விஸ்வநாத தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 29: வரிசை 29:


[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]

12:37, 9 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

விஸ்வநாத தாஸ்
பிறப்புவிஸ்வநாத தாஸ்
(1886-06-16)16 சூன் 1886 [1]
சிவகாசி
இறப்புதிசம்பர் 31, 1940(1940-12-31) (அகவை 54)
சென்னை

விஸ்வநாத தாஸ் (1986-1940) இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் நாடக கலைஞரும் ஆவார்.[2] சிவகாசியில் 1886-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சுப்ரமணியம் - ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த விஸ்வநாத தாஸ்,குரல் வளமும்,கலை ஆர்வமும் கொண்டிருந்ததால்,மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.தேசிய உணர்வால் உந்தப்பட்ட அவர்,மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கையில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார்.மேடை நாடகங்கள் வாயிலாக,மக்களிடையே சுதந்திர உணர்வை தீவிரமாக வளர்த்ததால்,வீரத் தியாகி என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

“கொக்கு பறக்குதடி பாப்பா” என்பது உள்ளிட்ட அவரது பாடல்கள்,காங்கிரஸ் கட்சியின் விடுதலை போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டன.ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து அவர் எழுதிய, ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது.புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத்தியது இவரது சிறப்பம்சம் என்று ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது.விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதால் பலமுறை ஆங்கிலேய அரசால் சிறையில் அடைக்கப்பட்டார்.

1940-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி,தனது 54-வது வயதில்,முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார்.

சுதந்திர போராட்ட தியாகியும்,மேடை நாடகக் கலைஞருமான எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸின் பிறந்த தினம் சூன் 16 அன்று கொண்டாடப்படுகிறது.[3] [4]

மேற்கோள்கள்

  1. "தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்த தினம் இன்று". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2017.
  2. "Reducing national icons to caste leaders". THE HINDU. பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2017.
  3. "தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் விழா". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2017.
  4. "Viswanatha Das remembered". THE HINDU. பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2017.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்வநாத_தாஸ்&oldid=2359976" இலிருந்து மீள்விக்கப்பட்டது