குடுமியான்மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +[http://imohandoss.blogspot.com/2008/01/blog-post_23.html குடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம்]
சி Robot: Changing பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்
வரிசை 30: வரிசை 30:


[[பகுப்பு:சுற்றுலா தலங்கள்]]
[[பகுப்பு:சுற்றுலா தலங்கள்]]
[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

15:40, 31 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

குடுமியான்மலை, புதுக்கோட்டையிலிருந்து ( தமிழ் நாடு, இந்தியா) 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். தமிழ் நாடு வேளாண் பலகலைக்கழகத்தின் பண்ணையும் (அண்ணா பண்ணை, குடுமியான் மலையில் இருந்த ஐந்து கிலோமீட்டர்கள்) இங்கு அமைந்துள்ளது.

வரலாறு

படிமம்:Kudumiamalai gopuram.gif
குடுமியான்மலை கோபுரம்

தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில் குடுமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில் வளாகம் அமைந்துள்ளது.

குன்றின் மேலும் அதன் அருகாமையிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும் கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன் கோயிலும் அடங்கும். குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள் இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை அகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.

இந்தக் கல்வெட்டுகள், குடிமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதி செய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும் பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடுமியான்மலை கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டு செல்கின்றன. மேலக் கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்த சிவாலயம் சைவ சமய மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இங்குள்ள சிற்பங்களில் ஒன்றில், சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடுமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.

ஏகாதிபத்திய சோழப் பேரரசின் தொடக்க காலம் முதல் தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தொடக்க கால சோழர் கல்வெட்டுகள் (கி.பி ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) மேலக்கோயிலிலோ இரண்டாம் பிரகாரத்தின் சுவர்களிலோ காணப்படுகின்றனவே தவிர முதன்மைக் கோயிலில் (Main shrine) காண இயலவில்லை. இதனால், இக்கோயில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (remodelled) என்று அறியப்படுகிறது. கட்டிடக்கலை பாணியை கருத்தில் கொண்டு பார்க்கையில், முதலாம் மாரவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தான் இந்த மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

கி.பி 1215 முதல் 1265 வரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம், மறு சீரமைப்பு பணிகள் நடை பெற்றன. பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன. இந்தப்பணியில் கோனாட்டை சேர்ந்த நாடுகளும் (வட்டார ஊர்கள் ஒன்றிணைந்த அமைப்பு) நகரங்களும் (வணிகருகளின் அமைப்பு) ஊர்களும் படைப்பற்றுகளும் (Cantonments) பங்கு கொண்டன. ஈகை உள்ளம் கொண்ட தனி நபர்களும் உதவினர். 24 adam-s (one league) கொண்ட ஒவ்வொருவருக்கும் வரிப்பணம் விதிக்கப்பட்டு கோயில் பணிக்காகத் திரட்டித் தரப்பட்டது. பணம் தவிர்த்த இன்ன பிற பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

உமையாள்வி நாச்சி என்ற தாசிப் பெண்ணும் இந்த மறு சீரமைப்புப் பணிகளுக்கு கணிசமாக உதவினார். 73,300 தங்க நாணயங்கள் விலை கொடுத்து கோயிலின் சில நிலப்பகுதிகளை வாங்கிய துர்கை ஆண்டாரின் மகள் தான் உமையாள்வி நாச்சி. உமையாள்வி நாச்சி, குகைக்கோயிலை அடுத்துள்ள அம்மன் சந்நிதியைக் கட்டி, அதில் மலையமங்கை (அல்லது சௌந்தர நாயகி) சிலையை பிரதிஷ்டை செய்தாள். மேலும் விசலூர், பின்னங்குடி, மருங்கூர் (மருங்குபட்டி), காரையூர் மற்றும் மேலமநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து நிலங்கள், தோட்டங்கள், கிணறுகள் வாங்கப்பட்டு கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில், குடிமியான்மலை பகுதி ஊர்கள் காங்கேயராயர்களாலும் வானதரையர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தன ( During this period the nadu to which Kudumiyamalai belonged seems to have been administered by Gangaiyaraya-s (காங்கேயராயர்) and Vanadarayan-s (வானதரையர்) of Bana chieftains as vassals of the Pandya kings).

சென்றடையும் வழி

புதுக்கோட்டை - கொடும்பாளூர் - மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து ஏறக்குறைய 20 கி.மீ தொலைவில் குடிமியான்மலை அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருந்து விலகி மலை அடிவாரம் நோக்கி சென்றால் கோயில் வளாகத்தை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு.

நன்றி

Pudukkottai.org - இக்கட்டுரையின் ஆங்கில மூலம் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்த அனுமதி


வெளி இணைப்புகள்

குடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=குடுமியான்மலை&oldid=207926" இலிருந்து மீள்விக்கப்பட்டது