பயனர் பேச்சு:பாலச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, Replaced: விக்கிபீடியா → விக்கிப்பீடியா (18) AWB
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 99: வரிசை 99:


::இருமாத இடைவெளியின் பின்னர் நீங்கள் மீண்டும் மும்முரமாகப் பங்களிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து சளைக்காமல் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --[[பயனர்:கோபி|கோபி]] 17:10, 10 செப்டெம்பர் 2007 (UTC)
::இருமாத இடைவெளியின் பின்னர் நீங்கள் மீண்டும் மும்முரமாகப் பங்களிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து சளைக்காமல் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --[[பயனர்:கோபி|கோபி]] 17:10, 10 செப்டெம்பர் 2007 (UTC)

== காப்புரிமை ==

உங்களது திரைப்படங்களின் விளம்பரங்களையோ அல்லது படக் காட்சிகளையோ நீங்கள் விக்கிபீடியாவில் தரும் போது பொது உரிமத்தில் தருவதாக வார்புரு இட்டிருந்தீர்கள். இவற்றை நான் நியாயமான பயன்பாட்டுப் படிமங்களாக மாற்றியுள்ளேன். உங்கள் படங்கள் (விளம்பரம், படக்காட்சி, .....) காப்புரிமைச் செய்யப்பட்டவைத் தானே. அவற்றை இங்கே பொது உரிமத்தில் வழங்கினால் உங்கள் காப்புரிமைச் சார் பயன்கள் உங்களுக்கு இல்லாமல் போகலாம். பொது உரிமத்தில் தருவதாயின் காப்புரிமைகளை இரத்துச் செய்துவிட்டு இங்கே தரலாம்.;) --[[User:Trengarasu|டெரன்ஃச்]] <sup>\[[User talk:Trengarasu|பேச்சு]]</sup> 04:28, 26 ஜனவரி 2008 (UTC)

04:28, 26 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள், பாலச்சந்திரன்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Umapathy 18:24, 5 பெப்ரவரி 2007 (UTC)

பாலச்சந்திரன், விக்கிப்பீடியாவுக்கு நானும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அண்ணை றைற் கே. எஸ். பாலச்சந்திரனா?--Kanags 07:15, 6 பெப்ரவரி 2007 (UTC)

ஆமாம் அதே கேள்விதான் எனக்கும்.. ??--ஜெ.மயூரேசன் 06:47, 21 பெப்ரவரி 2007 (UTC)

Kanags, மயூரேசன் நன்றி, நான் உங்களுக்கு தெரிந்த அந்த ஆள்தான் - பாலச்சந்திரன் 21, பெப்ரவரி 2007

பாலச்சந்திரன் அவர்களே உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி!--ஜெ.மயூரேசன் 06:26, 22 பெப்ரவரி 2007 (UTC)

உங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன். உங்களை போன்று துறை அனுபவம் உள்ளவர்கள் பல முக்கியத்துவம் வாய்ந்த நேரடி வரலாற்று அனுபவங்களை விக்கிப்பீடியாவில் பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி--Ravidreams 09:05, 22 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். கலைத்துறையிலான உங்கள் ஈடுபாட்டு அனுபவம் தமிழ் விக்கிக்கு மேலும் வளங்கூட்டும் என எதிர்பார்க்கிறேன். Mayooranathan 16:24, 22 பெப்ரவரி 2007 (UTC)

நல்வரவு! அனுபவம் மிக்க ஒரு கலைஞர் த.வி.விற்கு பங்களிப்தைக் கண்டு மகிழ்ச்சி. உங்கள் நிகழ்ச்சிகளின் படக்கோப்புக்கள் சில youtube கிடைக்கின்றன. உங்களின் நகைச்சுவையை மிகவும் ரசித்து பார்த்தேன். உங்களைப் பலர் அறிந்திருந்தாலும், சில குறிப்புகளை பயனர் பக்கத்தில் சேர்த்தால் நன்று. --Natkeeran 16:55, 22 பெப்ரவரி 2007 (UTC)

தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள். கோபி 18:35, 22 பெப்ரவரி 2007 (UTC)


பகுப்புகள்

பாலச்சந்திரன், பகுப்புப் பக்கத்தில் ஆட்களின் பெயரை நாம் இடத்தேவை இல்லை. எஸ்.கே.பரராஜசிங்கம் என்ற கட்டுரையை உருவாக்கி அதன் இறுதியில் [[பகுப்பு:வானொலி ஒலிபரப்பாளர்கள்]] என்று இணைத்தீர்களானால் தானாக பகுப்புப் பக்கத்தில் காட்டப்படும்--Ravidreams 14:27, 18 பெப்ரவரி 2007 (UTC)

வானொலி நடிகர்கள்

Kanags, நீங்கள் சொல்வது சரி. வானொலி நடிகர் என்பதை விட வானொலி நாடகத்துறை என்பதுதான் பொருந்தும். மாற்றலாம் - பயனர்:பாலச்சந்திரன் 22 பெப்ரவரி 2007

வானொலி நடிகர்கள் என்ற கட்டுரைத் தலைப்பை இலங்கை வானொலி நாடகத்துறை என்று மாற்றியுள்ளேன். பல பிரபலமான வானொலி ஒலிபரப்பாளர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. அப்போதைய இலங்கை வானொலி ஒரு மறக்க முடியாத அனுபவம். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--Kanags 12:07, 26 பெப்ரவரி 2007 (UTC)

படிமங்கள்

நீங்கள் பதிவேற்றும் படிமங்களுக்கு மூலமும், உரிமமும் தரவேண்டும். உங்களுடைய படங்களாக இருந்தால் {{PD-self}} என்ற வார்ப்புருவை சுருக்கம் பகுதியில் சேர்த்தால் சரி. நன்றி. --Natkeeran 17:05, 26 பெப்ரவரி 2007 (UTC)

ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறை

பாலச்சந்திரன் அவர்களுக்கு, நீங்கள் சில ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் என்ற முறையில் அத்துறையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்கு உங்களைவிட தகுதியானவர் வேறு ஒருவர் இருக்க முடியாது. ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறை என்ற பெயரில் ஒரு கட்டுரை விக்கியில் எழுதமுடியுமா? ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் என்ற பக்கத்தையும் விரிவாக்கி தனித்தனியே படங்களுக்கும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். அப்படங்களின் சில தகவல்களை (நடிகர்கள், தயாரிப்பு, ஆண்டு, பாடல்கள், இயற்றியோர், கதைச்சுருக்கம் போன்ற சில விபரங்கள்) அக்கட்டுரைகளில் தரலாம். குறுங்கட்டுரையாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் மேம்படுத்தலாம். இந்தியத் தமிழ்த் திரைப்படக் கட்டுரை ஒன்றின் மாதிரியை பின்பற்றலாம் (அவசியமில்லை). [[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]] என்ற பகுப்பில் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் தொகுப்பு உள்ளது. எ+கா: சகுந்தலை, அசோக்குமார். (இவை நான் எழுதியவை:).நன்றி.--Kanags 10:07, 5 மார்ச் 2007 (UTC)

ஈழத்துத் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை உடனடியாகவே ஆரம்பித்தமைக்கு நன்றிகள். நல்ல ஆக்கம். நாடு போற்ற வாழ்க கட்டுரையில் சிறு மாற்றங்களைச் செய்துள்ளேன். படிமம் ஒன்றாவது இணைத்தால் நன்றாக இருக்கும். போஸ்டர் அல்லது திரைப்படக் காட்சி உங்களிடம் இருந்தால் ஏற்றினால் நல்லது. நன்றி.--Kanags 07:41, 6 மார்ச் 2007 (UTC)

Kanags, படிமம் ஏற்றுவதுதான் எனக்கு சற்று சிரமமாக படுகிறது. தமிழில் வரும் வார்த்தைபிரயோகங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.--கே.எஸ்.பாலச்சந்திரன் 01:44, 7 மார்ச் 2007 (UTC)

Kanags, நாடு போற்ற வாழ்க புகைப்படம் ஏற்றியிருக்கிறேன். பாருங்கள் --கே.எஸ்.பாலச்சந்திரன் 01:54, 7 மார்ச் 2007 (UTC)

வருக!

பாலச்சந்திரன், உங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சிறு வயது முதலே எங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர் நீங்கள். தொலைக்காட்சியில் அடிக்கடி பார்க்கக்கிடைத்த உங்கள் முகம் மனதில் அப்படியே பதிந்துபோய் இருக்கிறது. வானொலி மாமா நிகழ்ச்சி நீங்களா செய்தீர்கள்? --மு.மயூரன் 20:16, 7 மார்ச் 2007 (UTC)

நன்றி, மயூரன். தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்தது சரி. ரூபவாஹினி தொலைக்காட்சியில் விஞ்ஞான கல்வி நிகழ்ச்சிகளில் மாமாவாக வந்திருக்கிறேன். நீங்களும் எனது மருமக்களில் ஒருவரா? நான் மறந்துபோனேன். --கே.எஸ்.பாலச்சந்திரன் 21:06, 7 மார்ச் 2007 (UTC)

இல்லை இல்லை. அபோது நான் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். திருக்கோணமலையில் இருந்தேன். அந்த விஞ்ஞான நிகழ்ச்சிகள் நினைவிருக்கிற்து. தொலைபேசி தொடர்பான நிகழ்ச்சி இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. பின்னர் ஒருமுறை கொழும்பு வந்திருந்தபோது இலங்கைவங்கியில் நேரில் கண்டதாய் ஞாபகம். --மு.மயூரன் 21:11, 7 மார்ச் 2007 (UTC)

உண்மைதான் மயூரன். அந்த நிகழ்ச்சியில் "தொல்லை தரும் தொலைபேசி" என்பேன். இங்கு இப்போதுதான் அது உண்மை என்று புரிகிறது. சரிதானே --கே.எஸ்.பாலச்சந்திரன் 21:20, 7 மார்ச் 2007 (UTC)

நன்றி

கனடியத் தமிழ்த் திரைப்படங்கள் இது வரை நான் கேள்விப்பட்டிராதவை. அவற்றை குறித்து நீங்களே எழுதுவது விக்கிப்பீடியா கட்டுரைகளின் மிகுந்த நம்பகத் தன்மையை கொண்டு வரும். நீங்கள் இங்கு வந்து கட்டுரை எழுதுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை எதிர்ப்பார்க்கிறேன். ஈழத் தமிழ், நாடக கட்டுரைகளை தவிர்த்து உலக அளவில் இத்துறையில் உங்கள் ஈடுப்பாட்டுக்குத் தொடர்புடைய கட்டுரைகளையும் எழுதித் தர வேண்டுகிறேன். நன்றி--Ravidreams 20:03, 10 மார்ச் 2007 (UTC)

நன்றி, இத்துறைகளில் பதிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்.--கே.எஸ்.பாலச்சந்திரன் 21:18, 10 மார்ச் 2007 (UTC)

Kanags, இயக்குனர் ஞான ராஜ்சேகரன் பற்றிய குறுங்கட்டுரையை சற்று விரிவாக்கியிருக்கிறேன். அவரது படிமத்தையும் ஏற்றி விட்டால் நன்று. --கே.எஸ்.பாலச்சந்திரன் 21:38, 15 மார்ச் 2007 (UTC)

முதற்பக்கக் கட்டுரை

பாலச்சந்திரன், முதற்பக்கக் கட்டுரை பாருங்கள் :) உங்கள் கலைப்பணி தொடர வாழ்த்துகள்--ரவி 14:44, 17 மார்ச் 2007 (UTC)

நன்றி ரவி. என் கலைப்பணியின் ஒரு அங்கமாக நான் விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பு செய்வதையும் கருதுகின்றேன். அன்புடன் --கே.எஸ்.பாலச்சந்திரன் 02:59, 18 மார்ச் 2007 (UTC)

உங்களைப் போன்றவர்கள் விக்கிக்குப் பங்களிப்பதில் எமக்குப் பெரு மகிழ்ச்சி. நன்றி--ரவி 09:08, 18 மார்ச் 2007 (UTC)

பாலச்சந்திரன், உங்கள் கலைப்பணி பல துறைகளிலும் தொடர வாழ்த்துக்கள்.--Kanags 09:22, 18 மார்ச் 2007 (UTC)

நன்றி ரவி,Kanags- அன்புடன் --கே.எஸ்.பாலச்சந்திரன் 13:17, 18 மார்ச் 2007 (UTC)

FARC

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

வருக

பாலச்சந்திரன், நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் விக்கிப்பீடியாவுக்கு வருகை தந்திருக்கும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.--Kanags 12:19, 24 ஜூன் 2007 (UTC)

இருமாத இடைவெளியின் பின்னர் நீங்கள் மீண்டும் மும்முரமாகப் பங்களிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து சளைக்காமல் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --கோபி 17:10, 10 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

காப்புரிமை

உங்களது திரைப்படங்களின் விளம்பரங்களையோ அல்லது படக் காட்சிகளையோ நீங்கள் விக்கிபீடியாவில் தரும் போது பொது உரிமத்தில் தருவதாக வார்புரு இட்டிருந்தீர்கள். இவற்றை நான் நியாயமான பயன்பாட்டுப் படிமங்களாக மாற்றியுள்ளேன். உங்கள் படங்கள் (விளம்பரம், படக்காட்சி, .....) காப்புரிமைச் செய்யப்பட்டவைத் தானே. அவற்றை இங்கே பொது உரிமத்தில் வழங்கினால் உங்கள் காப்புரிமைச் சார் பயன்கள் உங்களுக்கு இல்லாமல் போகலாம். பொது உரிமத்தில் தருவதாயின் காப்புரிமைகளை இரத்துச் செய்துவிட்டு இங்கே தரலாம்.;) --டெரன்ஃச் \பேச்சு 04:28, 26 ஜனவரி 2008 (UTC)