சம்மாந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43: வரிசை 43:
அரேபியரும் பாரசீகரும் துலுக்கர்களும் பட்டாணியர்களும் தென்கிழக்கில் மட்டக்களப்பு வாவி அல்லது ஆற்றின் உதவிகொண்டு வந்திருக்கின்றனர் என்பதற்கு 12 ம் நூற்றாண்டளவின் குறிப்புகளான அல்-இத்ரீசி, அல்-பூர்பானி, அபூசெய்யது என்னும் புகழ் பெற்ற அரேபிய புவியியலாளர்களின் குறிப்புக்கள் சான்றுகளாக உள்ளன.<ref>அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், கலாசார சமய அலுவல்கள் அமைச்சு (1997) 24, மலே வீதி, கொழும்பு-02, பக்.09</ref> அண்மைக்காலம் வரை தென்கிழக்கு மட்டக்களப்பு என்றே அழைக்கப்பட்டு வந்தது.
அரேபியரும் பாரசீகரும் துலுக்கர்களும் பட்டாணியர்களும் தென்கிழக்கில் மட்டக்களப்பு வாவி அல்லது ஆற்றின் உதவிகொண்டு வந்திருக்கின்றனர் என்பதற்கு 12 ம் நூற்றாண்டளவின் குறிப்புகளான அல்-இத்ரீசி, அல்-பூர்பானி, அபூசெய்யது என்னும் புகழ் பெற்ற அரேபிய புவியியலாளர்களின் குறிப்புக்கள் சான்றுகளாக உள்ளன.<ref>அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், கலாசார சமய அலுவல்கள் அமைச்சு (1997) 24, மலே வீதி, கொழும்பு-02, பக்.09</ref> அண்மைக்காலம் வரை தென்கிழக்கு மட்டக்களப்பு என்றே அழைக்கப்பட்டு வந்தது.


அரேபியக் கடலோடியான சிந்துபாத் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் "இலங்கையில் நான் தரையிறங்கிய போது ஒருவர் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் என்னுடன் அரபு மொழியில் மிகச் சரளமாக உரையாடினார். இங்கு வாழ்ந்த மக்கள் மஃபார் என்று அழைக்கப்பட்டனர். இந்தச் அரபிமெரழிச் சொல்லுக்கு தோணித்துறை என்பது பொருளாகும். இந்த மஃபார் என்ற சொல்லே திரிபடைந்து மட்டக்களப்பு என்றும் திரிபடைந்திருக்கலாம் என்று<ref></ref> வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.<ref>மத்தியகிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை (1995) மருதூர் ஏ மஜீத்</ref>
அரேபியக் கடலோடியான சிந்துபாத் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் "இலங்கையில் நான் தரையிறங்கிய போது ஒருவர் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் என்னுடன் அரபு மொழியில் மிகச் சரளமாக உரையாடினார். இங்கு வாழ்ந்த மக்கள் மஃபார் என்று அழைக்கப்பட்டனர். இந்தச் அரபிமெரழிச் சொல்லுக்கு தோணித்துறை என்பது பொருளாகும். இந்த மஃபார் என்ற சொல்லே திரிபடைந்து மட்டக்களப்பு என்றும் திரிபடைந்திருக்கலாம் என்றுவரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.<ref>மத்தியகிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை (1995) மருதூர் ஏ மஜீத்</ref>


=== குடி வரலாறு ===
=== குடி வரலாறு ===

05:39, 25 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

சம்மாந்துறை
Sammanthurai
සමන්තුරේ
நகரம்
சம்மாந்துறை மணிக்கூட்டுக்கோபுரம்
சம்மாந்துறை மணிக்கூட்டுக்கோபுரம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிரதேசச் செயலகம்சம்மாந்துறை
மக்கள்தொகை60,596
அரசு
 • வகைபிரதேச சபை
 • பிரதேசச் செயலர்A.M.முஹம்மத் நௌசாத்
நேர வலயம்நேர வலயம் #UTC + 6, F (ஒசநே+5:30)
இலங்கை தபால் கோடு32200
இணையதளம்சம்மாந்துறை உள்ளூராட்சி மன்ற இணையத்தளம்

சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். புவியியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகரும், தலைவரும், முன்னாள் துறைமுக அபிவிருத்தி புனருத்தாரண அமைச்சருமான மு. ஹு. மு. அஷ்ரப் சம்மாந்துறையில் பிறந்தவர்.

Paddy field in Sammanthurai, Ampara, Sri Lanka

வரலாறு

அரேபியர்கள் இலங்கையில் வர்த்தகர்களாக அறிமுகமாவதற்கு முன்னர் ஆதம் மலையை (Adams Peak) தரிசிக்க வருகின்ற யாத்திரிகர்களாகவே அறியப்பட்டனர். அப்படி வந்தவர்கள் இங்குள்ள வாசனைத்திரவியங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளதை அறிந்தனர். அதனால் பின்னாட்களில் அவர்களின் வருகை வர்த்தக நோக்கத்தைக் கொண்டதாக அமைந்தது. அரேபியர் மத்தியதரைக்கடல் மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கூடாகச் செய்து வந்த வர்த்தகமும் அவர்களுக்குப் பரிச்சயமான வர்த்தகப் பாதைகளும் இந்தியாவினதும், இலங்கையினதும் அறிமுகத்தைக் கொடுத்தன. அவர்கள் காற்று வீசும் காலத்திற்கேற்ப வங்காள விரிகுடாவினூடாக இலங்கையின் கிழக்குக் கரையை அடைந்தனர். (அரேபியரின் முதல் பிரவேசம் இலங்கையின் எப்பகுதியில் இடம் பெற்றது என்பதில் வரலாற்று ஆசிரியளுக்கிடையில் கருத்து முரண்பாடு நிலவுகிறது.) இவர்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் காலங்களில் கட்டுமரக் கப்பல்கள் (பாய்க்கப்பல்), 'சம்பன்' எனப்படும் ஒருவகை வள்ளம், சிறிய படகுகள் ஆகியவை மூலம் வங்காள வரிகுடாவின் ஊடாகப் பயணித்து இலங்கையின் கிழக்குக் கரையை அடைந்து, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கின் சம்மாந்துறை வரையும் இயற்கையாக விரிந்து சென்ற வாவியினூடாகச் சென்று வாவியின் தென்திசையில் அமைந்திருந்த சம்பன்துறையில் தரைதட்டி, அங்கு வள்ளங்களைக் கட்டிவிட்டு தரைமார்க்கமாகச் சென்று ஆதம் மலையைத் தரிசித்தனர்.[1]

அரேபியரும் பாரசீகரும் துலுக்கர்களும் பட்டாணியர்களும் தென்கிழக்கில் மட்டக்களப்பு வாவி அல்லது ஆற்றின் உதவிகொண்டு வந்திருக்கின்றனர் என்பதற்கு 12 ம் நூற்றாண்டளவின் குறிப்புகளான அல்-இத்ரீசி, அல்-பூர்பானி, அபூசெய்யது என்னும் புகழ் பெற்ற அரேபிய புவியியலாளர்களின் குறிப்புக்கள் சான்றுகளாக உள்ளன.[2] அண்மைக்காலம் வரை தென்கிழக்கு மட்டக்களப்பு என்றே அழைக்கப்பட்டு வந்தது.

அரேபியக் கடலோடியான சிந்துபாத் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் "இலங்கையில் நான் தரையிறங்கிய போது ஒருவர் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் என்னுடன் அரபு மொழியில் மிகச் சரளமாக உரையாடினார். இங்கு வாழ்ந்த மக்கள் மஃபார் என்று அழைக்கப்பட்டனர். இந்தச் அரபிமெரழிச் சொல்லுக்கு தோணித்துறை என்பது பொருளாகும். இந்த மஃபார் என்ற சொல்லே திரிபடைந்து மட்டக்களப்பு என்றும் திரிபடைந்திருக்கலாம் என்றுவரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.[3]

குடி வரலாறு

சம்மாந்துறையில் 33க்கு மேற்பட்ட குடிகள் காணப்பட்டிருந்தாலும் தற்போது 31 குடிகளே வழக்கில் உள்ளன.

பள்ளிவாசல்களின் வரலாறு

சம்மாந்துறையில் 40ற்கும்மேற்பட்ட பள்ளிவாயில்களும் ஸியாரங்களும் இருக்கின்றன.

  • முகையதீன் பள்ளி (12ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது) (சின்னப்பள்ளி)
  • பெரிய பள்ளி (15ஆம் நூற்றாண்டு) கோஸப்பா பள்ளி)
  • கலந்தரப்பா பள்ளி (8ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது)
  • குருந்தையடியப்பா பள்ளி
  • காட்டவுலியா பள்ளி
  • வீரையடியப்பா பள்ளி
  • மஸ்ஜிதுல் தைக்கிய்யா
  • மஸ்ஜதுல் உம்மா (புதுப்பள்ளி , மதரஜா பள்ளி)
  • மஸ்ஜிதுல் ஸலாம்
  • மஸ்ஜிதுல் அழ்பர்
  • மஸ்ஜிதுல் ஜாரியா
  • மஸ்ஜிதுல் ஜலாலியா
  • மஸ்ஜிதுல் கைர்
  • 2 மஸ்ஜிதுல் நகர்
  • மஸ்ஜிதுல் பதஹ்

இஸ்லாமும் இஸ்லாமிய கலாச்சாரமும்

சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள 44 பள்ளிவாசல்களையும் மற்றும் மத்ரசதுல் தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியும்[4], அல் ஹசனாத் குர் ஆன் மனனக்கல்லூரியும் ஒரு நம்பிக்கையாளர் சபையூடாக நிருவாகித்து வருகின்றது. மஜ்லிஸ் அஷ்ஷரா ஊராளுமன்றமாகவும், நம்பிக்கையாளர் சபை ஒரு மந்திரிசபை போன்றும் ஒவ்வொரு ஜமாஅத் நிருவாகங்களும் மாநில அமைப்பாகவும் செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம். மஜ்லிஸ் அஷ்ஷராவின் அமீர் (தலைவர்) சம்மாந்துறையில் அதியுயர் சபையின் அமீர் ஆகையால், இவர் சம்மாந்துறையின் சமூகத் தலைவராகவும் கணிக்கப்படுகின்றார். மஜ்லிஸ் அஷ்ஷரா அமைப்பு நம்பிக்கையாளர் சபையைத் தெரிதல், வரவு செலவுத் திட்டங்களை அங்கீகரித்தல், கணக்காய்வு அறிக்கைகளைப் பரிசீலித்தல், சமய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லல், சமூகங்களுக்கிடையில் இன நல்லுறவை ஏற்படுத்தல், மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளல் என்பனவாகும்.

கல்வி

சம்மாந்துறையில் ஆரம்பப் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகம் வரை பலவகையான கல்விக்கூடங்கள் உள்ளன. அவையாவன:

  • தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பிரிவின் வளாகம்[5]
  • சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரி[6]
  • தொழில் பயிற்சி நிலையம்
  • சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்[7],
  • பல ஆரம்ப பாடசாலைகள்
  • பல உயர்தர பாடசாலைகள்
  • சம்மாந்துறை வலய கல்வி அலுவலகம்.[8]
  • ஆறு பொது நூலகங்கள்

விளையாட்டு

பொது விளையாட்டு மைதானம் ஒன்றும், நீச்சல்தடாகம், உடல்வலுவூட்டல் நிலையம், பெட்மின்டன், மேசைப்பந்து, கூடைப்பந்து மைதானங்களுடன் ஜனாதிபதி விளையாட்டரங்கத் தொகுதி, பொது சிறுவர் பூங்காக்கள் மூன்று ஆகியன காணப்படுகின்றன.

தொழிற்துறைகள்

பிரதான தொழில் நெல் விவசாயம், செங்கல் உற்பத்தி, நன்னீர் மீன்பிடி, கல்லுடைத்தல் மற்றும் சிறு கைத் தொழில்களும் உள்ளன.

உசாத்துணை

  1. தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு (2001), மருதூர் ஏ மஜீத், மருதூர் வெளியீட்டுப் பணியகம், பக்.22
  2. அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், கலாசார சமய அலுவல்கள் அமைச்சு (1997) 24, மலே வீதி, கொழும்பு-02, பக்.09
  3. மத்தியகிழக்கிலிருந்து மட்டக்களப்பு வரை (1995) மருதூர் ஏ மஜீத்
  4. http://srilankalaw.lk/revised-statutes/volume-vii/1091.html Sammanthurai Thableekul Islam Arabic College
  5. http://www.seu.ac.lk/fas/ Faculty applied sciences
  6. [1]
  7. http://www.smmmmvns.sch.lk/web/ சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம்
  8. http://www.strzeo.org/Template/aboutus.html வலய கல்வி அலுவலகம் சம்மாந்துறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மாந்துறை&oldid=2028505" இலிருந்து மீள்விக்கப்பட்டது