விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ”கிறிஸ்து”, “கிறித்து” - ஒரு கருத்து
வரிசை 422: வரிசை 422:
[[File:Madras Christian college Chennai - gate.jpg|200px|thumb|right|சென்னை கிறித்துவக் கல்லூரி]]
[[File:Madras Christian college Chennai - gate.jpg|200px|thumb|right|சென்னை கிறித்துவக் கல்லூரி]]
{{ping|AntanO}}, கிறித்தவம், கிறித்துவம் போன்ற சொற்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்துவதற்கு முன்பே புழக்கத்தில் உள்ளன. கிறித்தவர்களும் கிறித்தவ நிறுவனங்களும் பயன்படுத்துகிறார்கள். இது தமிழ் விக்கிப்பீடியா திணித்த சொல் அன்று. இது தொடர்பாக கூடுதல் தரவுகள், சான்றுகள் வேண்டும் எனில், அவற்றைத் திரட்டுவதற்குப் போதிய கால அவகாசம் வேண்டும். பவுல் போன்ற துறை அறிஞர்களிடம் கருத்து கோரியுள்ளோம். புழக்கத்தில் உள்ள கிரந்தம் தவிர்த்த சொல்லைப் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லையெனில் அச்சொல்லுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். பல முதல்நிலை, இரண்டாம் நிலை தரவுகளில் கிறிஸ்து என்றுள்ளதை யாரும் இங்கு மறுக்கவில்லை. அதே வேளை, கிறித்து என்று எழுதுவது ஏன் தமிழ் விக்கிப்பீடியா மொழிநடைக்கு உள்ளிட்டு ஏற்புடையது என்பதனையும் போதுமான அளவு விளக்கியுள்ளோம். இதில் சமயச் சாய்வு இல்லை. எனவே, விவிலியத்தில் உள்ளது போல் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதாதது அச்சமயத்தை அவமதிப்பது போலாகும் என்பது ஏற்புடைய கருத்தன்று. நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 21:05, 4 சூன் 2017 (UTC)
{{ping|AntanO}}, கிறித்தவம், கிறித்துவம் போன்ற சொற்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்துவதற்கு முன்பே புழக்கத்தில் உள்ளன. கிறித்தவர்களும் கிறித்தவ நிறுவனங்களும் பயன்படுத்துகிறார்கள். இது தமிழ் விக்கிப்பீடியா திணித்த சொல் அன்று. இது தொடர்பாக கூடுதல் தரவுகள், சான்றுகள் வேண்டும் எனில், அவற்றைத் திரட்டுவதற்குப் போதிய கால அவகாசம் வேண்டும். பவுல் போன்ற துறை அறிஞர்களிடம் கருத்து கோரியுள்ளோம். புழக்கத்தில் உள்ள கிரந்தம் தவிர்த்த சொல்லைப் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லையெனில் அச்சொல்லுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். பல முதல்நிலை, இரண்டாம் நிலை தரவுகளில் கிறிஸ்து என்றுள்ளதை யாரும் இங்கு மறுக்கவில்லை. அதே வேளை, கிறித்து என்று எழுதுவது ஏன் தமிழ் விக்கிப்பீடியா மொழிநடைக்கு உள்ளிட்டு ஏற்புடையது என்பதனையும் போதுமான அளவு விளக்கியுள்ளோம். இதில் சமயச் சாய்வு இல்லை. எனவே, விவிலியத்தில் உள்ளது போல் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதாதது அச்சமயத்தை அவமதிப்பது போலாகும் என்பது ஏற்புடைய கருத்தன்று. நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 21:05, 4 சூன் 2017 (UTC)

=="கிறிஸ்து”, “கிறித்து” - ஒரு கருத்து==
தவிர்க்க முடியாத காரணங்களால் த.வி.யில் நீண்ட காலமாக என் பங்களிப்புகள் குறைவாகவே இருந்துள்ளன. வருந்துகிறேன். எனினும், இரவி என்னிடம் கருத்துக் கேட்டமையால் இப்பதிவு.

பயனர்கள் பலர் சிறப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு கருத்துப் பற்றியும் விரிவாக எழுதத் தேவையில்லை என்று முடிவுசெய்தேன். சுருக்கமாக:

1) கிரந்த எழுத்துப் பயன்பாடு பற்றி த.வி.யின் பொதுக்கொள்கை எனக்கு ஏற்புடையதே. “இயன்ற மட்டும்” என்று வரையறுப்பதும் ஏற்புடையதே.

2) நான் “கிறித்தவம்” என்று இதுவரை எழுதி வந்துள்ளேன். சிலர் இதைக் “கிறித்துவம்” என்றும் கூறுவர். இது எழுத்துத் தமிழ். ஆயினும் பொதுவான பேச்சுத் தமிழிலும், கிறித்தவர்களின் மறையுரைகளிலும் “கிறிஸ்தவம்”, “கிறிஸ்துவம்” என்ற சொற்களே மிகப் பெரும்பான்மையாகப் பயன்பாட்டில் உள்ளன.

3) “கிறிஸ்து” என்ற சொல்லை “இயன்ற மட்டும்” மாற்றாமல் விட்டுவிடுவது நன்று. இதற்கான அடிப்படைக் காரணம், 1995ஆம் ஆண்டு கிறித்தவ சபைகள் ஒன்று சேர்ந்து, தற்காலத் தமிழில், இயன்றவரை கிரந்தம் தவிர்த்து, வடமொழிச் சொல்லாடலை ஒதுக்கிவிட்டு, “அவன்”, “அவள்” என்னும் சொற்களுக்குப் பதில் “அவர்” என்று மரியாதைப் பன்மைப் பயன்படுத்தி, மதுரை மாநகரில் வெளியிட்ட “திருவிவிலியம்” (பொது மொழிபெயர்ப்பு) இதுவரை வெளிவந்த மொழிபெயர்ப்புகளுள் தலைசிறந்ததாக அமைந்துள்ளதும், அம்மொழிபெயர்ப்பு Christos, Christus, Christ என்று முறையே கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வழங்கப்படுகின்ற சொல்லைக் “கிறிஸ்து’ என்று மொழிபெயர்த்துள்ளதும் ஆகும். இச்சொல் கிறித்தவ சமயத்திற்கு அடிப்படையான ஒன்று என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

எனவே, “கிறிஸ்து” என்ற சொல்லை அவ்வாறே தருதல் கிறித்தவர்களுக்குப் பெரிதும் ஏற்புடையதாகும்.

4) தேடுபொறிப் பயன்பாடு பற்றிய நுட்பங்களை விரிவாக அறியாத எனக்கு அதுபற்றித் தனிக் கருத்து இல்லை. இருப்பினும், “கிறிஸ்து” (”கிறித்து”), “கிறிஸ்தவம்” ( “கிறித்தவம்”), “கிறிஸ்துவம்” (”கிறித்துவம்”) என்று மாற்றுச் சொற்கள் கொடுக்க தேடுபொறியால் முடியும் என்றால் அதை அறிமுகப்படுத்தலாம்.

5) த.வி.யின் “விக்கிமூலத்தில்” தமிழ் விவிலியம் முழுவதையும் பதிவு செய்தேன். அங்கு தமிழ் விவிலியத்தின் பாடம் அச்சுப் பதிப்பில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே தரப்பட்டுள்ளது. எனவே, அங்கு “கிறிஸ்து” என்ற சொல் வருமே ஒழிய “கிறித்து” வராது. எனவே, தேடுபொறியில் “கிறித்து” என்று மட்டுமே கொடுப்பதாக இருந்தால், ”கிறிஸ்து” என்ற விவிலிய பாடம் அங்கு தோன்றாமலே போய்விடும் நிலை ஏற்பட்டுவிடும். அது சரியாகாது.

6) கிறித்தவத்தில் வழங்குகின்ற பிற சிறப்புப் பெயர்ச்சொற்களையும் வலிந்து திரிக்காமல் விட்டுவிடுவதே நன்று. விவிலியப் பெயர்கள் பெரும்பாலும் எபிரேயம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளினின்று பிறந்தவை. சில பெயர்கள் கிறித்தவ வரலாற்று வழக்கத்தில் குறிப்பிட்ட வடிவம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, யோசேப்பு, யாக்கோபு, யூதா போன்றவற்றைக் காட்டலாம். இவற்றிற்கு முன் “இ” எழுத்தை இடுவது முறையாகாது. “இயேசு” என்ற சொல் கிறித்தவர்களிடையேயும் தமிழ் விவிலியத்திலும் உள்ள சொல். அதை “ஏசு” என்றோ “யேசு” என்றோ எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். தேடுபொறியில் அச்சொற்களை மாற்றுச் சொற்களாகத் தரலாம். ஏனென்றால் பலர் அச்சொல் வடிவங்களைக் கையாளுகிறார்கள்.--[[பயனர்:George46|பவுல்-Paul]] ([[பயனர் பேச்சு:George46|பேச்சு]]) 00:36, 5 சூன் 2017 (UTC)

00:36, 5 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPI
WP:VPIL
WP:VPD
புதிய கருத்துக்கள் எனும் ஆலமரத்தடிக் கிளையின் கீழ் புதிய கருத்துக்கள், ஆலோசனைகள் பற்றி உரையாடலாம்.
தயவுசெய்து, புதிதாகத் தொகுக்குமுன் பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்ளங்கள்:
« பழைய உரையாடல்கள்


விமானச் சேவைகள்

ஸ்ரீலங்கன் எயர்லைன்சு, நேபாள் ஏர்லைன்சு என்றவாறு நிறுவனப் பெயர்களை எழுதிக் கொண்டிருக்காமல் ஸ்ரீலங்கன் விமானச் சேவை, நேபாள விமானச் சேவை, இந்திய விமானச் சேவை (Indian Airlines), இந்திய வான் வழிகள் (Indian Airways) என்றவாறு மொழிபெயர்த்துத் தலைப்பிடுவது சாலச் சிறந்ததென்று நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 11:40, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஐபிஎம் என்ற நிறுவனத்தை சவஎ என்று எழுதலாமா அதாவது சர்வதேச வணிக எந்திரம் என்று ஒரு கேள்வி எழுகிறது. அவர்களாக வழங்காத வரை நாம் மாற்றினால் யாருக்கும் புரியாது என நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு)

ஐபீஎம் என்பது சொற்குறுக்கம். முழுமையான சொல்லன்று. முழுமையான சொற்பொருளிருந்தாலும் அவர்களே சொற்குறுக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் எயர்லைன்ஸ் என்பது முழுமையான சொல். எனவே, அதனை மொழிபெயர்க்கலாம். ஹார்வார்டு யுனிவர்சிட்டி என்றிருப்பதை நாம் அப்படியே பயன்படுத்துகிறோமா? ஹார்வார்டு பல்கலைக்கழகம் என்று பெயரல்லாத சொல்லை அதிலிருந்து மொழிபெயர்க்கிறோம். ஹார்வார்டு பல்கலைக்கழகம் என்பது அவர்களாக வழங்கியதல்ல.--பாஹிம் (பேச்சு) 05:36, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

  • ஐ.பி.எம் என எழுதுவது நல்லது. அல்லது ஐபியெம் என்று எழுதவேண்டும். சில வணிகப்பெயர்கள் சிறியபெரிய உரோமன் எழுத்துக்கலவையாகவும் இருக்கும். இவற்றைத் தமிழில் அப்படியே காட்டல் இயலாது. ஆர்வர்டு பல்கலைக்கழகம் என ஒரு பகுதியை மொழிபெயர்ப்பது போல செய்வது தவறன்று. எசுப்பானியத்தில் Universidad de Harvard எனக் குறிக்கின்றனர். யார் எந்தமொழியில் எப்படிச்செய்தாலும், நம்மொழியில் ஒன்றை எப்படி எழுதவேண்டும் என்பது நம் உரிமை. இது வரட்டு கவுரவம் அன்று. தேவையையும் இயைபுடைமையையும் பொருத்தது. சீராக எழுதிவருவது நல்லது. Ivory Coast என ஆங்கிலத்தில் வழங்குவது உண்மையில், அவர்கள் நாட்டில் Côte d’Ivoire. நாம் தந்தக்கரை, கோட்டுக் கரை என ஏதேனும் ஒரு சீரான பெயரால் வழங்குவது தவறு இல்லை. ஐவரி கோசுட்டு என்று எழுதினாலும் பிழையில்லை. ஏர்லைன்சு, ஏர்வேசு என்று எழுதலாம், இந்திய வான்வழிச்சேவை என்பது போலும் எழுதலாம். ஆனால் சீர்மை முக்கியம். சிறீலங்கன் வான்வழிச்சேவை, நேபாள வான்வழிச்சேவை என்பன பொருந்தலாம். --செல்வா (பேச்சு) 05:55, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் இன்னுமொன்று: இந்திய இரயில்வே என்பதும் தமிழ்-ஆங்கில கலப்பாகவுள்ளது. இன்டியன் ரயில்வேஸ் என்பதா இந்திய தொடர்வண்டிப் போக்குவரத்து என்பதா? --AntanO 06:03, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
இந்திய இரயில்வே என்றாலே போதும். இந்திய இரயில்வேசு என்று எழுதத்தேவையில்லை. தேவையெனில் எழுதலாம். இந்தியத் தொடர்வண்டி (இது ஒருவண்டிதானோ என்னும் ஐயம் எழும், ஆனால் பழக்கத்தால் எதைக் குறிக்கின்றோம் என்பது விளங்கும்) என்றே சுருக்கவும் செய்யலாம். இந்தியத் தொடர்வண்டிநிறுவனம் என்று நீட்டியும் சொல்லலாம். தொடர்வண்டி என்பது ஊடகத்தில் நன்கு பரவி வருகின்றது. oneindia, webdunia, தினமணி, சீனச் செய்தி நிறுவனம், விகடன் இப்படிப் பல செய்தியூடகங்கள் தொடர்வண்டி எனப் பயன்படுத்துகின்றது. ஒவ்வொரு செய்தியிலும் 5 முதல் 10-12 தடவை வரை பயன்படுத்தியிருக்கின்றார்கள்.--செல்வா (பேச்சு) 06:23, 10 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]


100,000 கட்டுரைகள்

100,000 கட்டுரைகள்
100,000 கட்டுரைகள்

2016 இல் தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை எட்டிவிட திட்டங்களுக்காக முன்மொழிவை இங்கு பதிவிடுகிறேன். நீக்கப்படக்கூடிய கட்டுரைகள் போக 82,200 கட்டுரைகள் உள்ளதாகக் கொள்வோமாயின், 100,000 கட்டுரைகளுக்கு 17,800 கட்டுரைகள் தேவை. ஆகவே, ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 48 கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும். இங்கு கிட்டத்தட்ட 30 முனைப்பான பங்களிப்பாளர்கள் உள்ளனர். ஆனால், தற்போதைய புதிய கட்டுரைகளின் சராசரி 15 கட்டுரைகள். முனைப்பான பங்களிப்பாளர் ஒருநாளைக்கு 2 கட்டுரைகள் உருவாக்கினால் 2016 இல் தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை எட்டிவிடும்.

ஒரு மாதம் மட்டுமே இடம்பெற்ற ஆசிய மாதம் 2015 திட்டம் 265 (நிகர) கட்டுரைகளை பெற்றுளளது. ஆனால், இதன் மொத்தம் சுமார் 275 இருக்கலாம். கிட்டத்தட்ட 9 கட்டுரைகள் ஒரு நாளில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொரும்பாலான (236) கட்டுரைகள் 300 சொற்களைத் தான்டியவை ஆகும். குறுங்கட்டுரைகளா எழுதியிருந்தால் கிட்டத்தட்ட 500 இற்கு மேலான கட்டுரைகளை உருவாக்கியிருக்கலாம்.

என்ன செய்யலாம்?
  • முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையக் கூட்டுவது.
  • முனைப்பான பங்களிப்பாளர்களை ஒருநாளைக்கு குறைந்தது 2 கட்டுரைகளை எழுத ஊக்குவிப்பது.
அதற்காக:
நன்மைகள்
  • 1000, 2000, ..... கட்டுரைகளை உருவாக்கிய பயனர்கள் பலர் கிடைப்பர்.
  • பல...
இல்லாவிட்டால்
  • தமிழ் விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளை அடைய (தானியங்கிக் கட்டுரைகள் உருவாக்குப்படாதவிடத்து) இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

பயனர்களின் கருத்தும் ஆதரவும் இருப்பின், முதற்கட்டமாக 3 மாதங்களுக்காக விக்கி கோப்பையை ஆரம்பிக்கலாம். --AntanO 07:12, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

AntanO அவர்களே, தங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. த. விக்கியின் 60,000மாவது கட்டுரை 2014 பெப்ரவரி 17 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. எனினும் ஒரு வருடமும் எட்டு மாதங்களும் (20 மாதங்கள்) கடந்த பின்னரே சென்ற ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி விக்கியின் 70,000மாவது கட்டுரை உருவாக்கப்பட்டது. அதற்கும் மூன்று மாதங்களும் நிறைவடையாத நிலையில் 12,000த்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளது, த.விக்கியின் அபரிமித வளர்ச்சியைக் குறித்து நிற்கின்றது. வெகு விரைவிலேயே 100,000கட்டுரைகள் எனும் இலக்கை எட்டிவிடலாம் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை! நன்றி...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:47, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிக் கோப்பையை ஆரம்பிக்க எனது ஆதரவை வழங்குகிறேன் அன்டன். 100 விக்கிநாட்கள் மற்றும் 365 விக்கிநாட்கள் என்பன சலிப்பை ஏற்படுத்தக் கூடியன. தனித்துச் செயற்பட வேண்டும். விக்கிக் கோப்பை என்றால் போட்டியாக ஒரு உந்துசக்தியுடன் செயற்பட முடியும். சலிப்பை ஏற்படுத்தாதவாது விக்கிக் கோப்பையை வடிவமைக்கவும் வேண்டும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:14, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
100,000 என்ற இலக்கு நோக்கி இல்லாவிடினும் இத்தகைய போட்டிகள் பயனர்களுக்கு ஓர் உந்துதலாகவும் சலிப்பை அகற்றுவதாகவும் இருக்கும். ஆயினும் போட்டியை மட்டுமே கருத்தில் கொண்டு கட்டுரையாக்கத்தினை தவறாகப் பயன்படுத்துவோரை கண்காணிக்க வேண்டியிருக்கும். மாற்றாக ஆசிய மாதம் போல வெவ்வேறு தலைப்புகளில் மாதவாரியாக போட்டி நடத்தலாம். காட்டாக, சனவரி வரலாறு மாதம், பெப்ரவரி ஒலிம்பிக் போட்டிகள் மாதம், மார்ச்சு அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்/ அரசியல் மாதம், ஏப்ரல் இலக்கியவாதிகள் மாதம், மே பறவைகள்/தாவரங்கள் மாதம் என்றவாறு...அந்தந்த மாதங்களில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஆண்டு நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்கும் அடையாளப் பரிசுகள் தரலாம். --மணியன் (பேச்சு) 15:32, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO 15:34, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 16:08, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
அன்டனுடைய முயற்சியை வரவேற்கிறேன். நிச்சமாக தற்போது கட்டுரைகள் உருவாகும் வேகத்தைக் கூட்டவேண்டியது அவசியமானது. விக்கி கோப்பை போன்றவற்றின் மூலம் கட்டுரை உருவாக்கத்தின் வேகத்தைக் கூட்டவும், அதேவேளை பங்களிப்பவர்களைச் சோர்வின்றி உற்சாகமாக வைத்திருக்கவும் முடியும். ஆனால், இதன்மூலம் ஏறத்தாழ 18,000 கட்டுரைகளை உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. விக்கிப்பீடியா:100விக்கிநாட்கள், விக்கிப்பீடியா:விக்கி365 போன்றவை ஆதவன் எடுத்துக்காட்டியது போல் சலிப்பூட்டக்கூடியவையே. இதில் போதிய பலன் கிடைப்பது கடினம். எனவே 18,000 கட்டுரைகளை ஒரே ஆண்டில் உருவாக்க வேண்டுமானால் இவ்விடயத்தைப் பல வழிகளில் அணுகவேண்டியிருக்கும். குறிப்பாக, ஏற்கெனவே இருக்கும் பங்களிப்பவர்களுக்கும் அப்பால், புதியவர்களின் பங்களிப்புக்களை ஊக்குவிப்பதன் மூலம்தான் இலக்கை சுலபமாக அடையமுடியும்.
அளவுக்கு அதிகமாகத் தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்குவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்தவொரு கட்டத்திலும் தானியங்கிக் கட்டுரைகள் 10%க்கும் குறைவாக இருப்பது நல்லது என்பது எனது கருத்து. தற்போதைக்கு, அன்டனின் கருத்துப்படி விக்கிக்கோப்பையைத் தொடங்கலாம். இதில் படிப்படியாக பல குழுக்கள் நீக்கப்பட்டுவிடும் ஆதலால், பிற்பகுதியில் உருவாகும் மொத்தக் கட்டுரை எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். வேறு ஏதாவது ஒழுங்குகளின் மூலம் பிற்பகுதியிலும் எல்லோரும் தொடர்ந்து பங்களிப்பதை ஊக்குவிக்க முடியுமா என்று பார்க்கவேண்டும். மணியனின் முன்மொழிவையும் கருத்தில் கொள்ளலாம். --மயூரநாதன் (பேச்சு) 17:28, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவின் விக்கிக்கோப்பை பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு விக்கிக்கோப்பை பற்றிய மேலதிக உரையாடல்களைத் தொடரலாம். அங்கு பெறப்படும் முடிவுகளின்படி இற்றைப்படுத்தலாம். கருத்துக்கள் தேவையான பகுதிகள்: காலம், தலைப்பு, புள்ளி முறை ஆகியன. --AntanO 19:27, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 14:07, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

புதிய முனைப்பான பயனர்களைப் பெறுதல், ஏற்கனவே உள்ளவர்களைத் தக்கவைத்து ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துதலை உறுதி செய்யும் போது எல்லாம் தரமான கட்டுரை எண்ணிக்கை தானாகவே கூடுவதைக் கண்டிருக்கிறோம். 17,800 கட்டுரைகள் என்றால் மலைப்பாக உள்ளது மாதம் 1,500 கட்டுரைகள் என்றால் இலகுவாக இருக்கிறது. பல மாதங்கள் இயல்பாகவே ஆயிரம் கட்டுரைகள் எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறோம். பொதுவாக, நாம் கட்டுரை எண்ணிக்கை இலக்குகளை வைப்பதில்லை என்றாலும் பல பயனர்கள் தாமாகவே இந்த இலக்கு நோக்கி உழைப்பதாக தங்கள் பயனர் பக்கங்களில் அறிவித்திருக்கும் பின்னணியில், இம்முனைவு ஏற்புடையதாக இருக்கிறது. கூகுள் ஒளியுணரி துணை கொண்டு, நாம் கொடையாகப் பெற்ற கலைக்களஞ்சியம் தரும் தலைப்புகளிலும் கட்டுரைகளைக் கொணர்ந்து இற்றைப்படுத்தலாம். இந்த வகையில் முக்கியமான தலைப்புகளில் சில ஆயிரம் கட்டுரைகள் ஏற்றுவதை உறுதி செய்யலாம். தற்போது நடக்கும் விக்கிப்பீடியா:உறைவிட விக்கிமீடியர்கள் திட்டத்திலும் இதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 15:14, 27 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]


15-01-2016 அன்று வரையான 15 நாட்களில் கட்டுரை உருவாக்கல் நிலை:

உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகள் - 687
நீக்கப்பட்ட கட்டுரைகள் - 187
கிடைத்த கட்டுரைகள் - 500
ஒரு நாளைக்கான கட்டுரைகளின் சராசரி - 33.33

விக்கிக்கோப்பைக்கு இன்னும் சிலரை அழைத்து வரலாம். @Rsmn, Aathavan jaffna, Shriheeran, and Maathavan: --AntanO 23:36, 16 சனவரி 2016 (UTC)[பதிலளி]

அன்ரன் அவர்களே முகநூலில் பலரையும் அழைத்துவரும் முயற்சியில் ஈடுபடலாமா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:30, 17 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஆம் ஸ்ரீஹீரன். ஓரளவிற்கு செயற்பாட்டில் இருப்பவர்களின் பேச்சுப்பக்கத்தில் செய்தியிடலாம். --AntanO 15:36, 19 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பை போட்டித் திட்டத்தை கொண்டு செல்ல ஒருங்கிணைப்பாளர்கள் தேவை. உங்கள் பெயர்களை திட்டப்பக்கத்தில் பதிவு செய்து உதவுங்கள். நன்றி --AntanO 21:07, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

Antan அவர்களே என்னாலான உதவிகளை ஒருங்கிணைபாளராக வழங்க முடியும் எனினும் போட்டியில் பங்குபெறுபவர்கள் ஒருங்கிணைப்பாளரா இருக்கலாமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:52, 29 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆம், நீங்கள் உருவாக்கிய அல்லது விரிவாக்கிய கட்டுரைகளை இன்னொருவர் மதிப்பீடும்படி பார்த்துக் கொள்வோம். ஆகவே அங்கு நல முரண் இருக்காது. ஆசிய மாதப் போட்டியிலும் அவ்வாறே செய்தோம். --AntanO 13:36, 29 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:43, 30 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

tt-ற்ற என்பதைப் பற்றி

பீற்றர் பெர்சிவல் அவர்கள் தொகுத்து 1861 ஆம் ஆண்டு சென்னையில் பதிப்பிக்கப்பட்ட தனது Anglo-Tamil Dictionary இல் ஆங்கிலத்தின் tt என வருமிடங்களில் தமிழின் ற்ற ஆகிய எழுத்துக்களைப் பிரதியிடுவதைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:

ற்ற ŗŗ is similar to tt in pattern—as பற்றி paŗŗi; when ற் ŗ is preceded by ன் n, it has very nearly its natural power—as கன்று kanŗu, பன்றி panŗi; when we mute before a consonant, it has the sound of the cerebral ţ—as கற்பனை kaŗpanai.

--பாஹிம் (பேச்சு) 03:11, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் @Fahimrazick: இலங்கையின் சில பகுதிகளில் ற்ற என்பதை tra என்றும் பலுக்குவதுண்டா? தங்கள் பழைய தொகுப்புகளில் அவ்வாறு கூறியிருக்கிறீர்கள். பாடநூல்களில் Nitrite-நைத்திரைற்று என்றே எழுதப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலும் ற்ற-tta என்றே பலுக்கப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 03:17, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ற்ற என்பதை tra என்று மொழிவதே முறை. ஆனால் ஆங்கிலத்தின் tt என்பதைத் தமிழில் ற்ற என்றெழுதுவதே பொருத்தமென்கிறார் பெர்சிவல். அப்போது தமிழில் ட்ட என்று மொழியாமல் அதையும் ற்ற (tra) என்றே மொழிய வேண்டும். இம்முறையே இலங்கையில் பின்பற்றப்படுகிறது. tt என்பதை ட்ட என்றெழுதுவது தவறன்று. இவ்விரண்டுக்குமிடையே சிறிது ஒலிப்பு நுணுக்கங்கள் காணப்படுகின்ற போதிலும் தமிழில் அவற்றைக் கருத்திலெடுக்க வேண்டியதில்லை. மாறாக நாம் ஓரிடத்தில் ஒரு மாதிரியும் மற்றோரிடத்தில் இன்னொரு மாதிரியும் எழுதிக் குழப்பக் கூடாது. அதனாலேயே நான் இலங்கை வழக்கைப் பின்பற்றுகிறேன். ட்ட என்பதை ஒரு சிலர் dd என்று மொழிவதுண்டு. ஆனால் அதற்கு எந்த விதியுமில்லை. அவ்வாறே ற் என்பதை ர் எனப் பிழையாக வாசிப்போருமுளர். அத்துடன் tr என்பது தமிழில் ற்ற என்று மாத்திரமே வர முடியும். சிலர் எழுதுவது போல் ட்ர (பெட்ரோல்) என்பது போன்று எழுதுவது தமிழ் முறைக்கு ஒவ்வாது.--பாஹிம் (பேச்சு) 03:32, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ட்ர என்பது ஒவ்வாததே. இலங்கையில் traஉம் ற்ற என்பதால் குறிக்கப்படுகின்றது. ட்ட என்பத ttaஇற்கு நெருங்கிய ஒலியே. tta அன்று. tta என்பதைக் குறிப்பதற்கு, சொல்லுக்கேற்ப, ற்ற அல்லது ட்டவைப் பயன்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 03:46, 31 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]


சேர்ந்த / சார்ந்த

விக்கப்பீடியாவிலும் வெளியிலும் பலர் இச்சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. சார்ந்த என்ற பதத்தை சேர்ந்த என்ற பொருளிற் பயன்படுத்தக் கூடாது. எடுத்துக் காட்டாக, நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்றால் நான் ஒரு இலங்கையன் என்று பொருள். நான் இலங்கையைச் சார்ந்தவன் என்றால் நான் இலங்கையனல்ல ஆனால் அதற்கு ஆதரவானவன் அல்லது அதனால் ஆதரிக்கப்படுபவன் என்று பொருள். எனவே பலரும் சொற்களைப் பொருளுணர்ந்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 00:21, 14 பெப்ரவரி 2016 (UTC)

👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 04:15, 3 மார்ச் 2016 (UTC)
👍 விருப்பம் எனக்கு சேர்ந்த / சார்ந்த வேறுபாடு குறித்து ஐயம் இருந்தது, நன்றி--குறும்பன் (பேச்சு) 22:29, 14 மார்ச் 2016 (UTC)

திருத்தம்

  • (Legume) என்பது விதைகள் அடுக்காக பொதிந்து வைக்கப்பட்டவையை குறிக்க உபயோகிக்கும் பொது வார்த்தை, ஆனால் அதற்க்கு பருப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. (Lentil) என்ற ஆங்கில கட்டுரைக்கு மைசூர்ப் பருப்பு என்று தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப்பதில் (Mysore dhal) என்ற தலைப்பிற்க்கு மாற்றலாம். அதேபோல் (Dal) என்ற கட்டுரைக்கு எந்த தமிழ் மொழிபெயற்ப்பும் கொடுக்கப்படவில்லை. பயறு என்ற தலைப்பிற்க்கு ஆங்கில விக்கியில் எந்த தலைப்பை இணைக்கலாம்.--Muthuppandy pandian (பேச்சு) 10:01, 16 மார்ச் 2016 (UTC)
Muthuppandy pandian இலங்கை பாடப்புத்தகங்களில் பயற்றை Green gram என்றும், பருப்பை Dhal என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.-- மாதவன்  ( பேச்சு ) 12:51, 16 மார்ச் 2016 (UTC)

கற்கண்டு

இது கற்கண்டா?--பாஹிம் (பேச்சு) 08:00, 12 மே 2016 (UTC)[பதிலளி]

சக்கரக்கட்டி. - சுகர் லோஃப் கற்கண்டு - சுகர் கேண்டி. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:45, 13 மே 2016 (UTC)[பதிலளி]

படமில்லாத கட்டுரைகள்

படமில்லாத பல மொழிக்கட்டுரைகள் பல தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளன. வேறு எந்த மொழிக்கட்டுரையிலாவது படம் சேர்த்தால் அது தமிழ்விக்கியில் வருகிற மாதிரி ஏன் அனைத்து விக்கிகளிலும் வருகிற மாதிரி செய்ய முடியுமா? இதுக்காகவே கட்டுரைப்படம்னு உருவாக்கினால் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:43, 13 மே 2016 (UTC)[பதிலளி]

தொழினுட்பக்கேள்வி இதுவென்று எண்ணுகிறேன். படமுள்ள ஒரு கட்டுரையைக் கொண்டு விளக்கவும். அதனை அடிப்படையாகக் கொண்டு பல படமில்லா கட்டுரைகளை படங்கொண்டு மேம்படுத்துவோம்.--உழவன் (உரை)

மெட்டா விக்கிப்பீடியா அறிவிப்பு

இன்ஸ்பெயர் கேம்பெயினின் போது உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் சொல்லுங்கள். புதிய திட்டங்களுக்கு நிதி வழங்க விக்கிமீடியா நிறுவனம் தயாராக உள்ளது.

இன்ஸ்பெயர் கேம்பெயின் என்று மொழிபெயர்த்தது சரியா? அது ஊக்கமூட்டும் பரப்புரை என்று இருப்பது தானே பொருத்தம்?--குறும்பன் (பேச்சு) 18:35, 3 சூன் 2016 (UTC)[பதிலளி]

ஊக்கமூட்டும் பரப்புரை --AntanO 01:20, 4 சூன் 2016 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையை விரிவுபடுத்த வேண்டுகோள்

ஐரோம் சர்மிளா குறித்த கட்டுரையை ஃபேஸ்புக்கில் பதிந்துள்ளேன். (https://www.facebook.com/TamilWikipedia/posts/1586898514707463) எனவே, அதிலுள்ள தகவல்கள் அனைவரும் கூடி இற்றைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

--Surya Prakash.S.A. (பேச்சு) 13:28, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

விருதுகள்

விருதுகளுக்கான குறிப்பிடத்தக்கமை என்ன? பல நிறுவனங்கள் தங்களுக்கென பல விருதுகளைக் கொண்டுள்ளன. இவற்றில் எவை குறிப்பிடத்தக்கவை என நிர்ணயம் செய்ய வேண்டும். --AntanO 14:44, 31 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

அசைதொகுப்பால் கலைச்சொல் உருவாக்கம்

Maser, Laser சொற்களை முன்வைத்து

கிளர்கதிர்வீச்சால் நுண்ணலை மிகைப்பு என்பதே Microwave Ampilcation by Stimulated Emiission and Radiation எனும் சொற்றொடருக்கு உரிய தமிழாக்கம் ஆகும். இதை முதலசைகளைச் சேர்த்து தமிழில் கிளர்கதிர் நுண்மி எனலாம். கிளர்கதிர்வீச்சால் ஒளி மிகைப்பு என்பதே Light Amplification by Stimulated Emiission and Radiation எனும் சொற்றொடருக்கு உரிய தமிழாக்கம் ஆகும்.எனவே இதை முதலசைகளைச் சேர்த்து கிளர்கதிர் ஒளிமி எனலாம். ஆங்கிலத்தில் முதலெழுத்துகளைச் சேர்த்து சொல்லை உருவாக்குதை போல தமிழில் முதலசைகளைச் சேர்த்து சொல் உருவாக்கும்போது பொருட்செறிவுடன் நல்ல கலைச்சொற்கள் கிடைக்கும். அனைவரும் இம்முறையை எண்ணிப் பார்க்கலாம். இரண்டுமே சீரொளிகள்தாம். எனவே பொருள்மிகச் சொல்லாக்குவதே நல்லது.இது கலந்துரையாடலுக்கு முன்வைக்கப்படுகிறது. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:26, 10 செப்டம்பர் 2016 (UTC)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:28, 10 செப்டம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் அவசியம் உருவாக்கப்பட வேண்டும். --கி.மூர்த்தி (பேச்சு) 15:37, 10 செப்டம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 03:25, 11 செப்டம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:04, 27 செப்டம்பர் 2016 (UTC)

விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாகிகள்#கட்டக அணுக்கருக்கானக் குறிப்புதவிகள் (sysop) என்பதில், ஒரு புதிய கோரிக்கைக் கோரப்பட்டுள்ளது.--உழவன் (உரை) 01:56, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றுதல் வார்ப்புரு குறித்த முன்மொழிவு

வார்ப்புரு_பேச்சு:தலைப்பை_மாற்றுக#இவ்வார்ப்புருவிற்கான கால எல்லை என்ன? என்பதில் ஒரு முன்மொழிவு கூறப்பட்டுள்ளது. எண்ணமிடுக.உழவன் (உரை) 05:27, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பன்னாட்டு தாய் மொழி நாள்

வரும் 2017-02-11 (yyyy-mm-dd Gregorian calendar) அன்று பன்னாட்டு தாய் மொழி நாள் பல நாடுகளால் அனுசரிக்கப்படும். நாமும் ஏதாவது செய்யலாமா ? --Deadrat (பேச்சு) 13:08, 6 பெப்ரவரி 2017 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:48, 6 பெப்ரவரி 2017 (UTC)

vikatan.com

வெளியிணைப்புகளுக்கு vikatan.com பக்க இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பயனர்:Buddha1502 பயனர்:Buddha1402 பயனர்:Buddha1302 ஆகிய கணக்குகளின் பங்களிப்பிணைக் கவனிக்கவும். --AntanO 13:56, 16 பெப்ரவரி 2017 (UTC)

விளம்பர நோக்கில் அமையுமானால் vikatan.com இணைப்பிணை கருப்புப் பட்டியலில் சேர்த்துவிடலாம். --AntanO 13:57, 16 பெப்ரவரி 2017 (UTC)
தற்போது பயனர்:Buddha1602 என்பதும் இணைந்துள்ளது. மேல்விக்கியில் பயனர் பெயர் சோதனைக்கு கோரிக்கை வைத்துள்ளேன். --AntanO 23:57, 16 பெப்ரவரி 2017 (UTC)
இது விளம்பர நோக்கிலேயே இணைக்கப்படுவதாகத் தெரிகிறது. பலர் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் போல் உள்ளது.--Kanags \உரையாடுக 01:15, 17 பெப்ரவரி 2017 (UTC)
தற்போது ஐ.பி ஊடாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தற்காலிகமாக vikatan.com இணைப்பிணை கருப்புப் பட்டியலில் சேர்க்க முயன்றேன். பயனில்லை. vikatan.com விளம்பர இணைப்புகளை பிற பயனர்களும், குறிப்பாக சுற்றுக் காவலில் ஈடுபடுவோர் கவனிக்கவும். --AntanO 02:38, 17 பெப்ரவரி 2017 (UTC)
இரு ஐ.பிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. தற்போது vikatan.com உசாத்துணையாக இணைக்கப்படுகிறது. --AntanO 03:04, 17 பெப்ரவரி 2017 (UTC)
இந்தப் பயனர்களில் ஒருவர் எனக்குத் தனிப்பட்ட மின்னஞ்சலில் தனது ஐபி முகவரி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறினார். மேலும் விசாரித்ததில், இவர்கள் விகடனில் பணியாற்றும் ஆசிரியர்கள். அண்மையில் அங்குள்ளவர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி வகுப்பு நடைபெற்றதாகவும், இதனை அடுத்தே பலர் பயனர்களாக இணைந்து தமக்குத் தெரிந்த இணைப்புகளை இணைத்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், இவற்றை விளம்பரமாகக் கருதித் தாங்கள் இணைக்கவில்லை எனக் கூறுகிறார். பயிற்சிக்காகவே எழுதுகிறார்கள் என்கிறார். @Ravidreams: --Kanags \உரையாடுக 09:24, 17 பெப்ரவரி 2017 (UTC)
விக்கிப்பீடியா:நலமுரண்--இரவி (பேச்சு) 10:17, 17 பெப்ரவரி 2017 (UTC)
அணைத்தும் கைப்பாவைக் கணக்குகள். இன்னும் சில கணக்குகள் என் கவனிப்பில் உள்ளன. யாரும் தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்பினால், வழமையின்படி அவர்களை அவர்கள் பேச்சுப்பக்கம் ஊடாக தடைசெய்த நிருவாகியை ping செய்வதன் ஊடாக உரையாடச் சொல்லுங்கள். --AntanO 21:17, 17 பெப்ரவரி 2017 (UTC)
நானறிந்த வரையில் இவர்கள் அனைவரும் தமது விகடன் அலுவலகத்தில் இருந்து விகடன் ஐபி மூலமாகப் பங்களிக்கிறார்கள். எனவே இதனை நலமுரணாகவும் பார்க்கலாம், இவ்வாறான விக்கிப்பீடியா பயிற்சி அளிப்பவர்கள் தவறான முன்னுதாரணங்களைக் கொடுக்கிறார்கள். வணிக நிறுவனங்களில் ஆதாயத்திற்காக இவ்வாறான பயிற்சி வகுப்புகளை ஒரு சிலர் நடத்துகிறார்களோ எனச் சந்தேகமாகவுள்ளது.--Kanags \உரையாடுக 21:53, 17 பெப்ரவரி 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017 - தமிழ் விக்கிப் பங்களிப்பு

விக்கிமீடியா வியூகம் 2017 தற்போது நடைபெறுகிறது. அதில் அவர்கள் மொழிசார் விக்கிகளில் இருந்து கருத்துக்கோரல் செய்தாகத் தெரியவில்லை. எனினும் நாம் எமது உள்ளீட்டினை வழங்க வேண்டும். Error in வார்ப்புரு:Reply to: Input contains forbidden characters. இதைப் பற்றி கூடிய தகவல்களைப் பகிர முடியுமா (https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2017/Track_D). --Natkeeran (பேச்சு) 17:18, 20 மார்ச் 2017 (UTC)

@Natkeeran:, மொழி விக்கிச் சமூகங்கள் இந்தக் கலந்தாய்வில் இங்கு பங்கேற்கலாம். இதனை நீங்கள் ஒருங்கிணைத்தால் நன்றாக இருக்கும். இதற்கென இந்தியப் பகுதியில் முன்னெடுப்புகளைச் செய்து வரும் சதீப், நகித் ஆகியோருடன் இணைந்து நானும் உதவ முடியம். --இரவி (பேச்சு) 11:59, 24 மார்ச் 2017 (UTC)
கருத்துக் கோரல்: விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017 என்ற பக்கத்தில் பயனர்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால், அதனைத் தொகுத்து நான் வழங்க முடியும். --Natkeeran (பேச்சு) 17:44, 3 ஏப்ரல் 2017 (UTC)

விக்கி செய்தி

சென்ற ஆண்டு செய்தி இந்த ஆண்டு காட்டப்படுகிறது

விக்கி செய்தி போன ஆண்டு செய்திகளை இந்த ஆண்டு காட்டுகிறது. அங்கு ஆலமரத்தடியை காணோம் முன்பு இருந்தது என்று நினைவு. கோப்பு பதிவேற்றமும் விக்கப்பீடியா மாதிரி இருக்கவில்லை நேராக பொதுவகத்திற்கு செல்கிறது. -Kanags, மா. செல்வசிவகுருநாதன் கவனிக்க --குறும்பன் (பேச்சு) 15:59, 31 மார்ச் 2017 (UTC)

பழங்காலத்து தமிழ் புத்தகங்களின் தொகுப்புகள்

பல அரிய, பழங்காலத்து தமிழ் புத்தகங்களின் தொகுப்புகள் மின் வடிவில் இங்கு உள்ளது. விரும்பினால் பார்க்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 14:40, 19 ஏப்ரல் 2017 (UTC)

👍 விருப்பம்--AntanO 16:26, 19 ஏப்ரல் 2017 (UTC)
👍 விருப்பம்--மயூரநாதன் (பேச்சு) 03:58, 20 ஏப்ரல் 2017 (UTC)

விக்கிப்பீடியா பயிற்சி

விக்கிப்பீடியா பயிற்சிகள் ஏதும் நடைபெறுகிறதா? ஒரே தன்மையுள்ள கணக்குகளும் சில கட்டுரைகளும் உருவாகின்றன. நிற்க, விக்கிப்பீடியா பயிற்சிகள் கொடுப்பதற்கு ஏதும் ஒழுங்குகள் நடைமுறையில் உள்ளதா அல்லது பயிற்சியாளர் தான் விளங்கிக் கொண்டவாறு பயிற்சியளிப்பாரா? சில இடங்களில் வெறும் விரிவுரை போன்ற பயிற்சிகள் மட்டும் பொருத்தமற்றது. பயிற்சியின்போது, பயிற்சியாளரால் கட்டுரை மாதிரி கவனிக்கப்பட்ட பிறகு பதிவேற்றுவது நல்லது. பயிற்சியாளர்கள் நன்கு விளங்கிக் கொள்ளமாட்டர்கள் என்று தயவுசெய்து காரணம் கற்பிக்க வேண்டாம். [If you can't explain it to a six year old, you don't understand it yourself. Albert Einstein]

கட்டுரை ஒன்று கட்டாயம் பின்வருனவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நினைவுறுத்துங்கள்:

  • சரியா தலைப்பு - வேறு பெயர்களில் இல்லையா என்பதை உறுதி செய்தல்
  • எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை தவிர்ப்பு
  • கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றதா?
  • கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருக்கிறதா?
  • பதிப்புரிமை மீறல் விடயங்கள் உள்ளதா?
  • தகுந்த ஆதாரம் இணைக்கப்பட்டிருக்கிறதா?
  • மூன்று வரிக்கு மேல் உள்ளடக்கம் கொண்ட கட்டுரையா?
  • சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருக்கிறதா?
  • தேவையாயின், சரியான விக்கித்தரவில் இணைக்கப்பட்டிருக்கிறதா?
  • மேலும் கவனிக்க: en:Wikipedia:Ten Simple Rules for Editing Wikipedia

இதனையும் கவனிக்க: en:Wikipedia:Training, en:Wikipedia:Training/For students --AntanO 12:19, 20 ஏப்ரல் 2017 (UTC)

பொதுவாகத் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக நடைபெறும் பயிற்சிகளின்போது குறிப்பாக என்னென்ன விடயங்கள் பற்றிப் பயிற்சி தரப்படுகின்றன என்று தெரியவில்லை. விக்கிப்பீடியா தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்வுகளில் விரிவான விளக்கங்கள் தரமுடியாது என்பது உண்மை. ஆனால், முறையான பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்யும்போது, விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமான கட்டுரைகளை எழுதுவது எப்படி என்பது குறித்துப் பயிற்சி அளிப்பதற்குப் போதிய நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். குறிப்பாகத் தலைப்புக்களைத் தெரிவு செய்தல், நடுநிலையில் இருந்து கட்டுரைகளை எழுதுதல், கட்டுரைகளின் நம்பகத் தன்மையைக் கூட்டுதல், கட்டுரைகளின் அமைப்பு, காப்புரிமை போன்ற விடயங்களில் போதிய தெளிவு ஏற்படும் வகையில் பயிற்சிகள் அமைய வேண்டும். இதற்காக, எல்லோருக்கும் பயன்படும் வகையிலான பயிற்சித் திட்டம் ஒன்றை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும். ---மயூரநாதன் (பேச்சு) 04:16, 21 ஏப்ரல் 2017 (UTC)
இரவி பயிற்சித் திட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தார். en:Wikipedia:Training/For students - இதைத் தமிழ்ப்படுத்தினாலே இலகுவானதாகவிருக்கும். விழிப்புணர்வைத் தொடர்ந்து முறையான பயிற்சி வகுப்புகள் இருந்தால் சிறப்பாகவிருக்கும். ஓரு நாள் கருத்தரங்கில்

சுமார் 30-40 பேருக்கு முறையான பயிற்சி வழங்கலாம். மாதிரிக்கு ஒன்றை என்னால் செய்து காட்ட முடியும். வட-கிழக்கைக் தவிர்த்து, கொழும்பு, கண்டி ஆகிய இடங்கள் என்றால் என்னால் வரமுடியும். --AntanO 04:44, 21 ஏப்ரல் 2017 (UTC)

மகிழ்ச்சி அன்ரன், ஆயினும் வரும் வருடம் யாழில் பட்டறைகள் பல நடாத்துவோம் எனினும் இவ்வருடன் சூன் வார முற்பகுதியில் யாழில் ஒன்று இடம்பெறலாம். அதில் தங்களால் பங்குகொள்ள முடியாதா? கொழும்பு, கண்டி ஆகியவற்றில் பயிற்சிப்பட்டறை ஒன்றை தாங்களே முன்வந்து ஒழுங்குசெய்வதற்கு விருப்பமா? விரும்பின் தெரிவிக்கவும்.
  • ஒரு நாள் பயிற்சிப்பட்டறை உதவிக்குறிப்புகள்-[1]

இதுவும் பயன்படலாம் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:06, 21 ஏப்ரல் 2017 (UTC)

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்

பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை திருத்தம் செய்ய வேண்டும். பல கட்டுரைகள் மிக மேசமான உரைநடையைக் கொண்டுள்ளன. 100,000 கட்டுரைகளை அண்மிக்கும் நாம் இவற்றைத் திருத்துவது நல்லது. இந்தப்பட்டியல் உதவலாம். --AntanO 16:28, 20 ஏப்ரல் 2017 (UTC)

குறுங்கட்டுரையாக உருவாக்கலாமா? அதாவது கருத்துச்செறிவுள்ள குறைந்தது 10 வரிகள் உள்ள கட்டுரையாக மாற்ற விரும்புகிறேன். அதனால் அங்குள்ள தரவை பேச்சுப்பகத்திற்கு அப்படியே மாற்றி விட்டு, அப்புதிய கட்டுரையை உருவாக்கலாமென்றே கருதுகிறேன். பல கட்டுரைகள் சமூகத் தேவையாக உள்ளது. எ-கா. கண் அழுத்த நோய்(இக்குறைபாடு தமிழகத்தில் பரவியுள்ளது. ஆனால், இதன் அறிகுறி வெளியே தெரியாது. எனக்கு தொடக்க நிலையில் இருக்கிறது.ஆனால், தெளிவான கட்டுரை இல்லை.), ஆக்சிடாசின் (பால் உற்பத்தியில் பயன்படுவது,. மிகுந்த கெடுதல் செய்யும் வேதிப்பொருள்)--உழவன் (உரை) 04:43, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் கவனிக்க--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:25, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:22, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கிச் சமூகத்தை இணைத்தல் - மாதாந்த விக்கி அல்லது ஸ்கைப் சந்திப்பு

தமிழ் விக்கியில் முன்னர் இருந்தது போல் ஒரு சமூக உணர்வை நாம் இழந்து வருகிறோமோ என்று எண்ணைத் தோன்றுகிறது. இதற்கு ஒரு தீர்வாக எமக்குப் பொரும்பாலானவர்களுக்கு இயல்பான ஒரு நாளில் விக்கியில் அல்லது ஸ்கைப்பில் சந்திக்கலாமா? குறிப்பாக எதையும் உரையாட வேண்டும் என்றோ அல்லது முன்னெடுக்க வேண்டும் என்றோ இல்லை. கருத்துப் பரிமாறலாம். விக்கியில் தொகுக்கலாம். எண்ணங்களை வரவேற்கிறேன். --Natkeeran (பேச்சு) 18:43, 21 ஏப்ரல் 2017 (UTC)

  1. 👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:12, 4 மே 2017 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:00, 9 மே 2017 (UTC)[பதிலளி]
  3. --உழவன் (உரை) 07:54, 24 மே 2017 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம். இந்த வாரம் சனியன்று தொடங்குவோமா? இந்திய நேரம் மாலை 07:30 போல் பேசினால் பல்வேறு நேரவலயங்களில் உள்ளவர்களும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இது ஒத்து வரும் என்றால் இதற்கான Hangout இணைப்பை நான் உருவாக்கித் தருகிறேன். இந்தப் பேச்சுகளைப் பதிவு செய்து யூடியபில் சேமித்தால் கலந்து கொள்ள இயலாதவர்களும் பின்னர் பார்க்கலாம். கவனிக்க: @Dineshkumar Ponnusamy, Parvathisri, Info-farmer, and Natkeeran:--இரவி (பேச்சு) 18:38, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]
    1. மாதம் ஒருமுறை என்பதால், எந்நாளும், எந்நேரமும் எனக்கு ஏற்புடையதே.'கூகுள் ஏங்அவுட்டு' 250-512kbps இணைய வேகத்தில் சரியாக இயங்குமா என்பதே என் ஐயமாக உள்ளது. பலருக்கு இணைய வேகம் ஒரு தடையாக இருக்க நேரிடலாம்.--உழவன் (உரை) 04:30, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]
    2. 👍 விருப்பம் ஒருவர் ஒருங்கிணைப்பாளாராகவும், இன்னுமொருவர் குறிப்பெடுப்பவராகவும் இருந்தால் நன்று. விக்கிப்பீடியா:மெய்நிகர் சந்திப்புக்கள் பக்கத்தை உருவாக்கி உள்ளேன்.. --Natkeeran (பேச்சு) 12:53, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]
  1. 👍 விருப்பம்--மணி.கணேசன்
  1. 👍 விருப்பம்--உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 02:43, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல்

சுமார் 100 கட்டுரைகள் பதிப்புரிமை மீறல், கலைக்களஞ்சியம் அற்றவை, ஏற்கெனவே உள்ள பெயரில் உருவாக்கம் ஆகிய காரணங்களால் நீக்கப்பட்டுள்ளன. யார் இந்தப் பயனர்? பயிற்சி வகுப்புக்கள் வழியாக உள்வாங்கப்பட்டவர்களா? --AntanO 20:18, 4 மே 2017 (UTC)[பதிலளி]

Antan அப்படித்தான் இருக்க வேண்டும், நேற்று வந்தோர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினர், முந்நாள் வந்தோர்ர் பெரும்பாலும் ஆசிரியர்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:17, 5 மே 2017 (UTC)[பதிலளி]
@Neechalkaran:--Kanags \உரையாடுக 02:00, 5 மே 2017 (UTC)[பதிலளி]
TNSE என்ற முன்னொட்டுடன் பயனர் பெயர் கொண்டோர் சென்னையில் நடைபெறும் ஆசிரியர் பயிற்சியில் பங்குபெறும் ஆசிரியர்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு அங்கு வழிகாட்ட விக்கிப்பீடியர் எவரேனும் உள்ளனரா? துப்புரவு, பராமரிப்புப் பணிப்பளு அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒரு இலட்சம் கட்டுரைகளை நோக்கிச் செல்லும் முனைப்பில் அதிவேகமாக உருவாகும் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, கட்டுரைகளின் தரம் கேள்விக்குரியதாக உள்ளது கவலை தரும் விடயமாக உள்ளது. --Booradleyp1 (பேச்சு) 04:21, 5 மே 2017 (UTC)[பதிலளி]
பயிற்சி வகுப்புகள் மூலம் வந்தவர்களாக இருக்கலாம். ஆசிரியர்களுக்கு பெரும்பாலும் TNSE என்று தொடங்குமாறு பெயரிட அறிவுறுத்தினர். சிலர் முன்பே தொடங்கிய பெயரிலும் எழுதுகிறார்கள். வேறு பயிற்சிகள் பல நடந்தன எனக்கு அதிகமாகத் தெரியவில்லை. தமிழ்ப்பரிதி அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். பார்வதிஸ்ரீ, பரிதிமதி இருவரும் ஒருங்கிணைக்கிறார்கள். ஆனால் பொதுவாக மணல்தொட்டியைத் தான் பரிந்துரைத்தோம் எனவே ஆர்வத்தில் சிலர் கட்டுரைகளை நகலெடுத்து ஏற்றியிருக்கலாம். அதிகக் கட்டுரைகளை (தரமுடன் தான்) எழுதுவது அவர்களின் இலக்கு ஆனால் புதியவர்கள் என்பதால் விக்கிநடைக்கு அனுபவம் தேவைப்படலாம். நான் அறிந்தவரை இதுவரை பலருக்குப் பயிற்சி கொடுத்ததால் குறிப்பாக அவர்களிடம் அறிவுறித்தி உடனே மாற்றுவது கடினம். நேற்று வரை நடந்த நிகழ்ச்சி பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:40, 5 மே 2017 (UTC)[பதிலளி]

ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி

கிருஷ்ணகிரியில் மே மாதம் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதி பதிவேற்றம் செய்யும் பயிற்சி நடைபெற இருப்பதாக அறிகிறேன். இதை யார் ஒருங்கிணைக்கின்றனர்? நமது விக்கி சமூகத்திலிருந்து யாராவது பங்கு கொள்கின்றனரா? அல்லது தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அம்மாதிரியான பயிற்சிகளை மாவட்டம்தோறும் நடத்துகிறதா எனத் தெரியவில்லை. @Arulghsr and Parvathisri: --இரா. பாலா (பேச்சு) 02:29, 6 மே 2017 (UTC)[பதிலளி]

ːːகாண்க. விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:24, 6 மே 2017 (UTC)[பதிலளி]

த. வி. பிரதான விக்கியில்

விக்கிப்பீடியாவின் முகப்புப்பக்கத்தில் த.வி.யையும் தெரிவு செய்யும் பகுதியில் அமைக்குமாறு கேட்கலாம். தெரிவில் 100,000 கட்டுரைகளைக் கொண்ட 58 விக்கிகள் உள்ளன. மேலும், 10 000+ பகுதியில் உள்ள த.வி 100 000+ பகுதிக்குச் செல்ல வேண்டும். மேலும், ஆங்கில விக்கியின் "Wikipedia languages" பகுதியில் த.வி.யையும் சேர்க்க 50,000 கட்டுரைகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கேட்கலாமா? --AntanO 05:39, 10 மே 2017 (UTC)[பதிலளி]

நிச்சயமாக அன்ரன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:41, 13 மே 2017 (UTC)[பதிலளி]

ஏற்கனவே விக்கிபீடியா முகப்புப் பக்கத்தில் தமிழ் விக்கி தெரிகிறது --சண்முகம்ப7 (பேச்சு)

எங்கே, இணைப்புத்தாருங்கள், பார்க்க ஆவலாக உள்ளேன்.அண்ணா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:35, 13 மே 2017 (UTC)[பதிலளி]

wikipedia.org--சண்முகம்ப7 (பேச்சு) 04:36, 13 மே 2017 (UTC)[பதிலளி]

ஆனால் அது 10 000+க்குள் அல்லவா இருக்கிறது, நாம் இப்போது 100 000+ அல்லாவா அண்ணா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:41, 13 மே 2017 (UTC)[பதிலளி]

அது இன்னும் சரியாக இற்றை ஆகவில்லை என நினைக்கிறேன். இன்னும் கட்டுரைகளின் எண்ணிக்கை 99000+ என்றே உள்ளது. சில நாட்கள் கழித்து பார்ப்போம், இற்றையாகவில்லையெனில் வழு பதியலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 04:46, 13 மே 2017 (UTC)[பதிலளி]
சரி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:09, 13 மே 2017 (UTC)[பதிலளி]
Sorry, I am unable to type in Tamil right now. I do not see Tamil in main interface after cleaning cache memory and tried in some browsers and mobile phone. Tamil is not included in drop-down menu too. English Wiki's front page does not add Tamil. I think English Wiki would not add due quality and bot issues. --AntanO 05:15, 13 மே 2017 (UTC)[பதிலளி]
அன்ரன் English Wiki's front pageக்கான இணைப்பைத் தர முடியுமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:18, 13 மே 2017 (UTC)[பதிலளி]
en.wiki Go to bottom and see under "Wikipedia languages". --AntanO 05:35, 13 மே 2017 (UTC)[பதிலளி]
அன்ரன், அவர்களே, இதற்கு என்ன செய்யவேண்டும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:54, 13 மே 2017 (UTC)[பதிலளி]
We have to discuss with them. I remember Sundar had a discussion (at meta?) when we reached 50,000+ articles. --AntanO 05:58, 13 மே 2017 (UTC)[பதிலளி]
அன்ரன் இது உலாவிப் பிரச்சனை போன்று தெரிகின்றது. கூகிள் குரோமில் தெரிகின்றது, அதன் திரைப்பிடிப்பு அருகில் இணைத்துள்ளேன். பயர் பொக்சில் தெரியவில்லை. --சி.செந்தி (உரையாடுக) 06:17, 13 மே 2017 (UTC)[பதிலளி]
சி.செந்தி நானும் குரோம் தான் பயன்படுத்துகின்றேன். அது எவ்வாறு தமிழ் மேலே வந்தது. குழப்பமாக உள்ளது. எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. தமிழ் இருக்கும் இடத்தில் எசுப்பானியம் இருக்கிறது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:05, 13 மே 2017 (UTC)[பதிலளி]

த.வி ஓரிலக்கம் கட்டுரைப் பிரிவில் 59 ஆகச் சேர்ந்துள்ளதே!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:42, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

ஆசிரியர் பயிற்சியில் சிறப்பாகப் பங்களிப்போர்

ஆசிரியருக்கான விக்கிப்பீடியா பயிற்சியினூடாக பல ஆசிரியர்கள் பங்களித்து வருகின்றனர். துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவரும் நமக்கு அவர்கள் எழுதும் கட்டுரையின் அமைப்பு மற்றும் உள்ளடக்கம் சார்ந்து விக்கிப்பீடியாவின் நடைக்கு ஏற்ப கட்டுரை எழுதும் சிலரை இனம் காண முடிகிறது. அம்மாதிரியானவர்களை இனம் கண்டு தமிழ் விக்கியில் தக்கவைத்தல் வேண்டும் என விரும்புகிறேன். உதாரணமாக, பயனர்:TNSE MATHIVANAN DIET ERD எழுதிய முதல் கட்டுரையான ஈரோடு அரசு அருங்காட்சியகம் விக்கி நடைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இதுபோல இன்னும் சிலர் நன்றாகச் செயல்படுகின்றனர். அவர்களை பட்டியலிட்டு தேவையான உதவிகளை வழங்கினால் அவர்களால் இன்னும் விக்கியில் சிறப்பாக பங்களிக்க இயலும். இது தொடர்பான பிறரின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். --இரா. பாலா (பேச்சு) 02:18, 13 மே 2017 (UTC)[பதிலளி]

நிச்சயம் செய்வோம். மிளிரும் ஆசிரியர்களை இங்கு பட்டியல் இடலாம். இத்தகைய ஆசிரியர்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு தக்க வேளையில் பொருத்தமான பதக்கம் அளித்தும் ஊக்குவிக்கலாம். --இரவி (பேச்சு) 03:40, 13 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:43, 13 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:39, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு

இங்கு இடம்பெற்ற விடயம் தொடர்பில் ஆலோசனை வழிகாட்டல் தேவை. மேலும், சில எடுத்துக்காட்டுகள்:

இவ்வாறு விட்டுக் கொடுப்புடன் காணப்படும் தமிழ் விக்கிப்பீடியா, ஏன் கிறிஸ்து, கிறிஸ்தவம், இஸ்லாம், முஸ்லிம் ஆகிய சொற்களில் மட்டும் இறுக்கமாக கிரந்தத் தவிர்ப்பு என்ற வழிகாட்டலைக் கொண்டுள்ளது? தமிழ் விவிலியத்தில் கிறிஸ்து என்ற சொல் கிட்டத்தட்ட 480 தடைவைகள் பயன்படுத்தப்பட, தமிழ் விக்கி கிரந்தத் தவிர்ப்பு என்ற பெயரில் ஒரு சமயத்தின் முக்கிய சொல்லை கிரந்தத் தவிர்ப்பு என்ற பெயரில் சிதைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. காண்க: en:WP:CENSOR, en:WP:NOTGUIDE, en:WP:FORUM, en:WP:NOT#DICT --AntanO 07:25, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

எனக்கு தெரிந்து முன்பு பலர் கிரந்தம் கலந்து எழுதினார்கள் (நானும்), இப்போதும் சிலர் எழுதுகிறார்கள். தமிழில் எழுதிவிட்டு அடைப்புக்குறிக்குள் கிரந்தம் உள்ளதை குறிக்கலாம் வழிமாற்று ஏற்படுத்தலாம். இது தேடுபவர்களுக்கு உதவும். எகா முசுலிம் (முஸ்லிம்) , இசேம்சு (ஜேம்ஸ்). சியா (ஷியா) இலக்கணப்பிழை நிறைய இடத்தில் இருக்கும் காரணம் அதை அறியாதது --குறும்பன் (பேச்சு) 20:20, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

எனினும் இதனை எல்லா வசனங்களிலும் எழுதமுடியாது தானே. ஆகையால் அனைவருக்கும் பொதுவான வழக்கினை, அல்லது பரவலாகப் பயன்படும் வழக்கினை நடைமுறைக்குக்கொண்டுவரலாம். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:09, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
இலங்கைப் (தமிழ் நாட்டிலும்?) பாடத்திட்டங்களில் தமிழோடு சேர்த்து வடமொழி (கிரந்த) எழுத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன. ஆகவே, இது இயல்பாக கிரந்தப் பாவனையை தவிர்ப்பது கடினம். நிற்க, த.வியில் பல சொற்கள் கிரந்த, இலக்கண மீறல்களுடன் "பொது வழக்கு" என்று எழுதப்பட, சில சொற்களில் மட்டும் கட்டும் கட்டாயமாக தனித்தமிழை நடைமுறைப்படுத்தவியலாது. ஒன்றில் தனித்தமிழ்தான் த.வியில் இருக்கும் என்ற கொள்கையைக் கொண்டு வர வேண்டும், அல்லது எப்படியும் எழுதலாம் என்றால் சில சொற்கள் விடயத்தில் மட்டும் இறுக்கம் காட்டவியலாது. வணிகப் பெயர்கள் என்பதற்காக இலக்கண விதி மீறலையும் கிரந்தத்தையும் அனுமதிக்கும் த.வி. சில சொற்கள் விடயத்தில் மட்டும் மறுப்பது எவ்வகையில் நியாயமாகும்? --AntanO 02:27, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
//அனைவருக்கும் பொதுவான வழக்கினை// அதாவது நூற்றுக்கு நூறு வீதம் கிரந்தப் பயன்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் எனக் கூறுகிறீர்களா? இதனைத் தான் அன்ரனும் விரும்புகிறாரா? தமிழ் விக்கியில் முடிந்த அளவு கிரந்தத் தவிர்ப்பு என்பதே நடைமுறையில் உள்ள கொள்கை. இலக்கண மீறல் சொற்களை இனங்கண்டு அவற்றைத் திருத்தலாம். க்ரியா என்பது தமிழில் வழங்கப்படும் அதிகாரபூர்வமான வணிகச் சொல். ஆங்கில வணிகச் சொல் என்றால் அதனை நாம் எமது இலக்கண முறைப்படி தமிழில் எழுதலாம். ஆனாலும், கிரியா என எழுத வேண்டும் எனப் பெரும்பாலானோர் (எனக்கும் அவ்வாறே விருப்பம்) தீர்மானித்தால் அவ்வாறே எழுதலாம். அடைப்புக்குள் அதிகாரபூர்வமான பெயரைக் கட்டுரையில் குறிப்பிடலாம். க்ஷ என்ற எழுத்தில் துவங்கும் சொற்களை எவ்வாறு எழுதலாம் எனபதை இட்டு விவாதிக்கலாம். மேலும் இந்து சமயக் கட்டுரைகளில் அதிகளவு கிரந்தக் கலப்பு உள்ளது உண்மை. அவற்றை இனங்கண்டு தகுந்த முறையில் திருத்தலாம். எவரும் அதனை ஆட்சேபிக்கப் போவதில்லை. கிறித்தவத் தமிழரே அதிகளவு கிரந்தம் தவிர்த்து அக்காலத்தில் எழுதினார்கள். ஜோசப் - யோசேப்பு, யோசப்பு, சூசை... இவ்வாறு பல உதாரணங்கள் உள்ளன.--Kanags \உரையாடுக 02:45, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
இலக்கண விதி மீறல் இருக்கக்கூடாது என்பது மிக முக்கியம். யேசு என்பது தமிழ் இலக்கணத்திற்குப் பிழை என்பதால் இயேசு என்று எழுதப்படுகிறது. ஆனால் யோசேப்பு என்பதில் என்ன செய்வது? ஆனால் பிறமொழிச் சொற்களை தமிழில் எழுத மெய்யெழுத்தில் தொடங்குவது நடைமுறைக்கே (இலக்கண விதி மீறல் + தமிழ் உச்சரிப்பு) ஏற்றுக் கொள்ள முடியாது. முடிந்த அளவு கிரந்தத் தவிர்ப்பு என்பதில் "அளவு" என்பது ஏரண நோக்கில் தெளிவற்றது. ஆளாளுக்கு அளவு வேறுபடும். அதனால், அண்மையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள் (சக்தி மகரிஷி, ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை) தன்னளவில் முடிந்த அளவு கிரந்தத் தவிர்ப்பு என்பதைக் கையாண்டுள்ளது. என்னைப் பொருத்தவரை த.வி தெளிவான வழிகாட்டலைக் கொண்டிருக்க வேண்டும். கிறித்து என்றாலும், கிறிஸ்து என்றாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எனது பரிந்துரைகள்:
  • வணிகப் பெயராயினும், இலக்கண மீறல் கூடாது. தேவைப்பட்டால் அடைப்புக்குறியினுள் வணிகப் பெயரை இடலாம். ராணா கபூர் போன்ற இலக்கண மீறல்களை என்ன செய்வது. இராணா கபூர் என்று எழுதுவதை நிபந்தனை இன்றி ஏற்றுக் கொள்ளலாமா?
  • கிரந்த நீக்கம் சகல கட்டுரைகளிலும் வேண்டும். தேவைப்பட்டால் {{en}} என்பது போல {{கிரந்தம்}} என கட்டுரையில் பயன்படுத்தலாம். அல்லது கிரந்தம் அவரவர் விருப்பப்படி இருக்கலாம். யாரும் மறுக்கக்கூடாது.

--AntanO 04:36, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

கிறித்தவம் என்ற சொல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்குவதற்கு முன்பும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வெளியிலும் கூட பரவலாக பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ள சொல். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் கிறித்தவரான இறையியல் பேராசிரியரே கிறித்தவம் என்னும் சொல்லைப் பலமுறை பயன்படுத்துகிறார். இரு சொற்கள் புழக்கத்தில் இருக்கும் போது, அவற்றுள் கிரந்தம் கலக்காத சொல்லைப் பயன்படுத்தலாம் என்பதே தமிழ் விக்கிப்பீடியா புரிந்துணர்வு. எடுத்துக்காட்டுக்கு, ஹனுமன் -> அனுமன் என்று கட்டாயம் மாற்றப்படும். ஆனால், ஹஜ் என்பதற்கு அச்சு போன்ற சொற்கள் புழக்கத்தில் இல்லாததால் ஹஜ் என்னும் நிலையே தொடர்கிறது. இது எல்லா சமயங்களுக்கும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். இங்கு முடிவு என்பது சொல்லை வைத்துத் தானே தவிர, துறையைச் சார்ந்து அன்று. ஏற்புடைய தொகுப்புகள் கூட செய்யப்படாமல் இருப்பதற்கு உரை திருத்தம் செய்வதற்குப் போதிய பங்களிப்பாளர் இல்லாமையும் ஒரு காரணம். எனவே, இது போன்ற எடுத்துக்காட்டுகளை முன்வைத்து தமிழ் விக்கிப்பீடியா குறிப்பிட்ட சமயங்களை இருட்டடிப்பு செய்கிறது என்று கருத இடமில்லை. ஒருவேளை, ஒரு சில பயனர்கள் இவ்வாறு திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால் தகுந்த ஆதாரங்களுடன் முறையிட வேண்டுகிறேன். தக்க நடவடிக்கை எடுப்போம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கக் காலத்தில் கிரந்தம் பற்றி அடிக்கடி எழுந்த உரையாடல்கள் நாம் தமிழ் தாலிபான்கள் என்று விமரிசிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது. காலப்போக்கில், கிரந்தம் தொடர்பான ஒரு எழுதப்படாத புரிந்துணர்வை, பொதுக்கருத்தை எட்டியுள்ளதாகவே உணர்கிறேன். அஃதாவது:

தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் தொடர்பில் மூன்று வகை பயனர்கள் உள்ளனர்:

  • முற்றிலும் எல்லா இடங்களிலும் கிரந்தம் தவிர்ப்போர்.
  • பொது வழக்கில் எங்கெல்லாம் கிரந்தம் தவிர்க்கப்படுகிறதோ அங்கு தவிர்த்து எங்கு புழங்குகிறதோ அங்கு பயன்படுத்துவர். அனுமன் என்றும் எழுதுவர். ஜார்ஜ் ஹார்ட் என்றும் எழுதுவர்.
  • இயன்ற வரை கிரந்தம் தவிர்ப்போர். எடுத்துக்காட்டுக்கு, தேம்சு என்று எழுதுவார்கள். ஆனால், சேம்சு என்று எழுத விரும்ப மாட்டார்கள். ஓரளவு மூல மொழியுடன் ஒலி இணக்கம் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இதற்குக் காரணமாக இருக்கலாம்

இந்த மூவரும் அவரவர் பாணியில் கட்டுரைகளில் பங்களிப்பதற்கான சம வெளியை தமிழ் விக்கிப்பீடியாவை உறுதி செய்கிறது. அதே வேளை, ஒரு வகை பயனர் இன்னொருவருக்கு கிரந்தம் தொடர்பாக "வேண்டுகோள்/அறிவுரை" வழங்குவதைத் தேவையற்ற பரப்புரையாகவும் காண்கிறது. தத்தம் நடையில் அவரவர் பங்களிக்கட்டும் தங்களை மாற்றச் சொல்ல வேண்டாம் என்ற பொதுவான எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஒருவர் தான் விரும்பும் நடையில் கட்டுரைகளை இருக்க வேண்டும் என்று எண்ணினால் அதற்குத் தகுதியான உழைப்பினைச் செலுத்தி முழுமையான கட்டுரைகளை உருவாக்க வேண்டும் என்றும், கிரந்தம் சேர்ப்பது/நீக்குவது என்பதனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பல கட்டுரைகளில் ஒரே மாதிரியான தொகுப்புகளைச் செய்தல் கூடாது என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மனிதத் தொகுப்புகள்/தானியங்கித் தொகுப்புகள் இரண்டுக்கும் இது பொருந்தும். இந்த எதிர்பார்ப்பு நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டும் வருகிறது.

இவர்களுள் சேராத இன்னொரு வகை பயனர் விக்கிக்கு வெளியே இருக்கிறார்கள்.

  • முற்றிலும்/தேவையற்ற இடங்களிலும் கிரந்தம் திணிப்போர். இதயம் -> ஹ்ருதயம் என்று எழுதுவோர். இந்நடை தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

விக்கிமீடியா இயக்க வியூகக் கலந்துரையாடல் தொடர்பாகப் பலருடன் பேசி வருகிறோம். மிகவும் நன்கு படித்தவர்கள் கூட விக்கிப்பீடியாவின் நடையையும் மொழியையும் புரிந்து கொள்வது சிரமமாக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். எனவே, நடைமுறைத் தமிழ்ச் சூழல் கருதி கிரந்தம்/இலக்கணம் இரண்டு தொடர்பாகவும் இறுதியான இறுக்கமான நிலை எடுப்பது தற்போது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவாது. இன்னும் பல நூற்றுக்கணக்கான முனைப்பான பங்களிப்பாளர்கள் இணையும் போது இன்னும் சீரான நடை உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.

உலகத் தமிழர் ஒன்றிணைந்து செயற்படும் பெருமைக்குரிய திட்டம் தமிழ் விக்கிப்பீடியா. காலம் காலமாக, தமிழர் ஒன்றிணைந்து செயற்படும் சூழல்களில் அவர்களைப் பிரித்தாள இனம், மதம், மொழி, நாடு, பணம் என்று பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள். எனவே, இவ்வாறான நோக்கங்கள் தொடர்பாக விழிப்புடன் தொடர்ந்து செயற்படுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 06:26, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

வேடிக்கையான உதாரணம். கிறிஸ்த்தவரான இறையியல் பேராசிரியரே "கிறித்தவம்" என்னும் சொல்லைப் பலமுறை பயன்படுத்துகிறார் என்பதைவிட தமிழ் விவிலியம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதே முக்கியம். இங்கு உசாத்துணை கிறிஸ்த்தவரான இறையியல் பேராசிரியரா? மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்கள் பின்பற்றும் தமிழ் விவிலியமா?

//இது போன்ற எடுத்துக்காட்டுகளை முன்வைத்து தமிழ் விக்கிப்பீடியா குறிப்பிட்ட சமயங்களை இருட்டடிப்பு செய்கிறது என்று கருத இடமில்லை.// யார் கருதியது?

//காலம் காலமாக, தமிழர் ஒன்றிணைந்து செயற்படும் சூழல்களில் அவர்களைப் பிரித்தாள இனம், மதம், மொழி, நாடு, பணம் என்று பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள்.// யார்? இதை இங்கு குறிப்பிடக் காரணம் என்ன? --AntanO 06:58, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

இதே உரையாடல் இழையிலும் இங்கும் சமய நோக்கிலான சிதைப்பு, இருட்டடிப்பு முதலிய கோணங்களில் இவ்வுரையாடல் அணுகப்பட்டது. அப்படிப்பட்ட நிலைப்பாடு ஏதும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இங்கு பங்களிக்கும் கிறித்தவர்களும் அத்தகைய நடையைப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்பினேன்.
தமிழ் விவிலியம் முதலிய பல்வேறு சமய ஆக்கங்களில் கிரந்தம் கலந்து இருப்பதை யாரும் மறுக்கவில்லை. இதே ஏரணம், வேதங்கள் உள்ளிட்ட மற்ற சமய ஆக்கங்களுக்கும் பொருந்தும். அதே வேளை, கிரந்தம் கலக்காத சொல்லும் பரவலான புழக்கத்தில் இருந்தால் அதனைப் பயன்படுத்துவது தமிழ் விக்கிப்பீடியா வழக்கம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளேன்.
//இதை இங்கு குறிப்பிடக் காரணம் என்ன// தமிழ் விக்கிப்பீடியா நலம் குறித்த அக்கறை தான்.--இரவி (பேச்சு) 07:17, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

//இதே ஏரணம், வேதங்கள் உள்ளிட்ட மற்ற சமய ஆக்கங்களுக்கும் பொருந்தும்.// நல்லது. உங்ளுக்குத் வேதங்கள் பற்றிய தெளிவிருந்தால் உரிய மாற்றம் செய்யலாம். நான் வேண்டாம் எனவில்லை. ஆனால் கிறிஸ்தவம் தொடர்பான விடயத்தில் "மட்டும்" நியாயபடுத்த வேண்டாம். --AntanO 07:23, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

நீங்கள் தந்தது கிறித்தவம் தொடர்பான எடுத்துக்காட்டாக அமைந்தது. இதே அணுகுமுறை, விளக்கம் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். --இரவி (பேச்சு) 07:30, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

ஆம், நான் மறுக்கவில்லை.--AntanO 08:08, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

இந்தியாவில் கிறிஸ்தவம் என்ற கட்டுரைக்கான பகுப்பு "இந்தியாவில் கிறித்தவம்" எனக் காணப்பட, ஒருமைப்பாட்டுக்காக பகுப்பு, அதனுடன் தொடர்புபட்டவற்றை இந்தியாவில் கிறிஸ்தவம் என மாற்ற வேண்டியதாயிற்று. இது தொடர்பில் ஏற்றபட்ட உரையாடல் சமய சாயம் பூசுதல், "பிரித்தாள இனம், மதம், மொழி, நாடு, பணம் என்று பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள்" என்று சென்றிருக்கத் தேவையில்லை. பதிலுக்கு நானும் பல சொற் பிரயோகம் செய்திருக்கலாம். தயவுசெய்து இனி இவ்வாறு செய்ய வேண்டாம்.

நிற்க, தமிழ் விவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) "முடிந்த அளவு கிரந்தத் தவிர்ப்பு" கொண்டுள்ளது. எ.கா: மத்தேயு 1:1-3

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம்.

இதற்கான ஆங்கிலம்:

This is the genealogy of Jesus the Messiah the son of David, the son of Abraham: Abraham was the father of Isaac, Isaac the father of Jacob, Jacob the father of Judah and his brothers, Judah the father of Perez and Zerah, whose mother was Tamar, Perez the father of Hezron, Hezron the father of Ram,

இங்கே தவிர்க்கப்பட்ட கிரந்தச் சொற்கள்:

  • Abraham - ஆபிரஹாம் என்பது ஆபிரகாம்
  • Jacob - ஜேக்கப் என்பது யாக்கோபு
  • Judah - ஜூடா என்பது யூதா
  • Perez - பெரஸ் என்பது பெரேட்சு
  • Zerah - ஷேரா என்பது செராகு
  • Hezron - ஹெஸ்ரன் என்பது எட்சரோன்

ஆனால், கிறிஸ்து என்பதை கிறித்து என்று எந்த விவிலியமும் எழுதவில்லை. இவ்வாறு ஒருசில, கட்டாயமான இடங்களில் மட்டும் கிரந்தம் எழுதப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட த.வி.யில் உள்ள போக்கு (பொது வழக்கில் எங்கெல்லாம் கிரந்தம் தவிர்க்கப்படுகிறதோ அங்கு தவிர்த்து எங்கு புழங்குகிறதோ அங்கு பயன்படுத்துவர்). ஆனால் பொது வழக்கில் புழங்கப்படும் கிறிஸ்து எனும் கிரந்தச் சொல் விடயத்தில் த.வி முரண்பாடு கொள்ளத் தேவையில்லை. மேலும், "கிறிஸ்து அரசர் தேவாலயம்" என்பது குறிப்பிட்ட தேவாலயத்தில் உத்தியோக பூர்வமான, பொது வழக்கான பெயராயிருக்க, இதனை "கிறித்து அரசர் கோயில்" என மாற்றவது முறையாகாது. ஆகவே, விவிலியத்துடன் தொடர்புபட்ட தலைப்புக்களில், குறிப்பிப்பாக கிறிஸ்து தொடர்புபட்ட கிறிஸ்தவம், கிறிஸ்தவர் ஆகிய சொற்களில் தனித்தமிழ் தேவையில்லை. இல்லையென்போர், தயவு செய்து ஏரணச் சுழற்சி இல்லாது கருத்தினைத் தெரிவியுங்கள். நன்றி. --AntanO 09:46, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

இந்து சமயத்தை இதே போல் ஹிந்து சமயம் என்றே தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என்று ஒரு பயனர் வேண்டினால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?--இரவி (பேச்சு) 12:52, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

கிரந்தம் தவிர்க்கும் நோக்கில் கிறித்து என எழுதுவதை வரவேற்கிறேன். கிரந்தம் தவிர்த்து எழுதிய பின்னரும் பலருக்கும் புரியும் எனில் கிரந்தம் தவிர்த்து எழுதுவதே நல்லது. அதே சமயம் ஒட்டு மொத்தமாக கிரந்தம் தவிர்த்து எழுதுவது (ஹஜ்-அச்சு) பயன் தராது என எண்ணுகிறேன். மேலும் கிரந்தம் பயன்படுத்தலை மதம் சார்ந்து அணுகுதலைவிட வாசிக்கும் மக்களின் பயன்சார்ந்து அணுகுதல் நல்லது.--இரா. பாலா (பேச்சு) 13:55, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

இவ்வளவு தெளிவாக தெரிவித்த பின்னும் கேள்வி கேட்பது எதற்கு? ஹிந்து சமயம் என்பது சரியாக இருந்தால், அதில் தவறில்லை. அதனை அச்சமயத்தில் என்னைவிட அறிவுள்ளவர்களிடமே விடுகிறேன். இலண்டன் தாக்குதல், ஜூன் 2017 என்பதில் சூன் என்று எழுதியிருக்கலாமே? பலருக்கும் புரியும்தானே? கிறிஸ்தவர்கள் கடவுளாக குறிப்பிடும் ஒருவருக்கு இப்படித்தான் பெயர் வைப்போம் என்கிறீர்களா? --AntanO 15:08, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

இதில் கிறித்தவம் என்ற மதம் சார்ந்து யாரும் நிலைபாடு எடுப்பதாகத் தெரியவில்லை. சூன், யூலை போன்றவை தமிழகத்தில் அதிகப் பழக்கத்தில் இல்லாதவை. நான் எழுதுதில் பொதுப் புழக்கத்தில் உள்ள சொற்களையே பயன்படுத்துகிறேன். மேலும் இலண்டன் தாக்குதல், சூன் 2017 என மாற்றுவதாகிலும் மாற்றலாம். உதாரணமாக யாவாக்கிறிட்டு என்ற சொல்லை மட்டும் சொன்னால் தமிழகத்தில் எத்தனை பேருக்குப் புரியும் எனத் தெரியவில்லை. ஆனால் கிறித்துவம் எனும் சொல் பலகாலமாக (தமிழகத்தில்) புழக்கத்தில் உள்ளது.--இரா. பாலா (பேச்சு) 15:53, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

//கிறித்துவம் எனும் சொல் பலகாலமாக (தமிழகத்தில்) புழக்கத்தில் உள்ளது.// ஆதாரம்? கீழுள்ள கருத்தையும் கவனிக்க. --AntanO 16:23, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

தேடு பொறியில் கிறித்துவம் எனத் தேடினால் வருவதெல்லாமே அது புழக்கத்தில் உள்ளது என்பத்ற்கான ஆதாரம்தான். //கிறிஸ்தவர்கள் கடவுளாக குறிப்பிடும் ஒருவருக்கு முறையற்ற விதத்தில் பெயரைத் திணிக்கின்றனர்// இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மதம் சார்ந்து இங்கு யாரும் இயங்குவதாகத் தெரியவில்லை.--இரா. பாலா (பேச்சு) 16:53, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
//தேடு பொறியில் கிறித்துவம் எனத் தேடினால் வருவதெல்லாமே அது புழக்கத்தில் உள்ளது என்பத்ற்கான ஆதாரம்தான்.// விக்கிப்பீடியா இதனை ஏற்றுக் கொள்ளுமா? ஆம் எனில் குறித்த விக்கிப்பக்கம் சுட்டுக. --AntanO 16:58, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
ஆதாரம் எனக்குறிப்பிட்டது இவ்வுரையாடலுக்குத்தான். அதாவது அச்சொல் பழங்காலமாகப் புழக்கத்தில் உள்ளது என்பதைச் சுட்டவே. அச்சொல்லைப் பயன்படுத்துவதும் தவிர்ப்பதும் கொள்கை சார்ந்தது. கிறுத்துவம் கிறித்து எனும் சொல் தமிழகத்தில் கிறித்துவ நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வழக்கமாகப் பயன்படுத்துவதுண்டு. பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் அச்சொல்லைப் பயன்படுத்துவதால் குழப்பம் வராது. பொதுவாகவே முடிந்த அளவு கிரந்தம் தவிர்த்தல் எனும் கொள்கையுடனே பலர் எழுதிவருகிறோம். கிரந்தம் தவிர்த்து எழுதினாலும் அதன் பொருள் புரியும் என்றால் அதை எழுதுவதே நல்லது என்பதே எனது நிலைபாடு. இதில் மதம் சார்ந்த பார்வை இல்லை. பிற பயனருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.--இரா. பாலா (பேச்சு) 17:08, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

வணிகப் பெயர்களுக்கும் பிற பெயர்களுக்கும் விட்டுக் கொடுக்கும் சிலர் கிறிஸ்தவர்கள் கடவுளாக குறிப்பிடும் ஒருவருக்கு முறையற்ற விதத்தில் பெயரைத் திணிக்கின்றனர். முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளுடன் இது சரி என்பீர்களா? என்னுடைய நியாமான கேள்விகளையும் விளக்கங்களையும் தவிர்த்து ஏரணம் கற்பிக்கின்றனர். இது நியாயமற்ற நிலை. --AntanO 15:24, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

தேடுபொறியில் வருகிறது, நிறுவனங்கள் பயன்படுத்துகிறது என்ற ஏரணம் தவிர்த்து விக்கி வழிகாட்டலின்படி முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளுடன் நிருபிக்க. --AntanO 17:12, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

//கிறித்துவம் எனும் சொல் பலகாலமாக (தமிழகத்தில்) புழக்கத்தில் உள்ளது.// என நான் குறிப்பிட்டதற்குத் தான் ஆதாரம் கேட்டீர்கள். தேடு பொறியில் கிடைக்கிறது என்பதே அது புழக்கத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரம்தானே. கொடுக்கப்பட்ட ஆதாரம் விக்கிப்பிடியா ஏற்றுக் கொள்ளாதது என்பதால் அது புழக்கத்தில் இல்லை என ஆகிவிடுமா? ஏரணம் தவிருங்கள்.--இரா. பாலா (பேச்சு) 17:17, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
தேடு பொறியில் கிடைக்கிறது என்பது ஆதாரமா? --AntanO 17:24, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
புழக்கத்தில் இல்லாமல் அச்சொல் எப்படி தேடு பொறியில் வந்தது?--இரா. பாலா (பேச்சு) 17:26, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

தேடு பொறியிடம்தான் கேட்க வேண்டும். தேடு பொறியில் புழக்கத்தில் உள்ளது என்பதற்காக முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளுடன் இல்லாத, நடைமுறை வழக்கத்தில் இல்லாத சொல்லைத் திணிக்க வேண்டாம். --AntanO 17:29, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

தமிழகத்தில் கிறித்தவம், கிறிஸ்தவம் எனும் சொற்கள் பலகாலமாக புழக்கத்தில் உள்ளன. எனவே இது திணிப்பு என கருதவில்லை. 2009 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இக்கட்டுரையைப் பாருங்கள். இது நம்பகமான ஆதாரம் இல்லை எனச் சொல்லாதீர்கள். இயல்பாகவே புழக்கத்தில் உள்ளது வலிந்து திணிக்கவில்லை என்பதைச் சுட்டவே இதைக் குறிப்பிட்டுள்ளேன்.--இரா. பாலா (பேச்சு) 17:35, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
ஆனால் அதைவிட முதலாம், இரண்டாம் நிலை மூலங்களில், பொது நடைமுறை வழக்கத்தில் உள்ள சொல்லை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். அக்கட்டுரையில் உள்ளே பல தடவைகள் "கிறிஸ்து" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜெயமோகன் எழுதியது விவிலியத்தைவிட சிறந்ததா? ஜெயமோகன் உதாரணம் காட்டும் நீங்கள் ஏன் விவிலியச் சொல்லாடைலை மறுக்கிறீர்கள்? நான் ஒரு வலைப்பூவிலில் "இந்ந்து" என்று பதிவுசெய்தாலும் காட்டும். --AntanO 17:55, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கியில் 5 ஏப்ரல் 2009 இல்தான் கிறிஸ்து "கிறித்து" என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. ஜெயமோகன் எழுதியது December 10, 2009 --AntanO 17:58, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

June 4, 2000 - April 4, 2008 காலப்பகுதியில் "கிறித்து" என்ற சொல் காணப்படவில்லை. --AntanO 18:06, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
வலுக்கட்டயமாக த.வி. "கிறித்து" என்ற சொல்லைக் கொண்டு வந்துள்ளது. "கிறிஸ்து" என்று எழுதியதை ஏன் கிறித்துவாக்கினீர்கள். அதன் இயல்பிலேயே விட்டிருக்கலாமே? --AntanO 18:09, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
கிறிஸ்து கட்டுரையில் தலைப்பு மாற்றம் பற்றி உரையாடப்படவில்லை. த.வி. கிறிஸ்துவை கிறித்துவாக்கிவிட நான் உட்பட பலரும் அதையே பின்பற்றினோம். ஆனால் தொடர்ந்து கண்ணை மூடிக் கொண்டு பினபற்றவியலாது. --AntanO 18:17, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
சரியாகப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் அல்லது ஏரணத்துடன் உரையாடுகிறீர்கள். ஜெயமோகன் கட்டுரையனது அச்சொல் புழக்கத்தில் உள்ளது என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவர் குறிப்பிட்டதால் நாமும் மாற்ற வேண்டும் எனச் சொல்லவில்லை. விவிலியச் சொல்லை மறுக்கவில்லை. கட்டுரை நகர்த்தப்பட்டது தொடர்பாக நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. நான் உரையாடியது மொத்தமும் இரண்டு அல்லது மூன்று கருத்துகளை முன்வைத்துதான்.
  • கிரந்தம் தவிர்த்து எழுதினாலும் அனைவருக்கும் புரியுமென்றால் கிரந்தம் தவிர்த்தே எழுதலாம். இதில் எவ்வித மத ரீதியான பார்வை இல்லை.
  • கிறித்து எனும் சொல் பலகாலமாகவே புழக்கத்தில் உள்ளது.
  • ஆதாரமாகக் கொடுக்கப்பட்ட தேடுபொறி முடிவுகள் மற்றும் ஜெயமோகன் கட்டுரை அது புழக்கத்தில் உள்ளது என்பதைச் சுட்டவே.

நீங்கள் ஒட்டு மொத்தமாக தவறாகப் புரிந்துள்ளீர்கள்.--இரா. பாலா (பேச்சு) 18:26, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

@George46:, இது தொடர்பாக உங்கள் கருத்து தேவை. --இரவி (பேச்சு) 20:13, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

சென்னை கிறித்துவக் கல்லூரி

@AntanO:, கிறித்தவம், கிறித்துவம் போன்ற சொற்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்துவதற்கு முன்பே புழக்கத்தில் உள்ளன. கிறித்தவர்களும் கிறித்தவ நிறுவனங்களும் பயன்படுத்துகிறார்கள். இது தமிழ் விக்கிப்பீடியா திணித்த சொல் அன்று. இது தொடர்பாக கூடுதல் தரவுகள், சான்றுகள் வேண்டும் எனில், அவற்றைத் திரட்டுவதற்குப் போதிய கால அவகாசம் வேண்டும். பவுல் போன்ற துறை அறிஞர்களிடம் கருத்து கோரியுள்ளோம். புழக்கத்தில் உள்ள கிரந்தம் தவிர்த்த சொல்லைப் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லையெனில் அச்சொல்லுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். பல முதல்நிலை, இரண்டாம் நிலை தரவுகளில் கிறிஸ்து என்றுள்ளதை யாரும் இங்கு மறுக்கவில்லை. அதே வேளை, கிறித்து என்று எழுதுவது ஏன் தமிழ் விக்கிப்பீடியா மொழிநடைக்கு உள்ளிட்டு ஏற்புடையது என்பதனையும் போதுமான அளவு விளக்கியுள்ளோம். இதில் சமயச் சாய்வு இல்லை. எனவே, விவிலியத்தில் உள்ளது போல் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதாதது அச்சமயத்தை அவமதிப்பது போலாகும் என்பது ஏற்புடைய கருத்தன்று. நன்றி. --இரவி (பேச்சு) 21:05, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

"கிறிஸ்து”, “கிறித்து” - ஒரு கருத்து

தவிர்க்க முடியாத காரணங்களால் த.வி.யில் நீண்ட காலமாக என் பங்களிப்புகள் குறைவாகவே இருந்துள்ளன. வருந்துகிறேன். எனினும், இரவி என்னிடம் கருத்துக் கேட்டமையால் இப்பதிவு.

பயனர்கள் பலர் சிறப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு கருத்துப் பற்றியும் விரிவாக எழுதத் தேவையில்லை என்று முடிவுசெய்தேன். சுருக்கமாக:

1) கிரந்த எழுத்துப் பயன்பாடு பற்றி த.வி.யின் பொதுக்கொள்கை எனக்கு ஏற்புடையதே. “இயன்ற மட்டும்” என்று வரையறுப்பதும் ஏற்புடையதே.

2) நான் “கிறித்தவம்” என்று இதுவரை எழுதி வந்துள்ளேன். சிலர் இதைக் “கிறித்துவம்” என்றும் கூறுவர். இது எழுத்துத் தமிழ். ஆயினும் பொதுவான பேச்சுத் தமிழிலும், கிறித்தவர்களின் மறையுரைகளிலும் “கிறிஸ்தவம்”, “கிறிஸ்துவம்” என்ற சொற்களே மிகப் பெரும்பான்மையாகப் பயன்பாட்டில் உள்ளன.

3) “கிறிஸ்து” என்ற சொல்லை “இயன்ற மட்டும்” மாற்றாமல் விட்டுவிடுவது நன்று. இதற்கான அடிப்படைக் காரணம், 1995ஆம் ஆண்டு கிறித்தவ சபைகள் ஒன்று சேர்ந்து, தற்காலத் தமிழில், இயன்றவரை கிரந்தம் தவிர்த்து, வடமொழிச் சொல்லாடலை ஒதுக்கிவிட்டு, “அவன்”, “அவள்” என்னும் சொற்களுக்குப் பதில் “அவர்” என்று மரியாதைப் பன்மைப் பயன்படுத்தி, மதுரை மாநகரில் வெளியிட்ட “திருவிவிலியம்” (பொது மொழிபெயர்ப்பு) இதுவரை வெளிவந்த மொழிபெயர்ப்புகளுள் தலைசிறந்ததாக அமைந்துள்ளதும், அம்மொழிபெயர்ப்பு Christos, Christus, Christ என்று முறையே கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வழங்கப்படுகின்ற சொல்லைக் “கிறிஸ்து’ என்று மொழிபெயர்த்துள்ளதும் ஆகும். இச்சொல் கிறித்தவ சமயத்திற்கு அடிப்படையான ஒன்று என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

எனவே, “கிறிஸ்து” என்ற சொல்லை அவ்வாறே தருதல் கிறித்தவர்களுக்குப் பெரிதும் ஏற்புடையதாகும்.

4) தேடுபொறிப் பயன்பாடு பற்றிய நுட்பங்களை விரிவாக அறியாத எனக்கு அதுபற்றித் தனிக் கருத்து இல்லை. இருப்பினும், “கிறிஸ்து” (”கிறித்து”), “கிறிஸ்தவம்” ( “கிறித்தவம்”), “கிறிஸ்துவம்” (”கிறித்துவம்”) என்று மாற்றுச் சொற்கள் கொடுக்க தேடுபொறியால் முடியும் என்றால் அதை அறிமுகப்படுத்தலாம்.

5) த.வி.யின் “விக்கிமூலத்தில்” தமிழ் விவிலியம் முழுவதையும் பதிவு செய்தேன். அங்கு தமிழ் விவிலியத்தின் பாடம் அச்சுப் பதிப்பில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே தரப்பட்டுள்ளது. எனவே, அங்கு “கிறிஸ்து” என்ற சொல் வருமே ஒழிய “கிறித்து” வராது. எனவே, தேடுபொறியில் “கிறித்து” என்று மட்டுமே கொடுப்பதாக இருந்தால், ”கிறிஸ்து” என்ற விவிலிய பாடம் அங்கு தோன்றாமலே போய்விடும் நிலை ஏற்பட்டுவிடும். அது சரியாகாது.

6) கிறித்தவத்தில் வழங்குகின்ற பிற சிறப்புப் பெயர்ச்சொற்களையும் வலிந்து திரிக்காமல் விட்டுவிடுவதே நன்று. விவிலியப் பெயர்கள் பெரும்பாலும் எபிரேயம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளினின்று பிறந்தவை. சில பெயர்கள் கிறித்தவ வரலாற்று வழக்கத்தில் குறிப்பிட்ட வடிவம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, யோசேப்பு, யாக்கோபு, யூதா போன்றவற்றைக் காட்டலாம். இவற்றிற்கு முன் “இ” எழுத்தை இடுவது முறையாகாது. “இயேசு” என்ற சொல் கிறித்தவர்களிடையேயும் தமிழ் விவிலியத்திலும் உள்ள சொல். அதை “ஏசு” என்றோ “யேசு” என்றோ எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். தேடுபொறியில் அச்சொற்களை மாற்றுச் சொற்களாகத் தரலாம். ஏனென்றால் பலர் அச்சொல் வடிவங்களைக் கையாளுகிறார்கள்.--பவுல்-Paul (பேச்சு) 00:36, 5 சூன் 2017 (UTC)[பதிலளி]