ரென் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 96: வரிசை 96:
படிமம்:4-й логотип РЕН ТВ.svg|ஆகஸ்ட் 6, 2007 முதல் பிப்ரவரி 7, 2010 வரை பயன்படுத்திய நான்காவது தொலைக்காட்சிச் சின்னம் "ரென் டிவி".
படிமம்:4-й логотип РЕН ТВ.svg|ஆகஸ்ட் 6, 2007 முதல் பிப்ரவரி 7, 2010 வரை பயன்படுத்திய நான்காவது தொலைக்காட்சிச் சின்னம் "ரென் டிவி".
படிமம்:5-й логотип РЕН ТВ.svg|பிப்ரவரி 8, 2010 முதல் ஆகஸ்ட் 14, 2011 வரை பயன்படுத்திய ஐந்தாவது தொலைக்காட்சிச் சின்னம் "ரென் டிவி".
படிமம்:5-й логотип РЕН ТВ.svg|பிப்ரவரி 8, 2010 முதல் ஆகஸ்ட் 14, 2011 வரை பயன்படுத்திய ஐந்தாவது தொலைக்காட்சிச் சின்னம் "ரென் டிவி".
படிமம்:6-REN TV logo 2015.png|பிப்ரவரி 8, 2010 முதல் ஆகஸ்ட் 14, 2011 வரை பயன்படுத்திய ஐந்தாவது தொலைக்காட்சிச் சின்னம் "ரென் டிவி".


</gallery>
</gallery>

04:00, 23 மே 2016 இல் நிலவும் திருத்தம்

ரென் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 1 ஜனவரி 1997
உரிமையாளர் 100% — நாட்டு ஊடகக் குழு
பட வடிவம் 16:9 (576i, SDTV)
பார்வையாளர் பங்கு 5.3% (9 மே 2011, TNS Russia)
நாடு உருசியா
மொழி உருசிய மொழி
ஒளிபரப்பாகும் நாடுகள் சுதந்திர அரசுகளின் பொதுநலவாயம்
தலைமையகம் 17/1 Zubovsky Boulevard, மாஸ்கோ, உருசியா
வலைத்தளம் ren-tv.com
கிடைக்ககூடிய தன்மை
புவிக்குரிய
Russian and CIS-wide analog and digital broadcast VHF Channel 9
செயற்கைக்கோள்
NTV Plus Various
மின் இணைப்பான்
Natsionalnye Kabelnye Seti Various

ரென் தொலைக்காட்சி (REN TV, உருசிய மொழியில்: РЕН ТВ) உருசியாவில் இருக்கும் மிகப்பெரிய தனியார் நடுவண் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒன்றாகும். இரினா லெஸ்னெவ்ஸ்கயா, அவரின் மகன் டிமிட்ரி லெஸ்னெவ்ஸ்கி ஆகியோரால் நிறுவப்பட்ட ரென் தொலைக்காட்சி மற்ற உருசியாத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு நிகழ்ச்சிகளை தயாரித்துத் தரும் நிறுவனமாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சிகள் 1 ஜனவரி 1997 முதல் ஒளிபரப்பாகி வருகின்றன. இளம், நடு அகவையில் இருக்கும் நகரத் தொழிலாளர் தான் இத்தொலைக்காட்சியின் இலக்கு பார்வையாளர். இந்த அலைவரிசை குறிப்பாக 18 முதல் 45 அகவைக்குட்பட்ட பார்வையாளர்களை மையமாக வைத்து இயங்கினாலும், இலக்கு பார்வையாளர்களின் முழுக் குடும்பத்தையும் மனதில் கொண்டு இன்னும் பரந்துபட்ட வகை மக்களுக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது. உருசியத் தொலைக்காட்சி அகாதமி வழங்கும் TEFI விருதுகள் பதின்மூன்றினை இத்தொலைக்காட்சி வென்றுள்ளது.

ரென் தொலைக்காட்சியின் வலைப்பின்னல் உருசியா, சுதந்திர அரசுகளின் காமன்வெல்த்தில் (CIS) இருக்கும் 406 சுதந்திரமான ஒளிபரப்பு நிறுவனங்களின் தொகுப்பு ஆகும். மேற்கில் கலினின்கிராட் தெடங்கி கிழக்கில் யுஸ்னோ-ஸகாலின்ஸ்க் வரையிலும் உருசியாவில் 718 நகரங்கள், பெருநகரங்களில் ரென் தொலைக்காட்சியின் அலைவரிசைகள் கிடைக்க பெறுகின்றன. 113.5 மில்லியன் பார்வையாளர் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது (அதிகாரப்பூர்வமாய் 120 மில்லியன் பார்வையாளர்)[1]. இதில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் மாஸ்கோ நகரம், மாஸ்கோ ஓப்ளாஸ்டில் (மாஸ்கோ பிராந்தியம்) வசிப்பவராவர். CIS, பால்டிக் அரசுகளில் ரென் தொலைக்காட்சி 10 ஒளிபரப்பு இணைப்புகளுடனும் 19 கேபிள் ஆபரேட்டர்களுடனும் இணைந்து வேலை செய்கிறது; 181 நகரங்கள் ரென் தொலைக்காட்சியின் அலைவரிசையைப் பெற முடியும்.

ரென் தொலைக்காட்சி ஒன்று தான் ரஷ்யாவில் “சுதந்திர ஊடகத்தின் இறுதி பாதுகாவலர்களில் ஒன்றாய்” எஞ்சியிருப்பதாக பல அரசியல் எதிர்க்கட்சிக் குழுக்களும் கருதுகின்றன. இந்த அலைவரிசை மட்டும் தான் சோசலிஸ்ட் மற்றும் தாராளவாத குழுக்களின் கூட்டங்களை உடனுக்குடன் ஒளிபரப்புகிற, அத்துடன் பிரதானமான எதிர்க்கட்சித் தலைவர்களிடம் இருந்து பேட்டிகளை ஒளிபரப்புகிற ஒரே அலைவரிசையாக இருக்கிறது.

உரிமைத்துவம்

ஜூலை 1, 2005 வரை இத்தொலைக்காட்சி அதன் நிறுவனரான இரினா லெஸ்னெவ்ஸ்கயா மற்றும் அவரின் மகன் (30%) ஆகியோருக்கும் மற்றும் அனடோலி சுபாய்ஸ் தலைமையிலான யுனிஃபைடு எனர்ஜி சிஸ்டம்ஸ் என்னும் ரஷ்ய நிறுவனத்திற்கும் உரிமையானதாக இருந்தது. 2005 ஆம் ஆண்டில் பெர்டெல்ஸ்மேனின் RTL ரென் தொலைக்காட்சியில் 30% ஐ வாங்கியது, உருக்கு தயாரிப்பு நிறுவனமான செவர்ஸ்டல் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சர்கட்னெஃப்டிகாஸ் (Surgutneftegaz) இரண்டும் தலா 35% பங்குகளை வாங்கின.[2]

டிசம்பர் 18, 2006 அன்று ரென் தொலைக்காட்சியின் இயக்குநர் குழுத் தலைவர் பதவி செவர்ஸ்டல் நிறுவனத்தின் அலெக்ஸி ஜெர்மனோவிச்சிடம் இருந்து லியுபோவ் சோவர்ஷயேவாவிடம் போனது. இவர் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வட-மேற்கு பெடரல் பிராந்தியத்திற்கான[3] முன்னாள் துணைவராகவும், செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் ரஷ்யா வங்கியின் துணைநிறுவனமான ABRos இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இயக்குநர் குழுத் தலைவராகவும் இருந்தவர் ஆவார். ABRos ரென் தொலைக்காட்சியில் ஒரு கணிசமான பங்குகளை வாங்கியிருந்தது.[4][4] இந்த வங்கியின் தலைவர் யுரி கோவால்சக் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பர் ஆவார், இவர் தனது சொந்த ஊர் சானலான டிஆர்கே பீட்டர்ஸ்பர்க் தொலைக்காட்சி சானலில் 38% பங்குரிமை கொண்டிருந்தார். அத்துடன் அந்த சானலில் இன்னும் அதிக பங்குகளை அவர் வாங்கவிருந்ததாக ஆய்வாளர்கள் டிசம்பர் 19 2006 அன்று வெளிவந்த கோமெர்சண்ட் நாளிதழில் தெரிவித்திருந்தனர்.[5] ரென் தொலைக்காட்சியும், டிஆர்கே பீட்டர்ஸ்பர்க் அலைவரிசையும் ஒரே ஊடக நிறுவனமாக ஆகவிருக்கிறது என்றும், ஆயினும் அவை தனித்தனியாகத் தொடர்ந்து செயல்படும் என்றும், துறை ஆய்வாளர்கள் அந்த நாளிதழில் தெரிவித்திருந்தனர்.

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சர்கட்னெஃப்டிகாஸ் சானலில் இருந்த தனது பங்குகளை ABRos நிறுவனத்திற்கு விற்று விட்டதாகவும், இதன் மூலம் அந்த நிறுவனம் இந்த ஊடக நிறுவனத்தில் கொண்டிருந்த பங்குரிமை 45 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாய் அதிகரித்திருப்பதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன. ’18 மாத காலங்கள் ரஷ்ய தொலைக்காட்சி சந்தையில் இருந்தன் பின் பெர்டெல்ஸ்மேன் தனது பங்குகளை விற்று விடும் ஆர்வம் கொண்டதற்கான அறிகுறிகள் உள்ளதாக’ அந்த ஒளிபரப்பு நிறுவனங்கள் குறித்த செய்திகளுக்கான இணைய தளம் மேலும் தெரிவித்தது.[6]

ரென் தொலைக்காட்சி இணைய தளத்தின் கூற்றின் படி, சானலில் RTL 30% பங்குரிமையும் மற்றும் நேஷனல் மீடியா குரூப் (NMG) 68% பங்குரிமையும் கொண்டுள்ளன.

செய்தி எல்லை

2005 ஆம் ஆண்டு நவம்பரில் ரென் தொலைக்காட்சி, தனது தினசரி 24 செய்தித் தொகுப்பு நிகழ்ச்சியின் தொகுப்பாளராய் இருந்த ஓல்கா ரோமனோவாவை வேலையில் இருந்து நீக்கியது.[7] இந்தச் சம்பவம் மிகுந்த பரபரப்பாய் பேசப்பட்டது, ஆயினும் அவரது சுதந்திரமான செய்தி வழங்கும் முறையையே மரியானா மக்ஸிமோவ்ஸ்கயாவும் தொடர்கிறார். இவர் முன்னர் விளாடிமிர் குஸின்ஸ்கியின் என்டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பவராகவும் இருந்தவர். 2008 அக்டோபர் நிலவரப்படி, ரென் தொலைக்காட்சியின் செய்தி ஒளிபரப்புகளுக்கான பொறுப்பாளராக இன்னும் மக்ஸிமோவ்ஸ்கயா தான் தொடர்ந்து கொண்டிருந்தார். அவரது செயல்பாடுகளால், ரஷ்யாவில் தாராளவாத கண்ணோட்டங்களுடன் தொடரும் ஒரே பெரிய தொலைக்காட்சி அலைவரிசையாக ரென் தொலைக்காட்சி தொடர்ந்து இருக்கிறது. அரசின் தணிக்கைமுறை பிரச்சினையை விவாதிப்பதோடு எதிர்க்கட்சி தலைவர்களின் (மற்ற ரஷ்யா கட்சி உட்பட) நேர்காணல்களையும் கூட இத்தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.

தான் சானலை விட்டு வெளியேறும் முன்பாக, ரோமனோவா ரேடியோ ஃப்ரீ யூரோப் வானொலியில் நவம்பர் 25, 2005 அன்று கூறும்போது, சானலின் தலைவரான அலெக்ஸாண்டர் ஓர்ட்ஸோனிகிட்ஸெ இரண்டு சமீபத்திய செய்திகளை அரசியல் காரணங்களுக்காக தடுத்து விட்டதாக தான் உணர்ந்ததாய் தெரிவித்தார். தணிக்கை செய்த ஒரு செய்தி பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி இவனோவின் மகன் சம்பந்தப்பட்ட சாலை விபத்து குறித்ததாகும், இந்த விபத்தில் ஒரு பெண் இறந்து விட்டிருந்தார். எகோ மோஸ்க்வி வானொலியில் 23 நவம்பர் அன்று ரோமனோவா இந்த தணிக்கை விஷயம் பற்றி குற்றம் சாட்டியிருந்தார் - அடுத்த நாள் அவரை சானலுக்குள் நுழைய வேண்டாம் என்று ஓர்ட்ஸோனிகிட்ஸெ தடை செய்து விட்டார்.[8] இரண்டாவது தடை செய்யப்பட்ட செய்தி, மத்திய மாஸ்கோவில் சுராப் செரிடெலி 15 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சர்ச் மற்றும் கடிகார கோபுரம் கட்டுவது குறித்த செய்தியாகும் என சர்வதேச பத்திரிகை நிறுவனம் தனது 2005 அறிக்கையில் தெரிவித்தது.[9]

எகோ ஆஃப் மாஸ்கோ வானொலிக்கு ஓர்ட்ஸோனிகிட்ஸெ அளித்த ஒரு பேட்டியில், ரென் தொலைக்காட்சியின் செய்திகள் குறைவான தரமதிப்பீடுகளைப் பெற்றதால் இரவு செய்தி ஒளிபரப்புகளில் பிற செய்தித் தொகுப்பாளர்களையும் முயற்சித்துப் பார்க்க நிர்வாகம் முடிவு செய்திருந்ததாக தெரிவித்தார். “தவிரவும் ஒரு நபரே வாரத்தின் எல்லா நாளும் இரவு செய்தி ஒளிபரப்பை தொகுப்பது என்பது கடினமானது. அவர்கள் நோயுற்றது போல் உணரக் கூடும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.[10]

ரோமனோவாவுக்கு ஆதரவாக, அவரது சக செய்தியாளர்கள் பலரும் 2005 டிசம்பரில் சானலை விட்டு விலகினர். செய்திப் பிரிவு தலைவரும் சானல் துணை இயக்குநருமான யெலனா ஃபெடரோவா ரேடியோ லிபர்டி ரஷ்யன் சர்வீஸ்க்கு (ரேடியோ ஸ்வோபோடா ) கூறுகையில் தான் ராஜினாமா செய்த காரணத்தை விளக்கினார்.[11] "நிகழ்ச்சி உள்ளடக்கம் சம்பந்தமான ஏராளமான விஷயங்கள் என்னைக் கடந்து சென்றிருக்கின்றன. ஒரு செய்தியாளராக என்னால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை, அத்துடன் ஒன்றி வாழ முடியவில்லை” என்று 5 டிசம்பர் 2005 அன்று அரசு செய்தி நிறுவனமான RIA நோவோஸ்டி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் கூறினார். படத்தொகுப்பாளர் ஓல்கா ஷோரினா மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் டட்யானா கோலோகோவா ஆகியோரும் சானலை விட்டு விலகத் திட்டமிட்டிருந்தனர்; தங்களது தொழில்முறைக் கடமைகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லாமல் ஆகியிருப்பதாய் அவர்கள் தெரிவித்தனர்.[12]

வழக்கமான நிகழ்ச்சிகள்

பல்வேறு உயர் ரக திரைப்படங்களைத் தயாரித்திருக்கும் இந்த நிறுவனம் (2003 ஆம் ஆண்டு தயாரித்த தங்க சிங்கம் விருது வென்ற வோஸ்வ்ராஸ்செனியே என்னும் திரைப்படம் இதில் குறிப்பிடத்தக்கது) ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனமாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஏராளமான தொலைக்காட்சித் தொடர்கள் உட்பட இந்த வலைப்பின்னலின் வழக்கமான நிகழ்ச்சிகள் அநேகத்தை இது தயாரித்துத் தருகிறது. அத்தொடர்கள்:

  • சோல்ஜர்ஸ் (ரஷ்யமொழியில்: Солдаты) - ரஷ்ய ராணுவத்தில் தங்களது கட்டாய ராணுவச் சேவை[13] காலத்தில் சேர்க்கப்படும் இளைஞர்களைப் பற்றியது. as of 2009 வரை 16 பருவங்கள்.
  • ஸ்டூடண்ட்ஸ் (ரஷ்யமொழியில்: Студенты) - மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பல்வேறு மாணவர்களின் சமூக வாழ்க்கைகளைப் படம்பிடிப்பது.[14] (2005-2006)
  • டூரிஸ்ட்ஸ் (ரஷ்யமொழியில்: Туристы) - துருக்கியில் கடற்கரை ஓய்விடங்களில் பல்வேறு ஜோடிகளைப் பேட்டி காண்பது. (2005)

விலைக்கு வாங்கிய நிகழ்ச்சிகளையும் ரென் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. அவற்றில் சில பின்வருமாறு:

  • தி 4400 – நவம்பர் 26 2006 முதல்
  • ப்ரிஸன் பிரேக் – செப்டம்பர் 4 2006 முதல்
  • சூப்பர்நேச்சுரல் – செப்டம்பர் 2006 முதல்
  • மை நேம் இஸ் யர்ல் – 2006 முதல்
  • ஃபார்முலா-1 மோட்டார் ரேஸிங் – 2006 முதல்
  • ஃபேமிலி கை – "தி கிரிஃபின்ஸ் " என
  • தி சிம்ப்சன்ஸ்
  • பிரண்ட்ஸ்
  • தி எக்ஸ்-ஃபைல்ஸ்
  • M*A*S*H
  • ஜெடிக்ஸ்டிஸ்னி வழங்கும் குழந்தைகளுக்கான சாகச நிகழ்ச்சி

வாங்கிய/உரிமம் பெற்ற தற்போதைய நிகழ்ச்சிகள்:

  • டாப் கியர் ரஷ்யா – பிப்ரவரி 22, 2009 முதல்


சின்னம்

ரென் தொலைக்காட்சி எட்டுச்சின்னங்களால் மாற்றப்பட்டது. தற்போதைய சின்னம், வரிசையில் எட்டாவதாக இருப்பது.

குறிப்புதவிகள்

  1. ஊடக நிறுவனமான ரென் தொலைக்காட்சி (உருசிய மொழியில்)
  2. உலகளவிலான செயல்பாடுகள், RTL நிறுவன இணையதளம். 2007-07-28 அன்று பெறப்பட்டது.
  3. "வடமேற்கு ரஷ்யாவில் 2006-10-05 அன்று நியமனமான புதிய தலைவர்", Health care , 5 அக்டோபர் 2006 (ரஷ்ய வடமேற்கில் இருந்தான சுற்றிதழ், ஸ்வீடன் சுகாதாரப் பராமரிப்பு சமுதாயத்தின் கிழக்கு ஐரோப்பிய குழு), ப. 4. 2007-07-28 அன்று பெறப்பட்டது. ஸோவர்ஷேவாவின் முந்தைய பொறுப்புக்கான நகரங்கள்.
  4. 4.0 4.1 (உருசிய மொழியில்) Масс-медиа: Друг президента стал акционером "Рен ТВ" (Mass-media: drug prezidenta stal aktsionerom 'Ren TV', "மாஸ்-மீடியா: ஜனாதிபதியின் நண்பர் ரென் தொலைக்காட்சியின் பங்குதாரர் ஆகிறார்", Lenta.ru (ராம்ப்லர் மீடியா குழுமம்) 19 டிசம்பர் 2006.
  5. ஜனாதிபதியின் நண்பர் ரென் தொலைக்காட்சியை வாங்குகிறார், கோமெர்சண்ட்-நாளிதழ், 19 டிசம்பர் 2006. 2007-07-27 அன்று பெறப்பட்டது.
  6. Abros ரென் தொலைக்காட்சியில் பங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது, broadbandtvnews.com, கேம்பிரிட்ஜ், யுகே, 20 ஏப்ரல் 2007. 2007-07-28 அன்று பெறப்பட்டது.
  7. (செருமன் மொழி) Russischer Sender feuert kritische Journalistin ("ரஷ்ய சானல் விமர்சனரீதியான செய்தியாளரை நீக்கி விட்டது"), NDR ஃபெர்ன்ஸெஹன், 7 டிசம்பர் 2005.
  8. ஜூலி எ.கார்வின், ரஷ்யா: முக்கிய செய்தியாளர் செய்தியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க போராடுகிறார், ரேடியோ ஃப்ரீ யூரோப், 29 நவம்பர் 2005. 2007-07-27 அன்று பெறப்பட்டது.
  9. 2005 உலக பத்திரிகை சுதந்திர திறனாய்வு: ரஷ்யா, சர்வதேச பத்திரிகை நிறுவனம், வியன்னா. 2007-07-27 அன்று பெறப்பட்டது.
  10. ரென் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளரான ரோமனோவா நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடரவிருக்கிறார், RIA நோவோஸ்தி, மாஸ்கோ, 25 நவம்பர் 2005. 2007-07-27 அன்று பெறப்பட்டது.
  11. நேர்காணல்: ரென் தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பாளர் தனது ராஜினாமாவுக்கான காரணத்தை விளக்குகிறார், ரேடியோ ஃப்ரீ யூரோப், 6 டிசம்பர் 2005.
  12. ரென் தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பாளர் ராஜினாமா செய்கிறார், RIA நோவோஸ்தி, மாஸ்கோ, 5 டிசம்பர் 2005. 2007-07-27 அன்று பெறப்பட்டது.
  13. Soldaty Soldiers , அதிகாரப்பூர்வ தளம்.
  14. Studenty, அதிகாரப்பூர்வ தளம்.

புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரென்_தொலைக்காட்சி&oldid=2066701" இலிருந்து மீள்விக்கப்பட்டது