பயனர் பேச்சு:Hibayathullah: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
வரிசை 474: வரிசை 474:
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 17:04, 31 மே 2017 (UTC)
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 17:04, 31 மே 2017 (UTC)

== தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு ==
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 17:06, 31 மே 2017 (UTC)

17:06, 31 மே 2017 இல் நிலவும் திருத்தம்


ஹிபாயத்துல்லா பேச்சு:



பயனர்:Hibayathullah
   
பயனர் பேச்சு: Hibayathullah
   
பயனர்: Hibayathullah /பங்களிப்பு
   
பயனர்: Hibayathullah /பயனர் பெட்டி
   
பயனர்: Hibayathullah /அங்கீகாரம்
   
பயனர்: Hibayathullah /படிமம்
   
Special:Emailuser/Arafath.riyath
   
பயனர்: Hibayathullah /மணல்தொட்டி
 
முகப்பு
   
பேச்சு
   
பங்களிப்பு
   
பயனர் பெட்டி
   
அங்கீகாரம்
   
படிமம்
   
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
மறுமொழிக் கொள்கை
அன்பர்களே! என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில், எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 09:19, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழு

கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழுவில் பங்காற்ற இயலுமா? நன்றி. ஒவ்வொரு மாதமும் ஆர்வமுள்ள பயனர்கள் தங்களுக்குள் இப்பொறுப்பை மாற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி--ரவி 17:19, 21 பெப்ரவரி 2010 (UTC)

கட்டுரையில் கையொப்பம்

நீங்கள் அண்மையில் எழுதிய அப்துல்சமது, ஜவாஹிருல்லா ஆகிய கட்டுரைகளில் உங்கள் பெயரை ஒப்பமாகக் கட்டுரையில் இட்டுள்ளீர்கள். பேச்சு (உரையாடல்) பக்கங்களில் மட்டும் கையொப்பம் இடுங்கள். கட்டுரைகளில் கையொப்பம் இட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். வரலாறு என்னும் பகுதியைப் பார்த்தால் யார், எப்பொழுது , என்ன பங்களிப்பு செய்தார்கள் என்னும் செய்தி இருக்கும். ஆகவே உங்கள் பங்களிப்புகளின் பதிவு அங்கு இருக்கும். நன்றி.--செல்வா 15:10, 21 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

நீங்கள் அண்மையில் காயல்பட்டினம் என்னும் கட்டுரையில் இட்ட பல செய்திகளுக்கு மேற்கோள் தேவை என்னும் குறிப்பைச் சேர்த்துள்ளேன். பேச்சுப் பக்கத்தில் கீழ்க்காணும் வேண்டுகோளையும் விட்டிருக்கின்றேன். தொடர்ந்து பங்களித்து வளம் கூட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
== வேண்டுகோள் == பயனர்:Hibayathullah இணைத்துள்ள பல தகவல்களுக்கு மேற்கோள்கள் இட வேண்டுகிறேன். இவை கட்டுரையில் உள்ள செய்திகளுக்கு வலுக்கூட்டும். குறிப்பாகப் (10) பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னரான, அதுவும் கி.பி.600களில் இசுலாமியர்களின் குடியேற்றம் பற்றிய செய்திகளுக்கு வலுவான அடிக்கோள்கள், அடிச்சான்றுகள் தருதல் வேண்டும். நடுக்கிழக்கு நாடுகளுக்கும், தென்ன்ந்தியாவுக்கும் இடையே கடல்வழி வணிகம் இருந்தது வியப்பில்லை, இருதிசைகளிலும் மக்கள் போக்குவரத்துகள் இருந்திருக்கக்கூடும். கட்டுரையைச் சற்று நடுநின்று எழுதுவதும் நல்லது. பயனர்:Hibayathullah தகவல்கள் சேர்த்துக் கட்டுரைகளுக்கு வளம் கூட்டுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. தகவல்கள் உறுதியானவை என்பதற்கும் அடிச்சான்றுகள் தந்து உதவவேண்டும்.--செல்வா 18:35, 29 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

மேலுள்ள வேண்டுகோளை மீண்டும் முன்வைக்கின்றேன். நீங்கள் நடுநிலையுடன் கருத்துக்களை வைக்க வேண்டுகிறேன். போதிய ஆதரவான-எதிர்ப்பான சான்றுளையும் தர வேண்டுகிறேன். --செல்வா 15:02, 20 ஆகஸ்ட் 2009 (UTC)

பதிப்புரிமை மீறப்பட்ட படிமங்கள்

நீங்கள் பதிவேற்றிய படங்களனைத்தும் பதிப்புரிமை மீறப்பட்டவையாகும். இவை நீக்கப்படும். இனிமேல் பதிப்புரிமை மீறிய படிமங்களை இங்கே பதிவேற்ற வேண்டாம்.--Terrance \பேச்சு 02:26, 31 ஆகஸ்ட் 2009 (UTC)

துபாயில் தமிழர், தமிழ், தமிழ் விக்கிப்பீடியா

துபாயில் தமிழர், தமிழ், தமிழ் விக்கிப்பீடியா பற்றி ஒரு வலைப்பதிவு எழுதித் தந்தால் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவைத் துபாயில் எப்படி அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கில் எழுதலாம். நன்றி. --Natkeeran 16:27, 25 அக்டோபர் 2009 (UTC)

பெயரிடல்

வணக்கம், விக்கிப்பீடியா கட்டுரைத் தலைப்புகளில் பெயரிடும் போது முதற் பெயர்களுக்கிடையில் ஓர் இடைவெளி (space) விட வேண்டும். உ+ம்: மு. க. ஸ்டாலின், க. அன்பழகன். நன்றி.--Kanags \பேச்சு 20:45, 28 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

துரைமுருகன்

[துரைமுருகன்] கட்டுரையை ஏன் வெற்றுப் பக்கமாகச் செய்தீர்கள் என்று அறியலாமா? நன்றி--ரவி 06:23, 29 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

ஓ! சரி. இரட்டைப் பக்கங்களைக் காணும் போது அவை பற்றிப் பேச்சுப் பக்கங்களில் குறிப்பிடலாம். அல்லது, mergeto வார்ப்புரு இடலாம். எடுத்துக்காட்டுக்கு, {{mergeto|துரை முருகன்}} என்று துரைமுருகன் கட்டுரையின் துவக்கத்தில் இட்டிருப்பதைக் காணலாம். புதிய கட்டுரையைப் பழைய கட்டுரையோடு ஒன்றிணைப்பது முறை. நன்றி.--ரவி 15:53, 29 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

கோயம்புத்தூர் கலவரமும், குண்டுவெடிப்புகளும் கட்டுரை

பேச்சுப் பக்கத்தில் நான் செய்த மாற்றங்களை ஏன் நீக்கினீர்கள் என்று, நீக்குவதற்கு முன் அங்குத் தெரிவித்தால் நன்று. நான் அங்கு முழுக் கட்டுரையையும் இட்டதற்குக் காரணம் நீங்கள்\மற்றவர்கள்  வேறு கட்டுரை எழுதும் போது அது உதவியாக இருக்குமே என்றுதான். --குறும்பன் 19:08, 8 டிசம்பர் 2009 (UTC)

பிறந்த தின நல்வாழ்த்துகள்

இபாயத்துல்லா! தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்கள் விக்கிப்பணி பல்லாண்டுக் காலம் சிறப்புடன் தொடர என் வாழ்த்துக்கள். -- பரிதிமதி 04:17, 10 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)

இணையத்தளம்

வார்ப்புருவின் இணையத்தளம்=http://municipality.tn.gov.in/karur/ என்பதை http இல்லாமல் www என்று கொடுங்கள் (www.municipality.tn.gov.in/karur/) http வேலை செய்யாது. --குறும்பன் 17:09, 11 டிசம்பர் 2009 (UTC)

கருத்து வேண்டல்

தமிழ்நாடு தொடர்பான பல கட்டுரைகளை எழுதி நீங்கள் இந்த ஆண்டு பங்களித்துள்ளீர்கள். தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி நல்ல வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கிறது. நன்றி.

ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வு செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களைப் பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான, செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று. நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 03:10, 19 டிசம்பர் 2009 (UTC)

பிற மொழி விக்கியிடை இணைப்புகள்

வணக்கம், நீங்கள் இங்குப் புதிதாக உருவாக்கும் கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கியில் இணையான கட்டுரைகள் இருந்தால் தயவு செய்து ஆங்கில விக்கிக் கட்டுரைக்குச் சென்று அங்குத் தமிழ் விக்கிக் கட்டுரைக்கு ஒரு இணைப்புக் கொடுத்து விடுங்கள். வேறு மொழி விக்கிகளில் தானியங்கிகள் இவ்வேலையைச் செய்யும். ஆனால் தமிழ் விக்கியில் இந்த வசதி இல்லை. தௌ போல ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு உங்கள் தமிழ்க் கட்டுரையிலும் தவறாது இணைப்புக் கொடுங்கள். இவ்வாறுசெய்வது, பின்னர் வேறு எவரும் இதே கட்டுரையை எழுதாமல் இருக்க உதவும். எப்படி இணைப்புக் கொடுப்பது? ஆங்கில விக்கிக் கட்டுரையின் இறுதியில் (எ+கா: en:Bank of Baroda கட்டுரையில் [[ta:பரோடா வங்கி]] என எழுதிச் சேமியுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 00:29, 8 ஜனவரி 2010 (UTC)

திருக்குவளை

வணக்கம், நீங்கள் அண்மையில் திருக்குவளை கட்டுரையில் சில படங்களை இணைத்திருந்தீர்கள். இப்படங்களுக்கும் கட்டுரைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. தயவு செய்து அவற்றைப் பொருத்தமான கட்டுரைகளில் இணையுங்கள். (கலைஞரின் கட்டுரையில் இணைக்கலாம்). இப்படங்களுக்கு உரிமை உங்களிடம் உள்ளதா? இருந்தால் பொருத்தமான வார்ப்புருக்களைத் தாருங்கள். இல்லையேல் அவை நீக்கப்பட வாய்ப்புண்டு. மேலும் படிமங்கள் தரவேற்றும் போது அவற்றுக்குப் பொருத்தமான பெயரிடுவது நல்லது. intitled போன்ற பெயர்களைத் தவிருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 22:33, 10 ஜனவரி 2010 (UTC)

படங்களின் பதிப்புரிமை

நீங்கள் பதிவேற்றும் படங்களுக்கு உரிய அனுமதியை (license) குறிப்பிடவும், அனுமதி என்ற dropdowm menuவில் தகுந்த அனுமதியைத் தெரிவு செய்யவும். தகுந்த அனுமதி இல்லாத படங்கள் நீக்கப்படலாம். --குறும்பன் 20:30, 3 பெப்ரவரி 2010 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:41, 18 பெப்ரவரி 2010 (UTC)

மகிழ்ச்சி

வணக்கம் ஹிபாயத்துல்லா. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர் பங்களிப்புக்கு வாழ்த்துகளும் நன்றியும்--ரவி 21:52, 1 மார்ச் 2010 (UTC)

என்னை ரவி என்றே அழையுங்க. என்னை மட்டுமல்ல எல்லா விக்கிப்பீடியர்களையும் தோழமையுடன் பெயர் சொல்லி அழைக்கும் பண்பாட்டையே இங்கு விரும்புகிறோம். --ரவி 10:42, 2 மார்ச் 2010 (UTC)

ஹிபாயத்துல்லா! முதற்பக்கத்தில் இடம்பெறுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளை அளியுங்கள். --பரிதிமதி 13:50, 2 மார்ச் 2010 (UTC)
இறைவனின் பரிசே!! முதற் பக்கத்தில் உங்களைப் பற்றிய அறிமுகத்தை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.--Arafat 14:18, 2 மார்ச் 2010 (UTC)

முதற்பக்கத்தில் இடம் பெற்ற தாங்கள் மேலும் மேலும் முதற்தரமான கட்டுரைகளைத் தங்கள் பங்களிப்பின் மூலம் வழங்கிட வாழ்த்துகிறேன்.--Theni.M.Subramani 14:53, 2 மார்ச் 2010 (UTC)

உங்கள் படத்தையும் அறிமுகத்தையும் முதற்பக்கத்தில் காட்சிபடுத்தியுள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன். மேன்மேலும் உங்கள் பங்களிப்புகள் பெருகவும், சிறக்கவும் நல்வாழ்த்துகள். --செல்வா 18:43, 2 மார்ச் 2010 (UTC)

வார்ப்புருக்கள் நீக்கத்திற்கு முன்பு கவனிக்க

தாங்கள் நாடார் எனும் கட்டுரையில் ஒரு சில செய்திகளை மட்டும் சரிபார்த்து விட்டு அங்கு இடம்பெற்றிருந்த வார்ப்புருக்களை நீக்கியிருக்கிறீர்கள்.

இந்தக் கட்டுரையில் சமுதாயத்தினர் நிலை எனும் உட் தலைப்பில் கீழ்காணும் ஆதாரமற்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

  • மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனப் பரவலாக நம்பப்படுகிறது. மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

சமுதாய வரலாற்றுக் கதை எனும் உட் தலைப்பில் கீழ்காணும் ஆதாரமற்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

  • தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களே நாடார்கள் என்றும் சொல்லப்படுகிறது. `பத்திரகாளியின் மைந்தர்கள்' என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

பொதுவாக நம்பப்படுகிறது, சொல்லப்படுகிறது என்று பயன்படுத்தும் சொற்கள் நம்பிக்கையற்ற வெளிப்பாடுகளே. இது போன்ற துணைத் தலைப்புகளுக்கு ஆதாரப்பூர்வமற்ற செய்திகளுக்கு ஆதரவளிப்பது போலிருக்கிறது. இந்தக் கட்டுரைகளை முழுமையாகப் படித்து நன்முறையில் திருத்தம் செய்க...--Theni.M.Subramani 16:40, 15 மார்ச் 2010 (UTC)

வாழ்த்துக்கு நன்றி

தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் என்னைப்பற்றி செய்தி வெளியிட்டது அறிந்து எனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--Theni.M.Subramani 14:50, 17 மார்ச் 2010 (UTC)

பிரிக்க வேண்டாம்

நண்பரே, தாங்கள் தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள், பேரூராட்சி மன்றங்கள் என்ற தனித்தலைப்புகளில் செய்து வரும் பக்கங்கள் அப்படியே நான் முன்பு உருவாக்கிய தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கட்டுரைகளின் சிறு பகுதிகளாகவே இருக்கின்றன. இந்தப் பிரிவுகள் தேவையற்றது என்று கருதுகிறேன். தயவு செய்து இதைப் பிரித்துத் தனிப்பக்கங்களாக உருவாக்க வேண்டாம்.--Theni.M.Subramani 14:35, 21 மார்ச் 2010 (UTC)

கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.

வணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)

நடுநிலைமை

நடுநிலைமை மீறியதாக நீங்கள் கருத்தும் கட்டுரைகளுக்கு மேலே உள்ள வார்ப்புருவை இட்டு, பேச்சுப் பக்கத்தில் விளக்க்வும். உரையாடி இணக்க முடிவு எட்டலாம். நன்றி. --Natkeeran 03:59, 5 மே 2010 (UTC)[பதிலளி]

கிரிவலம்

நீங்கள் கிரிவலம் என்னும் கட்டுரையை திருவண்ணாமலை கட்டுரையுடன் இணைத்துள்ளீர்கள். திருவண்ணாமலை என்பது ஒரு ஊரை பற்றியது, ஆனால கிரிவலம் என்பது பெளர்ணமி இரவில் அருணாசல மலையை வலம் வருவது. இவை இரண்டும் தனித்தனி கட்டுரைகளாக இருக்கவல்லவை. இது பற்றி தங்களின் கருத்தை தெரிவிக்கவும்.--கார்த்திக் 19:31, 5 ஜூன் 2010 (UTC)

தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி நண்பரே, கிரிவலம் கட்டுரையில் இருந்த உள்ளடக்கத்தை அக்கட்டுரைக்கே வைத்துக்கொண்டு, அதை தனி கட்டுரையாக மாற்ற வேண்டுகிறேன். மேலும், கிரிவலம் கட்டுரையை தமிழகத்தின் ஊர்களில் இருந்து நீக்கிவிடலாம். திருவண்ணாமலை கட்டுரையில் கிரிவலத்தை பற்றிய குறிப்பு/பத்தியோ இருக்கலாம். இதில் தங்களுக்கு உடன்பாடு என்றால் அதை செய்யலாம். நீங்கள் கட்டுரைகளை இணைக்கும் முன்பு இணைப்பு வார்ப்புருவை குறுகிய காலத்திற்கு இடுங்கள் (15 நாட்கள்). தாங்கள் இணைக்க கருதும் கட்டுரைகளை பற்றி யாரும் வேறுபட்டை கருத்தை கொண்டிருப்பீன், அவர்களுடன் கலந்துரையாடு பின் இணைப்பதை பற்றி முடிவு செய்யலாம். நன்றி--கார்த்திக் 17:38, 6 ஜூன் 2010 (UTC)

தேவநேயப் பாவாணர்

இபாயத்துல்லா! வணக்கம். தேவநேயப் பாவாணர் தலைப்பில் ஒரு தகவல் பக்கம் ஏற்கனவே (ஓரளவு சிறப்பான உள்ளடக்கத்துடன்) உள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் என்ற தலைப்பிலும் இன்னுமொரு பக்கம் இருப்பதை விட இப்பக்கத்திலுள்ள உள்ளடக்கங்கள் எவையேனும் முதல் கூறிய பக்கத்தில் இல்லையென்றால் அவற்றை இட்டு விட்டு இப்பக்கத்தை தே. பா. பக்கத்திற்கு வழி மாற்று செய்ய முடியுமா?--பரிதிமதி 16:39, 4 ஜூலை 2010 (UTC)

நன்றி, இபாயத்துல்லா! --பரிதிமதி 17:34, 4 ஜூலை 2010 (UTC)

கவனமாகத் தொகுக்கவும்

நீங்கள் தவறுதலாக சில பகுதிகளை நீக்குவதைப் பல முறை கண்டிருக்கின்றேன் (அராபத்து பயனர் பக்கத்திலும் இப்பொழுது ஆலமரத்தடியுலும்). அருள்கூர்ந்து கவனமாகத் தொகுக்க வேண்டுகிறேன். உங்கள் அண்மைய தவறான தொகுப்புக்கு இங்கு (diff) பார்க்கவும். அருள்கூர்ந்து தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள், தொகுப்பதில் கவனமாக இருப்பது முக்கியம். --செல்வா 14:12, 14 ஜூலை 2010 (UTC)

விழுந்தமாவடி பக்கத்தில், தவறான தகவலைத் தரக்கூடிய வகையில் அமைவிடம் பகுதியில் நீக்கம் செய்துள்ளீர்கள். இது தேவையற்ற நீக்கமாகும். மேலும், வேதாரணியம் என்பதுவே தமிழ்ப் பெயராகும். அதனை வேதாரண்யம் என மாற்றினீர்கள். அது Vedaranyam என்ற ஆங்கிலச் சொல்லின் பெயர்ப்பு.
தாலூக் என்பதை வட்டம் என மாற்றினீர்கள். நன்றி. இது போல மாற்றங்களை செய்யுங்கள். தேவையற்ற நீக்குதல்களை தவிருங்கள். - Uksharma3 (பேச்சு) 00:40, 11 மார்ச் 2014 (UTC)

நன்றி ஹிபாயத்துல்லா

ஹிபாயத்துல்லா ஊராட்சி ஒன்றியத்திற்கு தமிழாக்கம் செய்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி ஹிபாயத்துல்லா. ----ராஜ்6644 11:41, 4 ஆகஸ்ட் 2010 (UTC)


பழனிச்சாமி தேவர் கட்டுரையின் பகுப்பு நீக்கம்

ஐயா, இந்த கட்டுரையிலுள்ள ஆஸ்திரேலயத் தமிழர் என்ற சரியா பகுப்புப்பை நீங்கள் நீக்கயுள்ளதைக் கவனித்தேன். அது சரியானப் பகுப்புதானே, தாங்கள் அதை தவறுலாக நீக்கியிருக்க்க்கூடுமென கருதி அந்தப் பகுப்பை மீண்டும் சேர்த்துவிட்டேன்.

நகராட்சிகள் வார்ப்புரு

நீங்கள் முன்பு உருவாக்கிய\மாற்றம் செய்த வார்ப்புரு சரி. தற்போதைய மாற்றம் சரியல்ல என்பது என் கருத்து. சரி என்றால் மாற்றத்திற்கான சுட்டியை தருகிறீர்களா? --குறும்பன் 19:41, 16 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி

நிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:03, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

வாழ்த்துக்கள்

இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்துக்கள். இறைவன் உங்கள் மீது சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்குவானாக. --அராபத்* عرفات 01:56, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

உங்களுக்கு எனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 21:33, 10 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

தஞ்சாவூர் மராத்தியர் என்கிற் கட்டுரை தஞ்சாவூர் மராத்திய மக்கள் பற்றியது, தஞ்சாவூர் மராத்திய இராச்சியம் அல்ல.-ரவிசந்தர் 04:48, 29 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

சட்டமன்றத் தொகுதிகள்

நீங்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளை தொகுத்து வருவதை பாராட்டுகிறேன். அதன் தகவல்களை எங்கிருந்து எடுக்கிறீர்கள் என்று குறிப்புகள் கொடுத்தால் உதவியாயிருக்கும். நன்றி -- மாஹிர் 16:45, 29 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

இபயதுல்லா, நானும் பாராட்டுகிறேன். இது தொடர்பில் குறும்பனின் பேச்சுப்பக்கத்தில் நான் இட்டிருக்கும் கருத்தையும் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 17:02, 29 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

தொகுத்தல்

எனது பேச்சுப் பக்கத்தை தொகுக்க முடிகிறது. எனவே எந்தப் பக்கங்களை தொகுக்க முடியவில்லை. எங்கு இருந்து தொகுப்புக்களை மேற்கொள்ளுகிறீர்கள், எ.கா பொது இடம் ? --Natkeeran 15:30, 24 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பிரச்சனை சரியாகிவிட்டதா?--சோடாபாட்டில் 18:08, 24 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
பிரச்சினை சரியாக விட்டது என்று கூறி உள்ளீர்கள். நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவர்கள் ஒரு ஐபி முகவரையை தடை செய்து இருக்கலாம், அந்த வரையறைக்குள் உங்கள் டைனாமிக் ஐபி வந்திருக்கும் என்று நினைக்கிறன். --Natkeeran 21:06, 24 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான்

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:21, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

துபாய் விக்கிப்பட்டறை

ஹிபாயத்துல்லா, இந்நிகழ்வை என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. அப்பக்கத்தில் என்னுடைய பெயரைப் பதிவு செய்துள்ளேன். -- மயூரநாதன் 18:58, 20 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நாமக்கல் மாவட்ட ஊர்கள்

அன்பு நண்பரே, நாமக்கல் மாவட்ட ஊர்கள் என்பதும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் என்பதும் ஒரே பொருள் தருவன. கிராமம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. ஆகவே நாமக்கல் மாவட்ட ஊர்கள் என்றே இருப்பது நல்லது என நினைக்கிறேன். இது பற்றி ஏற்கனவே சோடாபாட்டில் அவர்களுடன் பேசியிருக்கிறேன். அதேபோல 'ஊர்ப்பெயர்கள்' என்பதும் இருப்பதும் நல்லது. ஊர்ப்பெயர்கள் என்பது பொதுப்பாகுபாடு. எந்த மாவட்டத்தில் உள்ள ஊர்ப்பெயரையும் அதில் சேர்க்கலாம். ஊர்ப்பெயராய்வு என்னும் தனித்துறை இயங்கி வருவதையும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.--Perumalmurugan 00:12, 29 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்

வணக்கம் இபாயத்துல்லா. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:26, 2 மே 2011 (UTC)[பதிலளி]


இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Hibayathullah,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Invite to WikiConference India 2011


Hi Hibayathullah,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

ஈத் முபாரக்

இம் மாதம் முழுவதும் நோன்பிருந்து பல்வேறுபட்ட அமல்களில் ஈடுபட்டு புனித ரமழான் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்வடைகின்றோம். விக்கி குடும்பத்தின் சார்பில்--P.M.Puniyameen 01:02, 31 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ரமலான் வாழ்த்துகள்

என் இனிய வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 00:59, 31 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

அஸ்ஸலாமு அலைக்கும் Hibayathullah அவர்களே , எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்!
--சமீர்உரையாடுக!

நலமா?

வணக்கம், Hibayathullah! உங்களைத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் நீண்ட நாட்களாகக் காணவில்லையே?! நலமாக உள்ளீர்களா? தற்போது, நாம் 1,64,615 கட்டுரைகளைக் கொண்டு நன்றாக வளர்ந்து வருகிறோம். நீங்களும் அவ்வப்போது பங்களித்து வந்தால் மிக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்! நன்றி.--இரவி 22:36, 19 பெப்ரவரி 2012 (UTC)

காயலும் இசுலாமியரும்

பேச்சு:காயல்பட்டினம் இங்கு உங்களுக்கு பதிலளிக்கப்பட்டுளது. பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:43, 9 சூன் 2012 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி

மீண்டும் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள். அன்புடன்--இரவி (பேச்சு) 17:26, 2 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:07, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

நீங்கள் விக்கிக் கூடலுக்கு வர இருப்பது அறிந்து மகிழ்கிறேன். உதவித் தொகை தேவை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தற்போது வெளிநாட்டில் இருக்கிறீர்களா? வந்து திரும்பிச் செல்ல உத்தேசமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதைத் தெரிவிக்க முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 05:58, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் இங்கேயே செய்தியாளராகப் பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியா பத்தியும் எழுதிக் கொடுங்க :) --இரவி (பேச்சு) 14:06, 29 சூன் 2013 (UTC)[பதிலளி]

பகுப்பு மாற்றம் ஏன்?

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில் என்ற கட்டுரையில் திருவாரூர் மாவட்ட சிவாலயங்கள் பகுப்பினை நீக்கி நாகப்பட்டினம் என்று இணைத்துள்ளீர்கள். காண்க தினமலர் கோயில்கள் தளத்தில் திருவாரூர் மாவட்டம் என்றே உள்ளது. உண்மையான நிலையென்ன என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:49, 11 செப்டம்பர் 2013 (UTC)

சிவாலயங்களின் மாவட்டங்களை மாற்றும் முன் உரையாடவும்.

தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் கட்டுரையில் மாவட்டங்களை மாற்றம் செய்துள்ளீர்கள். தயவு செய்து ஏன் அவ்வாறு செய்கின்றீர்கள். தற்போது அந்த ஊர்கள் எந்த மாவட்டத்தில் உள்ளது என்பதை எதனைக் கொண்டு அறிந்து மாற்றம் செய்கின்றீர்கள் என்பதை தெரிவிக்கவும். சிவாலயங்களின் மாவட்டங்களை மாற்றும் முன் உரையாடவும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:57, 11 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:06, 18 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைகளை வழிமாற்றல்

வணக்கம் இபாயதுல்லா, கட்டுரைகளை வழிமாற்றும் போது அவற்றுக்கு வரலாறுகள் உண்டா எனக் கவனிக்க வேண்டும். அவ்வாறிருப்பின் அவற்றை முறைப்படி வரலாற்றுடன் இணைக்க வேண்டும். புள்ளிருக்கு வேளூர் வைத்தீசுவரன் கோயில் கட்டுரைக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. பெருமளவினோர் அதில் பங்களித்துள்ளார்கள். இவற்றை நாம் அழிக்க முடியாது. குறிப்பிட்ட இரு கட்டுரைகளையும் நான் இப்போது வரலாற்றுடன் இணைத்திருக்கிறேன். கட்டுரைகளை இணைப்பதற்கு இந்த உதவிப் பக்கத்தைப் பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:58, 19 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:09, 27 செப்டம்பர் 2013 (UTC)

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:33, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம், Hibayathullah!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 07:37, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம், Hibayathullah!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 07:35, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:53, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழரும் சூத்திரரும்

[1] சூத்திரர் என்பது நால்வர்ணக் கோட்பாடான வடமொழி வேதங்களில் கூறப்படுவது. அதை தமிழ்ச் சமூகம் என்ற பகுப்பில் இணைக்க முடியாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:04, 6 மார்ச் 2014 (UTC)

நன்றி...!

வணக்கம்! வரவிருக்கும் பொதுத் தேர்தல் குறித்து நீங்கள் செய்யும் இற்றைகள் அருமை! தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 13 மார்ச் 2014 (UTC)

மேற்கோள்கள்

வணக்கம், நீங்கள் எழுதும் புதிய கட்டுரைகளுக்கு குறைந்தது ஒரு மேற்கோளாவது சேருங்கள். இல்லாவிடில் நீக்கப்படும் ஆபத்து உள்ளன. விக்கித்தரவில் இணைப்புக் கொடுங்கள். தமிழர்களல்லாத நபர்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதும் போது ஆங்கிலத்தில் (கட்டாயம்), மற்றும் மூல மொழியில் (தெரிந்தால்) அவர்களின் பெயர்களையும் கட்டுரையின் ஆரம்பத்தில் தாருங்கள்.--Kanags \உரையாடுக 00:11, 4 சூன் 2014 (UTC)[பதிலளி]

தேவைப்படும் கட்டுரைகள் என்பதால், என்னால் இயன்றதை செய்துள்ளேன். விக்கித்தரவில் இணைத்துள்ளேன். மேற்கோள்கள் தரப்படல் வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:36, 4 சூன் 2014 (UTC)[பதிலளி]
தற்போதைய அமைச்சர்கள் என்பதற்குரிய ஆதாரம் இணைத்துள்ளேன். மற்ற தகவல்களுக்கு ஆதாரங்களை சேர்ப்பது நலம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:54, 4 சூன் 2014 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்...

  1. இங்கு பதில் தர வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:11, 7 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  2. செம்பொனார்கோயில், செம்பனார்கோயில், செம்பொன்னார் கோவில் - இதில் எது சரி என்பதில் குழப்பம் இருப்பது உண்மை. எனினும் உரையாடிவிட்டு மாற்றுதல் நல்லது; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:15, 7 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

தெளிவு

  1. செம்பனார்கோயில் (Sembanarkoil) என்பதில் தெளிவு வந்துவிட்டது; உரிய திருத்தங்களை செய்துள்ளேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:39, 7 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Hibayathullah!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:37, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 15:21, 11 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:09, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக உதவ வேண்டுகிறேன்

விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் ஒருங்கிணைப்பாளராக இணைந்து உதவ வேண்டுகிறேன். திட்டத்துக்கு ஏற்ற தலைப்புகளை இனங்காணல், அவற்றில் பங்களிக்குமாறு ஆர்வமுள்ள பங்களிப்பாளர்களைத் தூண்டுதல், விதிகளுக்கு ஏற்ப கட்டுரைகள் வடிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணித்து முடிவுகளை அறிவித்தல் ஆகிய பணிகளில் உதவி தேவை. நன்றி.--இரவி (பேச்சு) 08:56, 25 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

உரையாட விருப்பம்

உங்களுடன் பேசணும். நேரம் இருக்கும் போது அழையுங்கள்--உழவன் (உரை) 08:54, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல்

வணக்கம், Hibayathullah!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Kanags \உரையாடுக 23:24, 3 சூலை 2016 (UTC)[பதிலளி]

வணக்கம், பஞ்சாப் குறித்து நீங்கள் எழுதிய அனைத்துப் பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. அருள்கூர்ந்து வேறு இணையதளங்களில் இருந்து கட்டுரைகளை எடுத்து எழுத வேண்டாம். நன்றி.--Kanags \உரையாடுக 23:41, 3 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். இக்கருத்தெடுப்பில் கலந்து கொள்ள நீங்கள் குறிப்பிட்ட பயிற்சியில் பங்கு கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மாறாக, நேரடியாக பங்கு கொள்ளாதவர்களுக்கும் இதன் பயன் புலப்படுகிறதா என்று அறிவதும் இக்கருத்தெடுப்பின் நோக்கமாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:10, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

December 2016

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO 00:48, 16 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

தாங்கள் இப்போட்டியில் பங்குபற்ற விரும்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:29, 6 மார்ச் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:36, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : பாராட்டு

முதலாவது கட்டுரையை சிறப்பாக விரிவாக்கி போட்டியில் இணைந்துகொண்டமைக்கு வாழ்த்துகள்! தொடர்ந்து பல கட்டுரைகளை விரிவாக்கி போட்டியில் முனைப்போடு பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகள், நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:09, 22 மே 2017 (UTC)[பதிலளி]

புறா கட்டுரையை நான் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்தும் விரிவாக்கியுள்ளீர்கள், பரவாயில்லை. அருள்கூர்ந்தும, இனிமேல் இதுபோன்று செய்யாதீர்கள்! அத்துடன் பிறரால் முற்பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளை உங்களுக்கு விரிவாக்க விருப்பமெனில் தனிப்பட்ட முறையில் நடுவர்களுக்குக் கூறுங்கள்! போட்டியில் முனைப்புடன் பங்குபற்ற் வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:23, 24 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:04, 31 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:06, 31 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Hibayathullah&oldid=2297105" இலிருந்து மீள்விக்கப்பட்டது