சௌதங்கா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:BD Chuadanga District locator map.svg|thumb|வங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:BD Chuadanga District locator map.svg|thumb|வங்காளதேசத்தில் சௌதங்கா மாவட்டத்தின் அமைவிடம்]]
[[Image:BD Chuadanga District locator map.svg|thumb|வங்காளதேசத்தில் சௌதங்கா மாவட்டத்தின் அமைவிடம்]]

ங் வங்காள தேசம்


'''சௌதங்கா மாவட்டம்''' (Chuadanga District) தெற்காசியாவின் [[வங்காளதேசம்|வங்காளதேச]] நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் [[குல்னா கோட்டம்|குல்னா கோட்டத்தில்]] அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் தென்மேற்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் '''சௌதங்கா ''' நகரம் ஆகும்.
'''சௌதங்கா மாவட்டம்''' (Chuadanga District) தெற்காசியாவின் [[வங்காளதேசம்|வங்காளதேச]] நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் [[குல்னா கோட்டம்|குல்னா கோட்டத்தில்]] அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் தென்மேற்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் '''சௌதங்கா ''' நகரம் ஆகும்.

09:13, 23 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

வங்காளதேசத்தில் சௌதங்கா மாவட்டத்தின் அமைவிடம்


சௌதங்கா மாவட்டம் (Chuadanga District) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் குல்னா கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் தென்மேற்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சௌதங்கா நகரம் ஆகும்.

மாவட்ட எல்லைகள்

சௌதங்கா மாவட்டத்தின் வடகிழக்கில் குஸ்தியா மாவட்டம், தென்கிழக்கில் ஜெனிதக் மாவட்டம், வடமேற்கில் மெகர்பூர் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

1174.10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சௌதங்கா மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஆலம்தங்கா, சௌதங்கா சதர், ஜிபன்நகர், தமுர்ஹுடா என நான்கு வருவாய் துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மாவட்டத்தில் நான்கு நகராட்சி மன்றங்களும், முப்பத்தி இரண்டு கிராம ஒன்றியக் குழுக்களும், 345 வருவாய் கிராமங்களும், 521 கிராமங்களும் உள்ளது.[1]

இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 9000 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0761. இம்மாவட்டம் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

இம்மாவட்டத்தில் நவகங்கா, மதவங்கா, வைரப், குமார், சித்திரா முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் மிக்கதாக உள்ளது. இம்மாவட்டத்தில் 894.20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நெல், சணல், கரும்பு, வெற்றிலை முதலியன பயிரிடப்படுகிறது. இம்மாவட்டத்தில் ஒரு மதுபானத் தொழிற்சாலை செயல்படுகிறது.

மக்கள் தொகையியல்

1174.10 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 11,29,015 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,64,819 ஆகவும், பெண்கள் 5,64,196 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.13 % ஆக உள்ளது. பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 962 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 45.9% ஆக உள்ளது.[2]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள்

இம்மாவட்டத்தில் 12 கல்லூரிகளும், 48 உயர்நிலைப் பள்ளிகளும், ஏழு இளையோர் பள்ளிகளும், 257 அரசு தொடக்கப் பள்ளிகளும், 120 தனியார் தொடக்கப் பள்ளிகளும், ஒரு செவிலியர் பயற்சி மையமும், 63 மதராசாக்களும், ஒரு பல்கலைக்கழகமும் உள்ளது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌதங்கா_மாவட்டம்&oldid=2177569" இலிருந்து மீள்விக்கப்பட்டது