திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70: வரிசை 70:
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:மதுரை]]
[[பகுப்பு:மதுரை]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்]]

13:01, 17 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பரங்கிரி, சுமந்தவனம், கந்தமாதனம்
பெயர்:திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பரங்குன்றம்
மாவட்டம்:மதுரை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பரங்கிரி நாதர்
தாயார்:ஆவுடை நாயகி
தீர்த்தம்:சரவணப் பொய்கை, லட்சுமி தீர்த்தம், பிரம்ம கூபம் முதலான ஐந்து தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், சுந்தரர்

திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் நக்கீரர் வாழ்ந்திருந்த தலம்[1]

தல வரலாறு

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு ஒம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகன் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகனும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

முருகன் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவனும், முருகனும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகன் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

இந்நிலையில் சிவனும், பார்வதியும் தோன்றி, முருகனுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவன் - பார்வதி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமே திருப்பரங்குன்றம் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் என அழைக்கப்படும் பரங்கிநாதர் ஆலயமாகும். எனவே திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்