தொண்டைமான் இளந்திரையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10: வரிசை 10:
* [[தொண்டையர்]] வாழ்ந்த நாடு தொண்டைநாடு. தொண்டை நாட்டு அரசன் தொண்டைமான்.
* [[தொண்டையர்]] வாழ்ந்த நாடு தொண்டைநாடு. தொண்டை நாட்டு அரசன் தொண்டைமான்.
* திரையன் என்பவனின் தம்பி இளந்திரையன்.
* திரையன் என்பவனின் தம்பி இளந்திரையன்.
* திரையில் (கடலலலையில்) வந்தவன் திரையன் எனப்பட்டான் என்னும் கருத்து உண்டு.
* திரையில் (கடலலையில்) வந்தவன் திரையன் எனப்பட்டான் என்னும் கருத்து உண்டு.


[[பகுப்பு:சங்ககால அரசர்கள்]]
[[பகுப்பு:சங்ககால அரசர்கள்]]

01:51, 19 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

தொண்டைமான் இளந்திரையன் சங்ககால அரசர்களில் ஒருவன். இவனது தலைநகர் காஞ்சி. பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன். கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் இவனிடம் பரிசில் பெற்று மீண்டவர். 21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டும் பெரும்பாணனை இந்த அரசனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.

  • கடியலூரிலிருந்து காஞ்சிக்குச் செல்லும்போது நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தைக் கடந்து செல்லவேண்டும்.
  • இளந்திரையனின் அரண்மனை வாயில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் எப்போதும் திறந்தே இருக்கும்.
  • மள்ளருக்கு மள்ளன் (உழவருக்கெல்லாம் உழவன்), மறவருக்கு மறவன் (வீரருக்கெல்லாம் வீரன்), செல்வருக்குச் செல்வன் (வணிகருக்கெல்லாம் வணிகன்), போரில் மேம்பட்டவன் என்றல்லாம் இவன் போற்றப்பட்டுள்ளான்.
  • பரிசலர்க்குப் புத்தாடை தந்து, தானே உணவு படைப்பான்.
  • சிறந்த பாணனுக்குப் பொன்னால் செய்த தாமரை விருது சூட்டிப் பெருமைப்படுத்துவான்.
  • விறலியர்க்குப் பொன்னால் செய்த மாலையை அணிவிப்பான்.

காண்க

  • தொண்டையர் வாழ்ந்த நாடு தொண்டைநாடு. தொண்டை நாட்டு அரசன் தொண்டைமான்.
  • திரையன் என்பவனின் தம்பி இளந்திரையன்.
  • திரையில் (கடலலையில்) வந்தவன் திரையன் எனப்பட்டான் என்னும் கருத்து உண்டு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டைமான்_இளந்திரையன்&oldid=2107169" இலிருந்து மீள்விக்கப்பட்டது