பயனர் பேச்சு:Rselvaraj: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 150: வரிசை 150:
:{{விருப்பம்}}--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:56, 25 மே 2017 (UTC)
:{{விருப்பம்}}--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:56, 25 மே 2017 (UTC)
:{{விருப்பம்}}! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 17:21, 25 மே 2017 (UTC)
:{{விருப்பம்}}! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 17:21, 25 மே 2017 (UTC)
:{{விருப்பம்}}! வாழ்த்துகள் :) --<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 14:18, 27 மே 2017 (UTC)

14:18, 27 மே 2017 இல் நிலவும் திருத்தம்

நல்வரவு செல்வராஜ்:

நிச்சியமாக உங்கள் பங்களிப்பு தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பலம் சேர்க்கும். --Natkeeran 04:12, 8 ஜூன் 2006 (UTC)

வருக செல்வராஜ், தங்கள் வரவு நல்வரவாகுக! -- சிவகுமார் 08:18, 8 ஜூன் 2006 (UTC)

வருக செல்வராஜ். உங்கள் பத்தாமாண்டு மணநாளுக்கு என் பிந்திய வாழ்த்துக்கள். இங்கு உள்ள பட்டியலிலும் மற்றும் இங்கு உள்ள தலைப்புகளிலும் வேதியியல் மற்றும் உங்களுக்குப் பிடித்த மற்ற தலைப்புகளிலும் கட்டுரை உருவாக்க வேண்டுகிறேன். நிலுவையில் உள்ள பணிகளிலும் பங்கேர்க்கலாம். -- Sundar \பேச்சு 08:56, 8 ஜூன் 2006 (UTC)

--

நன்றி நட்கீரன், சிவகுமார், சுந்தர். பல காலம் முன்பே சேர்ந்து பங்களிக்க நினைத்திருந்தும் இயலவில்லை. சிறிது நாட்களுக்கு முன் நண்பர் நட்கீரன் எனது பதிவொன்றில் முன்னிகையிட்டு அழைத்திருந்தார். அதன் பின்னரும் வந்து பார்த்துவிட்டுப் போய் விடுவேன். காலம் தாழ்த்தியது போதும் என்று இப்போது சேர்ந்துவிட்டேன். சிறிது சிறிதாக எனது பங்களிப்பை அதிகரித்துக் கொள்கிறேன். வெகு சிலரே கடந்த சில ஆண்டுகளாய்ப் பெரும் ஈடுபாட்டோடு இப்பணியைச் செவ்வனே செய்து வருகிறீர்கள். முதலில் அதற்கான எனது பாராட்டுக்கள். நானும் பெரிதாக ஈடுபட எண்ணிக் கொண்டிருக்கிறேன், பார்க்கலாம்.
பொறியியல், குறிப்பாய் வேதிப்பொறியியல் பற்றியும் எழுத எண்ணம் உள்ளது. பிற கட்டுரைகளை மொழிபெயர்ப்பதிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். அண்மைய காலங்களில் தமிழில் கலைச்சொற்களிலும் சிறிது ஈடுபாடு உள்ளது. அப்படியான சொற்களைத் தரப்படுத்துவதும் முக்கியமாகிறது. காட்டாக, விக்கிப்பீடியாவிலே நகர்பேசி என்று இருப்பதைப் பலரும் செல்பேசி என்று பாவிக்கின்றனர். இலத்திரனியல் என்பதை எளிதாக மின்னியல் என்று சொல்லலாமே. இதுபோல.
சிவகுமார், நீங்களும் பெருவிஜயனும் ஒரே ஆள் தானா? உங்கள் ஊரும் ஈரோடு?
சுந்தர், உங்களின் வாழ்த்துக்களுக்கும் என் நன்றி.

--செல்வராஜ் 02:25, 9 ஜூன் 2006 (UTC)

ஆம். ஒரே ஆள் தான் :-). நானும் ஈரோடு தான். தமிழ் மணத்தின் மூலம் தங்களை அறிவேன். --சிவகுமார் 13:34, 9 ஜூன் 2006 (UTC)

செல்வராஜ், உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நான் இங்கு புதியவன். --C.R.Selvakumar 13:53, 9 ஜூன் 2006 (UTC)செல்வா

செல்வராஜ், பிசுக்குமை பற்றிய உங்கள் குறுங்கட்டுரை நன்றாக அமைந்துள்ளது.முதல் இரண்டொரு வரிகள் சற்று எளிமைப்படுத்த வேண்டும். நாளை வந்து செய்கிறேன். தொடர்ந்து பங்காற்ற வேண்டுகிறேன். தங்களைப்ப்போன்ற நல்ல ஆர்வலர்கள், துறையறிவு உடையவர்கள் நல்லாக்கம் தர வேண்டும். நன்றி. --செல்வா 03:46, 21 ஏப்ரல் 2008 (UTC)

மிக்க நன்றி, செல்வா. நீண்ட நாட்களாகப் பங்களிக்கும் எண்ணம் இருந்தும், இயலவில்லை. வாரத்தில் ஐந்து வரிகளேனும் எழுதலாமே என்று நீங்கள் இராம.கி போன்றோரிடத்துக் கூறியதை இணையத்தில் உலாவியபோது பார்த்தேன். அதனாலும் உந்தப்பட்டு வந்தேன். அவ்வப்போது, வாரம் ஒரு முறையேனும் ஒரு குறுங்கட்டுரை ஆக்க முனைவேன். வேண்டிய திருத்தம் செய்யுங்கள் என்று பிசுக்குமை பேச்சுப் பக்கத்தில் எழுத எண்ணினேன். எப்படியும் செய்வீர்கள் என்று பிறகு விட்டுவிட்டேன். ஆங்கில விக்கிப் பக்கத்தில் இருந்து முடிந்தவரை மொழிபெயர்த்தேன். அது நீண்ட கட்டுரை. இப்போதைக்கு நான் குறுங்கட்டுரையாகவே விட்டுவைக்கிறேன். நன்றி. --செல்வராஜ் 04:36, 21 ஏப்ரல் 2008 (UTC)

மீண்டும் நல்வரவு

நீங்கள் எப்பொழுதாவது வருவீர்கள் என்று தெரியும். பயனர்:Vinodh.vinodh ஒரு இளம் வேதிப் பொறியிலாளரே. தீவரமாக பங்களிப்பவர். Wikipedia:விக்கித் திட்டம் பொறியியல் ஒரு முறை சென்று பாத்தால் நன்று. சுந்தவடிவேலும் வருவதாக இருக்கிறார். அவருக்கு சில நுட்ப தடைகள் இருப்பதாக சொன்னார். சில தகவல்களை அன்ப்பி இருந்தேன். விரைவில் வருவார் என்று நினைக்கிறேன். நன்றி. --Natkeeran 18:20, 23 ஏப்ரல் 2008 (UTC)

உங்களை மீண்டும் காண மகிழ்ச்சி. உங்களைப் பின்பற்றி உங்கள் நண்பர்கள், துறை வல்லுநர்கள் பலரும் விக்கிப்பீடியாவுக்கு வந்து உதவுவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். --ரவி 11:10, 17 மே 2008 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம் -->ஏ.பி.ஐ ஒப்படர்த்தி

செல்வராசு நீங்கள் விரும்பியவாறே தலைப்பை மாற்றியுள்ளேன்.--செல்வா 02:08, 16 மே 2008 (UTC)[பதிலளி]

அழுத்தம் கட்டுரை பற்றி

உங்கள் பாராட்டுக்கு நன்றி! --செல்வா 15:20, 22 மே 2008 (UTC)[பதிலளி]

கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.

வணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)

விக்கி மாரத்தான்

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:30, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம்

வணக்கம் செல்வராசு. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/செல்வராசு பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--இரவி 13:51, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி இரவி. ஆனால், இதைப் பிறகொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம். --இரா.செல்வராசு 04:02, 10 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஒரு ஆண்டுக்கு மேலாகி விட்டது. இப்போதாவது உங்கள் அறிமுகத்தைத் தரலாமே :) --இரவி (பேச்சு) 13:01, 9 மார்ச் 2012 (UTC)

சரி, இரவி. :-) இவ்வாரம் சற்று மும்முரம். அடுத்த வாரம், பத்து நாட்களுக்குள் செய்கிறேன். --இரா. செல்வராசு (பேச்சு) 03:04, 13 மார்ச் 2012 (UTC)
தள அறிவிப்பில் பங்களிப்பாளர் அறிமுகங்களை இட்டு வரும் இந்த வேளையில், உங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தால் நன்றாக இருக்கும். உங்களைப் போன்று பணியாற்றுபவர்களை ஈர்க்க உதவும். நன்றி--இரவி (பேச்சு) 16:50, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]
ஆச்சு, இரவி :-) உங்கள் விடா முயற்சிக்கு வந்தனம்.

--இரா. செல்வராசு (பேச்சு) 05:40, 29 சனவரி 2013 (UTC)[பதிலளி]

நன்றி, செல்வா. கொஞ்சம் உரை திருத்தியுள்ளேன். ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.--இரவி (பேச்சு) 06:02, 29 சனவரி 2013 (UTC)[பதிலளி]
திருத்தம் மிகவும் நன்றாக இருக்கிறது, இரவி. நன்றி. --இரா. செல்வராசு (பேச்சு) 06:25, 29 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பங்களிப்பு வேண்டுகோள்

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:18, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

உங்கள் அன்பிற்கு நன்றி. இப்போது மீண்டும் சிறிதளவு பங்களிக்க ஆரம்பித்துள்ளேன். தொடரவும் எண்ணம். --இரா. செல்வராசு 01:28, 30 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

கவனத்துக்கு

12 படிக்கும் மாணவனுக்கான தகவல்களை நாம் கவனித்துக் கொண்டால், அது பலருக்கும் உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். கலைச்சொற்கள், அல்லது கட்டுரைகள் தேவை எனின் கூறவும். என்னிடம் தமிழ் அறிவியல் களஞ்சியங்கள் உள்ளன. வருடி அனுப்ப முடியும். --Natkeeran 01:24, 30 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நற்கீரன், வணக்கம். நீங்கள் கூறுவது போலச் செய்யலாம். த.நா. பாடநூல்களும் இணையத்தில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய முனைப்பை முதன்மையானதாக வேதிப்பொறியியல் கட்டுரைகளில் செலுத்த நினைக்கிறேன். வேதியியலும் உடன் வரும் தான். --இரா. செல்வராசு 01:31, 30 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
நன்றி. --Natkeeran 02:44, 30 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா திட்டம்


முதற்பக்கக் கட்டுரை



இயற்கை எரிவளி கட்டுரையை மேம்படுத்த வேண்டல்

தங்கள் துறை தொடர்புடைய இயற்கை எரிவளி கட்டுரை தமிழ் விக்கிப்பீடியா குறுந்தட்டுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை மேம்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி 23:21, 19 பெப்ரவரி 2012 (UTC)

முயல்கிறேன், இரவி. இன்று இரு முறை தொகுத்துச் சிறிது சேர்த்தேன். ஆனால், உள்நுழைய மறந்துவிட்டேன் போலும். வரும் நாட்களில் இன்னும் கொஞ்சம் பார்க்கிறேன்.. --இரா. செல்வராசு 04:23, 20 பெப்ரவரி 2012 (UTC)

செல்வராசு, வேண்டுகோளை உடனே ஏற்று விரிவாக்கியமைக்கு நன்றி--இரவி 06:41, 20 பெப்ரவரி 2012 (UTC)

நுட்பத்துறைப் பதக்கம்

நுட்பத்துறைப் பதக்கம்
இரா.செல்வராசு, எரிபொருள் நுட்பத்துறையில் முழுமையான கட்டுரைகளை நல்ல முறையில் எழுதிவரும் உங்களைப் பாராட்டி இந்த நுட்பத்துறைப் பதக்கத்தை அன்புடன் அளிக்கிறேன். உங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துகள். -- சுந்தர் \பேச்சு 04:09, 23 பெப்ரவரி 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


மிக்க நன்றி, சுந்தர். உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும். தொடர்ந்தும் இவ்வருடம் எழுதிவர முயல்வேன். --இரா. செல்வராசு 21:06, 26 பெப்ரவரி 2012 (UTC)
செல்வராசு, சுந்தரைப் போலவே நானும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் நுட்பத்துறையில் ஆக்கிவரும் படைப்புகள் மிகவும் பயனுடையவை, விரிவானவை. தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவன. இயன்றபொழுது உதவுங்கள். தமிழுலகம் நன்றி கூறும். பலரும் பல துறைகளில் ஆக்கம் (அதுவும் உங்களைப் போல் நல்லாக்கம்) செய்யும் பொழுது பயன் பெருகும்.--செல்வா 21:13, 26 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி செல்வா. வேறு பக்க இழுப்புகளால் அதிகம் இங்கு எழுத இயலவில்லை என்னும் சாக்கு ஒரு புறம் இருக்க, அவ்வப்போதேனும் கொஞ்சம், வாரம் ஒருமுறை என்பது போலவேனும் வந்து எழுத எண்ணம் இருக்கிறது. பலவற்றைத் தெரிந்து கொள்ளவும் உதவும் விக்கிக்கு நம்மால் ஆனதையும் செய்து வைக்க வேண்டுமே. உங்கள் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி. --இரா. செல்வராசு 00:14, 27 பெப்ரவரி 2012 (UTC)

அரசு, பிற நிறுவனங்களுடன் தமிழ் விக்கிப்பீடியா உறவாட்டம் குறித்த கொள்கை

வணக்கம், செல்வா. பன்னாட்டுச் சூழல், தமிழ் தொடர்பான பல தன்னார்வ முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர் என்ற முறையில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அரசும் பள்ளிச் சூழலும் நடைமுறையில் எவ்வாறு, எந்த அளவு உதவக்கூடும் என்ற உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். உங்கள் பரிந்துரைகள், ஆதரவை இங்கு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:24, 25 பெப்ரவரி 2013 (UTC)

முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்

வணக்கம், செல்வா. அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 05:56, 24 மார்ச் 2013 (UTC)

வணக்கம் செல்வராசு. முதற்பக்கத்தில் தங்களின் அறிமுகம் கண்டு தங்களைப்பற்றித் தெரிந்துகொண்டேன். நீண்ட காலமாக விக்கிப்பீடியாவிற்குப் பங்களித்து வரும் தங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:19, 25 மார்ச் 2013 (UTC)
உங்கள் அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள். முடிந்தால் அறிவியல் களஞ்சியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அறிவியல் எழுத்துப் பணிக்கு மிக்க உதவும். --Natkeeran (பேச்சு) 00:43, 26 மார்ச் 2013 (UTC)
பார்வதிஶ்ரீ, நற்கீரன், உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. சிலகாலம் இங்கு வரமுடியாமல் இருந்தது. உங்கள் ஊக்குவிப்புகளுக்கும் நன்றி. --இரா. செல்வராசு (பேச்சு) 01:59, 5 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு உங்களை ஓர் உறுப்பினராக பங்களிக்க வேண்டுகிறேன். பங்களிக்க இசைவு எனில் குழு என்ற பகுதியில் உங்கள் பெயரைச் சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:22, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நற்கீரன், இதற்கு பதில் அளிக்காமலும், இசையாமலும் இருந்தமைக்கு மன்னிக்க. அப்போது பின்புலம் அதிகம் அறியாமலும், செலவிட நேரம் அதிகம் இல்லாமல் இருந்ததும் காரணங்கள். இப்போதும் விலகியே இருக்கலாம் என்றாலும் சில கருத்துகளை, எனக்குத் தோன்றியவற்றை எழுதிச் சரிநிலைக்கு மீள உதவலாம் என்றெண்ணியே அங்கங்கு கருத்துகளை எழுதுகிறேன். ஆனால் அதுவும் நீண்டுகொண்டே இருப்பதையும் நான் விரும்பவில்லை. --இரா. செல்வராசு (பேச்சு) 13:01, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்களின் கவனத்திற்கு...

விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் எனும் பக்கத்திற்கு இப்போது அணுக்கம் இருக்கிறதா என சரிபார்த்து சொல்லுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:58, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வெளியேறி, மீண்டும் உள்நுழைந்த பிறகு அணுக்கம் கிட்டியிருக்கிறது. நன்றி, செல்வசிவகுருநாதன். இப்போதைக்கு அங்கு எழுத எண்ணமில்லை. ஆனால் ஒரு பொதுக் கொள்கையாக எனக்கு அதில் வேறுபாடு இருந்தது. அதனை நிவர்த்தி செய்தமைக்கு நன்றி. --இரா. செல்வராசு (பேச்சு) 12:58, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஒரு வேண்டுகோள்

வணக்கம் Rselvaraj! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:57, 17 மே 2014 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Rselvaraj!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 10:15, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:45, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

அறிவியல் பதக்கம்
நீங்கள் ஓர் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்து, அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் பங்களிப்பதைக் கண்டு இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:50, 24 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 07:56, 25 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:21, 25 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்! வாழ்த்துகள் :) --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:18, 27 மே 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rselvaraj&oldid=2294933" இலிருந்து மீள்விக்கப்பட்டது