தங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14: வரிசை 14:
தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே [[ரேகை]] போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.<br />
தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே [[ரேகை]] போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.<br />
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி [[தென் ஆப்பிரிக்கா]] வில் வெட்டி எடுக்கப்படுகிறது. [[கனடா]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]], [[ஆஸ்திரேலியா]], [[கொரியா]] ஆகிய நாடுகளிலும், [[தென் அமெரிக்கா]] விலும், [[இந்தியா]] வில் [[கர்நாடகா]] மாநிலத்தில் '''[[கோலார்]]''' என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. [[இலங்கை]]யிலுள்ள [[பூகொடை]] என்னுமிடத்திற் [[களனி ஆறு|களனி ஆற்றுப்]] பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது.
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி [[தென் ஆப்பிரிக்கா]] வில் வெட்டி எடுக்கப்படுகிறது. [[கனடா]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]], [[ஆஸ்திரேலியா]], [[கொரியா]] ஆகிய நாடுகளிலும், [[தென் அமெரிக்கா]] விலும், [[இந்தியா]] வில் [[கர்நாடகா]] மாநிலத்தில் '''[[கோலார்]]''' என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. [[இலங்கை]]யிலுள்ள [[பூகொடை]] என்னுமிடத்திற் [[களனி ஆறு|களனி ஆற்றுப்]] பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது.

== தங்கத்தின் மதிப்பு ==
தங்கத்தின் '''[[காரட்]]''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது.''' 24''' காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் [[அணிகலன்|ஆபரணங்கள்]] செய்ய முடியாது. '''22''' காரட் முதல் '''9''' காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. '''22'''காரட் தங்கம் என்பது '''91.6''' சதவீதம் தங்கமும் '''8.4''' சதவீதம் [[செம்பு]], [[வெள்ளி]] போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். '''18''' காரட் என்பது '''75''' சதவீதம் தங்கமும், '''14''' காரட் என்பது '''58.5''' சதம் தங்கமும், '''9''' காரட் என்பது '''37.5''' சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. '''22''' காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.


==தங்கத்தின் விலை==
==தங்கத்தின் விலை==

00:44, 25 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

பொன்
79Au
Ag

Au

Rg
பிளாட்டினம்பொன்பாதரசம்
தோற்றம்
உலோக மஞ்சள்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் பொன், Au, 79
தனிம வகை தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 116, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
196.966569(4)
இலத்திரன் அமைப்பு [Xe] 4f14 5d10 6s1
2, 8, 18, 32, 18, 1
Electron shells of Gold (2, 8, 18, 32, 18, 1)
Electron shells of Gold (2, 8, 18, 32, 18, 1)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம்
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 19.30 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 17.31 g·cm−3
உருகுநிலை 1337.33 K, 1064.18 °C, 1947.52 °F
கொதிநிலை 3129 K, 2856 °C, 5173 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 12.55 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 324 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 25.418 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 1646 1814 2021 2281 2620 3078
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் -1, 1, 2, 3, 4, 5
(அம்போடெரிக் ஒக்சைட்)
மின்னெதிர்த்தன்மை 2.54 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 890.1 kJ·mol−1
2வது: 1980 kJ·mol−1
அணு ஆரம் 144 பிமீ
பங்கீட்டு ஆரை 136±6 pm
வான்டர் வாலின் ஆரை 166 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு lattice face centered cubic
பொன் has a Lattice face centered cubic crystal structure
காந்த சீரமைவு diamagnetic
மின்கடத்துதிறன் (20 °C) 22.14 nΩ·m
வெப்ப கடத்துத் திறன் 318 W·m−1·K−1
வெப்ப விரிவு (25 °C) 14.2 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (அ.வெ.) 2030 மீ.செ−1
இழு வலிமை 120 MPa
நழுவு தகைமை 27 GPa
பரும தகைமை 180 GPa
பாய்சான் விகிதம் 0.44
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
2.5
விக்கெர் கெட்டிமை 216 MPa
பிரிநெல் கெட்டிமை 25 HB MPa
CAS எண் 7440-57-5
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: பொன் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
195Au செயற்கை 186.10 d ε 0.227 195Pt
196Au செயற்கை 6.183 d ε 1.506 196Pt
β 0.686 196Hg
197Au 100% Au ஆனது 118 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
198Au செயற்கை 2.69517 d β 1.372 198Hg
199Au செயற்கை 3.169 d β 0.453 199Hg
·சா
தங்கம்

தங்கம் அல்லது பொன் (Gold) என்பது மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகமாகும். தங்கம் Au என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 79. இதன் சாரடர்த்தி 19.3 ஆகும். அதாவது நீரைப்போல் ஏறத்தாழ 19 மடங்கு எடையுள்ளது. இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது.

தங்கத்தின் தன்மை.

தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பள பளப்பாகவே இருக்கும். ஒருபங்கு நைத்திரிக் அமிலமும் மூன்று பங்கு ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த இராஜ திரவம் என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும்.

தங்கத்தின் மதிப்பு

தங்கத்தின் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

தங்கச் சுரங்கம்

தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்கா வில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா விலும், இந்தியா வில் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூகொடை என்னுமிடத்திற் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது.

தங்கத்தின் விலை

2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டிருந்தபோதிலும், 2013-ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு முதல் கால் இறுதியில் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளது.[1]

தங்கத்தை இறக்குமதி செய்வது குறைத்து இந்தியாவிற்குள்ளே இருக்கும் தங்கம் சுழற்சி செய்யப்பட்டால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையவும், குறிப்பாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையவும் வழி உருவாக்கும். ( தங்கத்தின் விலை ஏறுகிறதா, ஏமாற்றுகிறதா, க. மாரிக்கனி, ஓருலகம் பதிப்பகம், புதிய எண் 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-33 )

நாணயச் செலாவணி

ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.

தங்கத்தின் பயன்பாடு

தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், போன்றவற்றைச் செய்வர். தங்கம் மென்மையான உலோகம் ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளி யைக் கலந்து செய்யப்பட்ட நகை , நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமென்பதற்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்க்கிறார்கள். வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா[சான்று தேவை].

பண்பாட்டு முக்கியத்துவம்

தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. இது ஒரு ஆடம்பர பொருளாவும் பாவிக்கப்படுகிறது. தமிழர்கள் தங்கள் பெண்ணின் திருமணத்தின் போது நகைகள் அணிவித்து கணவன் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். மேலும், தமிழில் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவதும் வழக்கம். இந்தியாவின் செல்வ நிலையைக் கேட்ட பிற நாட்டவர்கள், கடல்வழிப் பயணமாக வந்து வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர்

உசாத்துணை

  1. குழந்தைகள் கலைக் களஞ்சியம்- தொகுதி ஐந்து. - தமிழ் வளர்ச்சிக் கழகம் - 1986
  2. இளையர் அறிவியல் களஞ்சியம் -.மணவை பப்ளிகேஷன் வெளியீடு -1995

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்&oldid=2193802" இலிருந்து மீள்விக்கப்பட்டது