குருத்து ஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 80: வரிசை 80:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm குருத்து PART-2--ஆயுதங்களை ஏந்தி, கொலை மிரட்டலில் அதிகாரம் செலுத்தும் கூட்டத்தை கூண்டோடு எரிக்க தமிழ் தயங்காது என்று துணிவுடன் சொன்னார்.] [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm தமிழால் தீயின் நாக்குகள் பற்றிப் பிடிக்க முடியாத வாழை மட்டையையே பற்ற வைத்தவர் பட்டினத்தார்..] [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm இதயம் என்ற இரும்பை தமிழால் உருக்கி, உப்பாய்க் கிடந்த கரும்புக்குள் தேன் தமிழ் அறிவால் இனிப்பைக் கண்டு பிடித்து, உன்னதம் பெற்ற பட்டினத்தார் 14ம் – 15ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.] [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm பரதேசியாக அலைந்த பட்டினத்தாரின் வயிற்றில் இருந்த சீலை ஒரு நாள் அவிழ்கிறது. தன்னை வயிற்றில் கட்டி சுமந்தவள் இறந்துவிட்டாள் என்பது வயிற்றில் கட்டிய சீலை அவிழ்ந்தபோது தெரிகிறது.காடு மலைகளை தாண்டி கதறியபடி ஓடி வருகிறார்.] [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm தாயின் உடலில் இருந்த விறகையெல்லாம் எடுத்து வீசுகிறார்.. குளிர்ந்த வாழை மட்டையில் தாயின் உடலை கிடத்தி, முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே, அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே.. நானுமிட்ட தீ மூழ்க மூழ்கவே என்று பாடுகிறார்…] [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm அந்தத் தமிழ் கேட்டு, சுடலையில் கிடந்த வாழை மட்டை தீப்பிடித்து எரிகிறது.. அன்பு பெருக்கெடுத்து கண்களில் ஆறாய் ஓடுகிறது..] [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm தன் வினை தன்னைச் சுடும்.. ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்றபடி ஓட்டில் தூக்கி வீசுகிறார். வீடு தீப்பற்றி எரிகிறது.] [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm நஞ்சு மனத்துடன் கொல்ல வரும் சகோதரங்களை வீட்டோடு சேர்த்துக் கொழுத்துகிறது அவருடைய தமிழ்..] [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm ஊருஞ்சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல.. தேசத்திலே யாரும் சதமல்ல என்று எல்லா செல்லாக்காசுகளையும் வீசியெறிந்த வீரத்தமிழனாக அவர் வீதியில் நின்றார்.] [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm கழு மரத்தின் முன் நின்று, அவர் பாடிய தமிழில் கழுமரமே பற்றி எரிந்து சாம்பலாகிறது..] [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm ஆயுதங்களை ஏந்தி, கொலை மிரட்டலில் அதிகாரம் செலுத்தும் கூட்டத்தை கூண்டோடு எரிக்க தமிழ் தயங்காது என்று துணிவுடன் சொன்னார்.] [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm ஞாயிறு - ஆங்கிலிக்கன் சபை]
* [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm குருத்து ஞாயிறு - ஆங்கிலிக்கன் சபை]
* [http://www.greekorthodox.org.au/general/livinganorthodoxlife/liturgicalmeaningofholyweek/palmsunday குருத்து ஞாயிறு - ஆர்த்தடாக்ஸ் சபை]
* [http://www.greekorthodox.org.au/general/livinganorthodoxlife/liturgicalmeaningofholyweek/palmsunday குருத்து ஞாயிறு - ஆர்த்தடாக்ஸ் சபை]
* {{CathEncy|wstitle=Palm Sunday}}
* {{CathEncy|wstitle=Palm Sunday}}

22:38, 6 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

இயேசு ஆடம்பரமாக எருசலேமுக்குள் நுழைகிறார். விவிலிய ஓவியம். காலம்: 19ஆம் நூற்றாண்டு.

குருத்து ஞாயிறு (Palm Sunday) அல்லது குருத்தோலைத் திருவிழா என்பது இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்[1]. இது இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய ஞாயிறு நிகழும்.[2][3][4][5] இயேசு எருசலேமுக்குள் நுழைந்த நிகழ்ச்சியை நான்கு நற்செய்தியாளரும் விவரித்துள்ளனர். காண்க:

குருத்து ஞாயிறு: விவிலிய அடிப்படையும் பொருளும்

நற்செய்தி நூல்கள் தரும் தகவல்படி, இயேசு தாம் துன்புற்று இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன்னால் எருசலேம் நகருக்குள் மிகுந்த மாட்சிமையோடு நுழைந்தார்[6]. இயேசு ஒரு "கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமர்ந்து எருசலேமுக்குள் நுழைந்தார்." அவர் சென்ற வழியில் மக்கள் தங்கள் மேலுடைகளை விரித்தார்கள்; வேறு சிலர் இலைதழைகளைப் பரப்பினார்கள். அவர்கள்

என்று கூறி ஆர்ப்பரித்தனர்.[2][3][4] இப்பாடல் பழைய ஏற்பாட்டில் திருப்பாடல்கள் என்னும் நூலில் காணப்படுவது (காண்க: திபா 118:25-26).

யோவான் நற்செய்திப்படி மக்கள் "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவுக்கு எதிர்கொண்டுபோனார்கள்" (காண்க: யோவான் 12:13). இவ்வாறு, குருத்தோலைகளை அசைத்து, வழியில் துணிகளை விரித்து, இலைதழைகளைப் பரப்புவது ஓர் ஆழ்ந்த பொருள் படைத்த செயலாக மாறியது. இயேசுவை மக்கள் கடவுள்பெயரால் வந்த மெசியா என்றும் தங்கள் அரசர் என்றும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்றாலும் விரைவிலேயே அவர் இறக்கவேண்டும் என்று குரல் எழுப்பவும் தயங்கவில்லை. இயேசுவை இன்று தம் மெசியாவாக ஏற்பவர்களும் அவரை மாட்சியுடைய மன்னராக மட்டுமே பார்க்காமல், துன்பங்கள் மற்றும் சாவு வழியாக உலகிற்குப் புத்துயிர் வழங்கியவராகக் காணவேண்டும் என்பது இந்நிகழ்ச்சியின் பொருள்.

கிறித்தவ வழிபாட்டில் குருத்து ஞாயிறு

குருத்து ஞாயிறு கொண்டாடும் நாட்கள்
2017–2031
கிரெகொரியின் நாட்காட்டியில்
ஆண்டு மேற்கு கிழக்கு
2017 ஏப்பிரல் 9
2018 மார்ச்சு 25ஏப்பிரல் 1
2019 ஏப்பிரல் 14ஏப்பிரல் 21
2020 ஏப்பிரல் 5ஏப்பிரல் 12
2021 மார்ச்சு 28ஏப்பிரல் 25
2022 ஏப்பிரல் 10ஏப்பிரல் 17
2023 ஏப்பிரல் 2ஏப்பிரல் 9
2024 மார்ச்சு 24ஏப்பிரல் 28
2025 ஏப்பிரல் 13
2026 மார்ச்சு 29ஏப்பிரல் 5
2027 மார்ச்சு 21ஏப்பிரல் 25
2028 ஏப்பிரல் 9
2029 மார்ச்சு 25ஏப்பிரல் 1
2030 ஏப்பிரல் 14ஏப்பிரல் 21
2031 ஏப்பிரல் 6

மேற்குத் திருச்சபையில் கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கன் சபை, லூத்தரன் சபை ஆகிய கிறித்தவ சமூகங்கள் குருத்து ஞாயிறு கொண்டாட்டத்தைக் கடைப்பிடிக்கின்றன.

கத்தோலிக்க சபை வழக்கப்படி, குருத்தோலை கோவிலுக்கு வெளியே அல்லது (குளிர்நாடுகளில்) கோவிலின் தலைவாயிலைத் தாண்டி அமையும் பகுதியில் மந்திரிக்கப்படும். வழிபாட்டை நிகழ்த்தும் குரு சிவப்பு வழிபாட்டு ஆடைகளை அணிந்திருப்பார். எல்லாரும் குருத்தோலைகளைக் கைகளில் தாங்கியிருப்பார்கள். இயேசு தாம் துன்புற்று இறந்ததற்கு முன்னால் எருசலேம் நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சி நற்செய்தி நூலிலிருந்து பறைசாற்றப்படும். குருத்து ஞாயிறு ஏன் கொண்டாடப்படுகிறது என்பதைக் குரு விளக்குவார். இறைவேண்டலுக்குப் பின் பவனி தொடங்கும். சிலுவை, எரியும் மெழுகுவத்தி கொண்ட விளக்குத்தண்டுகள், தூபக்கலசம் ஆகியவற்றைத் தாங்கி துணையாளர் முன்செல்வர். பின் குரு செல்வார். அவரைத் தொடர்ந்து சிறுவர், பெண்கள், ஆண்கள் என்று எல்லா மக்களும் சென்று தத்தம் இடத்தை அடைவர். பவனியின்போது பாடல்கள் பாடப்படும். குறிப்பாக, "ஓசன்னா" என்னும் குரல் கேட்கும். அச்சொல்லுக்கு எபிரேய மொழியில் "இறைவா, விடுவித்தருளும்" என்பது பொருள். மேலும் "வாழ்க!" என்பதும் அதன் பொருளாகும். கோவிலுக்கு வெளியே அல்லது முற்றத்திலிருந்து தொடங்கும் பவனி திருப்பீடத்தை அடைந்ததும் திருப்பலி தொடங்கும்.

குருத்து ஞாயிறன்று மக்கள் பிடித்திருக்கின்ற குருத்துகள் அடுத்த ஆண்டில் வருகின்ற திருநீற்றுப் புதன் என்னும் நாளின்போது எரித்து சாம்பலாக்கப்படும். அச்சாம்பல் மந்திரிக்கப்பட்டு மக்களின் தலைமேல் பூசப்படும். கத்தோலிக்க திருச்சபை வழக்கப்படி இச்சடங்கு இறைவனின் அருளை இறைஞ்சுகின்ற ஒரு வழிபாட்டு நிகழ்வு ஆகும்.

கிழக்குத் திருச்சபையில் குருத்து ஞாயிறு "ஆண்டவர் எருசலேமில் நுழைந்த திருநாள்" என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இது வழிபாட்டு ஆண்டின் முக்கிய பன்னிரு திருநாள்களுள் ஒன்றாகும். புனித வாரத்தின் முதல் நாளாக இது கருதப்படுகிறது. அதற்கு முந்திய நாளாகிய ஞாயிறன்று இயேசு இலாசருக்கு உயிரளித்த நிகழ்ச்சி கொண்டாடப்படும்.

குருத்து ஞாயிறு பவனி பற்றிய நற்செய்தி வாசகம்

இவ்வாண்டு (2011) மத்தேயு நற்செய்தி (மத் 21:1-11), 2012இல் மாற்கு நற்செய்தி (மாற் 11:1-10), 2013இல் லூக்கா நற்செய்தி (லூக் 19:28-40) என்று முதல் மூன்று நற்செய்தி நூல்களிலிருந்தும் மூவாண்டு சுழற்சி முறையில் இயேசு எருசலேமுக்கு பவனியாகச் சென்ற நிகழ்ச்சி பறைசாற்றப்படும்.

மத்தேயு 21
1-11

உலக நாடுகளில் குருத்து ஞாயிறு கொண்டாட்டம்

எருசலேமில் திருக்கல்லறைக் கோவிலில் குருத்து ஞாயிறு. 2009.

கிறித்தவம் பரவியிருக்கின்ற எல்லா நாடுகளிலும் குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் சில சிறப்புப் பழக்கங்களும் நடைமுறையில் உள்ளன.

யோர்தான், இசுரயேல் நாடுகள்

யோர்தானிலும் இசுரயேலிலும் கத்தோலிக்க திருச்சபை, மரபுவழித் திருச்சபை, கீழைச் சபை, ஆங்கிலிக்கன் சபை போன்ற கிறித்தவக் குழுக்களைச் சார்ந்த மக்கள் இந்நாள் வழிபாட்டில் பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள். சிறுவர்கள் தம் கைகளில் ஒலிவ மரக்கிளை, ஒலைக் குருத்து போன்றவற்றைத் தாங்கிச் செல்வர். அக்கிளைகளைச் சிலுவை வடிவில் மடிப்பது வழக்கம். ரோசாப் பூக்களால் சிலுவை செய்வதும் உண்டு. ஒலிவக் கிளையைத் திருநீரில் அமுக்கி அந்நீரைக் குரு மக்கள்மீது தெளிப்பார்.

லாத்வியா நாடு

ஓலைக் குருத்துகளுக்குப் பதிலாக "வில்லோ" (willow) மரக்கிளைகளை மக்கள் தாங்கி பவனியாகச் செல்வார்கள்.

இந்தியா

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் தென்னங் குருத்துக்களை நேரடியாக மரத்திலிருந்து வெட்டிக் கொண்டு வருவார்கள். ஒலைகளைத் தனித்தனியாகப் பிரித்து மக்களுக்குக் கொடுப்பார்கள். பலரும் சிலுவை வடிவத்தில் ஓலைகளை மடித்துக்கொள்வார்கள். சிலர் குருவி, புறா, கிலுக்கு, மணிக்கூண்டு போன்று விதவிதமான வடிவங்களில் ஓலைகளைக் கீறிப் பின்னிக்கொள்வார்கள். குறிப்பாக, சிறுவர்கள் இதில் உற்சாகத்தோடு கலந்துகொள்வார்கள். கோவிலின் உள்ளே தூயகப் பகுதியில் தரையில் செவ்வந்தி போன்ற பூக்களைத் தூவுவது கேரளத்தில் வழக்கம். சில இடங்களில் குருத்தோலைப் பவனி செல்லும் போது மக்கள் துணிகளை வழியில் விரிப்பதும் உண்டு.[7]

மால்ட்டா

மால்ட்டா நாட்டில் ஒலிவக் கிளைகளும் பனைமரக் குருத்துகளும் பவனியில் செல்வோரின் கைகளில் இருக்கும். ஒலிவக் கிளைகளை இறந்த இயேசுவின் சிலைமீது விரிப்பார்கள். இயேசு ஒலிவத் தோட்டத்தில் துயருற்றார் என்பதை அது நினைவுபடுத்துகிறது.

ஓலாந்து

இந்நாட்டின் சில பகுதிகளில் அப்பத்தைச் சிலுவை வடிவில் செய்வார்கள். அதுபோலவே சேவல் வடிவத்திலும் ஆக்குவார்கள் (பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தபோது சேவல் கூவிற்று (காண்க: மாற்கு 14:66-72).

போலந்து

செயற்கைக் குருத்தோலைகளைச் செய்து அவற்றுள் மிக நீண்ட ஓலைக்குப் பரிசு வழங்கும் பழக்கம் போலந்தில் உள்ளது. 2008இல் மிக நீண்ட குருத்தோலை 33.39 மீட்டர் இருந்ததாம்!

உருமேனியா, பல்கேரியா

இந்நாடுகளில் குருத்து ஞாயிறு "மலர் ஞாயிறு" எனக் கொண்டாடப்படுகிறது. ரோசா, லில்லி, மார்கரட், ஜாஸ்மின், வயலட் போன்ற மலர்களின் பெயர்களைத் தாங்கியவர்கள் அந்நாளை விழாநாளாகச் சிறப்பிப்பர்.

பிலிப்பீன்சு

இந்நாட்டின் சில பகுதிகளில் குருத்து ஞாயிறு நாடகமாக நடிக்கப்படுகிறது. பவனியின்போது குரு ஒரு குதிரையின்மீது ஏறிகொள்வார். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் குருத்தோலைகளைத் தாங்கிச் செல்லும். சில இடங்களில் பெண்கள் நீண்ட ஆடைகளை வழியில் பரப்புவர். குருத்தோலைகளை மக்கள் வீடடுக்குக் கொண்டு சென்று, வீட்டு வாயிலில் அல்லது சாளரங்களின் வெளியே தொங்க விடுவார்கள்.

திருத்தந்தை பிரான்சிசு குருத்து ஞாயிறன்று வழங்கிய செய்தி

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 2013 மார்ச்சு 13ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட [[திருத்தந்தை பிரான்சிசு) முதன்முறையாக குருத்து ஞாயிறு கொண்டாட்டத்திற்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை என்னும் தகுதியில் தலைமை தாங்கினார்.

அப்போது, இயேசு எருசலேமில் மக்களின் ஆரவாரத்தின் நடுவே நுழைந்த நிகழ்ச்சியை அவர் நினைவுகூர்ந்து, 28ஆம் இளையோர் ஆண்டுக் கொண்டாட்டத்தையும் கருத்தில் கொண்டு மக்களுக்கு மூன்று கருத்துகளை முன்வைத்தார்.[8] அவை:

  • மகிழ்ச்சி
  • சிலுவை
  • இளமை

மேலும் 2013, சூலை மாதம் பிரேசில் நாட்டு ரியோ டி ஜனேரோ நகரில் நிகழவிருக்கின்ற உலக இளையோர் நாள் 2013 கொண்டாட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதாக அவர் அறிவித்தார்.

மேலும் காண்க

குறிப்புகள்

  1. இயேசு எருசலேமில் நுழைதல்
  2. 2.0 2.1 The people's New Testament commentary by M. Eugene Boring, Fred B. Craddock 2004 ISBN 0664227546 pages 256–258
  3. 3.0 3.1 The Bible Knowledge Background Commentary: Matthew-Luke, Volume 1 by Craig A. Evans 2003 ISBN 0781438683 page 381-395
  4. 4.0 4.1 The Synoptics: Matthew, Mark, Luke by Ján Majerník, Joseph Ponessa, Laurie Watson Manhardt 2005 ISBN 1931018316 pages 133–134
  5. The Bible knowledge background commentary: John's Gospel, Hebrews-Revelation by Craig A. Evans ISBN 0781442281 pages 114–118
  6. குருத்து ஞாயிறு
  7. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1705828.ece
  8. திருத்தந்தை பிரான்சிசின் குருத்து ஞாயிறுச் செய்தி

ஆதாரங்கள்

  • PART-1-ஆயுதங்களை ஏந்தி, கொலை மிரட்டலில் அதிகாரம் செலுத்தும் கூட்டத்தை கூண்டோடு எரிக்க தமிழ் தயங்காது என்று துணிவுடன் சொன்னார். தமிழால் கருங்கல்லையும் மிதக்க வைக்கலாம் என்று உலகிற்கு சொன்னது மட்டும் அல்ல கருங்கல்லையே மிதக்க வைத்த தமிழர் திருநாவுக்கரசர்.! தண்ணீரில் கல்லைப் போட்டால் அதற்கு சமமான நீர் வெளியே கொட்டுப்படும் என்று கண்டறிந்த விஞ்ஞானி ஆக்கிமிடீசிற்கு முன்னரே, தண்ணீரை உள்ளே இழுத்துப் போட்டால் கல்லையே மிதக்கச் செய்யலாமெனக் கூறிய விஞ்ஞானி. நடராஜனின் நடனத்தை காண்பதே வாழ்வின் இறுதி இலட்சியமென கலைக்காகவே வாழ்ந்து முடித்த மாபெரும் கலைநேசன். இப்படியொரு சமூகப் புரட்சியாளன் தமிழல்லாத வேறொரு மொழியில் பிறந்திருந்தால் தமிழன் அவனை வேதமாக போற்றிப் படித்திருப்பான். திருநாவுக்கரசர் ஒரு தமிழன் என்பதால் அவன் புகழ் தமிழனுக்கும் சரிவரத் தெரியவில்லை, உலகத்திற்கும் உள்ளபடி புரியவில்லை.. இன்றே இப்போதே அப்பரின் ஏதாவது ஒரு தேவாரத்தை ஒரு தடவை பொருளுணர்ந்து படியுங்கள்.. அடுத்த கணம் தமிழ்த்தாயின் காலடியில் வீழ்ந்து வணங்குவீர்கள்..Frood, J.D. & Graves, M.A.R. Seasons and Ceremonies: Tudor-Stuart England. Elizabethan Promotions, 1992

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருத்து_ஞாயிறு&oldid=2300819" இலிருந்து மீள்விக்கப்பட்டது