குருதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
[[File:Map of Vedic India.png|300px|right| குருதேசம்]]
[[File:Map of Vedic India.png|300px|right| குருதேசம்]]
'''குரு தேசம்''' [[இமயமலை|இமயமலையிலிருந்து]] தொடங்கி தெற்கு நோக்கி ஓடும் [[யமுனை]] நதியை அடுத்து சூரசேன தேசத்திற்கு [[வடக்கு|வடக்கிலும்]], [[பாஹ்லிகதேசம்|பாஹ்லிக தேசத்திற்கு]] தெற்கிலும், [[பாஞ்சாலம்|பாஞ்சலத்திற்கு]] மேற்கிலும் பரவி இருந்த தேசம்.<ref name="one"> "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras </ref>
'''குரு தேசம்''' [[இமயமலை|இமயமலையிலிருந்து]] தொடங்கி தெற்கு நோக்கி ஓடும் [[யமுனை]] நதியை அடுத்து சூரசேன தேசத்திற்கு [[வடக்கு|வடக்கிலும்]], [[பாஹ்லிகதேசம்|பாஹ்லிக தேசத்திற்கு]] தெற்கிலும், [[பாஞ்சாலம்|பாஞ்சலத்திற்கு]] மேற்கிலும் பரவி இருந்த தேசம்.<ref name="one"> "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras </ref>

புகழ் பெற்ற 16 [[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் குரு நாடும் ஒன்றாகும்.


==இருப்பிடம்==
==இருப்பிடம்==

14:46, 1 மே 2016 இல் நிலவும் திருத்தம்

குருதேசம்
குருதேசம்

குரு தேசம் இமயமலையிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி ஓடும் யமுனை நதியை அடுத்து சூரசேன தேசத்திற்கு வடக்கிலும், பாஹ்லிக தேசத்திற்கு தெற்கிலும், பாஞ்சலத்திற்கு மேற்கிலும் பரவி இருந்த தேசம்.[1]

புகழ் பெற்ற 16 மகாஜனபத நாடுகளில் குரு நாடும் ஒன்றாகும்.

இருப்பிடம்

இந்த குருதேசத்தின் பூமி அமைப்பானது மேடு பள்ளம் இல்லாமல் சமமாகவே இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் யமுனா நதியின் அருகில் உள்ள பூமிகள் மட்டும் கொஞ்சம் தாழ்ந்து செழித்து இருக்கும்.[2]

பருவ நிலை

இந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் பெய்துகொண்டே இருக்கும்.

மலை, காடு, மிருகங்கள்

இந்த தேசத்தின் வடக்கேயும், மேற்கேயும் பெரிய மலைகள் உண்டு, இம்மலைகளில் பனி பெய்துகொண்டும், மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் வெண்மையான எருமைகளும், பசுக்களும், வெண்மையான குதிரைகளும் ஏராளமாய் இருக்கும்.

நதிகள்

இந்த தேசத்தின் கிழக்கு பக்கத்தில் மிக ஆழமானதும், கருமையான நிறமுடைய நீர் நிறைந்து ஓடுகிற ஜீவ நதியான யமுனையும், இத்தேசத்தின் மேற்கிலிருந்து நீல நிறமுடைய நீர் நிறைந்து ஓடும் நீலா நதியும் முக்கியமானவை.

விளைபொருள்

இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.

நகரம்

அத்தினாபுரம் இத்தேசத்தின் முக்கிய நகராகும். இந்நகரத்தில் சிற்ப சாத்திர முறைப்படி கட்டிய கோட்டைகள், பெரிய, பெரிய அரண்மனைகள், இருந்துள்ளன.

கருவி நூல்

சான்றடைவு

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 54 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதேசம்&oldid=2058922" இலிருந்து மீள்விக்கப்பட்டது