ஹூணர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29: வரிசை 29:


==இராஜபுத்திர குலங்கள்==
==இராஜபுத்திர குலங்கள்==
ஹூணர்களுக்கும் இந்திய மக்களுக்கும் பிறந்தவர்களே சூரிய, சந்திர, அக்னி வம்சத்தைச் சார்ந்த [[ராஜ்புத்|36 இராஜபுத்திர குலங்கள்]] என நம்பப்படுகிறது. <ref>[http://www.britannica.com/topic/Rajput Rajput Indian history]</ref>
ஹூணர்களுக்கும் இந்திய மக்களுக்கும் பிறந்தவர்களே சூரிய, சந்திர, அக்னி வம்சத்தைச் சார்ந்த [[ராஜ்புத்|36 இராஜபுத்திர குலங்கள்]] என நம்பப்படுகிறது.<ref>http://www.kiplingsociety.co.uk/rg_marque_royalraces.htm</ref> <ref>[http://www.britannica.com/topic/Rajput Rajput Indian history]</ref>


==அடிக்குறிப்புகள்==
==அடிக்குறிப்புகள்==

16:36, 16 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்


ஹூண குல லகானாவின் மன்னர் உதயணா காலத்திய நாணயம்
ஹூண மன்னன் நாப்கி மல்கா
காந்தார/காபூலின் ஹூண மன்னர் நாப்கி மல்கா 475–576)
விஷ்ணுவை வணங்கும் சிவன், ஹூணர் காலத்திய சிற்பம். பிரிட்டன் அருங்காட்சியகம்


ஹூணர்கள் (Hunas) (கி பி 475–576) நடு ஆசியாவைச் சேர்ந்த ஹெப்தலைட்டுகள் எனும் ஆடு, மாடு மற்றும் குதிரைகளை மேய்க்கும் நடோடி இன மக்கள் ஆவர். இவர்கள் கி பி ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆறாம் நூற்றாண்டில் முற்பகுதிக்குள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்கு நுழைந்து, குப்தப் பேரரசையும், இந்திய மன்னர் யசோதவர்மனை வீழ்த்தி காஷ்மீர் முதல் மாளவம் வரையிலான பகுதிகளை கி பி 475 முதல் 576 முடிய ஆண்டனர்.[1] [2]

வரலாறு

கி பி 500-இல் ஹூணர்களின் ஆதிக்கத்தை காட்டும் ஆசியாவின் வரை படம், கி பி 500

இந்தியா மீது படையெடுத்து வந்த ஹெப்தலைட்டுகளின் ஒரு கூட்டத்தவரான ஹூணர்களை குப்தப் பேரரசர் ஸ்கந்த குப்தர் வென்றார்.[3] கி பி 510-இல் குப்த பேரரசர் பானுகுப்தர் காலத்தில் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்களை வென்றார்.[4][5]

கி பி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீண்டும் இந்தியா மீது படையெடுத்து வந்த ஹூணர்களை புந்தேல்கண்ட் பகுதியின் மன்னர் யசோதவர்மனும் நரசிம்மகுப்தரும் விரட்டியடித்தனர்.[6][7]

பின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குப்த பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், ஹூணர்கள் மீண்டும் படையெடுத்து இந்தியாவின் மேற்கு, வடக்கு, மற்றும் மத்தியப் பகுதிகளைப் கைப்பற்றினர்.[8][9]

யசோதவர்மனின் வெற்றித் தூண், சந்தனி, மண்டசௌர்

திபெத்திய மொழிகளில் ஹூணர்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. ஹூணர்கள் யவனர்கள், காம்போஜர்கள் போன்றவர்களே என குறித்துள்ளனர்.[10]

ஹூனர்கள் சசானிய பேரரசர்கள் போன்று நாணயங்களை வெளியிட்டனர். [11]

சமயம்

ஹூணர்கள் வேத கால சூரியக் கடவுளையும் சிவனையும் வழிபட்டனர்.[12]

இராஜபுத்திர குலங்கள்

ஹூணர்களுக்கும் இந்திய மக்களுக்கும் பிறந்தவர்களே சூரிய, சந்திர, அக்னி வம்சத்தைச் சார்ந்த 36 இராஜபுத்திர குலங்கள் என நம்பப்படுகிறது.[13] [14]

அடிக்குறிப்புகள்

  1. India: A History by John Keay p.158
  2. Kurbanov, Aydogdy (2010). "The Hephthalites: Archaeological and Historical Analysis" (PDF). p. 24. பார்க்கப்பட்ட நாள் 17 January 2013. The Hūnas controlled an area that extended from Malwa in central India to Kashmir.
  3. Ancient India: History and Culture by Balkrishna Govind Gokhale, p.69
  4. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen, p.220
  5. Encyclopaedia of Indian Events and Dates by S. B. Bhattacherje, p.A15
  6. India: A History by John Keay, p.158
  7. History of India, in Nine Volumes: Vol. II by Vincent A. Smith, p.290
  8. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen, p.220
  9. Encyclopaedia of Indian Events and Dates by S. B. Bhattacherje, p.A15
  10. Pag-Sam-Jon-Zang (1908), I.9, Sarat Chandra Das; Ancient Kamboja, 1971, p 66, H. W. Bailey.
  11. Source
  12. History of civilizations of Central Asia, Volume 3 By Boris Abramovich Litvinovskiĭ Page 173
  13. http://www.kiplingsociety.co.uk/rg_marque_royalraces.htm
  14. Rajput Indian history

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூணர்கள்&oldid=2052212" இலிருந்து மீள்விக்கப்பட்டது