ஆழ்வார்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 50.180.172.6 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2053143 இல்லாது செய்யப்பட்டது
→‎வெளி இணைப்புகள்: Added reference website details.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 93: வரிசை 93:
[[பகுப்பு:ஆழ்வார்கள்]]
[[பகுப்பு:ஆழ்வார்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
[[பகுப்பு:AFTv5Test‎]]

* [http://dravidaveda.org‎ திராவிட வேதா தளம் ( Dravida Veda website)] - ஆழ்வார்கள், அவர்களின் வரலாறு, மற்றும் அவர்களின் பாடல்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த இணையதளத்தை பார்க்கவும்.

12:44, 25 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களில் பெண் என்பதால் ஆண்டாளையும், நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு.


இவர்கள் 7 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.

சொற்பொருள்

மரபுப்படி இறைவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொற்பொருள் கூறுவர். ஆயினும் அறிவியல் ஆய்வின்படி இந்தச் சொல ஆள்வார் என்றுதான் முதலில் வழங்கினதாகவும் பிறகு ஆழ்வார் என்று ஆயினதாகவும் S. பழனியப்பன் என்ற இந்தியவியல்/மொழியியல் ஆய்வாளர் பதிப்பித்துள்ளார்[1].

வரலாறு

கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும்.அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது

பன்னிரு ஆழ்வார்கள்

படிமம்:12 ஆழ்வார்கள்
படிமம்:12 ஆழ்வார்கள்
  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசையாழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. மதுரகவி ஆழ்வார்
  7. குலசேகர ஆழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடியாழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கையாழ்வார்

12 ஆழ்வார்களின் காலநிரல் [2]

நூற்றாண்டு ஆழ்வார்கள் எண்ணிக்கை
6 முதல் ஆழ்வார் மூவர்: பொய்கை, பூதன், பேயன் 3
7 திருப்பாணாழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் 3
8 குலசேகராழ்வார், பெரியாழ்வார், கோதை ஆண்டாள், திருமங்கையாழ்வார் 4
9 நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் 2

வழிமுறை

நூற்றாண்டு வழிமுறையினர்
9 நாதமுனிகள்
10 யமுனைத் துறைவர்

ஆழ்வார்களின் வரிசை அடுக்கு

ஆழ்வார்களை வரிசைப்படுத்துவதில்12,13,14,15 ஆம் நூற்றாண்டுகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. இவை ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தோடு தொடர்புடையன அல்ல.

ஆழ்வார் திருவரங்கத்தமுதனார் 'இராமானுச நூற்றந்தாதி' [3] பின்பழகிய பெருமாள் சீயர் 'குருபரம்பரை' [4] வேதாந்த 'பிரபந்த சாரம்' [5] மணவாள மாமுனிகள் 'உபதேச ரத்தின மாலை' [6]
முதலாழ்வார் மூவர் 1, 2, 3 1, 2, 3 1, 2, 3 1, 2, 3
திருப்பாணாழ்வார் 4 9 11 10
திருமழிசை 5 4 4 4
தொண்டரடிப்பொடி 6 8 10 9
குலசேகரர் 7 5 7 6
பெரியாழ்வார் 8 6 8 7
ஆண்டாள் 9 7 9 8 (விட்டுவிட்டார்)
திருமங்கை 10 10 12 11
நம்மாழ்வார் 11 11 5 5
மதுரகவி 12 12 6 12 (விட்டுவிட்டார்)

'திருமுடி அடைவு' என்னும் முறைமை மணவாள மாமுனிகள் வரிசையைப் பின்பற்றுகிறது.

மேலும் காண்க

அடிக்குறிப்பு

  1. http://www.academia.edu/9668394/%C4%80%E1%B8%BBv%C4%81r_or_N%C4%81ya%E1%B9%89%C4%81r_The_Role_of_Sound_Variation_Hypercorrection_and_Folk_Etymology_in_Interpreting_the_Nature_of_Vai%E1%B9%A3%E1%B9%87ava_Saint-Poets
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 198. 
  3. 12ஆம் நூற்றாண்டு நூல்
  4. 13ஆம் மூற்றாண்டு நூல்
  5. 14ஆம் நூற்றாண்டு நூல்
  6. 15ஆம் நூற்றாண்டு நூல்

வெளி இணைப்புகள்

  • திராவிட வேதா தளம் ( Dravida Veda website) - ஆழ்வார்கள், அவர்களின் வரலாறு, மற்றும் அவர்களின் பாடல்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த இணையதளத்தை பார்க்கவும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்வார்கள்&oldid=2109693" இலிருந்து மீள்விக்கப்பட்டது