கே. சங்கர் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23: வரிசை 23:
==மேற்கோள்==
==மேற்கோள்==
{{Reflist}}
{{Reflist}}
[[பகுப்பு:இந்திய கார்ட்டூனீளார்கள்]]
[[பகுப்பு:இந்திய ஓவியர்கள்]]
[[பகுப்பு:பத்மசிறீ விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:பத்மசிறீ விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள்]]

12:50, 13 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

கே. சங்கர் பிள்ளை (31 சூலை 1902--26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.[1]

பிறப்பும் படிப்பும்

கேரளத்தைச் சேர்ந்த காயம் குளத்தில் பிறந்த சங்கர் தம் பள்ளிப் படிப்பை மாவேலிக்கராவிலும் காயம் குளத்திலும் பயின்றார். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியிலும், பின்னர் மும்பைக்குச் சென்று சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்.

பணி

  • கேலிச் சித்திரங்கள் வரைவதில் ஆர்வம் கொண்ட சங்கர் பிரீ பிரஸ் ஜர்னல், பாம்பே குரோனிக்கில் போன்ற பத்திரிக்கைகளில் கேலிச் சித்திரங்கள் வரைந்தார்.
  • சங்கர்ஸ் வீக்லி இதழை 1948 இல் தோற்றுவித்து நடத்தினார். அபு ஆபிரகாம், ரங்கா, குட்டி போன்ற கார்டூனாளர்களை தம் பத்திரிகையில் எழுத வைத்து ஊக்குவித்தார்.
  • பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் நெருக்கடி காலத்தில், 1975 ஆம் ஆண்டில் சங்கர்ஸ் வீக்லி வெளியிடுவதை நிறுத்தினார்.
  • குழந்தைகளுக்கான புத்தகங்கள், ஓவியங்கள், கதைகள் ஆகியவற்றைப் படைத்தார்.
  • சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் இவரால் 1965இல் தொடங்கப்பட்டது.

விருதுகள்

பத்மசிறீ (1956) பத்மபூசண் (1966) பத்ம விபூசண் (1976) தில்லி பல்கலைக் கழகம் வழங்கிய இலக்கிய விருது

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சங்கர்_பிள்ளை&oldid=2104260" இலிருந்து மீள்விக்கப்பட்டது