மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
.
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:HitachiJ100A.jpg|right|thumb|200px|ஹிட்டாச்சி ஜே100 (Hitachi J100) மாற்றவல்ல அதிர்வு செலுத்த அடிச்சட்டம்.]]
[[படிமம்:HitachiJ100A.jpg|right|thumb|200px|ஹிட்டாச்சி ஜே100 (Hitachi J100) மாற்றவல்ல அதிர்வு செலுத்த அடிச்சட்டம்.]]
[[File:Arduino ftdi chip-1.jpg|thumb|right|260px|[[மேற்பரப்பு நிறுவல் தொழில்நுட்பம்|மேற்பரப்பில் அமைந்த]] மின்னணுவியல் உறுப்புகள்]]
'''இலத்திரனியல்''' (''electronics'') அல்லது '''மின்னணுவியல்''' என்பது [[மின்குமிழ்]], [[கடிகாரம்]], [[தொலைபேசி]], [[வானொலி]], [[தொலைக்காட்சி]], [[கணினி]] என அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். தகவல்களை சேமிக்க, முறைவழியாக்க (process) இலத்திரனியல் பயன்படுகிறது. அதாவது, மின்சக்தியைக் கொண்டு சமிக்கைகளை உருவாக்கலாம். சமிக்கைகளாக தகவல்களை பிரதிசெய்யலாம். இந்த சமிக்கைகளை அல்லது தகவல்களை இலத்திரனியல் கருவிகளால் கணிக்கலாம்.
'''மின்னணுவியல் (Electronics)''' மின்னணுக்கள் அல்லது மின்னன்கள் வழி மின் ஆற்றலைக் கட்டுபடுத்தும் அறிவியல் புலமாகும். இலத்திரனியல் அல்லது மின்னணுவியல் [[மின்குமிழ்]], [[கடிகாரம்]], [[தொலைபேசி]], [[வானொலி]], [[தொலைக்காட்சி]], [[கணினி]] போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்குப் பயன்படும் அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். மின்னணுவியல் தகவல்களைத் தேக்கவும் கையாளவும் பயன்படுகிறது. அதாவது, மின்ஆற்றலைக் கொண்டு மின்குறிகைகளை உருவாக்கலாம். மின்குறிகைகளால் தகவல்களை பதிலீடு செய்யலாம். இந்த மின்குறிகைகளை அல்லது தகவல்களை மின்னணுவியல் கருவிகளால் தேக்கலாம் அல்லது கணிக்கலாம்.


இலத்திரனியலில் செயல்படு மின்கூறுகளான [[வெற்றிடக் குழல்]]கள், [[திரிதடையம்|திரிதடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[தொகுப்புச் சுற்று|நுண் தொகுப்புச்சுற்று]]க்களும், செயலறு மின்கூறுகளான [[மின்தடையம்]], [[மின்தேக்கி]], [[மின்தூண்டி]]களும் ஒன்றிணைந்த [[மின்சுற்று]]கள் பெரும் பங்காற்றுகின்றன. செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் இலத்திரனோட்டத்தை கட்டுப்படுத்தும் பண்பும் நலிவுற்ற சமிக்கைகளை வலிப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், [[தொலைத்தொடர்பு]], மற்றும் சமிக்கை முறைவழியாக்கம் துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இலத்திரனியல் கருவிகள் [[நிலைமாற்றி]]களாகப் பயன்படுத்தகூடும்; இது எண்ணிம தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. [[மின்சுற்றுப் பலகை]]கள் போன்ற ஒன்றிணைப்புத் தொழில்நுட்பங்கள், இலத்திரனியல் பொதியல் தொழில்நுட்பங்கள், மற்றும் பல்வேறு தொடர்பு கட்டமைப்புகள் மின்சுற்று செயல்பாட்டை முழுமையாக்கி கலவையான மின்கூறுகள் முறையான [[ஒருங்கியம்|ஒருங்கியமாக]] செயல்படச் செய்கின்றன.
இந்தப் புலத்தில் செயல்படு மின்கூறுகளான [[வெற்றிடக் குழல்]]கள், [[திரிதடையம்|திரிதடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[தொகுப்புச் சுற்று|நுண் தொகுப்புச்சுற்று]]க்களும், செயலறு மின்கூறுகளான [[மின்தடையம்]], [[மின்தேக்கி]], [[மின்தூண்டி]]களும் ஒன்றிணைந்த [[மின்சுற்று]]கள் பெரும் பங்காற்றுகின்றன. செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் மின்னன்களின் பாய்வைக் கட்டுப்படுத்தும் பண்பும் மிகநலிவுற்ற குறிகை அலைகளைக் கூட வலுப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், [[தொலைத்தொடர்பு]], குறிகைச் செயலாக்கம் அல்லது பதப்படுத்தல் ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இக் கருவிகளை [[நிலைமாற்றி]]களாகவும் பயன்படுத்தலாம்; இப்பயன்பாடு எண்ணிமத் தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. [[மின்சுற்றுப் பலகை]]கள் போன்ற ஒருங்கிணைப்புச் சுற்றுத் தொழில்நுட்பங்கள், பொதியல்சுற்றுத் தொழில்நுட்பங்கள், பல்வேறு தொடர்புக் கட்டமைப்புகள் ஆகியவை மின்சுற்றுச் செயல்பாட்டை முழுமையாக்கிக் கலவையான மின்கூறுகள்வழி [[ஒருங்கியம்|ஒருங்கியமாக]] அல்லது ஒருங்கு அமைப்பாகச் செயல்படச் செய்கின்றன.


== மின்னியல், இலத்திரனியல், இயற்பியல் ==
== மின்னியல், இலத்திரனியல், இயற்பியல் ==

14:14, 11 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

ஹிட்டாச்சி ஜே100 (Hitachi J100) மாற்றவல்ல அதிர்வு செலுத்த அடிச்சட்டம்.
மேற்பரப்பில் அமைந்த மின்னணுவியல் உறுப்புகள்

மின்னணுவியல் (Electronics) மின்னணுக்கள் அல்லது மின்னன்கள் வழி மின் ஆற்றலைக் கட்டுபடுத்தும் அறிவியல் புலமாகும். இலத்திரனியல் அல்லது மின்னணுவியல் மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்குப் பயன்படும் அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். மின்னணுவியல் தகவல்களைத் தேக்கவும் கையாளவும் பயன்படுகிறது. அதாவது, மின்ஆற்றலைக் கொண்டு மின்குறிகைகளை உருவாக்கலாம். மின்குறிகைகளால் தகவல்களை பதிலீடு செய்யலாம். இந்த மின்குறிகைகளை அல்லது தகவல்களை மின்னணுவியல் கருவிகளால் தேக்கலாம் அல்லது கணிக்கலாம்.

இந்தப் புலத்தில் செயல்படு மின்கூறுகளான வெற்றிடக் குழல்கள், திரிதடையங்கள், இருமுனையங்கள், நுண் தொகுப்புச்சுற்றுக்களும், செயலறு மின்கூறுகளான மின்தடையம், மின்தேக்கி, மின்தூண்டிகளும் ஒன்றிணைந்த மின்சுற்றுகள் பெரும் பங்காற்றுகின்றன. செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் மின்னன்களின் பாய்வைக் கட்டுப்படுத்தும் பண்பும் மிகநலிவுற்ற குறிகை அலைகளைக் கூட வலுப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், தொலைத்தொடர்பு, குறிகைச் செயலாக்கம் அல்லது பதப்படுத்தல் ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இக் கருவிகளை நிலைமாற்றிகளாகவும் பயன்படுத்தலாம்; இப்பயன்பாடு எண்ணிமத் தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. மின்சுற்றுப் பலகைகள் போன்ற ஒருங்கிணைப்புச் சுற்றுத் தொழில்நுட்பங்கள், பொதியல்சுற்றுத் தொழில்நுட்பங்கள், பல்வேறு தொடர்புக் கட்டமைப்புகள் ஆகியவை மின்சுற்றுச் செயல்பாட்டை முழுமையாக்கிக் கலவையான மின்கூறுகள்வழி ஒருங்கியமாக அல்லது ஒருங்கு அமைப்பாகச் செயல்படச் செய்கின்றன.

மின்னியல், இலத்திரனியல், இயற்பியல்

மின்னணுவியல் என்பது மின்சாரம், மின் இயந்திரவியல் ஆகியவற்றிலிருந்து மாறானது; மின்னியல் பொது வழக்கில் மின்சார உற்பத்தி, வழங்கல், நிலைமாற்றல், சேமிப்பு மற்றும் மின்சக்தியிலிருந்து பிற ஆற்றல் வடிவங்களுக்கும் மற்ற ஆற்றல் சக்திகளிலிருந்து மின்சக்திக்கு மாற்றுவதையும் விவரிக்கின்றன. இவற்றின் கூறுகளாக மின்கம்பிகள், மின் இயக்கிகள், மின்னியற்றிகள், மின்கலங்கள், நிலைமாற்றிகள், உணாத்திகள், மின்மாற்றிகள், மின்தடையங்கள் உள்ளன. இந்த வேறுபாடு மின் பெருக்கிகள் மூலம் நலிவுற்ற சமிக்கைகளை வலிவேற்றப் பயன்படுத்தத் தொடங்கிய 1906இல் இருந்து துவங்கியது. 1950 வரை இதன் முதன்மை பயன்பாடு வானொலி ஒலிபரப்பிகள், வானொலிப்பெட்டிகள், வெற்றிடக் குழல்களிலேயே இருந்தமையால் இத்துறை "வானொலி தொழில்நுட்பம்" என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இன்று, பெரும்பாலான மின்னணுவியல் கருவிகள் குறைக்கடத்தி மின்கூறுகளை பயன்படுத்தி இலத்திரன்களைக் கட்டுப்படுத்துகின்றன. குறைகடத்தி கருவிகளின் அறிவியலும் தொழில்நுட்பமும் திண்மப்பொருள் இயற்பியலின் அங்கமாகக் கருதப்படுகிறது; நடைமுறை இடர்களுக்குத் தீர்வாக இலத்திரன் மின்சுற்றுக்களின் வடிவாக்கமும் உருவாக்கமும் மின்னணுவியல் பொறியியல் துறையாக அழைக்கப்படுகிறது.

இலத்திரனியல் வரலாறு

இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவி அல்லது கூறு திரிதடையம். அதன் கண்டுபிடிப்பின் பின்னரே இலத்திரனியல் வளர்ச்சி பெற்றது.

மின்னணுக் கருவிகளும் கூறுகளும்

மின்னணுக் கூறுகள்

மின்னணுக் கூறு என்பது ஒரு இலத்திரனியல் அமைப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அவ்வமைப்பு செயல்பட ஏதுவாக இலத்திரன்களையோ அதன் தொடர்புடைய புலங்களையோ பாதிக்கின்ற உளதாம் பொருளாகும். இக்கூறுகள் பொதுவாக மற்றக்கூறுகளுடன் குறிப்பிட்ட செயற்பாட்டை (காட்டாக பெருக்கி, வானொலி பெறும் கருவி, அல்லது அலையியற்றி) நிகழ்த்துமாறு இணைக்கப்பட்டிருக்கும். (பொதுவாக மின்சுற்றுப் பலகையில் பற்றவைக்கப்பட்டிருக்கும்.) மின்னணுக்கூறுகள் தனியாகவோ அல்லது சற்றே சிக்கலான ஒருங்கிணைந்த சில்லு போன்ற தொகுதிகளாகவோ பொதியப்படலாம். சில பரவலான மின்னணுக்கூறுகள்: மின்தேக்கிகள், மின்தூண்டிகள், மின்தடையங்கள், இருமுனையங்கள், திரிதடையங்கள் ஆகியனவாகும். மின்னணுக்கூறுகளை செயல்படு கூறுகள் என்றும் ( திரிதடையங்கள்,இருமுனையங்கள்) செயலறு கூறுகள் (மின்தடையங்கள்,மின்தேக்கிகள்) வகைப்படுத்தப்படுகின்றன.

வெற்றிடக் குழல்கள் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனிய கூறுகளில் ஒன்றாகும். இவை நடு1980கள் வரை முதன்மை செயல்படு கூறுகளாக இருந்தன.[1] 1980களிலிருந்து திண்மநிலைக் கருவிகள் இவற்றிற்கு மாற்றாக அமைந்துள்ளன. இன்றும் வெற்றிடக் குழல்கள் உயராற்றல் பெருக்கிகள், எதிர்முனைக் கதிர்க்குழாய்கள், வல்லுநர் ஒலிக்கருவிகள், நுண்ணலைக் கருவிகள் போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

மின்சுற்று வகைகள்

மின்சுற்றுக்களும் இலத்தினியக் கூறுகளும் இருவகையாகப் பிரிக்கப்படலாம்: அலைமருவி மற்றும் எண்மருவி. ஒரு குறிப்பிட்ட கருவியில் இவற்றில் ஏதேனும் ஒருவகையிலோ அல்லது இரண்டும் கலந்துமோ பயன்படுத்தப்படலாம்.

அலைமருவி மின்சுற்றுக்கள்

வானொலிப் பெட்டிகள் போன்ற பெரும்பாலான அலைமருவி இலத்தினிய சாதனங்கள் சில அடிப்படையான மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவற்றில் மின் அழுத்தத்தின் வீச்சு எவ்வித இடைவெளியும் இன்றி தொடர்ந்திருக்கும். எண்ணிம முறை (எண்மருவி)யில் மின் அழுத்தம் படிப்படியாக இடைவெளியுடன் இருக்கும். ஒரேஒரு இலத்தினியக் கூறு கொண்ட அலைமருவிச் சுற்றிலிருந்து பல கூறுகளை அடக்கிய சிக்கலான சுற்றுக்கள் வரை பல்லாயிரக்கணக்கான அலைமருவிச் சுற்றுக்கள் உள்ளன.

இவை சில நேரங்களில் நேரியல் சுற்றுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும் மின்னதிர்வு கலக்கிகள், அலைமாற்றிகள் போன்றவற்றில் இவை நேரியல் அல்லாத தன்மையைக் கொண்டுள்ளன.

அண்மைக்கால சுற்றுக்களில் முழுமையும் அலைமருவி சுற்றுக்கள் காணப்படுவதில்லை. பெரும்பாலும் எண்மச் சுற்றுக்களே காணப்படுகின்றன.சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே அலைமருவி முறையில் அமைக்கப்படுகின்றன; இவை கலப்பு மின்சுற்றுக்கள் எனப்படுகின்றன.

எண்மருவி மின்சுற்றுக்கள்

எண்மருவி சுற்றுக்களில் மின்னழுத்தம் பலதனித்தனி மதிப்புகளில் இருக்கும். காட்டாக, 1 வோல்ட், 1.5 வோல்ட், 2 வோல்ட் என்று பயன்படுத்தப்படும். இவற்றிற்கு இடையேயான 1.25 வோல்ட் போன்றவை இருக்காது. பூலியன் ஏரணம் என்ற கணிதவகையின் நிகழ் சார்பாள அமைப்பாக இவை விளங்குகின்றன. அனைத்து எண்ணிம கணினிகளும் இந்த ஏரணத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன.

பல எண்ணிம மின்சுற்றுக்கள் ஈரியல் எண்முறையில் இரண்டு மின்னழுத்த நிலைகளுடன், "0" மற்றும் "1" இயங்குகின்றன. பெரும்பாலும் ஏரணம் "0" கீழ்நிலை மின்னழுத்தமாகவும் ( "தாழ்" எனப்படும்) ஏரணம் "1" உயர்நிலை மின்னழுத்தமாகவும் ( "உயர்" எனப்படும்) உள்ளது. கணினிகள், இலத்திரனிய கைக்கடியாரங்கள், நிரலேற்பு தருக்கக் கட்டுப்படுத்திகள் எண்ணிம முறை மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுவன ஆகும்.

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னணுவியல்&oldid=2303283" இலிருந்து மீள்விக்கப்பட்டது