui-Lin (1973). "The Origin and Use of ''Cannabis'' in Eastern Asia: Linguistic-Cultural Implications", ''Economic Botany'' 28.3: 293–301, p. 294.</ref> மேலும், எர்யா எனும் அகரமுதலி (கிட்டத்தட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) ''க்சி / xi'' [[Wikt:枲|枲]] என்பதை "ஆண் ''கஞ்சா''" என்றும் ''ஃபு / fu'' [[Wikt:莩|莩]] என்பதைப் (அல்லது ''யு / ju'' [[Wikt:苴|苴]]) "பெண் ''கஞ்சா''" என்றும் வரையறுத்துள்ளது.<ref>13/99 and 13/133. In addition, 13/98 defined ''fen'' 蕡 "''Cannabis'' inflorescence" and 13/159 ''bo'' 薜 "wild ''Cannabis''".</ref>
கஞ்சா செடி ஒழுங்கற்ற [[மலர்|மலர்களைக்]] கொண்ட தாவரம். இதன் [[மகரந்தத் தாள்கள்|மகரந்தக்கேசரம்]]/பூவிந்தகம் (staminate) ஆண் செடியிலும், [[சூல்வித்தகம்|சூலகம்]] (pistillate) பெண் செடியிலும் தனித்தனியே தோன்றும்.<ref name="lebel1997">{{cite journal|doi=10.1016/S1360-1385(97)01012-1|title=Genetics of sex determination in flowering plants|year=1997|last1=Lebel-Hardenack|first1=Sabine|last2=Grant|first2=Sarah R.|journal=Trends in Plant Science|volume=2|issue=4|pages=130–6}}</ref> இந்த நிலை வழக்கத்திற்கு மாறான ஒன்றெல்லாம் இல்லை. ஆனாலும், தனித்தனிச் செடிகளும் ஆண் பெண் இரு வகையான மலர்களையும் கொண்டிருக்கும்.<ref name="moliterni2005">{{cite journal|doi=10.1007/s10681-004-4758-7|title=The sexual differentiation of Cannabis sativa L.: A morphological and molecular study|year=2004|last1=Moliterni|first1=V. M. Cristiana|last2=Cattivelli|first2=Luigi|last3=Ranalli|first3=P.|last4=Mandolino|first4=Giuseppe|journal=Euphytica|volume=140|pages=95–106}}</ref> ஓரில்லமுள்ள (monoecious) செடிகள் பொதுவாக இருபாலிகள் ("hermaphrodites") என்று அழைக்கப்படுகின்றன. கச்சிதமான ஓர் இருபாலி (பொதுவாகக் குறைவாகவே காணப்படும்) என்பது ஒரே மலரில் மகரந்தத்தையும் சூலகத்தையும் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும். அதே வேளையில், ஓரில்லமுள்ள செடிகள் ஆண் மலர்களையும் பெண் மலர்களையும் ஒரே செடியில் வெவ்வேறு இடங்களில் கொண்டிருக்கும். ஆண் மலர்கள் பொதுவாக [[:wikt:panicle|கூட்டுப் பூத்திரள்]] அமைவையும், பெண் மலர்கள் [[:wikt:raceme|நுனிவளர் பூந்துணரையும்]] கொண்டிருக்கும்.<ref name="bouquet1950">Bouquet, R. J. 1950. [http://wayback.archive.org/web/20071111115805/http://www.unodc.org/unodc/bulletin/bulletin_1950-01-01_4_page003.html ''Cannabis'']. [[United Nations Office on Drugs and Crime]]. Retrieved on 23 February 2007</ref> "மிகவும் முந்திய காலகட்டத்திலேயே சீனர்கள் கஞ்சா செடி இருபால் தாவரம் என்று உணர்ந்துள்ளனர்".<ref>Li Hui-Lin (1973). "The Origin and Use of ''Cannabis'' in Eastern Asia: Linguistic-Cultural Implications", ''Economic Botany'' 28.3: 293–301, p. 294.</ref> மேலும், எர்யா எனும் அகரமுதலி (கிட்டத்தட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) ''க்சி / xi'' [[Wikt:枲|枲]] என்பதை "ஆண் ''கஞ்சா''" என்றும் ''ஃபு / fu'' [[Wikt:莩|莩]] என்பதைப் (அல்லது ''யு / ju'' [[Wikt:苴|苴]]) "பெண் ''கஞ்சா''" என்றும் வரையறுத்துள்ளது.<ref>13/99 and 13/133. In addition, 13/98 defined ''fen'' 蕡 "''Cannabis'' inflorescence" and 13/159 ''bo'' 薜 "wild ''Cannabis''".</ref>


==பயன்கள்==
==பயன்கள்==

13:21, 23 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

கஞ்சா
கஞ்சா தாவரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
ரோசால்ஸ்
குடும்பம்:
கேனபேசியே
பேரினம்:
கேனபிஸ்

இனங்கள்

கேனபிஸ் சட்டைவா L.[1]
கேனபிஸ் இண்டிக்கா indica Lam. (putative)[1]
கேனபிஸ் ருடேரலிஸ் Janisch. (putative)

கஞ்சா (Cannabis) (/ˈkænəbɪs/; Cán-na-bis) கேனபேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். இந்த பேரினத்தில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை இன்னும் அறியப்படாத ஒன்று. ஆனால், மூன்று முதன்மையான சிற்றினங்களை உள்ளடக்கும், அவை, கேனபிசு சட்டைவா (Cannabis sativa), கேனபிசு இண்டிக்கா (Cannabis indica), மற்றும் கனாபிசு ருடேராலிசு (Cannabis ruderalis). இந்த மூன்றும் C. சட்டைவா எனும் சிற்றினத்துள் உள்ள துணைஇனங்களாகக் கொள்ளப்படலாம்; அல்லது மூன்றும் C. சட்டைவா எனும் ஒரு சிற்றினத்தின் மூன்று வெவ்வேறு தனித்த சிற்றினமாகவும் கருதப்படலாம்.[2][3][4][5] இந்தப் பேரினம் மத்திய ஆசியாவையும் இந்தியத் துணைக்கண்டத்தையும் தாய் நாடுகளாகக் கொண்டவை.[6]

நார்க்கஞ்சா செடியின் நாருக்காகவும், நார்க்கஞ்சா எண்ணெய், மருத்துவப் பயன்பாடுகள், மற்றும் பொழுதுபோக்கு போதைப் பொருளாகவும் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலக நார்க்கஞ்சா பொருள்கள், அதிக அளவில் நார் உற்பத்தி செய்யும் கஞ்சாச் செடிகளிலிருந்து செய்யப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் அவையின் போதைப்பொருள் சட்டத்தைக் கடைபிடிக்கும் வகையில், கஞ்சா செடியின் உளத்தூண்டல் கூறான டெட்ராஹைட்ரோகனாபினால் (THC) குறைந்த அளவு கொண்டிருக்கும் வகையில் சில கஞ்சா இரகங்கள்/வகைகள் இனப்பெருக்கப்படுகின்றன. பல செடிகளும் அதிக அளவு டிஎச்சி/THC (கனாபினாய்டுகள்) தருமாறு தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் (selective breeding) செய்யப்படுகின்றன. இந்த டிஎச்சி ஆனது கஞ்சா செடியின் மலர்களைப் பதப்படுத்தி பெறப்படுகிறது. இன்னும் பல சேர்மங்களான, கசீசு (hashish), கசீசு எண்ணெய் (hash oil) போன்றவையும் இந்தச் செடியிலிருந்து பெறப்படுகின்றது.[7]

2013ஆம் ஆண்டு, உலக அளவில், 60,400 கிலோகிராம் கஞ்சா சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்யப்பட்டது.[8] 2014இல் கிட்டத்தட்ட 182.5 மில்லியன் கஞ்சா பயனாளர்கள் இருந்தனர் (15-64 வயதுக்குட்பட்ட உலக மக்கள் தொகையில் 3.8%)[9] இந்த விழுக்காட்டில் 1998-க்கும் 2014க்கும் இடையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.[9]

விபரிப்பு

A thicket of wild cannabis in Islamabad, Pakistan.
Cannabis growing as weeds at the foot of Dhaulagiri, Nepal.

கஞ்சா ஈரிலில்லமுள்ள, ஓராண்டுக்குரிய பூக்கும் தாவரமாகும். இது ரம்பப்பல் வடிவுடனான கைவடிவக் கூட்டிலைகள் கொண்டது. .[10] முதலாவது இலைச்சோடி தனிச் சிற்றிலைகளைக் கொண்டமைய சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து பதிமூன்று சிற்றிலைவரை அதிகரித்துச் செல்லும். பொதுவாக 7-9 இலைகள் காணப்படும். இனங்களையும் வாழும் சூழலையும் பொறுத்து இவ்வெண்ணிக்கை மாறுபடும். பூக்கும் நிலையிலுள்ள தாவரமொன்றில் மீண்டும் சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து மீண்டும் தனிச்சிற்றிலையில் முடியும். இவற்றின் இலைகள் கொண்டுள்ள தனித்துவமான வலையுரு நரம்பமைப்பு கஞ்சாத் தாவரத்தை புதியவர்களும் இலகுவாக இனங்காண உதவுகின்றது.

கஞ்சா இலையின் புறநரம்புகளைக் காட்டும் அமைப்பு

இதன் ஒவ்வொரு பிளவுபட்ட இலையும் பொதுனாக இருப்பது போல அதன் ஒவ்வொருபிளவின் எல்லைவரைச் செல்லும் தனித்தனி நடுநரம்பைக் கொண்டிருக்கும். கஞ்சா செடியின் சிறு அளவு மாதிரிகளை நுண்ணோக்கி மூலம் எளிதில் அடையாளம் காணலாம். இதற்கு இலைச் செல்களும் இலையின் வடிவமும் பெரிதும் உதவும். ஆனால், அதற்கு தனித் திறனும் கருவியும் வேண்டும்.[11]

இச்செடி, இமயமலைத் தொடரின் வடமேற்கு பகுதிகளில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[சான்று தேவை] இது நார்க்கஞ்சா/hemp என்றும் அழைக்கபடும். ஆனால், நார்க்கஞ்சா எனும் பெயர் பொதுவாக போதைப்பொருளற்ற பிற பயன்பாடுகளில் கஞ்சா செடியைப் பயன்படுத்தும்போது மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

இனப்பெருக்கம்

கஞ்சா செடி ஒழுங்கற்ற மலர்களைக் கொண்ட தாவரம். இதன் மகரந்தக்கேசரம்/பூவிந்தகம் (staminate) ஆண் செடியிலும், சூலகம் (pistillate) பெண் செடியிலும் தனித்தனியே தோன்றும்.[12] இந்த நிலை வழக்கத்திற்கு மாறான ஒன்றெல்லாம் இல்லை. ஆனாலும், தனித்தனிச் செடிகளும் ஆண் பெண் இரு வகையான மலர்களையும் கொண்டிருக்கும்.[13] ஓரில்லமுள்ள (monoecious) செடிகள் பொதுவாக இருபாலிகள் ("hermaphrodites") என்று அழைக்கப்படுகின்றன. கச்சிதமான ஓர் இருபாலி (பொதுவாகக் குறைவாகவே காணப்படும்) என்பது ஒரே மலரில் மகரந்தத்தையும் சூலகத்தையும் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும். அதே வேளையில், ஓரில்லமுள்ள செடிகள் ஆண் மலர்களையும் பெண் மலர்களையும் ஒரே செடியில் வெவ்வேறு இடங்களில் கொண்டிருக்கும். ஆண் மலர்கள் பொதுவாக கூட்டுப் பூத்திரள் அமைவையும், பெண் மலர்கள் நுனிவளர் பூந்துணரையும் கொண்டிருக்கும்.[14] "மிகவும் முந்திய காலகட்டத்திலேயே சீனர்கள் கஞ்சா செடி இருபால் தாவரம் என்று உணர்ந்துள்ளனர்".[15] மேலும், எர்யா எனும் அகரமுதலி (கிட்டத்தட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) க்சி / xi என்பதை "ஆண் கஞ்சா" என்றும் ஃபு / fu என்பதைப் (அல்லது யு / ju ) "பெண் கஞ்சா" என்றும் வரையறுத்துள்ளது.[16]

பயன்கள்

கஞ்சா நீண்ட காலமாக நார்ப் பொருள் உற்பத்தி, எண்ணெய் வித்து, மற்றும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைத்தொழில் ரீதியில் நார் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் சில வர்க்கங்கள் போதையூட்டும் பொருட்களாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் காணப்படும் வேதிப்பொருளான THC (Δ9- tetrahydrocannabinol), இவ்வியல்புக்குக் காரணமாகும். சிவகை என அழைக்கப்படும் கஞ்சா பக்தி கலந்த போதையை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; grin என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Classification Report". United States Department of Agriculture. பார்க்கப்பட்ட நாள் 13 February 2017.
  3. "Indica, Sativa, Ruderalis – Did We Get It All Wrong?". The Leaf Online. பார்க்கப்பட்ட நாள் 13 February 2017.
  4. "Species of Cannabis". GRIN Taxonomy. பார்க்கப்பட்ட நாள் 13 February 2017.
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; GuyWhittle2004 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. A. ElSohly, Mahmoud (2007). Marijuana and the Cannabinoids. Humana Press. பக். 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-58829-456-0. https://books.google.com/books?id=fxoJPVNKYUgC&pg=PA8#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2 May 2011. 
  7. Erowid. 2006. Cannabis Basics. Retrieved on 25 February 2007
  8. (pdf) Narcotic Drugs 2014. INTERNATIONAL NARCOTICS CONTROL BOARD. 2015. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789210481571. https://www.incb.org/documents/Narcotic-Drugs/Technical-Publications/2014/Narcotic_Drugs_Report_2014.pdf. 
  9. 9.0 9.1 "Statistical tables" (pdf). World Drug Report 2016. Vienna, Austria. May 2016. பக். xiv, 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-1-057862-2. http://www.unodc.org/doc/wdr2016/WORLD_DRUG_REPORT_2016_web.pdf. பார்த்த நாள்: 1 August 2016. 
  10. "Leaf Terminology (Part 1)". Waynesword.palomar.edu. பார்க்கப்பட்ட நாள் 2011-02-17.
  11. Watt, John Mitchell; Breyer-Brandwijk, Maria Gerdina: The Medicinal and Poisonous Plants of Southern and Eastern Africa 2nd ed Pub. E & S Livingstone 1962
  12. Lebel-Hardenack, Sabine; Grant, Sarah R. (1997). "Genetics of sex determination in flowering plants". Trends in Plant Science 2 (4): 130–6. doi:10.1016/S1360-1385(97)01012-1. 
  13. Moliterni, V. M. Cristiana; Cattivelli, Luigi; Ranalli, P.; Mandolino, Giuseppe (2004). "The sexual differentiation of Cannabis sativa L.: A morphological and molecular study". Euphytica 140: 95–106. doi:10.1007/s10681-004-4758-7. 
  14. Bouquet, R. J. 1950. Cannabis. United Nations Office on Drugs and Crime. Retrieved on 23 February 2007
  15. Li Hui-Lin (1973). "The Origin and Use of Cannabis in Eastern Asia: Linguistic-Cultural Implications", Economic Botany 28.3: 293–301, p. 294.
  16. 13/99 and 13/133. In addition, 13/98 defined fen 蕡 "Cannabis inflorescence" and 13/159 bo 薜 "wild Cannabis".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சா&oldid=2386669" இலிருந்து மீள்விக்கப்பட்டது