அனுராதா டி கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"== '''அனுராதா டி.கே''' == அனுரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 104: வரிசை 104:


பகுப்பு: [[இந்திய பெண் விஞ்ஞானிகள்]]
பகுப்பு: [[இந்திய பெண் விஞ்ஞானிகள்]]

[[பகுப்பு:திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

17:30, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

அனுராதா டி.கே

அனுராதா டி.கே. ஒரு இந்திய விஞ்ஞானி . இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் என்ற பிரிவின் திட்ட இயக்குனர். அவர் GSAT-12 மற்றும் GSAT-10 செயற்கைக்கோள்களை செலுத்துவதில் பணிபுரிந்தார். 1982 இல் விண்வெளி நிறுவனத்தில் இணைந்த இஸ்ரோவின் மூத்த பெண் விஞ்ஞானி ஆவார். இஸ்ரோவில் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய முதல் பெண் ஆவார்.

அனுராதா டி கே
பிறப்புவார்ப்புரு:பிறந்த வருடம் மற்றும் வயது
பெங்களூர், மைசூர் மாநிலம், இந்தியா
வாழிடம்பெங்களூர், கர்நாடகா, இந்தியா
தேசியம்இந்தியன்
பணியிடங்கள்இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
கல்வி கற்ற இடங்கள்விஸ்வரேஸ்வரய்யா பொறியியல் பல்கலைக்கழக கல்லூரி

பிறப்பும் படிப்பும்:

அனுராதா டி கே மைசூர் மாநிலத்தில் உள்ள (இப்போது கர்நாடகா) பெங்களூரில், 1961 இல் பிறந்தார். இவர் பெங்களூரில் உள்ள விஸ்வரேஸ்வரய்யா பொறியியல் கல்லூரியில் மின்னணு துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். அவரது வகுப்பு தோழர்களில் பலர் போலல்லாமல், அவர் தனது தொழிலை தொடர இந்தியாவில் தங்க தீர்மானித்தார்.

தொழில்:

அனுராதா டி.கே. இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் இந்திய புவியியல்சார் செயற்கைக்கோள் பிரிவு திட்ட இயக்குனராக பணியாற்றுகிறார்.இவர் பூகோள-ஒத்திசைவான செயற்கைக்கோள்களின் பிரிவில்பணிபுரிகிறார். இவை தொலைத் தொடர்பு மற்றும் தரவு இணைப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியமானவை.

பல இந்திய விண்வெளித் திட்டங்களில் அவர் ஒரு முன்னணி நபராக இருந்துள்ளார். அனுராதாவின் பங்கு, ஜூலை 15, 2011 அன்று சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSAT-12 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பியதே ஆகும், அவர் 20 பொறியாளர்களின் தொழில்நுட்பக் குழுவினை மேற்பார்வையிட்டார். GSAT-12 உடன் இணைந்து பணியாற்றிய பிறகு, அனுராதா டி.கே. 2012 செப்டம்பர் மாதத்தில் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான GSAT-10 தலைமையேற்று அனுப்பினார்.

திட்ட இயக்குனராக, அவர் GSAT-9, GSAT-17 மற்றும் GSAT-18 தொடர்பு செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்தினார். இந்திய தொலைதூர உணர்திறன் நிறுவனம் மற்றும் இந்திய மண்டல ஊடுருவல் செயற்கைகோள் திட்டங்களுக்கான திட்ட மேலாளராக, மண்டல திட்ட இயக்குநராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அவரது சிறப்பு செயற்கைக்கோள் புதுப்பிப்பு அமைப்புகள் ஆகும், இது விண்வெளியில் இருக்கும்போது ஒரு செயற்கைக்கோள் செயல்திறனைக் கண்காணிக்கும்.


விருதுகள்:

  • விண்வெளி அறிவியல் துறையில் சிறந்த சேவைகளுக்கான விண்வெளி தங்க பதக்கம் விருது 2003 ல் இந்திய வானியல் சங்கத்தால் வழங்கப்பட்டது.
  • 2011ல் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் மூலம் சுமன் சர்மா விருது வழங்கப்பட்டது.
  • 2012 ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பு விருது.
  • GSAT -12 ல் பணியாற்றியதற்காக குழு தலைவருக்கான விருது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்:

"The women scientists who took India into space". BBC News. 2016-12-12. Retrieved 2017-03-04.

^ Jump up to: a b c "Meet ISRO's 'Space Girls'". Deccan Herald. Retrieved 2017-03-04.

Jump up ^ info@biharprabha.com, Bihar Reporter :. "Meet the lady behind success of RISAT I". The Biharprabha News. Retrieved 2017-04-04.

^ Jump up to: a b c ISS. "Reaching out to the skies". indianspacestation.com. Retrieved 2017-03-04.

^ Jump up to: a b "T K ANURADHA". 2014-02-21. Retrieved 2017-04-04.


Jump up ^ "India’s rocket women". Deccan Herald. 2017-02-26. Retrieved 2017-03-04.

^ Jump up to: a b c "Smt T K Anuradha – IEEE WIE Global Summit 2016". wiesummit.ieeer10.org. Retrieved 2017-03-04.

Jump up ^ "ISRO successfully launches latest communication satellite GSAT-12". The Economic Times. Retrieved 2017-04-04.

^ Jump up to: a b "ISRO banks on womanpower for GSAT-12". Retrieved 2017-03-04.

^ Jump up to: a b "Only the sky is the limit". www.mea.gov.in. Retrieved 2017-03-04.

Jump up ^ "Only the sky is the limit". www.mea.gov.in. Retrieved 2017-03-04.

Jump up ^ "Woman's hand in India's latest satellite". Sify. Retrieved 2017-04-04.


பகுப்பு: இந்திய பெண் விஞ்ஞானிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_டி_கே&oldid=2341820" இலிருந்து மீள்விக்கப்பட்டது