பெப்ரவரி 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
||
வரிசை 55: | வரிசை 55: | ||
[[பகுப்பு:பெப்ரவரி]] |
[[பகுப்பு:பெப்ரவரி]] |
||
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] |
18:01, 1 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 16 (February 16) கிரிகோரியன் ஆண்டின் 47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 318 (நெட்டாண்டுகளில் 319) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1568 - நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- 1646 - இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
- 1796 - ஆங்கிலேயர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1838 - தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடாத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.
- 1918 - லித்துவேனியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1934 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1937 - வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் பிலிப்பீன்சின் கொரெகிடோர் தீவில் தரையிறங்கினர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: முதல் தடவையாக அமெரிக்கப் போர் விமானம் டோக்கியோவைத் தாக்கியது.
- 1945 - அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
- 1947 - 80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.
- 1959 - ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
- 1961 - எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1983 - ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 71 பேர் கொல்லப்பட்டனர்.
- 1985 - ஹெஸ்புல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1986 - சோவியத் கப்பல் மிகைல் லெர்மொண்டொவ் நியூசிலாந்தில் மூழ்கியது.
- 1988 - சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
- 2005 - கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
- 2007: 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
பிறப்புகள்
- 1834 – ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், செருமானிய உயிரியலாளர், மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1919)
- 1909 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்தவர் (இ. 1969)
- 1934 – தெளிவத்தை ஜோசப், ஈழத்து எழுத்தாளர்
- 1941 – கிம் ஜொங்-இல், வட கொரியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2011)
- 1945 – இல. கணேசன், தமிழக அரசியல்வாதி
இறப்புகள்
- 1656 – தத்துவ போதக சுவாமிகள், கத்தோலிக்கக் குரு, தமிழ்நாட்டில் சமயப்பணி ஆற்றியவர் (பி. 1577)
- 1944 – தாதாசாகெப் பால்கே, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1870)
- 1954 – டி. கே. சிதம்பரநாத முதலியார், தமிழக எழுத்தாளர், வழக்கறிஞர் (பி. 1882)
- 1956 – மேகநாத சாகா, இந்திய வானியற்பியலாளர் (பி. 1893)
- 1978 – சி. பி. சிற்றரசு, தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் (பி. 1908)
- 1988 – விஜய குமாரதுங்க, சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1945)
- 1990 – கெய்த் ஹேரிங், அமெரிக்க ஓவியர், செயற்பாட்டாளர் (பி. 1958)
- 2016 – புத்துருசு புத்துருசு காலீ, எகிப்திய அரசியல்வாதி, ஐநாவின் 6வது பொதுச் செயலர் (பி. 1922)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (லித்துவேனியா, 1918)