கியூபா நாட்டுப்பண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59: வரிசை 59:
|}
|}


== மேற்கோள்கள் ==

{{Reflist}}
[[பகுப்பு:நாட்டுப்பண்கள்]]
[[பகுப்பு:நாட்டுப்பண்கள்]]
[[பகுப்பு:கூபா]]
[[பகுப்பு:கூபா]]

15:32, 17 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

யுத்தத்துக்கு தயாராவோம் மக்களே (El Himno de Bayamo ) என்பது கியூபாவின் நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் முதலில் 1868 இல் ஸ்பெயினுக்கு எதிராக நடந்த பயோமோ போரின்போது பாடப்பட்டது. போரில் கலந்துகொண்ட பெட்டரோ (இயற்பெயர் பெட்ரோ  ஃபிலிப்ஃபிகூரடோ ) என்பவரால் இயற்றப்பட்ட பாடல் இது. லா பாயாமிசா என்று அழைக்கப்படும் இந்தப் பாடலுக்கு 1867 இல் இசையமைக்கப்பட்டது.

வரலாறு

1868 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று பயோமா நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டு அலுவலர்கள் கியூப படைகளிடம் சரண்டைந்தனர். இந்த வெற்றியைக் கொண்டாடி ஆடிப்பாடிய மக்கள், தாங்கள் இசைந்த்த மெட்டுக்கு பாடல்வரிகளை எழுதிதித் தரும்படி பெருச்சோவிடம் கேட்க, உடனே அவர் குதிரை சேணத்தில் அமர்ந்தபடியே அந்த மெட்டுக்கு பாடல் எழுதினார். இந்தப்பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக உள்ள பாடலைவிட நெடியதாக இருந்தது. இது நடந்த இரு ஆண்டுகளுக்குப்பின் இவர் ஸ்பானியர்களிடம் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார்.

வரிகள்

உண்மையில் இந்தப் பாடல் ஆறு பத்திகளைக் கொண்டிருந்தது. பாடலின் இறுதி நான்கு பத்திகளில் ஸ்பெயின் எதிர்ப்பு வரிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் அவை நீக்கப்பட்டன. தற்போது முதல் இரண்டு பத்திகள் மட்டும் நாட்டுப்பண்ணாகப் பாடப்படுகிறது.

வரிகள்

எசுபானிய மொழியில் தமிழ் ஒலிபெயர்ப்பு தமிழ் மொழிபெயர்ப்பு[1]



¡Al combate, corred, Bayameses!,
Que la patria os contempla orgullosa;
No temáis una muerte gloriosa,
Que morir por la patria es vivir.

En cadenas vivir es vivir
En afrenta y oprobio sumidos,
Del clarín escuchad el sonido;
¡A las armas, valientes, corred!



 ‘அல் கம்பாட்டே கோர்ர்ட் பயாமிசஸ்

கோ லா பேட்ரியா ஓஸ் காண்டம்ப்லா ஓர்குலோசா

நோ தெமோயிஸ் ஊனா மூவர்டே க்ளோரியோசா

கோ மோரிர் போர் லா பேட்ரியா எஸ் விவிர்

என் கேடனாஸ் விவிர் எஸ் விவிர்

என் அஃப்ரென்ட்டா ஒப்ரோபியா சுமிடோஸ்

டெல் க்லெரின் எஸ்குசட் எல் சோனிடோ

ஏ லாஸ் அர்மாஸ் வேலியன்டஸ் கார்ரட்'!



பயோமா மக்களே! போருக்கு ஓடி வாருங்கள்.

தாய்நாடு உங்களைப் பெருமையுடன் பார்க்கிறது.

பெருமைமிகு மரணத்துக்கு அஞ்சாதீர்கள்.

ஏனெனில் தாய்நாட்டுக்காக சாவதுதான் (உண்மையில்) வாழ்வது.

விலங்குகளால் கட்டுண்டு வாழ்வது

அவமானம், இகழ்ச்சிக்குள் சிக்கிக் கிடப்பது;

சங்கு ஒலிப்பதைக் கேளுங்கள்

துணிவுள்ளவர்களே..! போருக்கு ஓடி வாருங்கள்!

மேற்கோள்கள்

  1. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (2016 ஆகத்து 17). "புரட்சி தேசத்தின் போர்ப் பரணி!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபா_நாட்டுப்பண்&oldid=2106559" இலிருந்து மீள்விக்கப்பட்டது