பயனர் பேச்சு:Shriheeran: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎l'commissariat d'Riche: புதிய பகுதி
வரிசை 120: வரிசை 120:
ஆங்கிலத் தலைப்பில், முழுக்க ஆங்கிலத்தில் உள்ளடக்கத்துடன் பயனர் ஒருவர் எழுதிய கட்டுரையை நீக்கப் பரிந்துரைப்பதே நல்லது.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 06:57, 15 சனவரி 2017 (UTC)
ஆங்கிலத் தலைப்பில், முழுக்க ஆங்கிலத்தில் உள்ளடக்கத்துடன் பயனர் ஒருவர் எழுதிய கட்டுரையை நீக்கப் பரிந்துரைப்பதே நல்லது.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 06:57, 15 சனவரி 2017 (UTC)
:[[User:Kanags|Kanags]] அவர்களின் ஆலோசனைக்கு நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 08:36, 15 சனவரி 2017 (UTC)
:[[User:Kanags|Kanags]] அவர்களின் ஆலோசனைக்கு நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 08:36, 15 சனவரி 2017 (UTC)

== l'commissariat d'Riche ==

www.deutsches-rei.ch

17:25, 17 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்

பயனர் பக்கம் உரையாடல் பங்களிப்புக்கள் மின்னஞ்சல் பதக்கங்கள் மணல்தொட்டி
உருவாக்கியவை:- கட்டுரைகள் வார்ப்புருக்கள் படிமங்கள் கருவிகள் மேலதிகமானவை

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்






உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு


முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு


பதக்கம்

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
ஆசிய மாதம், விக்கிக்கோப்பை என்று அடுத்தடுத்து பெரும் பொறுப்புகளை முன்னுவந்து எடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் அனைவரையும் உற்சாகப்படுத்தி கலந்து கொள்ளச் செய்வது சிறப்பு. இது போன்றபணிகளைச் செய்வோர் மிகச் சிலரே. ஆனால், இது மிகவும் இன்றியமையாத பணி. என் உளமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும். --இரவி (பேச்சு) 10:43, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி, இரவி அவர்களே!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:08, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் வாழ்த்துக்கள் தம்பி!--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:12, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
அண்ணாவுக்குத் தம்பியின் நன்றிகள், பரீட்சையில் மிளிர என் வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:22, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம், வாழ்த்துக்கள் நண்பா!! உங்கள் பணி தொடரட்டும்.-- மாதவன்  ( பேச்சு ) 11:50, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
நன்றி,மாதவா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 22:50, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். இக்கருத்தெடுப்பில் கலந்து கொள்ள நீங்கள் குறிப்பிட்ட பயிற்சியில் பங்கு கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மாறாக, நேரடியாக பங்கு கொள்ளாதவர்களுக்கும் இதன் பயன் புலப்படுகிறதா என்று அறிவதும் இக்கருத்தெடுப்பின் நோக்கமாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:09, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று இரவி அவர்களே--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:12, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

உரையாட வேண்டும்

தங்களுடன் நான் உரையாட வேண்டும். சிறிது நேரம் Hangouts இல் இணைய முடியுமா?-- மாதவன்  ( பேச்சு ) 12:21, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

வாருங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:30, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

கோப்பை விதி

இருக்கும் கட்டுரையில் 50 அல்லது 100 வார்த்தைகள் அல்லது 15 ... வரிகள் சேர்த்தால் அது போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுமா?--குறும்பன் (பேச்சு) 20:23, 16 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தாங்கள் போட்டியில் பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றேன். மேலும் இப்போட்டியானது கட்டுரை உருவாக்கத்தையே முதன்மையாக கொண்டுள்ளது. ஆம்! இப்போட்டிக்காக FOUNTAIN கருவி உருவாக்குநருடன் தொடர்பு கொண்டேன். போட்டிக்காக கட்டுரை உருவாக்கத்தை மையப்படுத்தியே கருவி இடைமுகம் வடிவமைக்கப்படுள்ளது. மேலும் இப்போட்டிக்காக உருவாக்கப்படும் கட்டுரைகளை விக்கியில் இடம்பெறும் மாபெரும் போட்டிகளான கட்டுரை ப்போட்டிகளில் (நீங்களும் பங்குபற்றினீர்கள்) விரிவாக்க வழிவகை செய்யலாம் என நினைக்கின்றே. எனவே அருள்கூர்ந்து நீங்கள் பல பல கட்டுரைகளை உருவாக்குநீர்கள் எனநம்புகின்றேன். விரும்பின் விரிவாக்கத்திற்கெனெ இன்னோர் மாதத்தில் போட்டி நடாத்தலாம். அது பற்றி கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. (@Kurumban: நன்றி.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:05, 17 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 09:55, 17 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

யாழ்ப்பாணம் (வானூர்தி)

யாழ்ப்பாணம் (வானூர்தி) கட்டுரையை ஆ.வி.யில் உருவாக்கியதற்குப் பாராட்டுக்கள். ஆயினும் அங்கு அக்கட்டுரையின் குறிப்பிடத்தக்கமை கேள்விக்கு உட்படலாம். ஆகவே, குறிப்பிடத்தக்கமைக்குரிய விடயம் சான்றுகளுடன் சேர்க்கப்பட வேண்டும். முடிந்தால் அங்கு சேர்த்துவிடுங்கள். பின்னர் உரைதிருத்தம் செய்துவிடுகிறேன். --AntanO 02:08, 24 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

சில பகுதிகள் இணைத்துள்ளேன்.--AntanO 02:36, 24 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
@AntanO: அவர்களே, தற்போது மாத முடிவு ஆகையால் இணைய வேகம் குறைவாகவே உள்ளது. விக்கி, கூகுள் தவிர வேறு எந்த வலைத்தளங்களுக்கும் செல்லமுடியவில்லை. தாங்கள் தக்க இணையச்சான்றுகளை மென்மேலும் அங்கு இட்டு உதவ வேண்டுகின்றேன். மேலும் கட்டுரையை மேம்படுத்தியமைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:11, 24 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

எமினெம்

எமினெம் கட்டுரையில் இலக்கணப் பிழைகள் உள்ளன. அதனை முதற்பக்கக் கட்டுரையாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள். பரிந்துரைத்துவிட்டு செய்யுங்கள். --AntanO 03:22, 29 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

அத்துடன் எமினெம் கட்டுரையில் நிறைய அளவுக்கதிகமான சிவப்பு இணைப்புகள் உள்ளன. ஆங்கில எழுத்துக்கள் நிரம்பவே உள்ளன. இவற்றைக் காட்சிப்படுத்துவதிலும் பார்க்க (வேறு உகந்த கட்டுரைகள் இல்லாவிட்டால்) பழைய கட்டுரையை வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 03:37, 29 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
அன்ரன் அவர்களே, தற்போது எமினெம் கட்டுரையை மாற்றி ஏ. ஆர். ரகுமானை இட்டுள்ளேன் ஆட்சேபனை இருப்பின் வேறொரு தகுந்த கட்டுரையை இட்டு விடுங்கள். கருத்துக்கு நன்றி.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:34, 29 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
தற்போதும் முதற்பக்கக் கட்டுரைத் தகுதிகள் என்பதற்கு ஏற்ப இல்லாது இருப்பதைக் காணலாம். பரவாயில்லை, அக்கட்டுரை இருக்கட்டும். முடியுமானால் பரிந்துரைப் பகுதியில் கட்டுரைகளை பரிந்துரையுங்கள். அங்கு தேவையுள்ளது. --AntanO 03:06, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
நன்றி அன்ரன் அவர்களே, அத்துடன் விக்கிக்கோப்பைக்காக பயனர்கள் உருவாக்க்கும் விரிவான சிறந்த கட்டுரைகளை வாராவாரம் தவறாது இடப் பரிந்துரைக்க்கின்றேன். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:35, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--AntanO 02:10, 4 சனவரி 2017 (UTC)[பதிலளி]

Question

Are you willing to create a project which will teach Tamil? I'm dying to learn Tamil and I'm looking for anyone interested. thanks! --Atcovi (பேச்சு) 00:28, 1 சனவரி 2017 (UTC)[பதிலளி]

Let us keep this discussion at our talk page, ok? Thanks! --Atcovi (பேச்சு) 00:38, 1 சனவரி 2017 (UTC)[பதிலளி]
Atcovi Where? here or in meta--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:42, 1 சனவரி 2017 (UTC)[பதிலளி]
Sorry bad wording of me. At meta, thanks. --Atcovi (பேச்சு) 00:44, 1 சனவரி 2017 (UTC)[பதிலளி]

மீண்டும்

நீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகள், மற்றும் உருவாக்கும் பகுப்புகளுக்கு அவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் அல்லது பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்பைக் கட்டாயம் தாருங்கள். கட்டுரைகளை, பகுப்புகளை விக்கித் தரவில் இணைப்பது என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. நன்றி.--Kanags \உரையாடுக 11:30, 3 சனவரி 2017 (UTC)[பதிலளி]

நன்றி, அப்படியே ஆகட்டும் கனகு ஐயா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:06, 3 சனவரி 2017 (UTC)[பதிலளி]

உதவி

கிழக்கு கடற்கரைச் சமவெளி என்று ஒரு கட்டுரையை உருவாக்கி பின்னர் அதை கிழக்கு கடற்கரைச் சமவெளிகள் என்ற தலைப்புக்கு நகர்த்தினேன். விக்கிக்கோப்பைக்கான எனது பங்களிப்பில் பதிவேற்ரம் செய்ய இயல்வில்லை. article not found என வருகிறது. உதவவும். அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 07:45, 7 சனவரி 2017 (UTC)[பதிலளி]

@கி.மூர்த்தி:கிழக்கு கடற்கரைச் சமவெளிகள் என்பதை நான் சமர்ப்பிக்க முனைந்த போது, ஏனைய கட்டுரைகளை சமர்ப்பிக்கும் போது தோன்றும் "ADD" எனும் வார்த்தை தோன்றும் பெட்டி தோன்றியது. ஆனால் அதை என்னால் சமர்ப்பிக்க முடியாது. நீங்கள் தான் சமர்ப்பிக்க வேண்டும். முயற்சியுங்கள். அவ்வாறு சமர்ப்பிக்க இயலாவிடின் அக்கட்டுரைகான புள்ளிகளை இன்னொரு கட்டுரைப்புள்ளியுடன் இணைத்துவழங்குகின்றேன். முயற்சி பயனளிக்காவிடின் மட்டுமே. அவ்வாறு முயற்சி பயனளித்தால் இங்கு தெரிவிக்கவும். நன்றி. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:35, 7 சனவரி 2017 (UTC)++[பதிலளி]
ஸ்ரீஹீரன் இப்பொழுது சரியாகி விட்டது . நன்றி அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 10:10, 7 சனவரி 2017 (UTC)[பதிலளி]

15 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய மாபெரும் போட்டிகள்

வணக்கம்! உங்களின் திறன்நிறைந்த செயலாக்கங்களுக்கும், சிந்தனைகளுக்கும் எனது பாராட்டுகள். 15 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய மாபெரும் போட்டிகள் குறித்து உரையாடுவதற்கு, திட்ட பக்கமொன்றினை ஆரம்பித்து விடுங்கள். பலதரப்பட்ட விடயங்கள் குறித்து அங்கு விவாதிக்க இயலும். ஆலமரத்தடியில் விரிவாக உரையாடுவதில் சிரமங்கள் இருக்கக்கூடும் என்பது எனது கருத்து; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:24, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]

தங்களின் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல துணைத் தலைப்புகளை இட்டு, விரிவாக உரையாடலாம். தேவைப்படும்போது பக்கத்தின் தலைப்பினை நகர்த்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டிற்கு இங்கு காண்க! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:32, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் அவர்களே தாங்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்க இங்கு Endorsements பகுதிக்கு சென்று உங்கள் ஆதரவையும், மேலதிக கருத்துகளை ஆங்கிலத்தில் பதியவும் வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:18, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]

மிகக் கடினமான பணிகளை உள்ளடக்கிய மாபெரும் திட்டமென்றாலும், உங்களுடைய முனைப்புத் திறனானது உங்களுக்கும் தமிழ் விக்கிக்கும் வெற்றியினை ஈட்டித் தரும் என நம்புகிறேன். என்னால் இயன்ற உதவியினை செய்வேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:19, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் அவர்களே தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி அத்துடன் உங்கள் ஆதரவு அங்கு தேவைப்படுகின்றது. இதுவே நான் முதலாவதாக உங்களிடம் போட்டிக்காகக் கேட்கும் உதவி என் ந்மபுகின்றேன். உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. நன்றி! தாங்களும் போட்டியில் பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:24, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]
மா. செல்வசிவகுருநாதன் அவர்களே, அங்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:32, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]

தனிப்பட்ட முறையில் சில கருத்துகள்:

  1. தங்களின் பெருமளவு நேரத்தை இந்தப் பணி எடுத்துக்கொள்ளும். தங்களின் கல்விக்கு இடையூறு ஏற்படாமல் உங்களால் நேரம் செலவிட முடியுமா என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
  2. நீங்கள் நிறைய உரையாட வேண்டியிருப்பதால், அதிகளவு எழுத்துப்பிழைகள் ஏற்படுகிறது. பிழையின்றி எழுதுவது ஒரு ஒருங்கிணைப்பாளருக்கு இன்றியமையாதது. இங்குகூட பரவாயில்லை; ஆனால் விக்கிமீடியா போன்ற அனைத்துலக அரங்கில் பிழையின்றி எழுதுவது மிகவும் முக்கியமானது என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள். திட்டப் பக்கத்தில் உரிய திருத்தங்களை பிறர் மேற்கொள்ள இயலும். ஆனால் ஒருவரின் பேச்சில் மற்றவர் திருத்துவது நடைமுறையன்று அல்லவா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:05, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]

போட்டியில் பங்குபற்றுவதில் எனக்கு இப்போது விருப்பமில்லை. உங்களுக்கு உதவிடும் வகையில் சில பணிகளை செய்திட விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:22, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் அவர்களே, இப்போட்டிக்கான முன்னேற்பாடுகளை முறையாக செய்வேனானால் இப்போட்டியை வெற்றிகரமாக, எனது கல்விக்கு இடையூறு இன்றி நடாத்த முடியும் என நான் நம்புகின்றேன். நிச்சயமாக, நான் எழுத்துப்பிழைகளுடன் உரையாடுவது என்னிடம் உள்ள மிகப்பெரிய குறை:- காரணம் வேகமாக பொறுமையின்றி தட்டெழுத்து செய்வது. ஏன் உங்களுக்கு இடும் இப்பதிலையும் கூட வேகமாகத் தான் தட்டெழுத்திடுகின்றேன். தாங்கள் சுட்டிக்காட்டிய எனது குறை எனக்குள்ளும் இருந்தது. இனிவரும் காலங்களில், இல்லை, இன்றிலிருந்தே உரையாடல்களில் கவனத்துடன் உரையாடுவேன் என நானாகவே திடசங்கற்பம் பூண்டு எனது பதிலை முடித்துக்கொள்கின்றேன். போட்டிக்கான முன்னேற்பாடுகளில் தங்கள் உதவி தேவைப்படின் கேட்கின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:57, 14 சனவரி 2017 (UTC)[பதிலளி]

உதவி

பன்வாரியா என்ற கட்டுரையை தவறுதலாக banharia என்ற கட்டுரையுடன் விக்கித்தரவில் இணைத்து விட்டேன். பன்நரிஅ என்ற சரியான கட்டுரையுடன் இணைக்க உதவி வேண்டும் அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 16:08, 13 சனவரி 2017 (UTC)[பதிலளி]

ஆங்கிலக் கட்டுரை

ஆங்கிலத் தலைப்பில், முழுக்க ஆங்கிலத்தில் உள்ளடக்கத்துடன் பயனர் ஒருவர் எழுதிய கட்டுரையை நீக்கப் பரிந்துரைப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 06:57, 15 சனவரி 2017 (UTC)[பதிலளி]

Kanags அவர்களின் ஆலோசனைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:36, 15 சனவரி 2017 (UTC)[பதிலளி]

l'commissariat d'Riche

www.deutsches-rei.ch

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shriheeran&oldid=2174023" இலிருந்து மீள்விக்கப்பட்டது