நிசாத நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி No need here, removed: * [http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section1.html முழு மஹாபாரதம்] using AWB
வரிசை 45: வரிசை 45:


{{மகாபாரதம்}}
{{மகாபாரதம்}}



{{Navbox
| name = பரத கண்ட நாடுகளும் - இன மக்களும்
| title = பரத கண்ட நாடுகளும் - இன மக்களும்
| state = {{{state|autocollapse}}}
| listclass = hlist
|titlestyle = background-color:orange;
|groupstyle = background-color:orange;text-align:center;

| list1 = நாடுகள்
* [[ஆபீர நாடு]]
* [[ஆந்திர நாடு]]
* [[ஆனர்த்த நாடு]]
* [[அங்க அரசு]]
* [[அஸ்மகம்]]
* [[அவந்தி நாடு]]
* [[ஆய் நாடு]]
* [[இமயமலை நாடு]]
* [[சேதி நாடு]]
* [[சேர நாடு]]
* [[சோழ நாடு]]
* [[தசார்ன நாடு]]
* [[துவாரகை|துவாரகை நாடு]]
* [[காந்தார நாடு]]
* [[பரம காம்போஜ நாடு]]
* [[ஹர ஹூண நாடு]]
* [[ஹேஹேய நாடு]]
* [[காஞ்சி நாடு]]
* [[காஷ்மீர நாடு]]
* [[கலிங்க நாடு]]
* [[கரூசக நாடு]]
* [[காசி நாடு]]
* [[கேகய நாடு]]
* [[கோசல நாடு]]
* [[குரு நாடு]]
* [[குந்தி நாடு]]
* [[இலங்கை நாடு]]
* [[மத்திர நாடு]]
* [[உத்தர குரு]]
* [[மகத நாடு]]
* [[மல்ல அரசு]]
* [[மத்சய நாடு]]
* [[புலி நாடு|மூசிக நாடு]]
* [[நேபா நாடு]]
* [[நிசாத நாடு]]
* [[ஒட்டர நாடு]]
* [[பாஞ்சாலம்|பாஞ்சால நாடு]]
* [[பாண்டிய நாடு]]
* [[பர்வத நாடு]]
* [[பரத நாடு]]
* [[பிராக்ஜோதிச நாடு]]
* [[பௌண்டர நாடு]]
* [[சால்வ நாடு]]
* [[சரஸ்வதா நாடு]]
* [[சௌராட்டிர நாடு]]
* [[சௌவீர நாடு]]
* [[சிந்து நாடு]]
* [[சிங்கள நாடு]]
* [[சிவி நாடு]]
* [[சோனித நாடு]]
* [[சூத்திர நாடு]]
* [[சுக்மா நாடு]]
* [[சூரசேனம்]]
* [[திரிகர்த்த நாடு]]
* [[உத்கல நாடு]]
* [[விதர்ப்ப நாடு]]
* [[வங்க நாடு]]
* [[வத்ச நாடு]]
* [[யௌதேய நாடு]]
| list2 = இன மக்கள்
* [[சாக்கியர்|சாக்கியர்கள்]]
* [[கிராதர்கள்]]
* [[காம்போஜர்கள்]]
* [[கசர்கள்]]
* [[மிலேச்சர்கள்]]
* [[சகர்கள், மகாபாரதம்|சகர்கள்]]
* [[யவனர்கள், மகாபாரதம்|யவனர்கள்]]
* [[ஹூனப் பேரரசு|ஹூணர்கள்]]
* [[சீனர்கள், மகாபாரதம்|சீனர்கள்]]
* [[பாக்லீகர்கள்]]
* [[பாரதர்கள்]]
* ஆந்திரர்கள்
* திராவிடர்கள்
* சிங்களர்கள்
* [[அரம்பையர்கள்]]
* [[யட்ச நாடு|யட்சர்கள்]]
* [[யட்சினி|யட்சினிகள்]]
* [[கிண்ணர நாடு|கிண்ணரர்கள்]]
* [[கிம்புருசர்கள்]]
* [[வித்தியாதரர்கள்]]
* [[வாலகில்யர்கள்]]
* [[பூத கணங்கள்|பூதங்கள்]]
* [[அசுரர், இந்து மதம்|அசுரர்கள்]]
* [[அரக்கர்|அரக்கர்கள்]]
* [[பிசாசர்கள்]]
* [[தானவர்கள்]]
* [[தைத்தியர்கள்]]
* [[நாகர்கள், புராணம்|நாக்ர்கள்]]
* [[கருடன், புராணம்|கருடர்கள்]]
* [[சித்தர்|சித்தர்கள்]]
* [[பிசாசர்கள்]]
* [[தேவர்கள்]]
* [[வானரம்|வானரர்கள்]]
}}<noinclude>
{{collapsible option}}
</noinclude>



[[பகுப்பு:மகாபாரத கால மக்களும் நாடுகளும்|*]]
[[பகுப்பு:மகாபாரத கால மக்களும் நாடுகளும்|*]]

12:41, 1 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

மகாபாரத இதிகாச கால நாடுகள்

நிசாத நாடு அல்லது நிடத நாடு (Nishada kingdom) (niśāda), மகாபாரத காவியம் கூறும் பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும்.[1] நிசாத இன மக்களின் பெயராலேயே, நிசாத நாடு அழைக்கப்படுகிறது. நிசாத இன மக்களில் புகழ் பெற்றவர்கள் வால்மீகி, குகன், நளன் மற்றும் ஏகலைவன் ஆவார்.

நிசாத இன மக்கள் காடுகளிலும்; மலைகளிலும் விலங்குகளை வேட்டையாடியும், ஆறுகளில் மீன் பிடித்தும், படகோட்டியும் வாழ்க்கை நடத்துபவர்கள்.[2] இவர்கள் விந்திய மலைத்தொடர்களில் வாழ்பவர்கள் என்று மகாபாரதம் கூறுகிறது. (மகாபாரதம் 12: 58).

நிசாத நாட்டின் அமைவிடம்

நிசாத நாடு ஆரவல்லி மலைத்தொடரில், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டது. ஏகலைவன் ஆட்சி செய்த நிசாத நாடு மட்டுமின்றி, மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் பல நிசாத இன மக்களின் நாடுகள் இருந்தது. நிசாத இன ஏகலைவன், மத்திய இந்தியாவின் பில் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் என மகாபாரதம் கூறுகிறது.[3]

இராமாயணக் குறிப்புகள்

இராமாயண காவியம் இயற்றிய வால்மீகி முனிவர் நிசாத இன வேடுவர் ஆவார். பதினான்கு ஆண்டுகள் காடுறை வாழ்வு மேற்கொள்வதற்காக இலக்குவனுடன் சென்ற இராமரையும், சீதையையும், கங்கை ஆற்றை கடக்க படகோட்டி உதவிய குகன், நிசாத இன மன்னர் ஆவார்.[4]

மகாபாரதக் குறிப்புகள்

நள - தமயந்தியின் பஹாரி ஓவியம், 18-ஆம் நூற்றாண்டு
நளனை மணந்த தமயந்தி விதர்ப்ப நாட்டை விட்டு, நளனின் நிடத நாட்டிற்குச் செல்லுதல்

மகாபாரதம் கூறும் நிசாதர்கள் அல்லது சபரர்கள் காட்டில் வேட்டையாடுபவர்கள் எனக் குறித்துள்ளது.[5] நிசாத இனத்தவர்கள் காடுகளையும், மலைகளையும், ஆறுகளையும் ஆளும் மக்கள் என்றும், நிசாதர்களின் மன்னரை வேணன் என்றும் அழைப்பர். (மகாபாரதம் 12: 58 & 12: 328). விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தியை மணந்த நிசாத நாடு அல்லது நிடத நாட்டின் மன்னர் நளன் ஆவார். (மகாபாரதம் 3: 61)

குரு நாட்டின் மன்னர் சந்தனுவின் இரண்டாம் மனைவி சத்தியவதி, கங்கை ஆற்றில் படகோட்டும் நிசாத இன மீனவப் பெண் ஆவார்.

துரோணரை மனதளவில் குருவாகக் கொண்டு, அவரது உருவச்சிலை அமைத்து வழிபட்டு, வில் வித்தையை முழுவதுமாக கற்றவர் ஏகலைவன். கை கட்டை விரலை குரு தட்சணையாக கேட்ட துரோணருக்கு, ஏகலைவன் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தவர். (மகாபாரதம், ஆதி பருவம், அத்தியாயம் )

நிசாதர்களின் புகழ்பெற்ற மன்னர் ஏகலைவன், துவாரகை நகரை முற்றுக்கையிட்ட போது, கிருட்டிணால் போரில் கொல்லப்பட்டார்.[6]

நளன் - தமயந்தி வரலாறு

நிசாதர்களின் புகழ் பெற்ற மன்னர் வீரசேனரின் மகன் நளன், விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தியை மணந்து, சூதாட்டத்தில் நாட்டை இழந்து, மனைவியை துறந்து, பின்னர் இருவரும் ஒன்றிணையும் வரலாற்றை, வன பருவத்தின் போது முனிவர்களால் தருமருக்கு கூறப்படுகிறது. (மகாபாரதம், வன பருவம், அத்தியாயம் 50 & 61)

குருச்சேத்திரப் போரில் நிசாதர்கள்

குருச்சேத்திரப் போரில் நிசாத இனப் படைகள், பாண்டவர் அணியிலும், கௌரவர் அணியில் இணைந்து போரிட்டனர்.

பாண்டவர் அணியில்

தென்னிந்திய நிசாதர்கள், பாண்டவர் அணியில் இணைந்து போரிட்டனர். (மகாபாரதம், துரோண பருவம், அத்தியாயம், 6: 50 & 8: 49)

கௌரவர் அணியில்

கௌரவர் அணியின் சார்பாக போரிட்ட வட இந்திய நிசாத நாட்டு இளவரசன் கேதுமது என்பவனை, கலிங்கர்களுடன், வீமன் தனது கதாயுதத்தால் அடித்துக் கொன்றான். (மகாபாரதம் 6: 54) குருச்சேத்திரப் போரில், நிசாத நாட்டுப் படைகள் பல முறை போரிட்டுள்ளது. (6: 118), (7: 44), (8: 17, 20, 22, 60, 70).

இதனையும் காண்க

உசாத்துணை

மேற்கோள்கள்

  1. Gopal, Ram (1983). India of Vedic Kalpasūtras (2 ). Motilal Banarsidass. பக். 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780895816351. https://books.google.co.in/books?id=PjcpAAAAYAAJ&q=Nishada+Kingdom&dq=Nishada+Kingdom&hl=en&sa=X&ved=0ahUKEwionaHKorTLAhUPcI4KHbegC-gQ6AEIOTAF. பார்த்த நாள்: 9 March 2016. 
  2. Anand; Sekhar, Rukmini (2000). Vyasa and Vighneshwara. Katha. பக். 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788187649076. https://books.google.co.in/books?id=AV1hRu-gj1QC&pg=PA31&dq=Nishada+Kingdom+eklavya&hl=en&sa=X&ved=0ahUKEwia6JfNp7TLAhUCWY4KHQqfCk8Q6AEIHTAA#v=onepage&q=Nishada%20Kingdom%20eklavya&f=false. பார்த்த நாள்: 9 March 2016. 
  3. Robin D. Tribhuwan (2003). Fairs and Festivals of Indian Tribes. Discovery Publishing House. பக். 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171416400. https://books.google.co.in/books?id=JC-014hKeKAC&pg=PA233&dq=bhil+eklavya&hl=en&sa=X&ved=0ahUKEwiRxourubTLAhULUY4KHfcEAhEQ6AEILDAE#v=onepage&q=bhil%20eklavya&f=false. பார்த்த நாள்: 9 March 2016. 
  4. Ramayana by Valmiki, Gita Press publication, Gorakhpur, India
  5. The Cultural Process in India by Irawati Karve, Vol. 51, Oct., 1951 (Oct., 1951), pp. 135-138
  6. Manish Kumar. Eklavya. Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789351861447. https://books.google.co.in/books?id=eHBwBgAAQBAJ&pg=PT1&dq=krishna+killed+eklavya&hl=en&sa=X&ved=0ahUKEwj3_Zm0sbTLAhUTC44KHbCpA-IQ6AEIGzAA#v=onepage&q=krishna%20killed%20eklavya&f=false. 



Initial visibility: currently defaults to autocollapse

To set this template's initial visibility, the |state= parameter may be used:

  • |state=collapsed: {{நிசாத நாடு|state=collapsed}} to show the template collapsed, i.e., hidden apart from its title bar
  • |state=expanded: {{நிசாத நாடு|state=expanded}} to show the template expanded, i.e., fully visible
  • |state=autocollapse: {{நிசாத நாடு|state=autocollapse}}
    • shows the template collapsed to the title bar if there is a {{navbar}}, a {{sidebar}}, or some other table on the page with the collapsible attribute
    • shows the template in its expanded state if there are no other collapsible items on the page

If the |state= parameter in the template on this page is not set, the template's initial visibility is taken from the |default= parameter in the Collapsible option template. For the template on this page, that currently evaluates to autocollapse.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாத_நாடு&oldid=2098609" இலிருந்து மீள்விக்கப்பட்டது