பாரத லக்சுமன் பிரேமச்சந்திர: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இல...
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
வரிசை 50: வரிசை 50:
[[பகுப்பு:இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்]]

14:14, 2 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

பாரத லக்சுமன் பிரேமச்சந்திர
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1994–2000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 சனவரி 1956
இறப்பு8 அக்டோபர் 2011(2011-10-08) (அகவை 55)
அரசியல் கட்சிஇலங்கை மகாஜனக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி

பாரத லக்சுமன் பிரேமச்சந்திர (Bharatha Lakshman Premachandra, சிங்களம்: භාරත ලක්ෂ්මන් ප්‍රේමචන්ද්‍ර, சனவரி 26, 1956 - அக்டோபர் 8, 2011) இலங்கையின் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். கொலன்னாவை மாகாண சபை, மேல் மாகாண சபை ஆகியவற்றின் உறுப்பினராகவும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் 2011, அக்டோபர் 8 ஆம் நாள் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்[1].

வாழ்க்கைக் குறிப்பு

பிரேமச்சந்திர கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்றார். இளம் வயதிலேயே கிராம மட்டத்திலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இலங்கை மகாஜனக் கட்சியின் கொலன்னாவை பகுதியில் கட்சி அமைப்பாளராக அரசியலில் இறங்கினார். 1979 ஆம் ஆண்டு கொலன்னாவ பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1988 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முதலாவது மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1993 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் மேற்கு மாகாண சபைக்குப் போட்டியிட்டுத் தெரிவானார்.

1994 ஆம் ஆண்டு இவர் முதன் முதலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 63,421 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் இவர் உயிரிழக்கும் வரை இலங்கை சனாதிபதியின் தொழிற் சங்க ஆலோசகராகப் பணியாற்றி வந்தார்.

படுகொலை

இலங்கையில் 23 உள்ளூராட்சி சபைகளுக்காக வாக்களிப்பு நடைபெற்ற 2011 அக்டோபர் 8 ஆம் நாளன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொலன்னாவ கொட்டிக்காவத்த பிரதேசத்தில் இருகுழுக்களுக்கிடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. இதில் பாரத லக்சுமன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் உயிரிழந்தனர். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்தார்.

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


மேற்கோள்கள்

  1. Bharatha Lakshman dead, Duminda critical, டெயிலி மிரர், அக்டோபர் 8, 2011