வியாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்து சமயப் பெரியார்கள்
வரிசை 1: வரிசை 1:


{{Infobox Hindu leader
{{Infobox Hindu leader
|name = வியாசர்
|name = வியாசர்
வரிசை 53: வரிசை 51:
[[பகுப்பு:இந்து மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:இந்து மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]

10:25, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

வியாசர்
படிமம்:Vyasa.jpg
மகாபாரதம் இயற்றியவர்
தலைப்புகள்/விருதுகள்வியாச பூஜை

வியாசர் மகா புராணங்கள் என்று அழைக்கப்பெறும் பதினெண் புராணங்களையும் எழுதியவராகவும், இதிகாசமான மகா பாரதத்தினை எழுதியவராகவும் அறியப்பெறுகிறார். இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என்றும் அழைக்கப்பெறுகிறார். பராசரர் - மச்சகந்தி இணையருக்கு கங்கை ஆற்றில் அமைந்த ஒரு தீவுத்திட்டில், கருத்தமேனியுடன் பிறந்ததால், கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயராயிற்று.

வியாசர் இதிகாசமான மகாபாரதத்தினை எழுதியபின், பதிணென் புராணங்களை எழுதியதாக கூறப்படுகிறது. வியாசர் என்பவர் தனியொருவரா? இல்லை பீடத்தின் பெயரா என்ற சந்தேகம் உள்ளதாக தெரிகிறது. [1]

சாதனைகள்

வியாசருடைய பல சாதனைகளில் முக்கியமானவை ஆறு. அவையாவன:

  • வேதங்களையும் உபநிடதங்களையும் பல சாகைகளாகப்பிரித்து அவைகளை கோர்வைப்படுத்தினார். வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் வேத வியாசர் என்று அவர் அழைக்கப்படுகிறார்.
  • உபநிடதங்களிலுள்ள தத்துவ போதனைகளையெல்லாம் 555 சூத்திரங்கள் கொண்ட பிரம்ம சூத்திரம் நூலை இயற்றி அவைகளை இந்து சமய வேதாந்தத்தின் அடிப்படை ஆதார நூலாகும்படிச் செய்தார்.
  • பாரதத்தின் மிகப் பழைய கலாசாரமனைத்தையும் உட்கருவாக்கி, ‘அறம்’ என்ற சொல்லின் நெளிவு சுளிவுகள் பாமர மக்களுக்கும் விளங்கும்படி ஒரு நீண்ட வம்சாவளிக் கதையாகவும் பிரதிபலிக்கும்படி உலகிலேயே மிகப்பெரிய நூலான மகாபாரதத்தை இயற்றினார்.
  • அவர் இயற்றிய 17 புராணங்கள் இந்துசமயத்தின் அத்தனை கதைகளுக்கும் தெய்வ வரலாறுகளுக்கும் இன்றும் நமக்கு ஆதாரமாகவும் கருச்செல்வங்களாகவும் உள்ளன.
  • பதினெட்டாவது புராணமாக ஸ்ரீமத் பாகவதம் இயற்றி பக்தி என்ற தத்துவத்திற்கே அதை ஒரு வேதமாக்கியிருக்கிறர். மற்ற புராணங்களில் எவ்வளவு சொல்லப் பட்டிருந்தாலும் பாகவதம் இருந்திரா விட்டால் ‘பக்தி’ என்ற தத்துவத்திற்குப் பாரத தேசத்தில் இவ்வளவு மகிமை ஏற்பட்டிருக்குமா என்பது சர்ச்சைக்குரியது.
  • பகவத் கீதையை எழுதியவரும் அவரே. ஆண்டவனின் வாயிலிருந்து அவர் கேட்டதை எழுதியதாகவே வைத்துக்கொண்டாலும், இந்து சமயத்தின் தர்ம-நியாய நுணுக்கங்களை யெல்லாம் ஒன்றுசேர்த்து அதுவே வேதத்திற்கு ஈடாகப் பேசப்படும் அளவிற்கு அதை நமக்கு முன் கொண்டு நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கடைசியாக, பகவத் கீதையை மகாபாரதத்தின் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக்கி, இன்றும் கீதைக்காக மகாபாரதமா, மகாபாரதத்திற்காக கீதையா, என்று வியக்கும்படி செய்திருக்கிறார்.

காண்க

புராணங்கள்

மேற்கோள்கள்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=10855 பிரம்ம புராணம்

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாசர்&oldid=2226468" இலிருந்து மீள்விக்கப்பட்டது