வால்வெள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11: வரிசை 11:
== சொற்பிறப்பியல் ==
== சொற்பிறப்பியல் ==

''comet'' எனும் சொல் பழைய ஆங்கிலச் சொல்லாகிய ''cometa'' என்பதில் இருந்து வந்தது. இது இலத்தீனச் சொல்லான ''comēta'' அல்லது ''comētēs'' என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இதுவும் பண்டைய கிரேக்கச் சொல்லான κομήτης ("wearing long hair") என்பதன் இலத்தீன் வடிவம் ஆகும். ''ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி'' (ἀστὴρ) κομήτης எனும் ஏற்கெனவே கிரேக்க மொழியில் "நீளமுடி விண்மீன், வால்வெள்ளி" என்ற பொருள்வாய்ந்த சொல்லினைச் சுட்டுகிறது. Κομήτης என்பது κομᾶν ("நீள முடியணிதல்") என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இது κόμη ("தலைமுடி") என்பதில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் "வால்வெள்ளியின் வால்" என்பதாகும்.<ref>{{OED|comet}}</ref><ref>{{cite web |url=http://etymonline.com/?term=comet |title=Comet (n.) |publisher=Online Etymology Dictionary |accessdate=30 July 2013 |last=Harper |first=Douglas}}</ref>

வால்வெள்ளிகளுக்கான வானியல் குறியீடு <big>'''☄'''</big> ஆகும். இது மூன்று மயிரிழை நீட்சிகள் கொண்ட சிறிய வட்டு ஆகும்.<ref>{{cite book |title=The Encyclopedia Americana: a library of universal knowledge, Volume 26 |publisher=Encyclopedia Americana Corp. |date=1920 |pages=162–163 |url=https://archive.org/stream/encyclopediaame01unkngoog#page/n202/mode/2up}}</ref>

16:52, 8 மே 2017 இல் நிலவும் திருத்தம்

கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பிரகாசமான வாயு மற்றும் தூசிச் சீறல்கள் தெரிகின்றன.
கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பிரகாசமான வாயு மற்றும் தூசிச் சீறல்கள் தெரிகின்றன.

வால்வெள்ளி (comet) பனிக்கட்டியாலான சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். இது சூரியனுக்கு நெருக்கமாக கடக்கும்போது சூடாகி வளிமங்களை வெளியிடும். இந்நிகழ்வு வளிமவீசல் எனப்படுகிறது. இது கண்ணுக்குப் புலப்படும் வளிமண்டலம் அல்லது வளிப்புறணியை உருவாக்குகிறது. சிலவேளைகளில், இது வால்வெள்ளியின் வால் எனப்படுகிறது. இந்நிகழ்வுகள் சூரியக் கதிர்வீச்சும் சூரியக் காற்றும் வால்வெள்ளியின் உட்கரு மீது செலுத்தும் விளைவுகளால் ஏற்படுகின்றன. வால்வெள்ளி உட்கரு சில நூறு மீட்டர்களில் இருந்து பல பத்து கிமீ குறுக்களவில் அமைகிறது. இதில் பனிக்கட்டி, தூசு, சிறிய பாறைத் துகள்கள் ஆகியவை தளர்வாக்க் கலந்திருக்கும். வால்வெள்ளியின் வளிப்புறணி, புவியின் விட்டத்தைப் போல 15 மடங்காக அமைய, வால் ஒரு வானியல் அலகு அளவுக்குக் கூட நீண்டிருக்கும். போதுமான பொலிவுள்ள வால்வெள்லியைப் புவியில் இருந்து தொலைநோக்கி இல்லாமலே பார்க்கலாம். வானில் அது 30° வட்டவில்லை (60 நிலாக்கள்) வெட்டும். பல நாகரிகங்களில் தொல்பழங்கால முதலே வால்வெள்ளிகள் நோக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வட்ட வட்டணையைக் கொண்டுள்ளன. "தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs)" என்று பெரும்பாலும் விளிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டும், மெத்தேனும் மற்றும் நீரும் என்பவற்றுடன் தூசியும், கனிமத்திரளைகளும் கலந்து உருவானவை.

சூரிய ஒண்முகில்கள் ஒடுங்கும்போது எஞ்சிய கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய ஒண்முகில்களின் வெளி விளிம்புகள், நீர், வளிம/வாயுநிலையிலன்றித் திண்ம நிலையில் இருக்கக்கூடியதாகவும் போதிய அளவு குளிர்ந்த நிலையில் இருப்பதாகவும் வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என வரையறுப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனைச் சுற்றுகின்றன. இதற்கு ஒரு உதாரணம் ஆல்லே வால்வெள்ளியாகும். இதனை புவியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறையே அவதானிக்கலாம்.

விண்வெளியில் மிதக்கிற எரிகல் தூசிகளும், மீதேன், சயனோஜன் கரியமில வாயு, அம்மோனியா, நீராவி ஆகியவை அந்தக் கல்துண்டுகளைச் சுற்றி ஒட்டிக் கொண்டு உறைந்து விடகின்றன. வால்வெள்ளி சூரியனை அணுகும் போது வால்வெள்ளியிலுள்ள பொருள்கள் ஆவியாகின்றன. சூரியனிலிருந்து வீசுகிற சூரியக் காற்று அந்த ஆவிகளைச் சூரியனுக்கு எதிர்ப்புறமாகத் தள்ளுகிறது. அந்த ஆவிதான் வாலாகத் தோற்றமளிக்கிறது. பல முறை சூரியனைச் சுற்றி வந்தபின் வால் விண்மீன்களின் மேல் படலங்களெல்லாம் ஆவியாகிப்போய் வெறும் பாறைத்துண்டு மட்டும் மிஞ்சும். அந்தப் பாறைத்துண்டும் உடைந்து பூமியிலும் மற்ற கோளிலும் எரிகற்களாகப் போய்விடும்.

சொற்பிறப்பியல்

comet எனும் சொல் பழைய ஆங்கிலச் சொல்லாகிய cometa என்பதில் இருந்து வந்தது. இது இலத்தீனச் சொல்லான comēta அல்லது comētēs என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இதுவும் பண்டைய கிரேக்கச் சொல்லான κομήτης ("wearing long hair") என்பதன் இலத்தீன் வடிவம் ஆகும். ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி (ἀστὴρ) κομήτης எனும் ஏற்கெனவே கிரேக்க மொழியில் "நீளமுடி விண்மீன், வால்வெள்ளி" என்ற பொருள்வாய்ந்த சொல்லினைச் சுட்டுகிறது. Κομήτης என்பது κομᾶν ("நீள முடியணிதல்") என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இது κόμη ("தலைமுடி") என்பதில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் "வால்வெள்ளியின் வால்" என்பதாகும்.[1][2]

வால்வெள்ளிகளுக்கான வானியல் குறியீடு ஆகும். இது மூன்று மயிரிழை நீட்சிகள் கொண்ட சிறிய வட்டு ஆகும்.[3]

புறநிலைப் பான்மைகள்

உட்கரு

காட்சிக்களம்

காணொலிப்படங்கள்
நாசா வால்வெள்ளிகளின் பதக்கூறுகளைப் புவிக்குக் கொணர வால்வெள்ளி அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளது.
என்கே வால்வெள்ளி தன் வாலை இழக்கிறது

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "comet". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  2. Harper, Douglas. "Comet (n.)". Online Etymology Dictionary. பார்க்கப்பட்ட நாள் 30 July 2013.
  3. The Encyclopedia Americana: a library of universal knowledge, Volume 26. Encyclopedia Americana Corp.. 1920. பக். 162–163. https://archive.org/stream/encyclopediaame01unkngoog#page/n202/mode/2up. 
  4. Active Asteroid P/2013 P5

நூல்தொகை

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்வெள்ளி&oldid=2279235" இலிருந்து மீள்விக்கப்பட்டது